(Reading time: 17 - 33 minutes)

 

வள் மணமறுப்புக்கு அவன் காண்பித்த எதிர்ப்பின் முறையில்தான் அவன் காதலை இவளுமே உணர்ந்தாள் எனவும் சொல்லலாம்.

இதில் இன்றைய அணைப்பு, இந்த வார்த்தைகள் எல்லாமே அவளுக்கு எதிர்பாராதவை. புதிது.

“என்ன நீங்க...ரொம்ப..பேசுறீங்க....” முறைக்கதான் நினைத்தாள் ஆனால் அவனது உரிமையான அந்த வார்த்தைகள் அவன் இனி இவளுக்கு இல்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சில நாட்களாக காய்ந்து ரணபட்டிருந்த இவள் மனதிற்குள் குளிர் நீராய், மருந்திடும் மயிலிறகாய் மாயம் செய்ய  செல்ல சிணுங்கலாக மட்டுமே அது வெளிப்பட்டது.

“உன் வீட்டுகாரன் லாயர்டி..பேசினாதான்டி பிழைப்பு நடக்கும்....”

இப்பொழுது அவனை அவளால் ரசிக்க மட்டுமே முடிந்தது.

மாநிறத்துகும் ஒரு ஷேட் குறைவான நிறத்தில் அந்த கம்பீர முகமும் சுடர் விடும் தூய கண்களும் சற்றே கருத்த அழுத்தமான உதடுகளும் அவனது மீசையும்...இன்று எல்லாமே மனதிற்குள் புது கதை பேசின.

ஏன்?

பிரிதலுக்கு பின் வரும் இணைதல்

ஊடலுக்கு பின் வரும் கூடல் அதன் பலம் அசாத்தியம். உடனடி திருமணம் அவளுக்குமே இப்போது சரியென பட்டது.

கார் மறுபடியும் நின்ற போதுதான் நேரம் கடந்திருப்பதே சுகந்தினிக்கு புரிந்தது.

அவர்கள் நின்ற இடம் நகரத்தின் மிக பிரபலமான ஜெ எச் ஹாஸ்பிட்டலின் ஒரு வாயில். மஹிபனின் அண்ணன் வினோத்தின் சொந்த மருத்துவமனை அது.

அவசர அவசரமாக தன் உடை மற்றும் முடியை சரிசெய்து கொண்டே குறையாக கேட்டாள் சுகந்தினி.

“என்ன நீங்க சொல்லாம கொள்ளாம இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க...” அவனோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

“உங்கூட தனியா இருக்க பயமா இருக்கே அதான்.....”கண்ணடித்தான்.

இப்பொழுது அவளால் முறைக்க முடிந்தது.

“நீ நல்ல பொண்ணுதான் சுகி செல்லம்...ஆனா உன் பக்கத்தில இருந்தா நான் நல்ல பையனா இல்லாம போயிடுவனோன்னு பயமா இருக்குது....அதுவும் இப்படி முட்ட கண்ணால முழுசா முழுங்கினா....பாவம் நான் என்ன செய்வேன்....” அவனது இந்த வார்த்தைகள் அவன் தோளில் ஒரு சிறு அடியை அவளிடமிருந்து இலவசமாக பெற்று தந்தது.

“பாரு பாரு இத்தனை பேர் முன்னாலயே இப்படி  தொட்டா...”

“உங்கள....” பல்லை கடித்தாள்.

“இதுக்குதான் இதுக்கு பயந்துதான்...... அண்ணன்ட்ட அடைகலம் கேட்டு வந்திருக்கேன்...”

“அப்படி அடைக்கலம் வர்றவங்க...என்னை எதுக்கு கூட்டிடுட்டு வந்தீங்களாம்?...”

“அதான் அதேதான்....ப்ரெசென்ஃஸ் ஆஃப் மைண்ட் உன் பக்கத்தில இருந்தா ஆஃப் ஆயிடுது...எதை செய்ய நினைச்சாலும் அதை சரியா செய்ய முடியலை...மனச ஒரு நிலையில வைக்க முடியல...இந்த ப்ரச்சனைக்கு...”

“நாளைக்கு கல்யாணம் பண்றது சரியான சொல்யூஷன்தான்....” இடையிட்டது மஹிபனின் அண்ணன் வினோத். பேசிக்கொண்டே இருவரும் வினோத் அறையை நெருங்கி இருந்தனர்.

வினோத் வார்டிலிருந்து தன் அறைக்கு திரும்பிகொண்டிருந்தவன் தம்பியின் உரையாடலுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தான்.

டுத்து கலகலப்பான உரையாடலுடன் அவர்கள் டீன் டாக்டர். வினோத் என்றறிவித்த அறைக்குள் நுழைந்தனர்.

“நீ கேட்ட அந்த ஃபாஷன் டிசைனர் இவான் இங்க தான் வந்திருக்கார்.....என் ஃப்ரெண்ட் ப்ரியதம் தெரியும் இல்லயா...அவன் இங்க இருக்கான் அவனை எதோ மூவி விஷயமா பார்க்க வந்திருக்கார் இவான்...அதான் உன்னை இங்க வரச்சொன்னேன்...இப்பவே மீட் பண்ணிறலாம்....நாளைக்கு ஈவ்னிங்குள்ள முடிச்சு தந்துடுவார் ...அவர் டீம் செய்துடுவாங்க....முன்னால ஒரு அக்கேஷனுக்கு இப்படி செய்து கொடுத்தார்...”

வினோத் பேச பேசத்தான் மஹிபன் தன்னை அங்கு அழைத்து வந்திருப்பதின் காரணம் புரிந்தது சுகந்தினிக்கு, நிச்சயம் இவள் அருகிலிருந்துதான் மஹிபன் தன் அண்ணனுக்கு ஃபோனில் அழைத்திருந்திருப்பான்...இவளுக்கு எதுவுமே தெரியவில்லை....சே...அப்படி அவனில் தொலைந்து போயிருந்திருக்கிறாள்....வெட்கமாக தோண தலை குனிந்தவளின் கண்ணில் பட்டது வினோத் மேஜையிலிருந்த அந்த ஃபைல்.

அதில் எழுதபட்டிருந்த ‘W/o  நிகரில்’ என்ற வார்த்தை அவளது மூளையிலிருந்து மின்சாரத்தை உடல் முழுவதும் எடுத்துச் சென்றது.

அருகிலிருந்த தன்னவனை கரம் பற்றினாள். ஆச்சரியமாக திரும்பி பார்த்த மஹிபன் அவள் பார்வை நின்ற இடத்தில் தன் பார்வையை பதித்தநொடி புரிந்துவிட்டது அவர்கள் இங்கு வந்தது அவர்களின் சுயமுடிவு மட்டுமல்ல என.

“வினோத்...இது யார்...நேம் ரொம்ப வித்தியாசமா இருக்குது...?

என்றபடி அந்த ஃபைலை கைநீட்டி எடுத்தான் மஹிபன்.

“இது வி.ஐ.பி பேஷண்ட் மஹி....வெளிய சொல்ல கூடாது....ஆக்டர் அபிஷேக் வைஃப்...அபிஷேக் பெயர் நிகரில்...மூவிக்காகதான் அபிஷேக்...அந்த பொண்ணு... அவர் வைஃப் மாடியில இருந்து கீழ விழுந்திட்டுது போல...ப்ரியதம் தான் இங்க அட்மிட் செய்திருக்கான்...உனக்கு தெரியும்தானே ப்ரியத்தமும் அபிஷேக்கும் ரொம்ப க்ளோஸ்....அபிஷேக் வேற ஊர்ல இல்ல...”

“ஓ...இப்ப புதுசா மேரேஜ் ஆச்சுதே....வைனி...தயனி...இப்படி எதோ ஒரு பெயர்...நான் அவங்கள பார்க்கலாமா அத்தான்...ப்ளீஃஸ்...” கெஞ்சினாள் சுகந்தினி.

“ஹேய்..யாரது இந்த புதுப்பொண்ணு....நான் பார்த்தாலே என் தம்பி பின்னால ஒளிஞ்சுப்ப...அத்தான்னுலாம் சொல்லி இப்படி ப்ளீஃஸ்லாம் போட்டா...அதுக்காகவே நான் கூட்டிட்டு போணுமே...பட் ஆன் ஒன் கண்டிஷன்...நாம ரெண்டு பேரும் தான் டீம்..என்கூட தனியா வரனும்...மஹி நாட் அலவ்ட்....” குறும்பாக வினோத் சொல்லி முடிக்கும் முன் பலமாக தலையாட்டினாள் சுகந்தினி.

“ஷ்யூர்...ஷ்யூர்...”

“என்னடா மஹி அபிஷேக் வைஃப்க்கே இப்படி உன்னை கழட்டி விடுறாளே....அப்ப அபிஷேக்கை பார்க்க போனா என்னடா செய்வா....?”

வினோத் தன் தம்பியை கிண்டல் செய்யவும் தான் தான் ஓவர் ரியாக்ட் செய்ததே புரிந்தது சுகந்தினிக்கு.

‘பே’என விழித்தவள் அசடு வழிந்தாள். “நான் மூவியே பார்க்க மாட்டேன் அத்தான்...இது....”

அதற்குள் வினோத்தின் அறை தொலைபெசி அழைக்க,

அதை எடுத்து எதோ மருத்துவம் பேசினான் அம் மருத்துவன்.

பேசி முடித்தவன், “சரி வாங்க போய் அந்த தயனியை பார்ப்போம்...மஹி நீ அவங்க ரூமுக்கு வெளியே வெயிட் பண்ணு...இவான் அங்கதான் இருக்கார்...பார்த்து பேசு....தயனி என்னமோ ரொம்ப பயபடுறாங்க....எதுக்குன்னே புரியலை...எதுவும் சொல்லவும் மாட்டேங்கிறாங்க...உன்னை பார்த்தாலும் டென்ஷனானாலும் ஆகலாம்...நான் சுகந்தாவை என் அசிஃஸ்டெண்ட் மாதிரி கூட்டிட்டு போய்ட்டு வந்திடுவேன்...கூட்டம் வேண்டாம்...”

வினோத் சொல்ல சுகந்தினி மஹிபனை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்துக்கொண்டாள். அவனும் ஊக்கபடுத்தும் விதமாக மறுபார்வையால் பதில் தந்தான்.

“அத்தான் நான் அவங்கட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேச முடியுமா...ப்ளீஃஸ்....” அடுத்த அப்ளிகேஷன் போட்டாள் சுகந்தினி.

“சாரிமா...செலிப்ரிடிசை அவங்களோட சந்தோஷ தருணங்கள்ல போய் பார்த்தா உற்சாக படுவாங்க...ஆனா அவங்க வேதனை நேரத்தில் நம்ம அபிமானத்தை காண்பிச்சா வெறுத்து போவாங்கம்மா...அவங்களும் நம்மள மாதிரி தான பாவம்...”

“ஆனா அன்பை காண்பிச்சா...” பட்டென வந்து விழுந்தது வார்த்தை.அதன் பின்புதான் தான் யாரிடம் பேசுகிறோம் என்பதே நினைவில் வந்தது சுகந்தினிக்கு.

வினோத்தோ...”மஹிய கல்யாணம் செய்யும் முன்னமே அவன் வாய் உனக்கும் வந்துட்டு போலவே சுகாப்பொண்ணு..., ஆனா நாம அன்பாதான் பேசப்போறோம்னு அவங்களுக்கு எப்படி தெரியும்...சோ நோ கான்வெர்ஷேஷன் வித் தயனி...சாரிமா..” என இதமாக மறுத்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.