(Reading time: 27 - 53 minutes)

23. காதல் பயணம்... - Preethi

ரு சக்கர வாகனத்தில் நிருவும் அஸ்வத்தும் பறந்தனர். வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவனுக்கு முன் கண்ணாடியால் தன் தோழனை பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. அவனை பார்த்து பார்த்து வேகத்தை அதிக படுத்தினான் அவனது துக்கத்தை குறைக்க... அஸ்வத்தின் மூளை வேலை செய்தபாடில்லை மனமும் மூளையும் அனுவை மட்டும் தான் நினைத்தது. இன்னைக்கு காலைல தானே அவள் கொஞ்சி கொஞ்சி பேசுறதை கேட்டோம் அதுக்குள்ள இப்படி நாள் மோசம் ஆகணுமா என்று எண்ணி வருந்திக்கொண்டே வந்தான். இதற்கிடையில் ஆங்காங்கே போக்குவரத்தில் மாட்டிக்கொள்ள, அவ்வபோது தேஜுவுக்கு அழைத்தான் அவள் வேறு அனுவுக்கு fracture பெரிய அடி என்றல்லாம் கூற அஸ்வத்திற்கு படபடப்பு இன்னும் அதிகம் ஆனது... தன்னையும் மீறி கண்ணில் நீர் தேங்க இல்லை அனுவுக்கு ஒன்னும் இல்லை இதோ இப்போ போய் பார்த்திடலாம் என்று மனதை தேற்றிக்கொண்டே வந்தான். ஒருவழியாக மருத்துவமனை சேர்ந்தடைய தேஜுவே வெளியே காத்திருந்தாள். முகத்தில் அவசரத்தை காட்டி கூட்டி சென்றாள் அறைக்கு. அறை தெரியாததால் தேஜுவின் வேகத்தில் நடந்தானே தவிர, மனமோ இன்னும் கொஞ்சம் வேகமாக போ என்று உந்தியது. சில நொடிகள் மணிகணக்காய் தோன்றிவிட, அந்த அறையையும் அடைந்தனர்.

மூடியிருந்த அறையை திறந்து கொண்டு அஸ்வத் உள்ளே செல்ல, அவன் கண்ட காட்சியில் பேச்சிழந்து நின்றான். அனு கட்டிலில் அமர்ந்து சிரித்து ரவியுடன் பேசிக்கொண்டிருக்க, அவள் பேசுவதை கேட்டு சிரித்தவாறே நர்சும் கைக்கு கட்டு போட்டுவிட்டு கொண்டிருந்தார். (ஹி ஹி அது வந்து..... சாரிங்க அனுவுக்கு பெருசா ஒன்னும் accident ஆகல... ஆனா அதை உங்ககிட்ட சொன்னா நீங்க அஸ்வத்கிட்ட சொல்லிடுவிங்கன்னு...... உங்ககிட்டையும் பொய் சொல்லிட்டோம்..... சரி வாங்க நடந்ததை பார்ப்போம்) தேஜு கூறிய அளவிற்கெல்லாம் அனுவிற்கு என்ன ஆனதோ என்று பயந்து வந்தவனுக்கு, அவள் எப்போதும் போல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது பலமணிநேரம் மனதை அழுத்திய உணர்வு ஒன்று குறைந்து முழுவதாக சுவாசிக்க இடம் தந்தது. அழுத்தம் குறைய, சோர்ந்து போய் செவிற்றில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

அஸ்வத்தை அடுத்து உள்ளே நுழைந்த நிரு வாசலிலேயே நின்றுவிட்டான், அவனுக்கு அதிர்ச்சியில் தேஜு மீது கோவம் வர, அவளை திரும்பி முறைத்தான். அவளோ கண்டிப்பாக அவன் திட்டுவான் என்று தெரிந்து கண்களால் காரண கர்த்தாவை காட்டினாள். அது வேறு யாரும் இல்லை தேஜுவின் தந்தை ரவியே...(ஹா ஹா mr.நிரு இப்போ என்ன செய்விங்க இப்போ என்ன செய்விங்க....) அனுவுக்கு விபத்தில் சிறு அடியென கேள்விபட்டதும் பதறிப்போய் கிளம்பிய தேஜு தந்தையிடம் விஷயத்தை கூற, அவரோ பயத்தில் தானும் வருவதாக கூறி துணைக்கு வந்தார். காரில் சென்றுக்கொண்டிருக்க ரவி தான் பெரிய விபத்து நடந்தது போல் இவர்களிடம் சொல்ல சொன்னார்.(நம்ம தேஜு தான், ஐயோ நம்ம பிளானை திரும்பி நம்மகிட்டேயே சொல்றாரே என்று தோன்றியது) இதற்கிடையில் அனுவின் பெற்றோருக்கு அழைத்து சிறு விபத்து நடந்ததையும் தானே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு வீட்டுக்கு அழைத்து வரவதாக கூறினார் பொறுப்பான அப்பா ரவி.

Kaathal payanam

அவன் நின்ற கோலத்தை கண்டு ரவி அறையைவிட்டு வெளியே சென்றுவிட, அந்த நர்சுக்கும் ஓரளவுக்கு புரிந்துவிட்டது. மருந்து தடவி கட்டு போட்டுவிட்டு இடத்தை அவரும் காலி செய்தார். அனைவரும் வெளியே சென்றுவிட, அவனை இமைக்காமல் பார்த்தவள் மெதுவாக அவன் தலை உயர்த்தி பார்த்த போது தான் அவன் அழுதிருப்பதே புரிந்தது. அவன் கண்ணீர் அவன் வேதனையை சொல்லாமல் சொல்ல, அவன் எவ்வளவு துடித்து போயிருந்தான் என்பதும் அவளுக்கு விளங்கியது. வேறுபுறம் முகம் திருப்பி கண்களை துடைத்து கொண்டவன் மெதுவாக அவளிடம் வந்து மெத்தைக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை, எப்படி துவங்குவது என்றும் தான் ஆனால் அவன் கண்ணீர் கண்ட பின்பும் மனம் முரண்டுபிடிக்குமா என்ன? மெல்லிய குரலில் “ரொம்ப பயந்திட்டியா அஸ்வத்?” என்று அவன் கண்களை பார்த்து கேட்டாள்.

ஒரு நொடி அவளை இமைக்காமல் பார்த்தவன் “செத்துட்டேண்டி...” என்று கூறும் பொழுது மீண்டும் கண்கள் தானாக கண்ணீரை தூதாக அனுப்பியது. அந்த வார்த்தைகள் கோடி ஏக்கத்தையும் காதலையும் காட்டியது, அவன் கண்ணீர் சிந்த பார்த்தவளுக்கு ஏனோ மனம் கஷ்டமாக இருந்தது. இத்தனை நாட்கள் கழித்து பேசிய உணர்வு எல்லையில்லா சந்தோஷத்தை ஒருபுறம் தர, அவனது சோகம் அவளுக்கு வலித்தது.

“எனக்கு ஒன்னும் ஆகலை... அழாத...”

அவள் சிறுகுழந்தை போல் கூறிய விதத்தில் மெல்லிய புன்முறுவல் எட்டிப்பார்க்க, கண்ணை துடைத்துக்கொண்டான். “நான் ரொம்ப மொரடன், அழுகன்னா என்னனே தெரியாதுன்னு ஒரு மெதப்பில இருந்தேண்டி... உன்னால தான் அது ரெண்டு தடவை பொய்யானது...” என்று அந்த புன்முறுவலோடே கூறினான். அவனின் புன்முறுவல் அவளது இதழிலும் ஒட்டிக்கொள்ள, மெதுவாக எழுந்து தட்டு தடுமாறி நின்றாள். அவள் சிரமபடவும் அவளது கையை தாங்கி பிடித்துக்கொண்டு “காலுலையும் அடியா அனு...” என்று கவலையுடன் கேட்டான்... பல நாள் கழித்து அவன் முன்பை போல் தன்னை அழைப்பது மழலையின் அழகு பட்டும் படாத முத்தம் போல் சுவையாய் இனித்தது, மனதில் அதை ரசித்தபடியே அவளும் ஆம் என்பது போல் சிறுபிள்ளையாய் தலையை ஆட்டினாள்.

“நிஜமாவே என்ன ஆச்சு? தேஜு கொஞ்ச நேரத்துல ரொம்ப பயமுடுத்திட்டாள்.”

“அப்படியா?! ஏன் என்ன சொன்னாள்?” என்று இவள் பதிலுக்கு கேள்வி கேட்க, அவன் பதில் கூறாமல் அவளையே பதில் தருவதற்கு பார்த்திருந்தான். அது அவளுக்கு புரிந்துவிட, “சரி சரி... நான் வேகமா போயிட்டு இருந்தேனா....”

“உன்னை யாரு இப்போ வேகமா போகலைனு திட்டினா?” என்று முறைப்போடு கேட்டவனின் கோவம் அவளுக்கு புரிந்தது ஆனால் சிரிப்பு தான் வந்தது. அவனது கோவத்தை கண்டுகொள்ளாமல், “இப்படி குறுக்க குறுக்க பேசினால் எனக்கு அப்பறம் கதை வராது...” என்றுவிட்டு தொடர்ந்தாள். “1st ஒரு பைக்ல இடிக்காம தப்பிச்சு சந்தில திரும்பினா, அங்க எதிதாப்புல ஒரு கார் வந்திச்சு. அதில இடிக்காம இருக்க கார்க்கு ரைட் சைடு போனேனா... அதில நீட்டி இருந்த பெரிய கம்பி என் கையை கிளிச்சிடுச்சு” என்று பாவமாக உதட்டை பிதிக்கியவாறு இடது கையை பார்த்து மேலாக தடவி கொடுத்தாள். மேலே சொல்லாமல் அவனது முகத்தையே பார்க்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை... என்ன என்பது போல் புருவம் உயர்த்த “இந்த இடத்தில நீ அச்சோ.. அப்பறம்... அப்படின்னு ஷாக்கா கேட்கணும்” என்று கூறவும் சிரமப்பட்டு சிரிப்பை கட்டுபடுத்திக்கொண்டு ஆனால் தன்னுடைய அடக்கமான வசீகர புன்னகையோடு தொடர்ந்தான் “ம்ம்ம்ம்... அப்பறம்...”

“ம்ம்ம்ம்... அப்பறம் கைல வலி தாங்க முடியாம balance தடுமாறி அப்படியே left சைடு வண்டியோட விழுந்திட்டேன்... கால்ல வண்டி சாஞ்சு குட்டி fracture ஆகிடுச்சு” என்று தன் இடது காலை தூக்கி காட்ட முடியாமல் கொலுசு போடும் இடத்தில் போட்டிருக்கும் கட்டினை கையால் சுட்டிக்காட்டி தனக்கு தானே உச்சு கொட்டிகொண்டாள். அவள் கூறும் செய்தியில் வருத்த படுவதா இல்லை அவள் சொல்லும் விதத்தில் சிரிப்பதா என்றே புரியவில்லை அவனுக்கு... சிரிப்பை கட்டுபடுத்திக்கொண்டு அமைதியாய் இருந்தான்.   

தோ யாரோ இருவர் இதுவரை சண்டையில் இருந்தது போல இருவரும் இலகுவாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு ரவி, தேஜு, நிரஞ்ஜன் உள்ளே திருப்தியுடன் நுழைந்தனர். எதார்த்தமாக சில நிமிடங்கள் பேசிவிட்டு, அனுவை அவளது வீட்டில் விட சொல்லி அஸ்வத்திடம் கூறினார் ரவி.

இருவரும் பேசிக்கொள்ள தனிமை தந்து அனுப்பினார் ரவி. “மாப்பிள்ளை நீங்க வாங்க நம்ம கார்லேயே போகலாம். அஸ்வத் அனுவை ட்ரோப் பண்ணிட்டு வீட்டுக்கு வந்திடுவான்.” அவனும் சரியென ஒத்துக்கொண்டு மனதில் அலுத்துகொண்டான் ஹ்ம்ம்... அவங்களுக்கு தனிமை தரிங்க சரி அப்படியே என்னையும் தேஜுவையும் தனியா அனுப்பினால்கூட நல்லா தான் இருக்கும் என்று மனதில் புலம்பியவாறே அவருடன் சென்றான்.

கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டவன், அவள் சிறிது வலியில் முகம் சுளித்தாலும் “என்ன ஆச்சு அனு? ரொம்ப வலிக்குதா? நம்ம வேணும்னா ஆட்டோல போலாமா?” என்று அக்கறையாக கேட்டான். (இது கொஞ்சம் ஓவரா இருக்கே அஸ்வத்... இத்தனை நாள் இந்த அக்கறை எங்க போச்சாம்???) பார்த்து பார்த்து அவள் ஒவ்வரு அடியாக எடுத்து வைக்க, பத்திரமாக அவளை தன் வண்டியில் அமர வைத்து மிதமான வேகத்தில் கிளப்பினான்.

“அனு...”

“என்னடா?”

“நல்லா பிடிச்சிக்கோ...”

“இங்க பிடிக்க ஒண்ணுமே இல்லையே...”

“என்ன பிடிச்சிக்கோ...”

(ஹீரோயின் ஹீரோவ பிடிச்சதும் background மியூசிக் போட்டு லாலாலா லாலாலா... னு பாட்டு போட்டா படம் மாதிரி கதைக்கும் எந்திரிச்சு போயிடுவாங்களே சோ நோ songs)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.