(Reading time: 27 - 53 minutes)

 

யோ.. இவனை பிடிச்சிக்கனுமா?” என்று கூச்சம் அதிகரிக்க, “இல்லை நான் வண்டியையே கெட்டியா பிடிச்சிகுறேன்...” அவள் சொன்னதில் கொஞ்சம் கோவம் வர, “ஏய் ஓவரா சீன் போடாதடி பத்திரமா போகணும் ஒழுங்கா என்ன பிடிச்சிக்க, நீ ஒன்னும் கரைஞ்சிட மாட்ட” என்று கொஞ்சம் காரமாகவே கூறினான். அவன் குரலில் உள்ள கோவத்தில் பதில் பேசாமல் பிடித்துக்கொண்டாள். ஆனால் அஸ்வத்தின் கடுப்பு அவனுக்கு, அவனவன் கிஸ்லாம் பண்றான், இவள் என்னடானா தாங்களா பிடிச்சிக்க சொன்னா ஓவரா சீன் போடுறாள்.

அவளுக்காக மெதுவாக மேடு பள்ளம் பார்த்து ஓட்டினான். அவன் செய்யும் ஒவ்வொன்றிலும் அக்கறை தெரிந்தது ஆனால் அனுவுக்கு தான் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தால் இந்த மூலை அல்லது மற்றொரு மூலை என்று நினைத்து வருத்தபட்டாள். இது வெறும் பரிதாபத்தால் வந்த அக்கறையோ என்றெல்லாம் குழம்பியது அவளுக்கு. அவளை அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே அஸ்வத் நுழைய, ஹேமாவின் கண்கள் சட்டென விரிந்துவிட்டது. முழுக்க முழுக்க ஆச்சர்யம் இத்தனை நாட்களுக்காக காத்திருந்த நற்செய்தி ஆயிற்றே. என்னதான் மகிழ்ந்தாலும் அடுத்த நொடியே சுதாரிதவர் மகளிடம் ஓடி சென்றார். ஸ்ட்ரிக்ட் டீச்சர் ஆச்சே.. நல்ல திட்டு கிடைத்தது. “என்னடி நினைச்சிட்டு வண்டியை ஒட்டின? பார்த்து போக தெரியாது? நல்ல வேலை சின்ன அடியோட போச்சு... இதுக்கு தான் உனக்கு வண்டியே வேணாம்னு சொன்னேன், உன்னோட உடல்வாகுக்கு அக்டிவா தேவையா?” என்று பல திட்டுகள். இது அனைத்திற்கும் எனக்கென என்பது போல் அனு அமர்ந்திருப்பதை பார்த்து அஸ்வத்திற்கு சிரிப்புதான் வந்தது.

“அச்சோ போதும் அத்தை அவளே அடிபட்டுட்டு வந்திருக்கா... ரூம்க்கு கூட்டிட்டு போங்க நான் அப்பறம் வந்து பார்க்குறேன்” என்று கூறி பலநாட்களுக்கு பிறகு அவர் முகத்தை பார்த்து பேசினான். அஸ்வத் விடைப்பெறுவதற்குள் அங்கு வந்த வெங்கட், ஹேமாவை போல கத்தாமல் அனுவின் கட்டுகளை பார்த்துவிட்டு ஆறுதலாக பேசினார்... “ஏன்டா பார்த்து போக கூடாதா? வலி எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னாரு? மருந்தெல்லாம் வாங்கியாச்சா? இல்லை வாங்கிட்டு வரவா” என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே “இல்லை மாமா நானே வாங்கிட்டேன்” என்று பையில் வாங்கி வைத்திருந்த மருந்தினை தந்துவிட்டு, எந்தெந்த மருந்து எப்போ என்று கூறிவிட்டு விடைபெற்று கிளம்பிவிட்டான். அவன் போவதையே கண்ணெடுக்காமல் பார்த்துகொண்டிருந்த அனுவை கண்களால் ஹேமா காட்ட வெங்கட் தொடர்ந்தார்...

“என்னம்மா அஸ்வத் என்ன சொன்னான்?”

அவர் பேசுவது புரியாமல் அவள் முழிக்க, “இல்லை அடிபட்டதுக்கு” என்று மாற்றினார்.

சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு கவனம் எங்கோ செல்ல “பாவம்பா அழுதுட்டான் ரொம்ப பயந்திட்டான்” என்று கூறி அமைதியாகிவிட்டாள். அதன் பின் பெற்றோர் மனம் சும்மாக இருக்குமா? அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று மனம் கணக்கிட துவங்கிவிட்டது.

ங்கு அஸ்வத்தின் வீட்டில் அவன் அவசரமாக ஓடியதில் இருந்து இருவரின் அழகான உரையாடல் வரை அனைத்தையும் துளசி கண்ணன் தம்பதியருக்கு நிரஞ்ஜன் சொல்லி முடித்திருந்தான்.

“நிஜமாவா நிரு, அவங்க நல்லா பேசிக்கிட்டாங்களா?”

“நிஜமாத்தான்மா சொல்றேன்.. அஸ்வத் அப்படியே உருகிட்டான் அவன் அழுது hospitale தண்ணி ஆகிடுச்சினா பாருங்களேன்” என்று நங்கூரம் போல நச்சென சில பிட்டுகள் போட்டுவைத்தான் நிரஞ்ஜன்.

“ஹப்பாடா எல்லாம் ஒருவழியாய் முடிவுக்கு வந்துச்சு” என்று பெருமூச்சோடு கூறினார் துளசி.

“ஆமாம் துளசி, அடுத்து என்ன பொண்ணு பார்க்குறது தான்...”

“ஏன் நீங்க முன்ன பின்ன அனுவை பார்த்ததில்லையா? போதும் போதும் நேரே கல்யாணம் தான்...” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க அஸ்வத்தின் வண்டி வரும் சத்தம் கேட்டு மூவரும் அமைதியானனர்.     

துவங்கியது என்னவோ விபத்தில் தான் ஆனால் முடிவு என்னவோ சுபம் அல்லவோ, உல்லாசமாக சீட்டி அடித்தவாறு வந்தவன் வெளி அறையிலேயே மூவரும் அமர்ந்திருப்பதை பார்த்ததும் சட்டென நிறுத்திவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல நகர்ந்து செல்ல போனான். அவன் செய்வதையெல்லாம் பார்த்தவர்களுக்கு பல நாட்களுக்கு பின்பு பழைய அஸ்வத்தை பார்த்த உணர்வு வர, மகிழ்ச்சி இருப்பினும் கிண்டல் செய்ய துவங்கினர்.

லோ சார் நில்லுங்க?”

விதியமாக துளசி அழைப்பது புரிந்தும் அருகே வந்தான். “என்னமா?”

“என்ன நொன்னமா? எதுவுமே தெரியாதவன் போல நகருற...” என்று அவர் ஆரம்பிக்க அதை தொடர்ந்து கண்ணன், “விடு துளசி அவனுக்கு இனிமேல் நம்மளாம் கண்ணுக்கே தெரியமாட்டோம்...” என்று ஒரு கிண்டல் சிரிப்போடே கூறினார்.

அவன் எதுவும் சொல்ல முடியாமல் அசடுவழிய, சட்டென இதயத்தை பிடித்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தான் நிரு.

“அச்சோ நிரு என்னபா ஆச்சு!?!?” என்று துளசி கேட்க, “அம்மா தயவு செஞ்சி அவனை வெட்கம் மட்டும் படவேண்டாம்னு சொல்லுங்கம்மா” என்று நெஞ்சு வலிசில் துடிப்பது போல் நடித்து பேசினான்.

அவன் பேசியதை கேட்டு பெற்றோர்கள் சிரிக்க, “அடப்பாவி நீயெல்லாம் ஒரு நண்பனா” என்று துரத்த துவங்கினான். சிறிது நேரம் மூச்சிறைக்க ஓடி சேட்டை செய்துவிட்டு, மீண்டும் பெற்றோரிடமே வந்தனர்.

“சரி என்னபா அடுத்து வேலையை ஆரம்பிக்கலாமா?” என்று பொறுப்பாக பெற்றோர்கள் வினவ, அதுக்கும் அஸ்வத் பேசாமலே மெல்லிய முறுவலை தந்து சென்றான். (ஸப்பா இப்பலாம் பசங்க தான் வெட்க படுறாங்க...) ஒருவழியாக செய்தி தேஜு, நிரு மற்றும் பெற்றோர்கள் வழியாக அனைவருக்கும் (அதாங்க நம்ம வானரங்களுக்கு) தெரிந்துவிட, அனைவரும் அடுத்து கல்யாணத்திற்கு தயாரனனர்.

திருமணம் பற்றிய பேச்சு எதுவும் வெளிப்படையாக ஆரம்பிக்காவிட்டாலும், பெற்றோர்கள் நல்ல முஹுர்த்தம் என்ன, அதற்கு மண்டபம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தனர்.

தற்கிடையில் அஸ்வத் அனுவை பார்க்க வந்திருந்தான். “அத்தை அனு...”

“மேலதான் அவளோட அறையில் இருக்கப்பா போய் பாரு...”

“சரி அத்தை...” என்று புன்னகையோடு சென்றான். அவன் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் போதே, ஹேமா அஸ்வத்திடம்... “நீங்க பேசிட்டு இருங்க நான் குடிக்க காபி கொண்டுவரேன்” என்று கூறி சென்றார். மறைமுகமாக நானும் மேலே வருவேன் என்று பொருள்பட கூறுவதை நினைத்து எப்படி பட்ட நம்பிக்கை என்று எண்ணி அவனுக்குள்ளே சிரித்துக்கொண்டான் அஸ்வத்...

மேலே சென்று பார்க்க, அவளோ

“காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கொன்னும்

பஞ்சமில்ல பாடத்தான்...

கவலைக்கட்டு விட்டுபுட்டு தவளைத் தத்து

துள்ளிக்கிட்டு ஆடத்தான்...” என்று பாடலை சத்தமாய் பாடிக்கொண்டு ஒற்றை காலில் நொண்டி அடித்து ஆடிக்கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் அடக்கமுடியாமல் அஸ்வத்திற்கு சிரிப்பு வர வாய்விட்டு சிரித்துவிட்டான். அவனது சிரிப்பினில் திரும்பியவள் அவனை அங்கு பார்த்ததும் நிலை தடுமாறி தொப்பென கட்டிலில் அமர்ந்தாள்.

“ஏய் பார்த்து உட்காரு...” என்று சிரித்துக்கொண்டே உள்ளே வந்தமர்ந்தான்.

“ஹய்யோ நல்ல நாளுலையே ரொம்ப கிண்டல் பண்ணுவானே...” என்று மனதில் நினைத்துக்கொண்டு அமைதி காத்தாள்.

“என்ன மேடம் அமைதி ஆகிட்டிங்க, உங்க நடன மழைல நினைய வந்த என்னை ஏமாற்றாதே” என்று வசனம் எல்லாம் பலமாக பேசி அவளை சிரிக்க வைத்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.