(Reading time: 27 - 54 minutes)

 

டப்பாவி அவளை எழுப்பும் போதும் இதை தான் சொன்னாள் ஏன்டா என்ன கேடி தனம் பண்ணிங்க...” என்று மிரட்ட...

“நீ வேற ஏன்கா? அவள் என்ன அடிக்காம இருந்தாள் சரி... புது இடம் அதனால தூக்கம் வரலை அக்கா...”

“சரி சரி நம்பிட்டேன் போ.. போய் கிளம்பு”

அனைவரும் வீட்டில் இருந்து கிளம்பி சென்னையின் பிரதான இடத்திற்கு செல்ல, மற்றவரும் அங்கே இணைந்துக்கொண்டனர். அனைவரும் பேசி முடித்து முதலில் துணி கடைக்கு செல்வதாக முடிவெடுத்தனர்.

“அந்த சிவப்பு சேலை எடுங்க...” என்று ஹேமா சொல்லவும் அனு மறுத்தாள்.

“அம்மா... கல்யாணத்துக்கு எப்பவும் சிவப்பு சேலை போர்... வேற கலர் எடுக்கலாம்”

“ஆமாம் அத்தை வேற கலர் எடுங்க...”

“அப்போ நீல நிறத்துல எடுங்க...” என்று துளசி கூறவும்... “அம்மா அவள் சென்னைக்கு வந்த போதே நீல நிறத்துல தான் கட்டி இருந்தாள்.”

“அப்போ... அரக்கு நிறத்துல எடுங்க கலர் எடுப்பா தெரியும்” என்று லதா கூறவும்... “ம்ம்ம் ஹ்ம்ம் வேணாம் அது செகண்ட் optiona வச்சிக்கலாம்” என்று அர்ச்சனா கூறினாள்.

“அது சரி நீங்க இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்போதான் புடவை எடுத்து முடிக்குறது. அப்போ கல்யாண பொண்ணே செலக்ட் பண்ணட்டும்” என்று கூறவும் இருவரும் மாறி மாறி தேடிக்கொண்டிருந்தனர். இருவரும் தேடுவதை கண்டு பாவப்பட்டு அவர்களது ஜோடிகள் உதவிக்கு வர, கண்ணில் சட்டென பட்டது அந்த புடவைகள்...(ஹை ஹை இப்போவே சொல்லிட்டா அப்பறம் எப்படி கல்யாணத்தை வர்ணிக்குரதாம்... அப்போ பார்த்துக்கோங்க...) இருவரும் மேலே வைத்து காட்ட இருவரின் நிறத்திற்கும் பொருத்தமாக ஆளை இழுக்கும் வண்ணமாக இருந்தது. அதன்பின் அவர்களின் உதவியோடு reception, சங்கீத் என்று அனைத்து விழாவிற்கும் எடுத்தனர். ஆனால் reception மற்றும் சங்கீத் விழாவிற்கு எடுப்பது தான் பெரும் வேலையாக இருந்தது. அதற்கு பொருத்தமாக ஆண்களுக்கும் எடுக்க வேண்டுமே... ஒரு வழியாக அடித்து பிடித்து திருமண பெண்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் எடுத்து முடிக்கவே நேரம் வெகுவாக கடந்து இருட்டிவிட்டது. அலுத்து திரும்ப துவங்கிய கூட்டம் வெளியே உணவை முடித்து கொள்ள நினைத்து ஒரு உணவகம் உள்ளே நுழைந்தது.

டலில் அலுப்பு தோன்றினாலும் அஸ்வத்தின் சிரித்த முகமும், அவனது அருகாமையும் அனுவை ஒரு புத்துணர்வோடு வைத்திருந்தது. அனைவரும் முன்னே நடக்க, தேஜு, நிரு ஜோடி சேர்ந்துக்கொண்டனர். அனு பின்னே நடந்துவர அஸ்வத் அவளோடு சேர்ந்து நடக்க துவங்கினான். அஸ்வத் தான் அருகில் வருகிறான் என்று தெரிந்தும் எதுவும் அவள் பேசவில்லை எனவே அவனே துவங்கினான். “உன் மனசுல ஏதாவது குழப்பம் இருந்தால் என்கிட்ட சொல்லு அனு....”

....

“நீ சொன்னால் தான் தெரியனும்னு இல்லை அனு... என்னோட வாழ்க்கைல கிடைத்த பொக்கிஷம்டி நீ... ஒவ்வொரு முறையும் நம்ம சந்திச்ச காலத்தை நினைக்கும் போது... நீ தான் எனக்குன்னு எப்போயோ எழுதி வைச்சிட்ட ஒரு சந்தோஷம், ஒரு கர்வம் வரும்.”

....

“நான் தப்பு பண்ணிட்டேன் தான் ஆனால் அதுக்காக வருத்தபடுறேன்... தயவு செஞ்சு விலகி போகாத... என்னோடைய பழைய அனுவா வாலு தனம் பண்ணிக்கிட்டு எப்பவும் என்கூடவே இருடி...” என்று கூறியபடியே அவளது இடகரத்தை வலகரத்தால் பிடித்துக்கொண்டான்.

இவ்வளவு ஆழமாக அஸ்வத் பேசி இத்தனை நாட்களில் ஒரு முறை கூட அனு பார்த்ததில்லை... ஒவ்வொரு சொற்களும் அடிமனதில் தேங்கி இருந்த காதலை எழுப்பியது. பதில் பேச வார்த்தையே இன்றி கண்கள் லேசாக கலங்கவும் அஸ்வத் தொடர்ந்தான்.

“ப்ளீஸ்டா அழாத... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... நீ முழுசா புரிஞ்சிக்குற வரையும் காத்திருக்கேன்...” என்று சொல்லி அவளோடு சேர்ந்து நடந்தான். மனதில் சீன சுவர் போல் எழுந்து நின்ற தயக்கம் எல்லாம் சீட்டு கட்டு கட்டிடம் போல் சரிந்து விழுவதை உணர்ந்தாள் அனு. தப்பை உணர்ந்து அவனே மன்னிப்பு கேட்டபின் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு. அவளை பற்றியிருந்த அவனது கரம் அவனை பற்றிய நினைவை தவிர வேறு எண்ணம் எழாமல் பார்த்துக்கொண்டது.

நேரம் கடந்திருக்காததால் உணவுகள் நிறைய இருக்க, பிடித்ததை வாங்கி சாப்பிட துவங்கினர். எப்போதும் போலவே பெரியவர்கள் எல்லாம் தனி கூட்டணி போட்டு ஒரு பெரிய மேசையில் அமர்ந்துகொள்ள, சிறுவர்கள் எல்லாம் ஒரு மேசையில் அமர்ந்தனர். சீகா,பன் இருவருக்கும் தனி தனி குட்டி தட்டில் உணவு வைக்க, சிந்தி சிதறி அழகாக சாப்பிட்டனர். “அண்ணி இந்தாங்க இதை வச்சிக்கோங்க, டேய் என்னடா கொஞ்சமாய் சாப்பிடுற நிறைய சாப்பிடு... அச்சோ அனு போதும் ரொம்ப வைக்குற... அஹல் இந்த curry எனக்கு வேண்டாம் நீ எடுத்துக்கோயேன்... நவீன் மாமாவ பாருக்கா என்னோட தட்டில இருந்து எடுத்து சாப்பிடுறாரு...” என்று மாறி மாறி உணவையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து சாப்பிட்டனர். எதுவுமே கேட்காமல் அனுவிற்கு பன்னீர் பிடிக்கும் என்று அவனது தட்டில் இருந்து அனுவின் தட்டிற்கு மாற்றினான் அஸ்வத். அவன் செய்வதையே காதலோடு பார்த்தவளை அதே காதலோடு “என்னடா?” என்று வினவவும்.. ஒன்றும் இல்லை என்பது போல் தலை ஆட்டிவிட்டு சாப்பிட துவங்கினாள்.

அர்ச்சனா பீன்ஸ் பொரியலை அஸ்வத் தட்டிற்கு வைக்க போனாள், அதற்குள் அனு பதறிக்கொண்டு, “அக்கா அஸ்வத்க்கு பீன்ஸ் பிடிக்காது வேஸ்ட் பண்ணிடுவான்” என்று கூறவும் அனைவருமே அமர்த்தலாக சிரித்தனர். கண்களில் ஒரு மெச்சுதளோடு. “ஹ்ம்ம் அவளை பார்த்து கத்துக்கோ மயில்... எனக்கு என்ன பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமா?” என்று விளையாட்டாக தேஜுவுக்கு மட்டும் கேட்கும்படி நிரு கேட்க, “ம்ம்ம்ம் இவ்வளவு நேரம் சார் வேஸ்ட் பண்ணதை எல்லாம் சாப்பிட்டது யாரு??? உங்களை வச்சுக்காதிங்கனு சொன்னா கேட்கலை இப்போ எது பிடிக்கலைன்னு தெரிஞ்சிக்கணுமாம்” என்று அவள் குரல் அமர்த்தியே பதில் கூற, அதிலும் அவளது குரல் தளர்ந்தது தெரிந்து “அச்சோ என் மயிலு... மாமா விளையாட்டுக்கு சொன்னேன்டா சாரி...” என்று கெஞ்சவும் சட்டென மலர்ந்தாள் தேஜு. இருவரின் கொஞ்சலை நிறுத்த “ம்ம்ம் க்கும்...” என்று தொண்டையை செருமி சரி செய்தான் நவீன்.

ங்கு ஒரு காதல் கதை ஓட மறுபுறம் காதல் ஓவியத்தை வரைந்தனர் அனு அஸ்வத்... இருவருக்குமே மனம் நிறைந்து இருந்தது. அனுவுக்கு எது பிடிக்கும் என்று பார்த்து அவன் எடுத்து வைத்ததும், அவனுக்கு எது பிடிக்காது என்று அறிந்து அவள் தடுப்பதும் மனதை தொட்டுவிட அஸ்வத் யாரும் அறியாமல் மேசைக்கு அடியே தன் இடது கையால் அவளது இடது கையை பிடித்துக்கொண்டான். அந்த பிடி அவளுக்கு எல்லை இல்லா நிம்மதியை தந்தது. எப்போதுமே அப்படியே இருக்க மனம் ஏங்கியது. அவனின் கரங்களும் அப்படி சத்தியம் செய்வது போலதான் இருந்தது உன்னில் பாதி நான், என்றும் உனக்காக நான் இருக்கேன், என்னிடம் இருந்து விலகாதே என்று மானசிகமாக கூறியது.

அனைவரும் மீண்டும் வீட்டிற்கு திரும்ப காலையில் வந்தது போலவே பிரிந்து சென்றனர். அஸ்வத், வெங்கட் முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள.. கண்ணாடியில் பார்த்தால் தெரிவதற்கு சரியாக அமர்ந்திருந்தாள் அனு... அர்ஜுனின் வீடு வெகு தொலைவில் இருந்தது... குறைந்தது அரைமணி நேர பயணமாக,சுற்றிய அலுப்பில் அனைவரும் பயணத்திலேயே கண்ணுறங்க... அனு அவனை கண்ணாடியின் வழியே பார்த்துக்கொண்டு வந்தாள். அவள் பார்ப்பதை அவ்வப்போது அவன் பார்த்தும் அனு கண்களை திருப்பிகொள்ளவில்லை... இரவு நேர நீண்ட பயணம், ஜன்னல் வழியே குளிர்காற்றோடு மனம் கவர்ந்தவனை பருகிக்கொண்டே வந்தாள். அஸ்வத் மனமும் அவளை நினைத்தே உருகியது. யாரையும் எழுப்பாவண்ணம் ரேடியோவில் பாடலை ஒலிக்கவிட்டான். அவர்கள் எண்ணத்தை அந்த பாடல்கள் பரிமாறியது.   

“உயிரே என் உயிரே... என்னவோ நடக்குதடி

அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி

ஹோ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

எனதரிகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே..

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி

நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி...

....

இதுவரை எங்கிருந்தாய் இதயமும் உன்னை கேட்கிறதே

பெண்ணே எங்கே மறைந்திருந்தாய், என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்...

உனக்குள்ளே ஒளிந்திருந்தேன், உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்

உன்னை உனக்கே தெரியலையா!! இன்னும் என்னை புரியலையா???

...

நான் சிரித்து மகிழ்ந்து சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்

நான் நினைத்து நினைத்து ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்

...

உன்னுடன் இருக்கையிலே நிலவுக்கும் சிறகுகள் முளைகிறதே..

இதுவரை நானும் பார்த்த நிலவா இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா...

உன்னுடன் நடக்கையிலே என்னிடம் வண்ணமாய் மாறியதே...

உன்மேல் உன்மேல் நம் நிழல்கள் ஒன்றாய் ஒன்றாய் கலைகின்றதே...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.