(Reading time: 27 - 54 minutes)

 

ன்ன மேடம் யோசனை? இன்னைக்கு அந்த குட்டி மூளைக்கு என்ன வேலை குடுத்த?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை... நான் ஒன்னு கேட்டால் கோச்சிக்க மாட்டியே?”

“ம்ம்ம்ம்... கேள்வியே தப்பயிருக்கே.... “

....

“பின்ன permission கேட்டுதான் கேட்கணுமா? கேளு..”

“இல்லை எப்பவும் ஆபீஸ்லதான் இருக்க, ஆனால் மதியம் மட்டும் காணாம போயிடுறியே எங்க போற?”

அவன் எங்கோ பார்த்துக்கொண்டு “கொஞ்சம் வெளியே வேலை இருக்கு அதான்...” என்று மழுப்பி சொன்ன பின் அவளுக்கு என்ன வேலை என்று கேட்க மனமில்லை, அப்படி சொல்ல நினைப்பவன் அவனே என்ன வேலை என்று கூற மாட்டானா? இது தவிர்க்கும் முறை என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டாள். 

ஒதுக்கம் பத்தாதென்று அஸ்வத் வேறு அதற்கு வழி வகுக்க, நாட்களை மேலோட்டமான பேச்சுவார்த்தையோடு நிறுத்திக்கொண்டனர்.

“அனு... தேஜு வந்திருக்காள் பாரு” என்று ஹேமா அழைக்க, தனதரையில் படுத்திருந்தவள் வெளியே வந்தாள்.

“வாங்க கல்யாண பொண்ணு...“

“அப்போ நீ யாராம்? நீயும் கல்யாண பொண்ணு தான்...”

“சரி... வாங்க டாக்டர் மேடம் இப்போ ஓகே வா?”

“ம்ம்ம்ம்... ஓகே...” அனு கேட்பதற்கெல்லாம் பதில் தந்துக்கொண்டிருக்கும் தேஜுவின் முகம் சில நாட்களாகவே மிளிந்துக்கொண்டு தான் இருந்தது மகிழ்ச்சியில்... திருமண மகிழ்ச்சியில்.. அதை ரசித்தவள் “நீ வர வர ரொம்ப அழகாகிட்ட நூடுல்ஸ்” என்று அனு கூறவும் லேசாக வெட்கம் எட்டிப்பார்த்தது.

“கல்யாண பொண்ணுனா அப்படி தான் இருக்கணும், உன்னை மாதிரியா எப்பவும் டிவி பார்த்துகிட்டு இல்லை, எதையோ வேடிக்கை பார்த்துகிட்டு இருக்குறது.. சும்மா கலகலன்னு இருக்க வேண்டாமா?!” என்று கிடைத்த நேரத்தில் ஹேமா அவரது கண்காணிப்பை கூறிவிட்டு போனார்.

அனைத்தையும் கவனித்த தேஜுவுக்கு ஏதோ சரியில்லை என்று புரிந்தது ஆனால் வெளியே காட்டிகொள்ளாமல். “அட விடுங்க ஆன்டி என்னை மாதிரியா மேடம் எப்பவாவது அவங்க ஆளை பார்க்குறாங்க தினமும் பார்க்குறாள் அதன் வெட்கத்தை எல்லாம் அங்கேயே முழுசா காட்டிட்டு இங்க மனசே இல்லாமல் வராள்” என்று பரிந்து பேசினாள்.

பேச்சுக்கு சிரித்துவிட்டு, “நீ சொல்லு நூடுல்ஸ் மருத்துவமனை எப்படி போகுது?”

“ம்ம்ம்ம் ரொம்ப திருப்தியா இருக்கு அனு. ஆரம்பிக்கும் போது கொஞ்சம் பயமாக தான் இருந்திச்சு ஆனால் இப்போ பழகிடுச்சு. ஆரம்பிச்ச நேரத்தில அப்பாவோட ப்ரிண்ட் மதுசூதனன் அங்கிள் தான் ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க, அவங்க wife கூட gynaecologist தான் அதனால கூடவே இருந்து ஹெல்ப் பண்ணாங்க... இன்னைக்கு 5வது பிரசவ கேஸ் முடிச்சிட்டு வரேன். அந்த பிஞ்சு குழந்தைய கையில ஏந்தும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா அனு. முதல் தடவை தூக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு. எதையோ பெரிதாக சாதிச்ச மாதிரி ஒரு உணர்வு” என்று அவள் மனம் நிறைந்த நிகழ்ச்சியை சொல்லி சந்தோஷபட்டாள்.

“சூப்பர் நூடுல்ஸ் நிஜமாகவே நீ செய்யுறது பெரிய விஷயம்டா... தாய்க்கு எந்த பிரச்சனையும் இல்லாம அவங்க குழந்தையை இந்த உலகத்துக்கு கொண்டுவறியே அவங்க எவ்வளவு சந்தோஷ படுவாங்க... you are கிரேட் நூடுல்ஸ்..”

“ஹே என்ன நீ இன்னைக்கு ரொம்ப நூடுல்ஸ் நூடுல்ஸ்னு கூப்பிடுற?”

“ஹப்பாடா இப்பவாது கேட்கணும்ன்னு தோணிச்சே... நீ பண்ணின straightning திரும்பியும் நூடுல்ஸ் மாதிரி சுருண்டிருச்சு திரும்பி பண்ணிக்கோன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன்.”

இப்படியே பேசிக்கொண்டே அவளது அறைக்கு வந்துவிட இப்போது தேஜுவின் முறையானது. “என்ன அனு ஆச்சு? நீ சந்தோஷமா இருக்குற மாதிரியே இல்லை.”

“நீ தானேடி சொன்ன அம்மாகிட்ட சந்தோஷத்தை எல்லாம் அஸ்வத்கிட்ட குடுத்திட்டு வந்திடுறேன்னு.”

“அது அம்மாக்காக சொன்னது என்கிட்ட மறைக்காம சொல்லு...” மறைக்க அவளுக்கும் தோன்றவில்லை. சொன்னால் தன்னால் பழையபடி இருக்க முடியவில்லை என்றும் அவனிடம் ஒதுங்கியே இருப்பதாகவும்... “இது பத்தாதுன்னு மதியானம் ஆனாலே ஆளை பிடிக்க முடியலை தேஜு. எங்கேயோ போறான் எங்கன்னு தெரியலை கேட்டாள் வேலை இருக்குனு மட்டும் சொல்லுறான்” என்று புலம்பினாள்.

சிறிது யோசித்த தேஜு, “ஒரு 1 டு 3 வரைக்கும் இருக்குமா?” என்று தேஜு சந்தேகமாக வினவ “ஆமாம்” என்று சிறு ஆச்சர்யத்தோடு கூறினாள்.

“அப்போ confirm இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் எங்கேயோ போறாங்க அனு. நிருக்கும் நான் மதியம் போன் பண்ணால் அட்டென்ட் பண்ண மாட்டிங்குறேன். தினமும் ஏதாவது ஒரு ரீசன் சொல்லுறான் ஆனால் உண்மைய சொல்ல மாட்டிங்குறான்.”

இப்போது அனுவின் முகம் புரியாமல் இருக்க, “என்ன அனு இது? அவங்க நம்மகிட்ட சொல்லாம எங்க போக போறாங்க திரும்பியும் சந்தேகமா???” என்று நொந்துகொள்ள சட்டென மறுத்துவிட்டாள் அனு, “ஐயோ அப்படியெல்லாம் இல்லை தேஜு இன்னொருமுறை அந்த தப்பை நான் செய்யுறதாக இல்லை. இது சும்மா எனக்குள்ள இருக்க போராட்டம், இப்போ காட்டுற அன்பெல்லாம் இந்த 2 வருஷத்தில எங்க போனுச்சாம் அதை நினைக்க போது மட்டும் ஒழுங்கா பேச முடியலை. ஆனால் கோவமும் பட முடியலை அவ்வளவு தான்” என்று தன்னையே நொந்துக்கொண்டு கூறினாள் அனு.

அவளது தோள் மீது கைபோட்டு கொண்டு “விடு அனு சீக்கரமே ரொம்ப சீக்கரமே எல்லாம் மாறிடும். நீ வேணும்னா பாரு கல்யாணத்துக்கு முன்பே இந்த குழப்பம் எல்லாம் தீர்ந்திடும்” என்று சமாதானம் செய்தாள். அது மட்டும் செய்தாள் போதுமா அதற்கான வேலை நடந்தாக வேண்டாமா, அடுத்து அஸ்வத்திற்கு செய்தி போனது. அவனோ அவ்வளவு தானே மாத்திடலாம் என்றான்.

“அம்மா அண்ணனுக்கு ஒரு போன் பண்ணி சொல்லிடலாம்ல...”

“அதெல்லாம் வேண்டாம், நீ கிளம்புற வேலையை மட்டும் பாரு...”

“ஆமாம் எப்படி அம்மா போறோம் கார் டிரைவர் இல்லையே...”

“அதெல்லாம் அப்பா ரெடி பண்ணிட்டாங்க நம்மளோட கார்ல போகலை...” இதை கூறியதும் மண்டையில் மணி அடித்தது அனுவிற்கு “பின்ன யார்கூட போறோம்?”

“போகும் போது தெரிஞ்சிக்கோ” என்று கன்னத்தில் தட்டிவிட்டு சென்றார் அஸ்வத். (எங்களுக்கேவா... நாங்கள்ளாம் அப்போவே அப்படி.. நாங்க கண்டுபிடிச்சிட்டோம்)

horn அடிக்கும் சத்தம் கேட்டு அனு வெளியே வர, innova காரில் முன்னால் ஓட்டுனர் இடத்தில் அஸ்வத்தும், அருகில் கண்ணனும், பின்னால் துளசியும் இருந்தனர். ஹேமா காலையில் இருந்து திட்டி திட்டி கட்ட வைத்த புடவைக்கு அப்போது தான் பயன் கிடைத்தது போல் உணர்ந்தாள் அனு. கடல் நீலநிற சேலையில் ஊதா நிற border வைத்த புடைவை கட்டி அஸ்வத்திற்கு முகத்தில் செம்மை காட்டி காரில் ஏறினாள். பின்னால் ஏற சென்ற அனுவை தடுத்து “நீ முன்னால உட்காருமா நீங்க பின்னாடி வாங்க” என்று கூறினார் துளசி. அதைகேட்டு அஸ்வத் மனதில் கோவிலே கட்டினான் தாய்க்கு. கடைசி இருக்கையில் ஹேமா, வெங்கட்டும் அதற்கு முன் இருக்கையில் துளசி கண்ணனும் அதற்கும் முன்னால் அனு அஸ்வத்தும் அமர்ந்து வந்தனர்.

சும்மா வந்தாலே நம்ம நார்மலா இருக்க மாட்டோம் இவள் வேற புடவை கட்டி வந்திருக்காள் இன்னைக்கு சென்னை போன மாதிரிதான் என்று நினைத்துக்கொண்டு கண்ணை அவளைவிட்டு நகற்ற முடியாமல் தவித்தான் அஸ்வத். அவன் தவித்தானோ இல்லையோ அவனது பார்வை அவளை இன்னும் தவிக்க செய்தது. வெளியே வேடிக்கை பார்ப்பது போல் அமர்ந்து அனு வர, அஸ்வத்தின் கண் அவளையே அவ்வப்போது தழுவி வந்தது.      

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.