(Reading time: 24 - 47 minutes)

 

" நீ ஜானகிக்கு அம்மா ஸ்தானத்துல இருக்க, லக்ஷ்மி நீ  மீராவுக்கு அம்மா ஸ்ரானத்துல இருக்க , ஒரு பொண்ணுக்கு அவங்க அம்மா ஆசீர்வாதம் இல்லாமல் அவ நல்ல வாழ்ந்திட முடியுமா ? "

" அப்படி இல்லம்ம்மா .. எங்க  ஆசிர்வாதம் எப்பவுமே அவங்களுக்கு உண்டு .. ஆனா இந்த சடங்கு சம்ப்ரதாயத்துல நாங்க வேணாமே ! "

" இது பாரும்மா .. சுமங்கலி இல்லன்னா அந்த பெண்ணை  நல்ல காரியத்துக்கு ஒதுக்கி வைப்பாங்க .. அதுக்கு காரணம் அவளின் துரதிஸ்டம் மத்தவங்களுக்கு பட கூடாதுன்னு இல்ல .. ஒருவேளை இளம்  வயசுலேயேதுணையை  இழந்துட்டா  அங்க நல்ல காரியம் நடக்கும்போது, அந்த இலம்போன்னு மனசு அழும் .. நாமளும் இப்படி தானே இருந்தோம்னு ஏங்கும் .. அந்த ஏக்கம் புதுசா வாழரவங்களை பாதிக்க கூடாதுன்னு தான் அப்படி சொல்லுவாங்க .. நீங்க ரெண்டு பெரும் அப்படியா நினைப்பிங்கன்னு சொல்லுங்க ? "

" ..."

" இது உங்க பிள்ளை  கல்யாணம் .. உலகத்துல அப்பா அம்மாவை தவிர யாரு ஜாஸ்தியா ஒரு பிள்ளைய வாழ்த்திட முடியும் ? உண்மையான வாழ்த்தும் அன்பும் பெத்தவங்க கிட்ட இருந்துதானே வரும் .. ? "

" சரி .. அப்போ நாளைக்கே எனக்கேதும் ஆனா , என்னையும் ஒதுக்கி வைச்சிடுவின்களா ? "

" ஐயோ அம்மா என்னம்மா இது ??? அதெப்படி முடியும் ? "

" அப்போ எங்களால மட்டும் எப்படி முடியும் ?  நல்லவேளை  உங்க அப்பா யாரும் இல்லாத நேரமா பார்த்து இத பத்தி பேச்சு எடுத்தாரு .. என் பேரன் பேத்திக்கு இது தெரிஞ்சா அவங்க மனசு என்ன பாடு படும் ? "

" யாருமே தனக்கு கல்யாணம் ஆகும்போது  அது ஒரு நாள் முடிஞ்சு போயிடணும்னு கனவுல கூட நினைக்க மாட்டங்க மா ... விதி உங்களை இப்படி ஆக்கிடுச்சு ... அதுக்கு நீங்களே ஏன் தண்டனை தேடிக்கிறிங்க  ? என்னமா இது ?? நான் கண்டிப்பா உங்க கிட்ட இதை எதிர் பார்க்கலம்மா " என்ற வள்ளி பாட்டியின் கண்களிலும் கண்ணீர் ...

" ஐயோ அம்மா அழாதிங்க மா .. ஏதோ மன குழப்பத்தில் தப்பாக முடிவு எடுத்திட்டோம் .. மன்னிச்சிருங்க .. அதான் எங்க மனசை நீங்களே தெளிய வைச்சுடிங்கள .. இனி இப்படி யோசிக்க கூட மாட்டோம் "என்றார் பானு .. லக்ஷ்மியோ அமைதியாய் அமர்ந்து அவர்களை பார்த்து கொண்டிருந்த தாத்தாவிடம் வந்து

" இப்போவே  சீர் எடுத்துட்டு வரேன் பா .. இனி எதுலயும் ஒதுங்கி இருக்க மாட்டோம் " என்றார் தெளிவுடன் ..

" சரி சரி ...  அப்போ  முகம் கழுவிட்டு ... பூஜை அறைக்கு போயி மனநிறைவா கடவுளை வேண்டிட்டு நாளைக்கு பூஜைக்கு ஆக வேண்டிய  வேலையை கவனிங்க " என்று சொல்லி  அவர்களை அனுப்பி வைத்தார் பாட்டி .. என்னத்தான் பாட்டி கோபமாய் பேசினாலும், அவரின் கோபம்தான் மற்ற இருவரின் பேச்சை கட்டிபோட்டு யோசிக்க வைத்தது என்பதை தாத்தாவும் உணராமல் இல்லை .. எதையும் சட்டென அதே நேரம் தெளிவாக எதிர்கொள்ளும் பாட்டியை அன்பாய் பார்த்தார் தாத்தா ....

 "என்ன இங்க பார்வை ??? " - வள்ளி பாட்டி

" ஒன்னுமில்லையே "

" போங்க ... உங்களுக்கும்தான் சேர்த்து சொன்னேன் .. போயி வேலைய பாருங்க "

கண்களில் காதல் தேக்கி ஒரு பார்வை பார்த்துவைத்துவிட்டு போனார் தாத்தா .. அதை  மனதிற்குள் பொத்தி வைத்து ரசித்தார் பாட்டி .. சரி வாங்க நாம, நம்ம சூர்யா சாரை பார்ப்போம் ,.. 

" என்னங்க "

" சொல்லு   அபி "

" இல்ல வீட்டுல  கல்யாண வேலை இருக்கு .. ஆனா நீங்களும் சின்னவரும் திடீர்னு சும்மா காலாற நடந்துட்டு வரலாம்னு கிளம்பிட்டிங்களே .. என்னாச்சு  ?"

" ஹா ஹா ... இந்த கேள்விதான் இவ்வளவு நேரம் உன்னை அமைதியா யோசிக்க வெச்சதா ? முதல்லையே ஒரு வார்த்தை கேட்டுருக்கலாம்ல .. "

" அய்யே என்னை எதாவது சொல்லலன்னா உங்களுக்கு தூக்கம்  வராதே .. சரி பதில் சொல்லுங்க "

" மனசு ஒரு நிலையில் இல்ல அபி .. "

" என்னாச்சுங்க ...?"

" ஒரு பக்கம் நம்ம புள்ளங்களுக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு சந்தோசம் , ஒரு பக்கம் சுபா இனி அர்ஜுன் வீட்டுக்கு போயிடுவாலேன்னு கஷ்டமா இருக்கு , இன்னொரு பக்கம் அம்மா அப்பாவை விட்ட்டுட்டு  மறுபடி சென்னை போகணுமேன்னு யோசனையா இருக்கு "

" ..."

" உனக்கு இப்படி எல்லாம் இல்லையா அபி ? "

" இல்லாமல் எப்படி இருக்கும்ங்க ? நீங்க வெளியில் சொல்லிட்டிங்க .. நான் சொல்லல " என்று சொன்னவர் அங்கு  இருந்த ஆலமரத்தை பார்த்தார் .. அவரின் பார்வையை தொடர்ந்த சூர்ய பிரகாஷின் பார்வையும் அங்குதான் நிலைத்தது ....

" வா  " என்றவர் அபிராமியின் வலது கரத்தை பிடித்துகொண்டு அங்கு சென்று அமர்ந்தார் ..

" இந்த இடம் நியாபகம் இருக்கா அபி ? "

" அப்படி மறக்கும் ? நீங்க அதிரடியாய் உங்க காதலை  சொன்னதும் இங்கத்தானே பஞ்சாயத்துல நின்னோம் "

" இன்னைக்கு நெனச்சாலும் அந்த நாளை மறக்க முடியாது அபி .. "

" ஆமாங்க .. கிட்டதட்ட வாழ்வா சாவான்னு நெஞ்சு படபடன்னு அடிச்சுகுச்சு .. எங்க என் அப்பா நம்ம குடும்ப உறவையே வேணாம்னு  உதறிடுவாரோன்னு  பயந்துட்டேன் "

" எனக்கு அதெல்லாம் கூட யோசனை இல்ல அபி .. என் மனசுல இருந்தது ரெண்டு ரெண்டுதான் "

" என்னங்க ? "

" முதலாவது நான் மனசார விரும்புன பொண்ணு உன்னை இப்படி ஊர் முன்னாடி பஞ்சாயத்தூல நிற்க வைச்சுட்டேநேன்னு குற்ற உணர்வு .. ரெண்டாவது நீ .... நீ எனக்கு வேணும் .. நீ இல்லாத வாழ்கையே வேணாம்னு இருந்தேன் .. அன்னைக்கு மட்டும் பஞ்சாயத்துல ஏதும்  எக்கு தப்பா நடந்திருந்தா நிச்சயம் நான் என் உயிரை போக்கி இருப்பேன் "

" என்ன பேச்சு பேசுறிங்க ? " என்று பதறிய அபிராமி அவரின் வாயை தனது கரத்தால் முடினார் .. அவரின் கரத்தை தன் கரங்களுக்குள் வைத்து கொண்டு பெருமூச்சு விட்டார் சூர்யா ..

" நான் ஒன்னு சொல்லவா ? "

" சொல்லுமா ? "

" அன்னைக்கு நாம இந்த இடத்தில் இருந்ததுக்கும் இப்போ இங்க இருக்குறதுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் பார்த்திங்களா ? "

"..."

" அதுதான்  நாம  வாழ்ந்த வாழ்க்கை ..... நம்ம வாழ்க்கை கத்து கொடுத்த பாடமே இதுதான் .. நம்மோடு யாரு வேணும்னாலும் தொடர்ந்து வருவாங்க .. யாரு வேணும்னாலும் பாதியில் விட்டுடு போயிடுவாங்க .. ஆனா வாக்கை மட்டும் ஓடுறதை நிறுத்தாமல் ஓடிகிட்டே இருக்கும் .. இவங்க போக போறாங்களே நு நெனச்சு கவலை படுற ஒவ்வொரு வினாடியும்  நாம அவங்களை விலகிதானே இருக்குறோம் ? அத்தை மாமாவை விட்டுட்டு போக மனசு கேட்கல ..அதான் சும்மா காலாற நடக்க வந்தேன்னு சொல்றிங்களே ? இந்த நேரத்தையும் நீங்க அவங்க கூடவே செலவு பண்ணி இருக்கலாமே .. அது உங்களுக்கு இன்னும் நினைவுகள் தரும் ..நினைவுகள் தான் கடைசி வரை கூட வரும்  "

" அபி ..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.