(Reading time: 24 - 47 minutes)

 

" மாங்க .. அதே மாதிரிதான் சுபாவை பத்தின கவலையும் ... பொண்ணுங்களோட வாழ்க்கை அப்படித்தான் .. இடம் விட்டு  இடமாறி வேரூன்றி நிற்குற விருட்சமும் பெண்ணும் ஒண்ணுதான் .. நான் என் அம்மா வீட்டுல  இருந்துதானே வந்தேன் .. எங்க அம்மா அவங்க அம்மா வீட்டுல இருந்து வருவாங்க .. இது இயல்பு .. இதுக்கு முடிவோ தீர்வோ  இல்லை .. அவ ஸ்கூல் லைப் முடிஞ்சு காலேஜ் லைப் முடிஞ்சு நம்ம கிட்ட அழுதது ஞாபகம் இருக்கா ? பிரண்ட்ஸ் இல்லாமல் இருக்கவே மாட்டேன் .,.. அது இதுன்னு புலம்பினா ... ஆனா மாப்பிளை அவ லைப் ல வந்ததும் நிறைய மாற்றங்கள் .. மனசை திடபடுத்து வாழ கத்துகிட்டா .. இப்பவும் குறும்பு பண்ணுறாதான்  அதே நேரம் மனதிளவில் ஸ்ட்ரோங் ஆ இருக்கா "

"ம்ம்ம்ம் "

" அந்த மாதிரிதான் நமக்கும் .. அண்ட் நம்ம  மாப்பிளை தங்கமா இருக்கும்போது உங்களுக்கு இந்த கவலையே வேணாம் .. இப்போதான் நீங்க பொண்ணு பொண்ணுனு  இருக்கீங்க .. நாளைக்கே ஒரு குட்டி பேரனோ பேத்தியோ வந்துட்டா உங்களுக்கு  அவங்களை பார்க்கவே நேரம் போதாது "

எதுவும் பேசாமல் மீசையை முறுக்கி கொண்டு காதலை பார்த்தார் சூர்யா ..

" அடடே இதென்ன பார்வை ?"

" இல்ல லவ் பண்ணலும் ஒரு புத்திசாலி பொன்னைத்தான் நான் கை பிடிச்சிருக்கேன் .. அதான் "

" அடடே ... ரொம்பத்தான் பெருமை .. " என்று சிரித்தார் அபிராமி ..

சந்துரு - சிவகாமி

" ராஜாவின் பார்வை

ராணியின் பக்கம்

கண் தேடுதே சுவர்க்கம்

கை மூடுதே வெட்கம்

பொன்மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் " - சந்துரு .. .

" மயக்கமா ? அதான் பார்த்தாலே தெரியுதே " என்று சிரித்தார் சிவகாமி

" ...."

" ஆமா என்ன டென்ஷன் உங்களுக்கு இப்போ ? "

" எனக்கென்ன ? நான் நல்லாதானே இருக்கேன் ? "

" ஓஹோ அதான் பார்த்தேனே ... கண்ணு இரண்டும் ஒரு இடத்துல நிற்க மாட்டுது .. அடிக்கடி பெருமூச்சு விடுறிங்க ... என்  முகம் மாறுனதும், என்னை சமாதானம் படுத்த டூயட் பாடுறிங்க "

" எப்படி சிவா ? கலக்குற போ  "

" நீங்க முதலில் உண்மைய சொல்லிட்டு  அதுக்கு பிறகு ஐஸ் வைங்க "

" ஒன்னும் இல்லம்மா .. கல்யாணம் நல்லபடியா நடக்கும் "

" நம்ம ஊரு நம்ம வீட்டு கல்யாணம் .. நல்லாதானே நடக்கும் .. நடக்காமல் எப்படி போகும் ? "

" சுபா மாமியார் வீடுக்கு போயிடுவாளே "

" பொண்ணுன்னா  அப்படித்தான் .. ஏன் உங்களை  நம்பி நான் வரலையா ? "

" என்ன நீ நான் என்ன சொன்னாலும் அதுக்கொரு பதில் வெச்சிருக்க ? "

" எல்லாத்துக்கும் பதிலும் தீர்வும் இருக்குற விஷயத்துக்கு மூளையை போட்டு அந்த குழப்பு குழப்பினா நானும்தான் என்ன பண்ணுவேன் ? உங்க பங்குக்கு நானும் கொஞ்சம் குழப்பி விடவா ? "

" உன்னால எப்படி இப்படி எடுத்துக்க முடியுது ? "

" ஏன் முடியாது ? நீங்க நம்ம  வீட்டை விட்டு நம்ம பொண்ணு போராலேன்னு வருத்த படுரிங்க .. நான் தங்கமாட்டம் ரெண்டு மருமகள்க  வரப்போரான்களே நு சந்தோஷப்படுறேன் "

" சுபாவும் தங்கம்தான் "

" யாரு இல்லனா ? அதுக்காக கல்யாணம் காட்சி  இல்லாமல் நம்ம வீட்டு லாக்கர்ல பூட்டி  வெச்சிடலாமா ? "

" என்னமோ போ .. எனக்கொண்ணும புரியல .. உங்களுக்கு புரியவனும் வேணாம் ..உங்களை விட எனக்குதான் உங்களை நல்லா தெரியும் .. இழுத்து போட்டு வேலை செஞ்சாத்தான் உங்களுக்கு இந்த மாதிரி கவலை எல்லாம் பூதகரமா தெரியாது .. அதை விட்டுட்டு .. நீங்க பாட்டுக்கு நடக்குறேன்  பறக்குறேன்னு ஊரை சுத்திட்டு இருக்கீங்க " சிவகாமி கேட்ட விதத்தில் சட்டென சிரித்தார் சந்துரு ..

" ஹா ஹா ஹா .. இல்லடா உன்கிட்டயும் சரியா பேச முடியல லே .. அதான் ... உனக்கும் மனசு கஷ்டமா இருக்குமே "

" நான் சொன்னேன்னா? நீங்க இப்படி மனசு நிம்மதி இல்லாமல் இருக்குறதுதான் எனக்கு கஷ்டம்.. மத்தபடி நீங்க பிசியா இருந்தாலும் நிம்மதியா இருந்தா அதுவே எனக்கு போதும் "

" ... "

" என்ன பார்க்குறிங்க? "

" ஐ லவ் யு "

" ஐயோ சும்மா இருங்க .. இது கிராமம் ..  யாரு காதுலயாவது விழுந்துட போகுது .."

" ஹா ஹா ஹா " என்று பெரிதாய் சிரித்தார் சந்திரப்ரகாஷ்..

அன்று மாலை,

ஈராக் கூந்தலை  காய வைத்து கொண்டே பேசிக்கொண்டிருந்தனர் பெண்கள் அனைவரும் ..

" என்ன சுபி .. வீடே அமைதியா இருக்கு .. அதைக்கூட என்னால நம்ப முடியுது ,.,பட் உன் ஹீரோ அமைதியா இருக்காரே அத்தான் நம்ப முடியலை.. "

" மீரா அண்ணி, நித்யாவுக்கு சாம்பிராணி காட்டியது போதும் .. கொஞ்சம் சாம்பிராணி ஊட்டியும் விடுங்க .. அப்படியாச்சும் வாய் அடங்குதா பாப்போம் "

" ஹே " என்று நித்ய ஏதும் சொல்வதற்கு முன்

" எல்லாரும் இங்க வாங்க " என்று உற்சாகமாய் குரல் கொடுத்தான் அர்ஜுனன் ..

" நான்தான் சொன்னேன்ல ..உன் ஆளுனால வாய வெச்சுகிட்டு சும்மாவே இருக்க முடியாதுன்னு .. பார்த்தியா குரல் கொடுத்தாச்சு "

" அடியே " என்று அவளை துரத்திகொண்டே ஓடி அர்ஜுன் பக்கம் வந்தாள்  சுபத்ரா,.. அவனை கண்டதுமே கால்கள் பின்னிக்கொண்டது .. அவனது மீசையும், அழுத்தமான பார்வையும், அவளை இம்சிக்க, வேஷ்டி சட்டை அவனின் கம்பீரத்தை இன்னும் கூட்டியது .. அவளின் தயக்கமும் வெட்கமும் அவனையும் புன்னகைக்க வைத்தது ..

" வாடா .. ஏன் அங்கேயே நின்னுட்ட "

" சும்மா இருந்ங்க அஜ்ஜு  ..எல்லாரையும் கூப்பிட்டுடு இப்படி காதல் பேசிட்டு இருக்கீங்க .. "

" நான் இன்னும் எதுவுமே பேச ஆரம்பிக்கலை குட்டிமா "

" அதைதான் நானும் சொல்லுறேன் .. எதற்கும் இடம் பொருள் ஏவல்  இருக்கு ல ?"

" ஹா ஹா .. என்ன பண்ணுறது ..எனக்கும் நீ பம்ப் செட்டில் குளிக்கும்போது

கொஞ்சம் மறைஞ்சு பார்க்கவா இல்லை முதுகு தேய்க்கவா நு

பொத்திவெச்ச மல்லிகை  மொட்டு பாட்டு பாட ஆசைதான் .. பட் உன்னோடு மத்த பொண்ணுங்களும் இருந்தாங்களே ....அதான் " என்று பெருமூச்சு விட்டவன் " இட்ஸ் ஓகே.. கல்யாணத்துக்கு பிறகு நாம ரெண்டு பெரும் மட்டும் தானியா போகலாம் சரியா " என்று கண்ணடித்தான் ..

அதற்குள் அவன் குரல் கொடுத்தற்கு பலனாய்  அனைவரும் அங்கு வந்து நின்றனர் .. அர்ஜுன் தாத்தாவை பார்த்தது " ரெடியா தாத்தா ? " என்றான் ..

(எல்லோரும் கேள்வியாய்  பார்க்க, அதே கேள்வியுடன் நாமும் காத்திருப்போமே ..ஹா ஹா ஹா  )

தொடரும்

Episode # 23

Episode # 25

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.