(Reading time: 27 - 53 minutes)

 

ன்ன மேடம் வலியெல்லாம் எப்படி இருக்கு? அடியெல்லாம் சரியாகிடுச்சா?”

அவன் விசாரிக்கவும் மெதுவாக கையை வருடியவள், “ம்ம்ம்ம் ஆரிகிட்டே இருக்கு. என்ன மருந்து போட தான் கஷ்டமாக இருக்கு, கையை மடக்கவும் முடியலை புண்ணு பார்த்து போடவும் முடியலை” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே... அஸ்வத் எழுந்து அவள் காயத்திற்கு போடும் மருந்தினை எடுத்து வந்து அருகில் அமர்ந்தான்.

அவனது கையில் மருந்தினை பார்த்தவுடனே “இல்லை அம்மாவே போட்டுவிட்டுருவாங்க...” என்று அவள் கூறுவதை மதிக்காமல். அவளது கையை மெல்லமாக திருப்பி மருந்தை தடவினான். மருந்து படவும் புண்ணில் எருச்சல் அதிகமாகி அஸ்வத்தின் கை தான் கிடைத்தது அவள் பிடித்துக்கொள்ள.

அவன் எப்போதும் போல அதை பொருட்படுத்தாமல் மருந்து தடவ, அவனின் செய்கை இவர்கள் ஒருமுறை சுற்றுலா சென்றிருந்த பொழுது நடந்ததை நினைவு படுத்தியது, சட்டென கையை எடுத்துவிட்டு அவள் நகம் பட்ட இடத்தினை தடவி விட்டாள். அவள் செய்கையை உணர்ந்து அஸ்வத் அவள் முகத்தை பார்க்க, அனுவும் அவனை பார்த்தாள். சில நொடிகள் காதலில் கரைந்து போக சுற்றி நடப்பவை மறந்து இருந்தனர் இருவரும். முன்பு நடந்தவையெல்லாம் படம் போல மனதில் ஓட, கண்களில் நீர் கோர்க்க அனு கண்கள் மூலமே மன்னிப்பு வேண்டினாள், அந்த நீர் திறம் கொண்டு வெளியே எட்டி பார்க்க அஸ்வத்தின் கைகள் அதை தாங்கி பிடித்து வேண்டாம் என்பது போல் கூறியது.. தன் வேதனையை கூற  வார்த்தைகளை தேடியவளுக்கு கஷ்டமே இல்லாமல் கண்களே அந்த வேலையை செவ்வன முடித்தது. அவர்கள் இருந்த மோன நிலையை கலைப்பது போல கதவு தட்டப்படும் ஒசைகேட்டது, சில நொடிகளில் தங்களை ஆசுவாச படுத்திகொண்டனர். ஹேமா தான் வந்தார் இருவருக்கும் காபியுடன். அதன் பின் இருவரும் பொதுவாக ஹேமாவை வைத்துக்கொண்டே பேச முழுவதுமாக மனம் திறந்து பேசவில்லை. இருவரும் சேர்ந்து கழித்த நேரமெல்லாம் பழையதை பேசி அவளை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று அஸ்வத் நினைக்க, அனுவோ அவள் முன்பு நடந்ததை பற்றி பேச துவங்கும் போதெல்லாம் ஏதவாது கூறி மாற்றிவிடுகிறானே ஒருவேளை அந்த விஷயத்தில் இன்னமும் அவள் மீது உள்ள கோவம் போகவில்லையோ என்று வருந்தினாள்.

லியாமா...” அன்பு கணவனின் அழைப்பில் மெல்ல கண் திறந்து பார்த்தால் அவன் கையில் காபி கோப்பையோடு நிற்பதை பார்த்து தானாக சிரிப்பு வர தன்மீது கால் போட்டு உறங்கும் செல்ல மகனின் நெற்றியில் முத்தம் தந்து எழுந்து அமர்ந்தாள்.

“என்னடி சிரிப்பு?”

“பின்ன பொண்டாட்டி தான் புருஷனை காபி தந்து எழுப்பனும் இங்க உல்டாவா நடக்குதே...”

“ஹ்ம்ம்.. அதெல்லாம் எங்க அம்மா காலத்திலேயே முடிஞ்சிடுச்சு” என்று ஏக்கமாக கூறுவது போல் பதில் தந்தான்.

“அப்போ நான் உங்களை இப்படி தான் வேலை வாங்குறேனா?” என்று சோகமாக கூறிவிட்ட முகத்தை திருப்பியவளின் கன்னத்தை பிடித்து தன் பக்கம் திருப்பி, “அப்படி என் செல்ல லியாவை பார்த்து சொல்வேனா? முதல்ல மனைவிக்கு உதவி செய்யுறது ஒன்னும் அவமானம் இல்லை, அடுத்து சனி ஞாயிறு மட்டும் தான் நீ கொஞ்சம் அசந்து தூங்குவ, அதை கெடுக்க வேணாமேன்னு தான் நானே போய் காபி போட்டேன் என் செல்ல லியாக்கு...” அவன் கொஞ்சலில் சட்டென முகம் மலர்ந்துவிட காற்றில் தன் முத்தத்தை அவனுக்கு அனுப்பிவிட்டு காபி அருந்தினாள்.

“ஆனாலும் இப்போலாம் நீ அநியாயம் பண்ணுறடி” என்று மொட்டையாக ஆரம்பித்த கணவனை புரியாமல் பார்த்தாள் அஹல்யா...

“ஆமாம் இப்பலாம் எனக்கு ஒரு கிஸ் கூட கிடைக்க மாட்டிங்குது” என்று வருத்தமாக கூறிய கணவனை பார்த்து சிரித்துவிட்டாள் அஹல்.

“நீ குடுக்காட்டி பரவா இல்லை நானாவது தரேனே..”

“ம்ம்ம் ஹ்ம்ம் வேண்டாம்”

“ஹே ப்ளீஸ்டி...” அவன் கிட்டே நெருங்க தந்தையின் பாதி உரையாடலில் எழுந்த குட்டி விபுன் “அப்பா எனக்குபா” என்று ஒரு ராகமாக இழுத்தான்.

சட்டென அஹல் நகர்ந்துகொள்ள, அவளை தாண்டி விபுனை பொத்தினார் போல கைகள் ஊன்றி அர்ஜுன் விழ, சுதாரித்துக்கொண்டு “என்னதுடா கண்ணா?” என்றான்.

“நீ ஏதோ அம்மாக்கு தரேன்னு சொன்னியேபா...”

“அவனது பேச்சில் இருவரும் சிரித்துவிட, உனக்கில்லாததா கண்ணா...” என்று ஆரத்தழுவி நிறைய முத்தங்கள் தந்தான் அன்புள்ள அப்பா.

“ஹா ஹா அப்பா... நம்ம எங்கயாவது வெளிய போகலாம்பா”

“போலாமே... எங்க போகணும் என் சின்ன கண்ணனுக்கு?”

“ம்ம்ம்ம்... அர்ச்சு அத்தையை பார்க்க போலாமா...”

“ஹை இந்த ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே நம்ம போயும் ரொம்ப நாள் ஆச்சுங்க போலாமே...” என்று ஒத்து ஊதினாள் அஹல்..

“ராணியின் பேச்சுக்கும் இளவரசனின் பேச்சுக்கும் மறுப்பேதும் உண்டா என்ன?... போலாமே...”

வாடா மாப்ள... வாமா... வாடா கண்ணா வாங்க வாங்க” என்று வாஞ்சையாக கொஞ்சிபடி அவனை கையில் தூக்கி கொண்டான்.

“தலை எழுத்தை பார்த்தியாடா?” என்று நொந்துகொண்டே ஆரம்பித்த நண்பனை புரியாமல் பார்த்தான் நவீன்.

“என்னதுடா?”

“வாரத்துல 5 நாள்தான் உன்னை பார்க்க வேண்டியது இருக்குனா, லீவ் நாளுல கூட உன்னை பார்க்க வேண்டியதா இருக்கு” என்று அலுத்துக்கொண்டான்...

“எனக்கூட தான் உன்னை பார்த்து பார்த்து அலுத்துபோச்சு ஏதாவது சொன்னேனா, விடு மச்சா” என்று தோளில் கைபோட்டு அவர்களின் பேச்சை தொடர்ந்தனர். அஹல்யா பொதுவாக நவீனின் பெற்றோரோடும், அர்ச்சனாவின் தாயோடும் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அவள் விருஷிகாவையும், அர்ச்சனா விபுனையும் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றனர். பொதுவான பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்க சிறிது நேரம் குழந்தைகளை தனியாக விட்டனர்.

“அர்ச்சு இந்த அஸ்வத் பையன் போட்ட sceneku கொஞ்சமாவது அவனை ஒட்டியே ஆகணும்டி.. என்னமாய் பேசினான் கடைசிலே டக்குனு இறங்கிட்டான்.” (இதான் உங்க ஊருல டக்கா??? இது கொஞ்சம் ஓவர் டக்கா இருக்கே...)

“ஆமாம் அஹல்... என்ன பண்ணலாம்??? ஹ்ம்ம் இதெல்லாம் நேர்ல கிண்டல் பண்ணினாதான் நல்லா இருக்கும்...” என்று சோகமாக முடித்தாள்.

“அதுக்கு என்ன பண்ணுறது அரச்சு, நம்மளுக்கு அதுக்கு ஏற்ற சமயம் வரணும் இல்லை..”

“ஆமாம்டி நம்ம சேர்ந்து இருந்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு, ஒரு ட்ரிப் பிளான் பண்ணனும். ஹ்ம்ம் குட்டிமாக்கு 1st பிறந்தநாள் கொண்டாடி இருந்தாலாவது பரவால்லை அதுக்கும் முடியாமல் அவளுக்கு உடம்புக்கு சரி இல்லாமல் போயிடுச்சு. இதோ இந்த குட்டீஸ் இப்போ தான் பிறந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள விபுக்கு ரெண்டரை வயசு, இவளுக்கு ஒன்றரை வயசு ஆகிடுச்சு.” பேச்சுவாக்கில் எதார்த்தமாக குழந்தைகளை இருவரும் பார்க்க, ஆச்சர்ய பட்டுபோனனர்.

(வாங்க நாமளும் குட்டீஸ் என்ன பண்ணுறாங்கன்னு பார்ப்போம்)

விபுன் விருஷிக்கா தோளிலும், எட்டாத உயரமாக இருந்தாலும் விருஷிக்கா விபுனின் தோளிலும் கை போட்டுக்கொண்டு கதை பேசிக்கொண்டு இருந்தனர்.

தான் சாப்பிட்டு கொண்டிருந்த சாக்லேட்டை கொஞ்சம் அவளுக்கு தந்து தானும் சாப்பிட்டான் விபுன். “இந்தா சாப்பிடு நல்லா இருக்கும்...”

“தேங்க்ஸ் பன்...” விபுன் என்ற பெயரை முழுதாக சொல்ல தெரியாமல் பாதி விழுங்கி, பாதி மருவி பன் என்று கூறினாள் விருஷிக்கா...

“ஹா ஹா என் பேரு பன் இல்ல விபுன்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.