(Reading time: 17 - 33 minutes)

 

தற்குள் அவர்கள் தயனி அறை வாசலை அடைந்திருக்க, மஹிபன் பார்வையால் அவளுக்கு விடையளித்தான்.

வினோத்தும் சுகந்தினியும் தயனியின் அறைக்குள் நுழைந்தனர். படபடப்பாய் இருந்தது சுகந்தினிக்கு. இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? மனதிற்குள் ஆயிரம் ஜெபங்கள்.

உள்ளே தயனி தூங்குவதுபோல் படுத்திருந்தாள். வினோத் தயனியின் கட்டிலில் தொங்கவிடப்பட்ட கேஸ் ஷீட்டை எடுத்து பார்த்தான்.

“எல்லாம் நார்மலா இருக்குதா அத்தான்?” கிசு கிசு குரலில்தான் சுகந்தினி கேட்டாள். ஆனாலும் சத்தம் கேட்டு எழுவதுபோல் எழுந்து அமர்ந்தாள் தயனி. எழுந்தவள் பீதியுடன்தான் வினோத்தைப் பார்த்தாள். இது மனிதனா இல்லையா? என்ற சிந்தனை காரணம்.

ஆனால் அடுத்து நின்றிருந்த சுகந்தினியைப் பார்த்தவள் பார்வை நின்றது.

என்னவென்று புரியவில்லை மிகவும் அறிந்தவர்களை...தன் குடும்ப உறுப்பினரை சந்திப்பது போல் ஒரு உணர்வு தயனியுள். இது மனிதனா ஆவியா என்ற ஐயமெல்லாம் வரவில்லை. சுழற்றிகொண்டிருந்த தனிமை விலகிப்போனது.

ஒரு ஸ்நேக புன்னகை சிந்தினாள் அறிமுகமாக. “நீங்க இந்த ஷிஃப்ட்ல தான் வருவீங்களா டாக்டர்....நான் இப்பவரை உங்களை பார்க்கலை...” என்றாள்.

சுகந்தினிக்கு என்ன பதில் சொல்லவென தெரியவில்லை. வினோத்தை பார்த்து பேந்த விழித்தாள்.

“இவங்க இப்பதான் என்னை பார்க்கவந்தாங்க...” வினோத் பதில் சொல்ல தொடங்க தயனியின் கவனம் முழுவதும் சுகந்தினியிடம் தான் இருந்தது.

சுகந்தினியின் அலைந்த கண்கள் தயனி அருகில் இருந்த அந்த பைபிளில் சென்று நின்றது.

“பைபிள் படிப்பீங்களா......?” சுகந்தினியின் பார்வை உணர்ந்து கேட்டது தயனி.

“ம்...நீங்க ரொம்ப படிப்பீங்க போல பக்கத்திலேயே வைத்திருக்கீங்க.....” எதையாவது பேசி நட்பை வளர்க்க வேண்டுமே என்ற ஆதங்கம் தான் பெரிதாக இருந்தது சுகந்தினியிடம்.

ப்படி பேச? என்ன பேச?  அதுவும் வினோத்திற்கு தெரியாமல்....தயனி எப்படி எடுத்துகொள்வாள்? உண்மையில் தயனிக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனில் தன்னை அவள் என்னவாக நினைப்பாள்....தன்னை பற்றி வினோத்திடம் கோப படுவாளோ?...வினோத்திற்கு விஷயம் தெரிந்தால் இவளை பற்றி என்ன நினைப்பார்?....மனம் சுழன்று குழம்பியது சுகந்தினிக்கு.

“ம்...மேரேஜ்க்கு முன்னால இன்னும் அதிகமா படிப்பேன்...இப்போ குறஞ்சிட்டுது...பட் படிக்காம இருக்க முடியாது என்னால...உட்காருங்களேன்....” தயனி சுகந்தினிக்கு இருக்கையை சுட்டினாள்.

சுகந்தினி இப்போதும் வினோத்தை அனுமதி கோரும் விதமாக பார்க்க தயனியோ...”டாக்டர் சார்...இவங்க இங்க எங்கூட ஒரு 10மினிட்ஸ் இருக்கட்டுமா?....ப்ளீஸ்...ஐ ஃபீல் பெட்டர்” என்றாள்.

“அஸ் லாங்க் அஃஸ் யூ வான்ட்” என்ற வினோத் புன்னகையுடன் வெளியேறினான்.

சில நிமிடம் அறிமுகமாக பேசிய தயனி நேரடியாக விஷயத்திற்கு வந்தாள். தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் கேட்டிருந்த தயனி தன் பேய் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டாள்.

“அசுத்த ஆவிகள் இருக்குதுன்னு பைபிள் சொல்லுதுதான்...ஸ்டில் பேய்லாம் இருக்குதுன்னு நம்பவே கஷ்டமா இருக்குது...” இத்தனைக்கு பிறகும் தயனிக்கு குழப்பம்தான் இருந்ததே தவிர ....பேயை நம்ப முடியவில்லை.

“உலகத்தில் நன்மையும் நடக்குது....தீமையும் நடக்குது.....கடவுள் நல்லவர்னா....தீமையை கொண்டு வந்த ஒரு தீய சக்தியும் இருக்கும் தானே...” சுகந்தினி காரண படுத்த முயன்றாள்.

“ஆமாம் லூசிஃபர்..டெவிலை பத்தி படிச்சிருக்கேன்...அந்த கருதுகளை ஒத்துகொள்ளவும் செய்றேன். ஆனா என் அனுபவத்தை பாருங்க...எமிலி என் மேல ரொம்பவும் பாசம் வச்சு இருந்தவங்க....இப்பவும் வந்து பார்த்த ரெண்டு...ரெண்டு   பேரும் எனக்கு நல்லது செய்ய முயற்சி செய்ற மாதிரிதான் இருக்குதே தவிர....கெடுதல் செய்றமாதிரி இல்ல...நான் தான் பயந்து..குழம்பி....இப்படி ஆயிட்டுது...” தன் காயங்களை பார்த்தபடி தயனி தன் குழப்பத்தை வார்த்தைப் படுத்த சுகந்தினியிடமும் பதில் இல்லை.

“தெரியலை தயனி...ஆனா கடவுள் உங்க பக்கம் இருக்கார்...ஏற்ற நேரத்தில் கண்டிப்பா உங்களுக்கு உதவி வரும்....இப்ப என்னை உங்கட்ட கொண்டு வந்து சேர்த்ததே அதுக்கு சாட்சி...எனக்கும் இது எல்லாமே புதுசு....நான் உங்களுக்காக ப்ரேயர் பண்றேன்...”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கதவை தட்டிவிட்டு மஹிபன் உள்ளே எட்டி பார்த்தான்.

சுகந்தினி அவனை தயனிக்கு அறிமுகம் செய்விக்க வணக்கம் பரிமாரிக்கொள்ளபட்டது.

இவானுடனான சந்திப்பை சுகந்திக்கு ஞாபக படுத்தியவன், தங்கள் திருமண விஷயத்தை தயனிக்கு தெரிய படுத்த இன்னும் அதிகமாய் பிடித்தது சுகந்தினியை தயனிக்கு.

மொபைல் எண்கள் பரிமாற்றத்திற்கு பின், சிறு ஜெபத்துடன் விடை பெற்றனர் மறுநாள் மணம் காண இருப்பவர்கள்.

அன்று இரவு நிம்மதியாய் கழிந்தது தயனிக்கு.

றுநாள் அவள் துயில் கலைந்ததே தன் அபிஷேக்கின் மடியில் தான்.

புறண்டு படுக்கும் பொழுது வித்யாசம் உறைக்க விழி திறந்தாள் எதிரில் அவனது கனிந்த முகமே காண கிடைத்தது.

“அபிப்பா...”

“தயூ குட்டி...”

அவனை இடுப்போடு வளைத்தாள் மனையாள்.

அவனை பார்த்த பார்வையின் வழியாக எல்லையில்லா ஆறுதலும் நிம்மதியும் அவளுள் நுழைந்து எடைக்கு எடை சமமாக கண்ணீரை வெளியேற்றியது அவள் கண்களிலிருந்து.

 வளைத்தவள் உச்சந்தலையில் முத்த அபிஷேகம் செய்தான் கணவன்.

“அபிப்பா என்னை இப்பவே வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க..ப்ளீஸ் அபி...ப்ளீஸ் அபி...எல்லாரும் என்னை லூசுங்க்ற மாதிரி பார்க்காங்க...”அவள் கேவ தொடங்க, நடு இதயத்தில் ஆணி அடித்தது போல் வலித்தது அவனுக்கு.

அவனது இறுகிய அணைப்பு இருவரின் அப்போதைய தேவையை சந்தித்தது.

“என்னை விட்டுட்டு இனி எங்கேயும் போகாதீங்க...ப்ளீஸ்....”

“இல்லடாமா....”

“எனக்கு நீங்க மட்டும் தான் அபி.....”

“எனக்கும்...” அவன் கண்களில் நீர் கட்டுவதை பார்த்தாள் தயனி.

தயனியின் கண்ணீர் தானாக நின்று போனது. தன் வலி மறந்து போனது. இப்பொழுது அவளில் நிறைந்தது அவன் மட்டுமே.

அவன் சோர்ந்திருப்பது தெரிந்தது.

இருநாள் தாடி அவன் முகத்தில். இது அவன் சுபாவமே கிடையாது. தினமும் பல் தேய்த்ததும் அவன் செய்யும் அடுத்த வேலை இந்த தாடி நீக்கம்தான்.

என்னவாயிற்று இவனுக்கு?

“அபிப்பா எதாவது பெரிய ப்ரச்சனையா?...”

அவனது அப்பா என்று ஒன்று வந்து ஏதோ உளறியதே...அது ஞாபகம் வந்தது.

ஏனோ இப்பொழுது அந்த நினைவில் எழுந்தது, பயத்தைவிட தன்னவனுக்கு ஏதும் துன்பமோ என்ற நினைவும் அவனுக்கு ஆறுதல் செய்துவிடும் வெறியும்தான்.

கடும் தீயில் கருக நேர்ந்தாலும், காதல் கொண்டவனின் கண்ணீர் கண்டால் சுடுவது தீயல்ல, சுற்றமவனின் விழிகண்ட சுடு நீர்தான்.

வள் நிலைதானே அவனுக்கும். இவள் நிலை அறியவே அவன் தவித்தான்.

நடந்ததை சொன்னாள் தயனி. அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. காரணம் இவளைப் போலவே அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஆனால் இவளை அவன் சந்தேகிக்கவோ, மனம் தான் இதற்கு காரணம் என இவளை நம்ப வைக்கவோ அவன் முயலவும் இல்லை.

பொறுமையை மட்டும் போதித்தான். ஆறுதல் சொல்லி அவளை அங்கு குணமாகும் வரை தங்கவைக்க முயன்றான் அவன்.

ஆனால் தயனியின் பிடிவாதம் வென்றது. அன்றே அவனுடன் தன் வீட்டிற்கு கிளம்பினாள்.

தன்னவனோடு காரிலிருந்து இறங்கி மாடியிலுள்ள தங்கள் படுக்கை அறைக்கு செல்லும் நோக்கத்துடன் வரவேற்பறை நுழைந்தவள் கண்னணில் பட்டது ஓரத்து சோஃபாவில் அமர்ந்து இவள் முகம் பார்த்திருந்த இவளது அத்தை.

அதாவது அபிஷேக்கின் அம்மா.

ஏன்?????

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:762}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.