(Reading time: 24 - 47 minutes)

 

" ஹா ஹா .. சுபா இங்க இருந்திருக்கணும் .. அப்பறம் தெரிஞ்சிருக்கும் ரகு உனக்கு " என்று மிரட்டினான் ஆகாஷ் ..

" அதெல்லாம் என் ஜானு செல்லம் என்னை காப்பாத்திடுவா "

" ஹா ஹா .. இன்னும் உனக்கு ஜானுவை பத்திபுல்லா தெரில போல மச்சான் " - அர்ஜுனன் ..

" பேசாம நாம அவங்க இருக்குற இடத்துக்கு போனா என்ன ? "- கார்த்தி

" ஏண்டா நல்லவனே நித்யாவை பார்க்க முடியாமல்  இருக்க  முடியலையா ? " என்று கண்ணடித்தான் கிருஷ்ணன் ...

" ச்ச ச்ச .... நம்ம ஷக்தி தான் மித்ராவை பார்க்க முடியாம கொஞ்சம் டல்லா இருக்கான் .. சஞ்சு சொல்லவே வேணாம்... வாங்க போகலாம்னு சொன்னா முதல் ஆளா ஓடுவான் போல " என்று தப்பிக்க பார்த்தான் ..

" ஓஹோ அப்போ சரி .. வாங்க நாம அவங்களை பார்ப்போம் .... கார்த்தி நீ வீட்டுக்கு போடா " - ஷக்தி

" அடப்பாவி துரோகி .. புது நண்பனாக இருந்தாலும் உதவலாமேன்னு முன்வந்தா எனக்கே ஆப்பா ? உனக்கு அந்த லாயர் தான் சரியான ஜோடி "  என்றான் கார்த்தி ..

இப்படியாய் நம்ம காதல் ஜோடிகள் அருகருகில் இல்லைனாலும் பேச்சாலும் நினைவாலும் ஒருத்தரை ஒருத்தர் அணுகி கொண்டிருந்தனர் ... அதே நேரம், வீட்டில் வள்ளி பாட்டி

" பானும்மா இங்க வாயேன் " என்று அழைத்தார் ..

"என்னங்கம்மா ?  "

" எங்க யாரையும் காணோம் ? "

" பெரியண்ணா  சின்ன அண்ணா ரெண்டு பெரும் அண்ணிங்க கூட வெளில போயிருக்காங்க .. நானும் லக்ஷ்மி அக்காவும் சமையல் பண்ணிட்டு இருக்கோம் "

" உங்க அய்யா நம்ம கோவில்லுக்கு சமான்  எல்லாத்தையும் எடுத்துட்டு  போக ஆளுங்களையும் வண்டியும் ஏற்பாடு பண்ணுறேன்னு சொன்னாரே ? எங்க போனாரு தெரியலையே " என்று பாட்டி வாசலில் எட்டி பார்க்கும்போதே தாத்தா அங்கு வந்தார் ..

 " அடடா என்னம்மா உங்க அம்மாவுக்கு என்னை பார்க்காமல் இருக்க முடியலையாக்கும் ? " என்று  பாட்டியை பார்த்துக்கொண்டே பானுவிடம் கேட்டார் தாத்தா... ஒரு புன்னகையை பதிலாய்தந்த பானு, சமையலறைக்கு செல்ல எத்தனிக்க

" பானு எங்கம்மா போற ? இங்க வா " என்றார் தாத்தா .. அவருக்கு என்னமோ பானுவும் லக்ஷ்மியும் அனைத்து சுபகாரியங்கலிலும  விலகி நிற்பது போலவே பட்டது .. இருப்பினும் அதை அனைவரின் முன்னிலையிலும் கேட்க விரும்பவில்லை தாத்தா.,. இப்போது வீட்டில் யாரும் அதிகம் இல்லை என்பதால் இதுவே சரியான நேரம் என்று நினைத்தார் தாத்தா...

" இல்லப்பா .. சமையல் வேலை இருக்கு .. பாவம் லக்ஷ்மி  தனியா செஞ்சுகிட்டு  இருக்காங்க ..."

" சரிம்மா நீ என்ன பண்ணுற , உள்ள போயி சமையல் வேலையை நிறுத்த சொல்லிட்டு லக்ஷ்மியையும் நான் கூப்பிட்டேன்னு   சொல்லு "

ஏதோ பதில் பேச வந்த பாட்டி தாத்தாவின் சிந்தனை படிந்த முகத்தை பார்த்து அமைதியானார் ... கணவரின் ஒவ்வொரு அசைவையும் புரிந்து வைத்திருக்கும் அவருக்கு தாத்தாவின் செய்கை எதையோ உணர்த்த அமைதியாய் தாத்தா அருகில்  அமர்ந்தார் ..

" வள்ளி "

" என்னங்க ? "

" ஏதும் கேட்கனும்னு தோணலையா?"

" எதுக்கு கேட்கணும்  ?"

" வள்ளி ??"

" ஆமா எதுக்கு கேட்கணும் ? வார்த்தையாலே பேசித்தான் நான் உங்களை புரிஞ்சுக்கனுமா ? உங்க ஒவ்வொரு அசைவின் அர்த்தமும் என்னை விட யாருக்கு நல்லா தெரியும் சொல்லுங்க ? " என்றார் பாட்டி ரோஷமாய் ...

" எம்மாடி ... அழகுடீ நீ " என்று சந்துல சிந்து பாடினார் ..

" கூப்பிட்டிங்ங்களா  அய்யா ?? "

" என்னமா அய்யா ? அழகா அப்பான்னு சொல்லலாம் தானே ? "

" சரிங்கப்பா சொல்லுங்க " என்றார் லக்ஷ்மி புன்னகையுடன் .....

" நாளைக்கு காலையில நாம  குலதெய்வம் கோவில்லுக்கு போயி பொங்கல் வெச்சிட்டு அப்படியே நம்ம ஊரு கொல்லன்கிட்ட தாலி செய்ய கொடுக்க போறோம் .. "

" ரொம்ப நல்ல விஷயம் பா .. "

" ம்ம்ம் அதான் .. இந்த பொங்கலுக்கு வேண்டிய சாமானும், சாமிகிட்ட ஆசீர்வாதம் வாங்க சீர் வரிசை எல்லாத்தையும் பூஜை அறையில் தட்டுல வெச்சிருக்கேன் .. வண்டி வெளில இருக்கு ... ரெண்டு பெரும் அதை எடுத்துட்டு வந்து வண்டியில வைச்சிடுங்க மா " என்றார் பொறுமையாய் ..

தாத்தா கணித்தது போலவே இருவருமே ஒருவரின் ஒருவர் முகம் பார்த்துக் கொண்டு நின்றனர் .. பின்பு தயங்கிய குரலில்

" அப்பா,  அண்ணா அண்ணி எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க .. அவங்களை சீர் எடுக்க சொல்லலாமே  " என்றார் பானு ..

" அவங்க எப்போ வருவாங்க ? அதுவரை காத்திருக்க வேனாமேமா .. நிறைய வேலை இருக்குல .. ? "

" அது வந்து .... " என்று சொல்ல முடியாமல் இருவருக்குமே கண் கலங்கியது .. அதுவரை அமைதியாய் இருந்த பாட்டி  பேசினார் ..

" அட மனசுல இருக்குறதை சொல்லுங்க  பொண்ணுங்களா .. ஏன் கண் கலங்கி  நிற்குறிங்க  ? "

" அம்மா , அப்பா தப்பாக எடுத்துகாதிங்க ... நம்ம பிள்ளைங்க  புது வாழ்க்கை ஆரம்பிக்க போறாங்க.. அதுல அபசகுனமா ஒன்னும் நடத்துட வேணாமே "

" ஏன் மா அப்படி சொல்லுற ? இப்போ என்ன அபசகுனமா நடந்தது ?"

" நடக்கல பா .. ஆனா நடக்க கூடாது " என்ற சொன்ன பானுவின் கண்களில் கண்ணீர் .,.. அவரே தொடர்ந்து பேசட்டும் என அமைதி காத்தார் தாத்தா ..

" பொதுவா இந்த மாதிரி நல்ல காரியங்களில் அமங்கலிங்க எடுத்து செய்றது நல்லது இல்லப்பா .. நாங்க வாழ்ந்து முடிச்சவங்க ... அவங்க வாழ போறவங்க ... எங்க துரதிஸ்டம் பிள்ளைகளை பாதிக்க வேணமே ? " என்றார் லக்ஷ்மி..

" என்ன பேசுறான்னு தெரிஞ்சுதான் பேசுறியா " என்று வள்ளி பாட்டியின் குரலில் அந்த வீட்டையே ஒரு முறை உலுக்கியது ..

" வள்ளி கொஞ்சம் தன்மையா பேசு "

" நீங்க சும்மா இருங்க ..  என்ன பேச்சு இதெல்லாம் ? நம்ம காலத்துல தான் இப்படியெல்லாம் பேசி இந்த மாதிரி இருந்தவங்களை ஒதுக்கி வெச்சாங்க.... இப்போ உள்ள பிள்ளைங்க படிச்சவங்க புத்திசாலிங்க பார்த்து சூதானமா நடந்துப்பங்கன்னு பார்த்தா , இப்பவும் அதே மாதிரி பேசுனா என்ன அர்த்தம் ... "

" அம்மா நாங்க உங்க மனசு கஷ்டப்படுத்த அப்படி சொல்லல ...."

" தாயி நீ முதல்ல உன் மனசு கஷ்டப்படாமல் இருக்கான்னு பாரு ... கல்யாணம் பண்ணி வாழபோரவங்க அவங்க ,.. உன் ஆசிர்வாதம் இல்லன்னா  மட்டும் அந்த பிள்ளைங்க சந்தோசமா  இருப்பாங்களா ? "

".."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.