(Reading time: 24 - 47 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 24 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ஹேய் ப்ரியா சும்மா இருடி " , " கீர்த்ஸ் நீயுமா ? ", " ஹே நிறுத்துங்க எல்லாரும் " என்று மது கூச்சலிட அவள் குரலுக்கு கொஞ்சமும் மதிப்பு தாராமல் அவள் முகத்தில் நீரள்ளி  தெளித்தனர் பெண்கள் அனைவரும் .

" ஹே  ஒரு ப்ரேக் கொடுங்கடி ... மூச்சு முட்டிடும் போல எனக்கு " என்றாள்  மது ..

" யாரு உனக்கு மூச்சு முட்டுதா ? அப்போ எங்களுக்கு எப்படி இருந்துருக்கும் ? " என்றாள்  மீனா கொஞ்சம் காட்டமாய் ...

VEVNP

வைட் வைட் .. பம்ப் செட்டுக்கு ஜாலியா போன பொண்ணுங்க ஏன் இப்படி கொலைவெறியில் இருக்காங்கன்னு  தெரிஞ்சிப்போம்  வாங்க .. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி..அப்படியே மேல பாருங்க

" இதோ வந்தாச்சு கீர்த்தனா .. நீ ஆசைப்பட்ட பம்பு செட்டுக்கு " என்றார் பானு ... பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் " யே ......யே " என்று கை தட்டி ஆர்ப்பரித்தனர் ..  பெரியவர்கள் அனைவரும் இளையவர்களை வாஞ்சையுடன் பார்த்தனர்..

" எவ்வளோ சந்தோசம் என் பேத்திங்க முகத்தில் " என்று சிலாகித்து கொண்டார் பாட்டி

" ஆமா அத்தை ... என்னதான் வசதியான சூழ்நிலையில் வளர்ந்தாலும் அது இயற்கையோடு வாழுற வாழ்கைக்கு ஈடாகுமா ? " என்றார் அபிராமி ..

" உண்மைதான் அண்ணி .. ஏதோ அம்மா, அப்பா மாதிரி பெரியவங்க இருக்குறது னால்தான் இன்னும் பல கிராமங்கள் பசுமையா இருக்கு .. அவங்க மட்டும் கொஞ்சம் விட்டுகொடுத்துட்டாங்க, எல்லாத்தையும் மாற்றிட கண்ணுக்கு தெரியாத ஒரு கூட்டமே இருக்கு .. எத்தனை அழகான கிராமங்களை முன்னேற்றி காட்டுறேன்னு சொல்லி மூளைசலவை செய்றாங்க " என்றார் பானு வருத்தத்துடன் .. பாட்டியும் அதையேதான் நினைத்தார் ..  அவர்களின் மிகப்பெரிய கவலையே விவசாயம்தான் .. அதென்னமோ  ஒரு சாதாரண விவசாயிக்கு கூட அவனின் வாரிசை டாக்டரோ இஞ்சினியரோ ஆக்கி பார்க்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறான்.. விவசாயம் என்பதை ஏன் ஏழைகளின் தொழிலாக பார்க்கிறார்களோ ?? என்ற கேள்வி எப்போதுமே பாட்டிக்கு உண்டு .. மனிதனின் அடிப்படி தேவையே உணவுதான் .. செல்வந்தர் ஆனாலும் சரி, பிச்சைக்கரனாய் இருந்தாலும் சரி , பசி என்பது அனைவருக்கும் ஒன்று தானே ? அந்த பசியை தீர்க்கும் தொழில் தெய்வத்திற்கு சமமாய் போற்ற பட்டிருக்க வேண்டும் .. ஆனால்??? ஒரு பெருமூச்சுதான் வந்தது அனைவருக்கும் .....

" அடடே ....  ஜாலியா  இங்க வந்து ஒரு குத்தாட்டம் போடலாம்னு பார்த்தா இப்படி டல் ஆகிட்டிங்களே என் செல்ல பாட்டி " என்று பாட்டியின் கன்னத்தை வலிக்காமல் கில்லி செல்லம் கொஞ்சினாள் சுபத்ரா... மற்றவர்களுக்குமே அதுவே சரியென பட  சட்டென பேச்சை மாற்றினர் ..  அப்போதுதான் மித்ராவை  கவனித்தாள் மீரா ...

" ஹே மித்ரா ...."

" சொல்லு மீரா "

" ஏன் ஒரு மாதிரி இருக்க "

" ஒண்ணுமில்லையே ..... "

" கதை விடாதே டீ " என்றாள் மீரா உரிமையுடன் .. சங்கமித்ரா அவளுக்கு பதில் சொல்வதற்குள்

" கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ

தத்தி வரும் வெள்ளலையே - நீ போய்த்

தூது சொல்ல மாட்டாயோ " என்று தன்னால் முடிந்தவரை நன்றாகத்தான் பாட முயற்சித்தாள் மது .... ஆனா அதை யாரு கேக்குறது ??

பெண்கள் அனைவரும் " ஐயோ " என்று ஒரே நேரத்தில் காதை பொத்திக் கொள்ள, இடுப்பில் கைவைத்து தோரணையாய் நின்று அனைவரையும்  முறைத்தாள் மது ..

" என்னடீ மது செல்லம் .. ஒரு வார்த்தை சொல்லாம நீ பாட்டுக்கு பாட ஆரம்பிச்சுட்ட ?? இங்க இவ்வளவு  பேரு இருக்கோம், ஒரே  நேரத்தில்  தப்பிச்சு ஓட முடியுமா சொல்லு ? பாரு பாட்டியே அரண்டு போயிட்டாங்க " என்று சமயம் பார்த்து காலை வாரினாள் மலர் ..

" ஆமா சிஸ்டர் ... நான் கூட கொஞ்சம் பயந்துதான் போயிட்டேன் " என்று நடித்தாள் மித்ரா ..

" நீ பேசாதே டீ .. உனக்காக சிட்டிவேஷன் சாங் பாடலாம்னு நான் கஷ்டபட்டு  பாடினா என்னையே  ஓட்டுரியா நீ   ? " என்றாள் மது ..

" ஹா ஹா நீ எங்க கஷ்டப்பட்ட மது .. உன் பாட்டை கேட்டு நாங்கதானே கஷ்டபட்டோம் ? "- அபிராமி..

"ஆண்டி நீங்களுமா ?? எல்லாம் என் நேரம் " என்று பெருமூச்செரிந்தவள் மித்ராவின்  பக்கம் திரும்பினாள்...

" ஹே கிரிமினல் லாயர் .. ஜாடையா கேசை  திசை திருப்ப  பார்க்குறியா ?  " என்றவள் கொஞ்சம் இடைவெளி விட்டு " நீ உன் ஷக்தி மாமாவை நெனச்சு தானே இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு நின்ன ? " என்றாள்... மீரா இடையில் புகுந்து

" ஏன் ஷக்திக்கு என்ன மித்ரா ? மொத கூட நல்லாதானே பேசிகிட்டு இருந்தான் .. ? "

" அதில்லை மீரா.... அது வந்து " என்று இழுத்தவள் என்ன சொல்வதென்று தெரியாமல் கீழுதட்டை கடித்து  நின்றாள்....

அதை பார்த்ததும் அவள் வயதொத்த பெண்களுக்கு மட்டுமில்லை, பாட்டிக்குமே சிரிப்பாகத்தான் இருந்தது ....

" அட உன் மாமா பையனை பத்தி பேசுறதுக்கா இப்படி வெட்கபடுற ? " என்று பாட்டியும் கேட்டு வைக்க, " ஆஹா இதுக்கு மேல சைலண்ட் ஆனா நம்மளை ரவுண்டு கட்டு ஓட்டுவாங்களே " என்று உணர்ந்தவள் சட்டென இயல்பாகி

" அதானே சரியா சொன்னிங்க பாட்டி .,. என் மாமா பையனை பத்தி சொல்ல எனக்கென்ன தயக்கம் ? என் திவ்யலக்ஷ்மி அத்தையின் தவப்புதல்வன் ஷக்தி அவர்களிடம்  ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இபப்டி வந்துட்டேனே .. பாவம் தன்னை நம்பி வந்த பெண்ணை தொலைச்சிட்டோமேனு அவன் தேடுவானேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. மத்தபடி நான் வெட்கம் எல்லாம் படலியே " என்றாள் லேசான வெட்கத்துடன் ..

" ஓஹோ நம்பிட்டோம் " என்றனர் அனைவரும் ..

" சரி மா .. இங்க இருந்து இதே ஒத்தையடி பாதை நடந்து வந்திங்கன்னா நம்ம வீட்டுக்கு வந்திடலாம் .. வழி தெரியும் தானே ? கல்யாண சோலி நிறைய இருக்கு .. நாங்க கிளம்புறோம்" என்றார் பாட்டி..

" ஐயோ பாட்டி , நீங்களும் எங்களோட இருப்பிங்கன்னு நெனச்சேனே " என்றாள் ப்ரியா ...

சிவகாமியோ " இல்லமா, நீங்க சின்னஞ்சிறுசுங்க , ஜாலியா பேசிகிட்டு என்ஜாய் பண்ணுங்க .,. என்னதான் பிரன்ட்லி ஆ நாங்க இருந்தாலும் உங்களுக்குன்னு  கொஞ்சம் ரெஸ்ட்ரிக்ஷன் இருக்கும் ல ... சோ நீங்க என்ஜாய் பண்ணுங்க .. நாங்க வீட்டுக்கு முதலில் கிளம்புறோம் " என்றாள்...

மீராவும் , சுப்ரியாவும் ஒரே நேரத்தில் " அத்தை நான் வேனும்ன உதவிக்கு வரவா ? " என்றனர் தத்தம் மாமியாரிடம் ..

" அடடே ... கல்யாண பொண்ணே உன் கல்யாணத்துக்கு நீயே எல்லா வேலையையும் செய்ய போறியா  என் தங்கமே " என்று மீராவுக்கு செல்லமாய் திருஷ்ட்டி கழித்தார் பாட்டி ...

சிவகாமியின் பார்வை சட்டென ஜானகி மீது படிந்தது .. எல்லாம் இந்த பொறாமை என்ற  தீ  எரிஞ்சிடுமொன்னு பயம்தான். ஆனால் ஜானகியோ  நெகிழ்வுடன் அந்த காட்சியை  ரசித்து  கொண்டிருந்தாள். அதில் மனம்குளிர்ந்த சிவகாமி ஜானிகியின் நெற்றியில்  முத்தமிட்டு அணைத்துக்  கொண்டார் ..

" ஆஹா பாரதிராஜா சார் படத்துல வர்ற லொகேஷன்ல  விக்ரமனின் படம் பார்க்குற மாதிரி இருக்கு " என்றாள்  நித்யா ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.