(Reading time: 27 - 53 minutes)

 

வன் சொல்லி கொடுப்பதை கடினப்பட்டு முழுதாக சொல்ல முயற்சி செய்து கடைசியாக பன் என்றே முடித்தாள் விருஷிக்கா...

“சரி போ நீ அப்டியே கூப்டு...”

“ம்ம்ம்ம்...” அவள் பதில் கூறிக்கொண்டிருக்கும் போதே விருஷிக்காவின் கையில் இருக்கும் barbie பொம்மையை பார்த்ததும் விபுனுக்கு ஒன்று தோன்றியது.

“ஷீகா... உன் பொம்ம நல்லா இருக்கு எனக்கு தரியா? விளையாடிட்டு தரே...” விருஷிக்கா என்று கூப்பிட கஷ்ட்டமாக இருக்க, விபுன் அவனாகவே ஒரு பெயர் வைத்தான் அவள் பெயரை திரித்து.

“ம்ம்ம்ம்ம்ம்... இந்தா வச்சுக்கோ...”ஆசையாய் வாங்கிக்கொண்ட விபுனின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி... அதை கண்டு அந்த குட்டி குழந்தைக்கு என்ன தோன்றியதோ, “உனக்கு புட்சிக்கா? நீயே வச்சுக்க...” என்று தலையை ஆட்டி ஆட்டி கூறினாள் அவள்.

“நா இத என் அனு அத்தைக்கு குடுத்துருவே...” என்று அவனும் அழகாக மழலையோடு கூறினான்.

“உனக்கு அனு அத்த தா புடிக்குமா...”

“ம்ம்ம்ம் ரொம்ப... உனக்கு???”

“எனக்கு ம்ம்ம்ம் ம்ம்ம்ம்... அர்ஜுன் மாமாவ தா புடிக்கும்” என்று சிறிது நேரம் குட்டி மூளையை கசக்கி யோசித்து கூறினாள் அந்த குட்டி அழகி.

“அப்போ நீ தா அனு, நா தா அர்ஜுன் சரியா...” என்று ஆசையாக வினவ சரியென தலை அசைத்தாள் விருஷிக்கா...

திடிரென விபுனின் குட்டி மூளைக்கு ஒரு சந்தேகம் தோன்ற தன் தாயிடம் திரும்பி, “ம்மா அனு அத்தைக்கு அப்பா என்னம்மா வேணு?” இப்பொது இருக்கும் குழந்தைகள் வளரும் பொழுதே கேட்கும் கேள்விகளை ஒப்பிட்டு பார்க்கையில் அவன் கேட்டது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, ஆனால் ஒரு தாய்க்கு தன் குழந்தையின் அறிவார்ந்த/முதிர்ந்த கேள்வி அவருக்கு ஆச்சர்த்தையோ அல்லது மகிழ்ச்சியையோ தரும் அது போல சிறிது ஆச்சர்ய பட்டுவிட்டு, “அண்ணன்டா தங்கம்...” என்று பதில் தந்தாள் அஹல்யா.

தனக்கு தேவையான பதில் கிடைத்ததும் விருஷிக்காவிடம் திரும்பி “நீ என் தங்கச்சி நா உனக்கு அண்ணா சரியா” என்று தலையை ஆட்டி கேட்க, அவனுக்கு கட்டுப்பட்ட தங்கை உடனேயே ஒப்புக்கொண்டு தலையை ஆட்டிவிட்டாள்.

அர்ச்சனாவின் முகம் சற்று சோர்ந்து போக, அவள் முகத்தை வைத்தே அவள் எண்ணத்தை புரிந்துகொண்ட அஹல்யா, “நீயும் உன் புத்தியும்” என்று அவள் தலையில் ஒரு தட்டு தட்டி “எவ்வளவு அழகா பேசுறாங்க பாருடி” என்று கண்ணாலேயே சுற்றி போட்டாள் அவள்.

அதன் பின் நேரம் இனிமையாக சென்றது பொதுவான பேச்சுக்கள் கிண்டல் கேலிகள் என்று நகர, மாலை ஆனதும் தேநீர் குடித்ததும் சும்மாக இருக்க முடியாமல் அர்ச்சு நிரஞ்சனை அழைத்தாள்.

ஹாய் அக்கா.... எப்படி இருக்கீங்க?”

“போதும்டா நீ ராகம் போட்டது, நானா கால் பண்ணா மட்டும் பெருசா வாய் கிழிய பேச வேண்டியது... எங்க நீயே கால் பண்றது???”

“அது வந்து அக்கா, உங்க அளவுக்கு நான் பணக்காரன் இல்லையே அக்கா...”

“யாரு நீயாடா ஒரு கார் வாங்கிட்ட, நிறைய பணம் சேர்த்து வச்சிருக்க, பெரிய கம்பெனி owner நீயெல்லாம் பணத்தை பத்தி பேசலாமாடா??!”

“அக்கா ஏன்? ஏன் இந்த கொலைவெறி??? என்ன வாருரதுக்காகவே கால் பண்ண மாதிரி இருக்கே...”

“இல்ல நீ இந்த தடவை தப்பிச்சிட்ட, இந்த முறை டார்கெட் mr.அஸ்வத்” என்று கூறவும் பலமாக சிரித்த நிரு, “டார்கெட் இல்லாத போதே இந்த கிழி இதுல அவன் பாடு என்ன ஆக போதோ!!!” என்று வாய்விட்டு கூறிவிட்டு ஐயோ இதுக்கும் கிடைக்குமே என்றென்னி “இருங்க அக்கா அவனை conferenceல கூப்பிடுறேன்.”

“சொல்லு மச்சா...”

“உங்கிட்ட இப்போ யாரோ பேசனுமாம்...”

“அது யாருடா???”

“ம்ம்ம்ம்.... உன் பாசக்கார அக்காடா அக்கா...” என்று ராகம் போட்டாள் அஹல்யா.

“ஹே... அஹல் நீ எப்படி? conference காலா?”

“ஆமாம் டா புது மாப்பிள்ளை...”

“சரி சரி வந்த உடனேயே ஆரம்பிக்கனுமா? அதான் இன்னும் கல்யாண பேச்சே ஆரம்பிக்கலையே...” என்று பின்வாக்கியத்தில் குரல் இறங்கிவிட்டது...

“அடப்பாவி என்னமா உருகுறான் பாரேன்... நீயாடா கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் அப்படி சண்ட போட்டது???” என்று அஹல் பேசிக்கொண்டிருக்க, பின்னால் நிருவின் பாடல் கேட்டது.

“நீயா பேசியது... நண்பா நீயா பேசியது????” என்று அவன் பாட சிரிப்பு வந்தாலும் கட்டுபடுத்திகொண்டு “மவனே நீ மட்டும் நேர்ல வந்த அவ்வளவு தான்...” பொய்யாக மிரட்டினான் அஸ்வத்.

“சரி என்ன மாப்பிள்ளைய மட்டும் கிண்டல் பண்றிங்க பொண்ணையும் கூப்பிடுங்க?!” என்று நவீன் எடுத்து கொடுக்க, அஹல்யா அவளை அழைத்தாள்.

ஹல் யாருக்கு கால் பண்ற?”

“இது என்னங்க கேள்வி அனுவுக்கு தான்...”

“இங்க ரெண்டு கல்யாண ஜோடி இருக்கு அஹல் மறந்திட்டியா? யாராவது தேஜுவுக்கும் போன் பண்ணுங்க” என்று அர்ஜுன் கூறவும், “மாமா நீங்க ரொம்ப..... நல்லவர் மாமா ரொம்ப நல்லவர்...” என்று வசனம் பேசினான். அவனது வசனத்துக்கு அஸ்வத் “டேய் பொருடா ரொம்ப அவசர படாத” என்றான்.

“கண்ணா..... உனக்கு நியாபகம் இருக்காப்பா தன் நண்பன் கல்யாணம் பண்ணிக்காம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு.... தியாகம் பண்ணினவ பார்த்தா நீ அவசர படுரான்னு சொல்ற???? இது அடுக்குமா???” என்று நவீனும் நாடக பாணியில் பேசி சிரிக்க வைக்க, நிரு இப்போது “நவீன் மாமா நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் மாமா எனக்கு கண்ணே கலங்கிடுச்சு போங்க” என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தான். இதற்கிடையில் அனுவும் தேஜுவும் அழைப்பில் வந்துவிட சில நிமிடங்கள் அனுவின் உடல் நிலை பற்றிய விசாரணை நடந்தது. பின்பு அர்ச்சனா துவங்கினாள் “அனு இப்போவெல்லாம் அஸ்வத்னு ஒரு காத்து உன் வீட்டு பக்கம் மட்டும் அதிகமா வீசுதாமே அப்படியா?”

“காத்தா? அக்கா அது சூறாவளி அக்கா அப்படியே அடிக்குற பாச மழையில நினைஞ்சு உருகிடுவோம்...” என்று நடுவில் பேசினாள் தேஜு...

இவர்கள் கிண்டல் செய்வதற்கெல்லாம் அனு பேசாமல் மௌனமாகவே இருக்க, வெட்கம் வந்து பேச்சை தடுக்கிறது என்று மேலும் கிண்டல் செய்தனர் அனைவரும்... இடையிடையே மட்டும் “அண்ணி.... ப்ளீஸ் போதும்... அண்ணா நீங்களுமா?” என்று மாறி மாறி கிண்டல் செய்பவரிடம் கெஞ்சினாள். ஆனால் அவள் மனமோ பாதி வெட்கத்தின் பூரிப்பிலும், பாதி குழப்பத்தின் சாயலாகவும் இருந்தது. காரணம் தெரியாமல் இல்லை, திடிரென அஸ்வத் மாறியது சந்தோஷமாக இருந்தாலும் அது முழு மாற்றம் தானா என்ற கவலை... அவனே சகஜமாக இருந்தாலும் அவனிடம் நெருங்க முடியாத ஒரு திரையை தந்தது.

“ஐயோ அக்கா காதே வலிக்குது இன்னும் எவ்வளவு நேரம் பேசுறது, என்னோட போனே சூடாகிடுச்சு..” என்று அனு கூற, “வாமா வா இதுவே அஸ்வத்கிட்ட பேசுனா அப்படியே தேன குடிக்குற மாதிரி இருக்குமே...” என்றாள் அர்ச்சனா...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.