(Reading time: 27 - 53 minutes)

க்திக்கு டிபார்ட்மென் ஸ்டோர் வைக்கிற ஐடியா முன்னவே இருந்துச்சு இல்லையா .. சோ அது பத்தி நான் என் நண்பன்ஸ் அண்ட் சகோ கிட்ட கேட்டு ஒரு பிளான் போட்டுருக்கேன் ... சென்னையில நல்ல பிசியான லோகேஷன்ல பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாம் "

" சென்னையா ? என்ன அம்மு நீ இப்படி சொதப்புறியே "

" ஏன் அத்தை ? "

" ஆமா ஏற்கனவே அவன் நாலு வருஷமா நம்மளை பிரிஞ்சு இருக்கான் . இங்கயும்   அவன் தூரமாகத்தான் போகனுமா ?

" அடடே அப்படி இல்லை அத்தை .. சென்னையோடு கம்பேர் இங்க பிசினஸ்க்கு ஸ்கோப் கம்மிதான் .. "

" அதுல்லாம் நாம பரத்துக்க மாட்டோமா மித்ராம்மா ?"

" ஐயோ மாமா .. உங்க பையன் அங்க எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு இருக்கான் .. இங்க வந்த பிறகு அவனுக்கு பிசினஸ் லாஸ் ஆனா, அல்லது ஸ்லொவ் ஆ இருந்தா, அய்யய்யோ தப்பான முடிவு எடுத்துட்டோமொன்னு எண்ணம் வந்திடும் ... அப்பறம் நாம கனவு கண்டது எல்லாமே வேஸ்ட் ..."

" அங்க போனா, ஷக்திக்கு நிறைய வேலை இருக்கும் .. ஒரு பிசினஸை தொடங்கி அதை நிதானமா பார்க்கவே நிறைய டைம் வேணும் .. இங்கன்னா நீங்க அப்பா எல்லாரும் இடையில் புகுந்து காரியத்தை கெடுத்துடுவிங்க "

" இருந்தாலும் அவனை அங்க தனியா .........."

" யாரு தனியா விட்டது ? ஆல்ரெடி நான் மதன் அங்கிள் கிட்ட பேசிட்டேன் .. அவர் அன்புக்கு தெரிஞ்சவர்.. கதிர் மாமா அங்க தானே இருக்கான்? நானும் என் படிப்பு முடிச்சிட்டு அங்கதான் சீனியர் லாயருக்கு ஜூனியர் ஆகா போறேன் "

" மொத்தத்துல எல்லாரும் ஒண்ணா ஓட போறீங்க .. அப்படித்தானே ? "

" அச்சோ மை டியர் லக்ஸ் அத்தை .. எல்லா போராட்டமும் மினிமம் ஒரு வருஷம் தான் .. அதுக்குள்ள நாம சூர்யவம்சம் சரத்குமார் மாதிரி முன்னேறி வந்திடுவோம்ல ... ஷக்திக்காக , இல்லன்னா எனக்காக ப்ளீஸ் ?"

என்றாள் அவள் விழிகளை சுருக்கி ..

அவளின் பாவனையை ரசிப்பதா ? இல்லது அவன்மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி களிப்பதா ? என்று குழம்பித்தான் போயினர் இருவரும் ..

" அப்படி என்னடீ உனக்கு உன் மாமா மேல அவ்ளோ பாசம் .. என்னை விட நீதான் உறுகுற ?" என்று அலுத்துக் கொள்வது ப[போல மனதில் உள்ளதை கேட்டார் லக்ஷ்மி

" உங்களுக்கு மாமா மேல உள்ள பாசம்தான் " என்று மனதிற்குள்ளே சொன்னவள்

" சில உறவுகளை புரிஞ்சுக்கவும் முடியாது .. ஆராயவும் முடியாது " என்று நம்பியாரை போல கைகளை பிசைந்துக் கொண்டே அதற்கு மேல் ஆபத்து என்பதை உணர்ந்து ஓடியே விட்டாள் ...

ன்று மாலை,

" அஹெம் அஹெம் "

" என்ன கதிர் சார் பாட்டு கச்சேரிக்கு போனிங்களா ? தொண்டை கட்டிகிச்சு போல " என்றாள் காவியா.. (ஓஹோ கலாய்க்கிற லெவலுக்கு போயாச்சா ? நடத்துங்க பாஸ் )

" மணி ஏழு "

" இருக்கட்டும் "

" சாயங்காலம் ஆச்சு "

" ஆகட்டும் "

" உங்க அத்தை மகன் ரத்தினம் நம்ம ஆபீஸ் வாசல்ல கோலம் போடுறான் "

ஒரு இடைவெளிவிட்டு அவன் முகத்தை ஆராய்ந்தாள் காவியா ... பிறகு

" போடட்டும் "

" ஹே என்னம்மா பயம் போயிடுச்சு போல "

" ஆமா ... கீழே போனா அங்கிள் வருவாரு "

" அங்கிளா ? "

" கார்ட் அங்கிள் .... "

" ஓஹோ சரி அப்பறம் ?"

" போன் போட்டா போலிஸ் அங்கிள் வருவாரு "

" போலீசும் உங்களுக்கு அங்கிளா ? சரிதான் "

" அவங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி கதிர் என்கிற கதிரேசன் அ ...... "

" அய்யயோ என்னையும் அங்கிள்னு சொல்லிடாதம்மா ..என்னை நம்பித்தான் அனுஷ்கா ஹன்சிகால்லாம் கல்யாணம் ஆகாமல் இருக்காங்க "

" நெனப்புத்தான் பொழப்பை கெடுக்குதாம் ... "

" சரி சரி நீங்க இங்க கம்பியூட்டர் கூட டூயட் பாடுங்க நான் வீட்டுக்கு கெளம்புறேன் "

" ஹலோ பாஸ் என்ன இது ?"

" என்னம்மா ? "

" இந்த கதையே வேணாம் ... ஒழுங்க என்னை டிராப் பண்ணுங்க வீட்டுக்கு "

" ஏன்மா ஆபீஸ் வேல பத்தாததுன்னு நான் உங்ககிட்ட சொன்னேனா ? எனக்கு எதுக்கு இந்த டிரைவர் வேலை ? "

" முதல்ல என்னை எப்படி கூப்டுரதுன்னு ஒரு முடிவுக்கு வாங்க பாஸ் ... ஒன்னு நீ வான்னு சொல்லுங்க , இல்ல வாங்க போங்கன்னு சொல்லுங்க .. ஏன் இப்படி குழப்புறிங்க ? "

" அம்மாடியோவ் ... தாயே கொஞ்சம் அமைதியா வர்றியாம்மா ? உன்னை டிராப் பண்ணிட்டு நான் வீட்டுக்கு போகணும் .."

" ஹா ஹா சுப்பர் வாங்க போகலாம் .. "

அன்றிரவு,

" சாப்டு நிலாம்மா, என் செல்லம்ல "என்று நிலாவை செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்தார் பாட்டி ...

( நாம மத்தவங்களை பார்த்துட்டு வர்ற அந்த சின்ன கேப்ல பாட்டியும் நிலாவு செட் ஆகிட்டாங்களே ..சரி வாங்க )

" சாப்டுறேன் .. ஆனா நீங்க எனக்கு உங்க பேரனோட சின்ன வயசு போட்டோ எல்லாம் காட்டனும் சரியா ? "

" ஐயோ மதிக்கு புடிக்கலன்னா ? "

" நிலா ஆசைபட்டு கேட்டான்னு சொல்லுங்க ... உடனே சரின்னு தலை ஆட்டுவார் " என்று உரிமையை சொல்லி சிரித்த பிறகுதான் அவளுக்கே " ஆஹா கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ " என்று தோன்றியது ..

பாட்டியோ சாம்பார் பத்தலையே இரு கொண்டு வரேன் என்று சமையல் அறைக்குள் ஓடி அந்த வயதிலும் துள்ளி குதித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.