(Reading time: 27 - 53 minutes)

 

தற்கு அஸ்வத் தான்... ஏன் அக்கா நீங்க வேற முன்னாடியாவது நிறைய பேசினே, இப்போலாம் மேடம் திரும்பி கூட பார்க்க மாட்டிங்குறாங்க இதுல எங்க மணி கணக்கா பேசுறது” என்று அலுத்துக்கொண்டான்.

“பொறு மச்சா பொறு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு அப்பறம் நீயே பேசாத போதும்னு சொன்னாலும் அவள் கேட்க மாட்டாள்” என்று ஒத்து ஊதினான் அர்ஜுன்.

“மக்களே போதும் கல்யாணம் கல்யாணம்னு நம்மாலே பேசுறோமே பெரியவங்க எல்லாம் என்ன பிளான் போற்றுக்காங்கன்னு தெரியலையே..” என்றாள் அஹல்யா.

ந்திட்டோம் வந்திட்டோம் நாங்களே சொல்லிடுறோம் நீங்க கஷ்டப்பட்டு இல்லாத மூளையை கசக்காதிங்க” என்று கூறியபடி போனில் பேசினார் வெங்கட்..

“அப்பா நீங்க எப்படி????” என்று ஒரு சேர குரல் கொடுத்தனர் அர்ஜுனும் அனுவும்... “நான் தான் அவங்களையும் சேர்த்தேன் மாமா என்றான் நிரு... அவங்க தான் கால் பண்ணாங்க.”  அடுத்து நானும் இங்க தான் இருக்கேன் என்று attendance போட்டார் கண்ணன்... இம்முறை அஸ்வத்தும் அஹல்யாவும் கத்தினர்... “இப்போ யாரோட வேலை???”

“நான் தான்” என்று பதில் தந்தாள் தேஜு...

“அது சரி பாதி குடும்பம் போன்ல சேர்ந்தாச்சு மீதி பேரை கூப்புடுவோம்” என்றான் நவீன்... “அதுக்கு அவசியமே இல்லடா” என்றார் அவனின் தந்தை...

அப்பா என்று அவன் கத்தும் முன்பே “வேணாடா நீயும் கத்தி எங்க காதை கெடுத்திடாத” என்று முன்னெச்சரிக்கையாக கூறிவிட்டார். “அப்பறம் என்னை சேர்த்துவிட்டது அனு குட்டி தான்” என்று அவரே தகவலை தந்துவிட்டார்.

“சரி இன்னும் மிச்சம் இருப்பது என் அம்மா அப்பா மட்டும் தான் அவங்களை யாரு சேர்த்து விட்டது where are my parents?” என்று தோரணையாக கூறினாள் தேஜு.

“நான் தான்..” என்று அஸ்வத் கூறினான் ஒரு மென்சிரிப்போடு.

“சரி introduce பண்ணதெல்லாம் போதும் சின்ன சிறுசுங்க பேசுறப்ப நீங்க எதுக்கு குறுக்க வந்திங்க?” என்றான் அர்ஜுன்..

“சரி கல்யாணத்தை பத்தி சொல்லிட்டு போகலாமேனு வந்தோம் வேணான்னா சரி நாங்க போறோம்” என்று சொல்லி நகர போனனர்.

“அச்சோ இருங்க அப்பா இருங்க நீங்க வேற ஏன் மாமா நடுல பேசிகிட்டு” என்று செல்லமாக அர்ஜுனை கடிந்து கொண்டு வெங்கட்டை பேச சொன்னான் நிரஞ்ஜன். அவன் அவசரத்தை புரிந்துகொண்ட அனைவரும் சிரித்துவிட்டனர்.

“சரி சரி விஷயத்துக்கு வருவோம், கண்ணன் நீங்களே சொல்லுங்க” என்று வெங்கட் கூற, அவர் ரவியை கூற சொன்னார். ஒருவழியாக முடிவுக்கு வந்து ரவியே முடிவை கூறினார்.

“இதன் மூலம் நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால்  கடந்த 3 வாரங்களாக தேடியதில் இன்னும் 6 மாதத்திற்கு மண்டபம் கிடைக்காததால் திருமணம் 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று ரவி கூறும் ஐயோ... என்று ராகமாக சின்ன வாண்டுகள் எல்லாம் கூறினர்.

“பொறுங்க பொறுங்க கண்ணன் நீங்க சொல்லுங்க, அதுனால நாங்க ஜாதகம் பார்த்து நாள் குரிச்சதில ஒரு நல்ல நாள் முடிவு பண்ணியாச்சு... கொஞ்சம் கல்யாணம் தள்ளி நடக்குறதால ரெண்டு ஜோடியின் திருமணத்தையும் ஒரே நாளில் ஒரே மேடையில் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிருக்கோம்....” என்று கண்ணன் சொல்லி முடிக்கவும் “ஹே...” என்று கோரசாக அனைவரும் கத்தினர்...

“ஓகே ஓகே அடுத்து... வெங்கட் நீங்க சொல்லுங்க” என்று கண்ணன் கூறவும், “இந்த நல்ல விஷயத்தை நடத்த நாங்க எல்லாரும் தேர்ந்து எடுத்த அந்த நல்ல நாள் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் நாள் அதாவது எங்களோட பேத்தி பேரனோட பிறந்தநாள் தான், எங்க மகன் மகள்களோட கல்யாண நாளும்” என்று சொல்லி முடிக்கவும் ஆனந்தத்தில் அனைவருக்கும் திக்குமுக்காடி போனது காதே கிளியும் அளவிற்கு அனைவரும் சேர்ந்து “ஓஹோ...” என்று கத்தினர். (சாரி பிரிண்ட்ஸ் J கொஞ்சம் நப்பாசையில செப்டம்பர் 7 தேர்ந்தெடுத்தேன்... உங்களுக்கெல்லாம் ஓகே தானே??)

திருமணம் ஆக போகும் ஜோடிகளுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி என்னதான் திருமணம் 6 மாதம் தள்ளி நடந்தாலும் இருவருக்கும் சேர்ந்து அல்லவா நடக்கிறது முகமெல்லாம் மகிழ்ச்சியோடு குதிக்கவேண்டும் போல் இருந்தது அனைவருக்கும்... இவர்களின் சத்தத்தில் அருகில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளுக்கும் குஷியாகிவிட “ஹே” என்று கத்திக்கொண்டு குதித்து விளையாடினர். அனைவரின் குரல்களும் வாழ்த்துகளும் ஓயும் வரை அமைதியாக இருந்த பெரியவர்கள் கடைசியாக “சரி முடிஞ்சிதா கடைசியா ஒரு விஷயம் இருக்கு.. அதை நவீன் அப்பா சொல்வாரு” என்று எடுத்து கொடுத்தார் வெங்கட்.

“ம்ம்ம் க்ம்ம்ம்” என்று தொண்டையை செரும்மிக்கொண்டு ஆரம்பித்தார் அவர், என்ன செய்தியோ என்று சிறுசுகள் எல்லாம் உன்னிப்பாக கவனிக்க அமைதியாக இருந்தனர்... “சோ கடைசி அறிவிப்பு என்னனா வீட்டுல இருக்க கடைக்குட்டி ஜோடிகளின் திருமணம் என்பதால்,  திருமணம் மூனறை நாட்களுக்கு நடைபெறும்... முதல் நாள் மாலை நிச்சயதார்த்தமும், 2ஆம் நாள் சங்கீத் விழாவும், 3 ஆம் நாள் திருமணமும், நான்காம் நாள் வரவேற்பு விழாவும் நடைபெறும் என்பதை மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு கூறிகொள்கிறேன்” என்று சொல்லி கையில் இருந்த தட்டில் “டிங் டிங் டிங்” என்று தட்டினார்.

அந்த அறிவிப்பில் மீண்டும் மகிழ்ந்துபோய் “என்ன எல்லாரும் ஒரே சந்தோஷமான செய்தியா அடுத்தடுத்து சொல்லிட்டே இருக்கீங்க???” என்று ஆச்சர்யமாக வினவினாள் அஹல்யா...

“ஆமா நாங்க தான் எப்பவும் surprise தருவோம் எங்களுக்கே இவ்வளவு surprise தரிங்க...” என்றாள் அர்ச்சனா.

“அட வாயாடீஸ் உங்களை பெத்தவங்க நாங்க உங்களை விட, அதிகமாக யோசிப்போம்...” என்று கிண்டல் செய்தார் அன்பு...

***சோ பிரிண்ட்ஸ்... நம்ம முக்கிய கதாபாத்திரங்களின் திருமணம் அதனால 1 வாரம் லீவ் போட்டுட்டு முன்னாடியே வந்திடுங்க சும்மா கலக்கிடலாம்... உங்க உற்றார் உறவினரோடு வந்து நம்ம ஜோடிச மனசார வாழ்த்தி(கிண்டல் பண்ணி) திருமணத்தை கொண்டாட காதல் பயணத்தின் குடும்பம் உங்களை அன்போடு வரவேற்கின்றது***

Go to Kadhal payanam # 22

Go to Kadhal payanam # 24

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.