(Reading time: 27 - 54 minutes)

 

டுத்தடுத்து வந்த பாடல்களும் அவர்களை பாகாய் உருக செய்தது...

“உன் பேர் சொல்ல ஆசைதான்..

உள்ளம் உருக ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்...

...

உன்தோள் சேர ஆசைதான்..உன்னில் வாழ ஆசைதான்

உனக்குள் உதைய ஆசைதான்... உலகம் மறக்க ஆசைதான்

ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்...

...

கண்ணில் கடைகண்ணில் நீயும் பார்த்தால் போதுமே

கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே...

...

நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென

கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன...

தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல, காரணம் காதல் தானே...

பிரம்மன்கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்தாலே...”

என்ன தோன்றியதோ அவன் மேல் சாய்ந்து கொள்ள எண்ணம் தோன்ற அவன் அமர்ந்திருக்கும் இருக்கையின் மீது சாய்ந்துக்கொண்டாள் மனம் அவனோடு தனி உலகில் பயணித்தது... அந்த நிமிடம் உலகம் மெதுவாக சுழல்வது போல் தோன்றியது இருவருக்கும்... அடுத்த பாடலில் இன்னும் கரைந்தனர்.

“யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்

இப்படிக்கு உன் இதயம்...

என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்

என் பேச்சை கேட்காமல் உன்னை தேடும்...

...

இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்

கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் நிஜமாய்..

ஓ... அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம்

இதழ்கள் என்னும் படிவழியில் இதயத்திற்குள் இறங்கியது

காதல் காதல் காதல்...

...

பேச மொழி தேவை இல்லை பார்த்துகொண்டால் போதுமே

தனிபரவை ஆகலாமா மணி கோயில் நானுமே...

சிற்பம் போலே செய்த என்னை செமித்தவன் நீயே நீயே

மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா...சொல்..”

வீட்டிற்கு வந்தபின்னும் அந்த மௌன நிலையில் இருந்து களைய விரும்பாமல் உறங்க சென்றனர். எண்ணி எண்ணி நேரத்தை வீணாக்காமல் உடனே உறங்கி கனவில் சந்தித்துக்கொண்டனர் இருவரும். அடுத்துவந்த நாட்களில் விரைவாக நகைகள் வாங்கிவிட்டு ஊருக்கு திரும்பினர்.

“என்னம்மா சின்ன குழந்தை மாதிரி முகத்தை சுருக்கிக்கிட்டு... இன்னும் ஒரு மாசம் கூட இல்லை... நாங்க போய் கொஞ்ச நாள்ல நீ வர போற அவ்வளவு தானே... பாரு விபு குட்டியே அழகா சிருச்சு வழியனுப்புறான்...” என்று சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார் துளசி...

எப்போதும் இல்லாமல் வீட்டில் ஆட்கள் சேரும் பொழுது வரும் ஏக்கம் அவளையும் தொற்றிக்கொள்ள, அவர்களை அனுப்பவே மனம் இன்றி சோகமானாள்.

“அப்போ நீயும் விபுவும் எங்க கூட வந்திடுங்கமா, இன்னும் 3 வாரம் தானே அர்ஜுன் தனியா இருந்துக்கட்டும்” என்று வெங்கட் கூறவும் அர்ஜுனுக்கு தூக்கிவாரி போட்டது.

“ஐயோ அப்பா சும்மா இருங்க அதெல்லாம் நீங்க போன கொஞ்ச நேரத்துல சரியாகிடுவாள். நீங்க பாட்டுக்கு என்னை தனியாள் ஆக்கிடுவிங்க போலவே...” என்று அவன் புலம்பவும் பழையபடி சிரிப்பலைகள் பரவியது அங்கே.

“ஹாய் பிரிண்ட்ஸ் நான் தான் உங்க வருண், என்னடா இவன் இன்னும் மணி ஆகலையே அதுக்குள்ள எதுக்கு வந்தான். இப்போ இவன் ஷோ இல்லையேன்னு நீங்க நினைக்குறது கேட்குது. பட் இன்னும் ஒரு 3 நாளைக்கு நான் ரொம்ப பிஸி... அப்படி என்னடா வெட்டி முடிக்க போறேன்னு கேட்குறிங்களா? அதாங்க ஒல்லியா நொய் நொய்னு பேசி உங்களை இம்ப்ரெஸ் பண்ணுமே ஒரு பொண்ணு.. அதாங்க நம்ம அனு என்கிற அனன்யா அவளுக்கு கல்யாணம்... பொறுங்க பொறுங்க என்னடா சொல்லாம கொல்லாம இப்படி பட்டுனு சொல்றானேன்னு திட்டாதிங்க... அவளை கேட்டுக்கோங்க.. இன்னைக்கு அந்த பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் சோ ஐயா.... சொயினு பறந்து போகணும். சபாடா விஷயத்தை சொல்லியாச்சு இப்போ அந்த பொண்ணுக்காக நம்ம ஒரு சாங் dedicate பண்ணுவோம்...” பின்பு ரகசிய குரலில் கூறினான். “அந்த பொண்ணுதாங்க இந்த பாட்டை கேட்டுச்சு...” என்று கூறிவிட்டு அந்த பாடலை ஒலிக்கவிட்டான்.

திருமண மலர்கள் தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே...

மலர்வாய் மலர்வாய் கொடியே கனிவாய் கனிவாய் மரமே...

நதியும் கறையும் அருகே நானும் அவனும் அருகே..

பிறந்த இடம் புடுந்த இடம் வேறு இல்லை...

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரமில்லை...

...

போனவுடன் கடிதம் போடு...

புதினாவும் கீரையும் சேறு..

புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை..

ஏனென்றால் சுவர்தான் உண்டு தூரமில்லை..

இப்படியோர் நல்லுறவு வாய்த்திடுமா..

வீட்டுக்குள்ளே விண்மீன்கள் காய்திடுமா...

...

பாவாடை அவிழும் வயதில் கயிருகட்டி விட்டவன் எவனோ..

தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்...

கொலுசு இடும் ஒசைகேட்டே மனசிலுள்ள பாஷை சொல்வாய்.

மழை நின்ற மலரை போல பதமானவன்

உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்..

தெய்வங்களும் எங்களைத்தான் நேசிக்குமே...

தேவதைகள் வாழ்த்துமடல் வாசிக்குமே...  

...

இனியதொரு தருணம், இனிமையான பாடலின் மூலம் துவங்கியது... காதலின் முதல் சாதனையே வெற்றிகரமாக புரிதலோடும், அனைவரின் மகிழ்ச்சியோடும் நேசித்தவனையே கைபிடிப்பது தான். அப்படி பட்ட முதல் சாதனை செய்ய போகும் இருவரின் திருமணத்தை நடத்திவைக்க நாமும் செல்லலாம் வாருங்கள்....

Go to Kadhal payanam # 23

Go to Kadhal payanam # 25

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.