(Reading time: 27 - 53 minutes)

தே நேரம் சிவகங்கையில்,

" மாமா " என்று ஷக்தியின் வீடிற்குள் துள்ளி குதித்து ஓடி வந்தாள் சங்கமித்ரா ..

" அடடே வாம்மா சின்ன மருமகளே .. என்ன இன்னைக்கு காலேஜ் போலயா ? " என்று கேட்டார் .. அவள் பதில் கூறுமுன்னே முன்வந்து ஆஜர் ஆனார் லக்ஷ்மி ..

" அதெப்படிங்க போவா ? இன்னைக்கு வெள்ளிக்கிழமையாச்சே " என்றார் நமட்டு சிரிப்புடன் .. மனைவிக்கே விஷயம் தெரிந்திருக்கும்போது கணவருக்கு தெரிந்திருக்காதா ? எனினும் போலியாய்

" வெள்ளிக்கிழமை இப்போலாம் காலேஜ் லீவா லக்ஸ் ?" என்று கேட்டு வைத்தார் ..

" அட இல்லைங்க ... நம்ம மித்ரா பொண்ணு காலேஜ்க்கும் வெள்ளிக்கிழமைக்கும் ராசியே இல்லை போங்க "

" ஏன் கலவரம் ஏதாச்சும் நடக்குதா ? "'

" கலவரமா ? அதை நம்ம செல்ல மருமகள் ஆரம்பிச்சு வெச்சா தானே நடக்கும் ?"

" ஐயோ அத்தை ... "

" ஹா ஹா .. இருடாம்மா உங்க மாமா கேள்வி கேட்கிறார்ல ..அவருக்கு பதில் சொல்லாமல் நான் உன்னை கொஞ்சினால் நல்லாவா இருக்கும் ? அதான் .." என்று கண்ணடித்தார் . 

" அடடே இன்னைக்கு ரெண்டு பேரும் ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போல "

" சரி விடு மருமகளே... லக்ஸ் நீ காலேஜ் கதையை ஸ்டார்ட் பண்ணு " என்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தார் நாராயணன் ...

" அதுவாங்க, நம்ம சித்ரா தான் சொன்னா.. வெள்ளிகிழமை ஆனா போதும் நம்ம மித்ரா லெக்சரர்ஸ் ஒழுங்கா கிளாஸ் எடுக்க மாட்றாங்க , பவர் கட்டாகிடுது, லாஸ்ட் அவர்ஸ் ப்ரீ ஆகிடுது "

" அடடடடடடே பாவம்ல .. பவர் கட்டானா கூட நம்ம மித்ராவால படிக்க முடியாம போயிடுதா ? இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணுமே ? மித்ரா நீ வாம்மா மாமா உன் காலேஜ்க்கு வந்து என்னன்னு கேட்குறேன் ... எழுந்து வாடா " என்று எழ எத்தனித்தவரை கையமர்த்திவிட்டு இடையில் கைவைத்துக் கொண்டு இருவரையும் முறைத்தாள் சங்கமித்ரா ..

" என்ன ? இல்ல என்னான்னு சொல்றிங்க ரெண்டு பேரும் ? விஜய் டிவி ல அவார்டா கொடுக்குறாங்களா உங்க ரெண்டு பேருக்கும் ? அதெப்படி எப்படி நான் வெள்ளிக் கிழமை லீவ் போடுறது இவருக்கு தெரியாதாம் .. உடனே இவங்க கதை சொல்லுவாங்கலாம் .. ஹெலோ சாரே, மேடம் உங்க ரெண்டு பேரையும் நான் சின்ன குழந்தையில் இருந்து பார்க்குறேன் "

" அடியே நாங்க குழந்தையா இருக்கும்போது நீ இன்னும் பிறக்கவே இல்லையடி .. "

" அடடா என்செல்ல அத்தையே, நான் சொன்னது என்னுடைய குழந்தை பருவம்... "

மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார் நாராயணன் .. லக்ஷ்மியோ அதை நேரடியாகவே நிறைவேற்றி

" எப்படிடீ இப்படி ரத்தம் வராமல் கடிக்கிற ?   பாவம் என் புள்ளயையும் இப்படித்தான் ஓட்டுவியா ? " என்று கன்னத்தில் கை வைத்து கேட்டார் லக்ஷ்மி .. ஷக்தியை பற்றி பேச்சு வந்ததுமே பூவாய் மலர்ந்தது அவளது முகம் ..

" ஆமா உங்க புள்ளயை நாங்க கடிச்சுட்டாலும் .. உங்களுக்கு எல்லாம் ஷக்தி மாமா பத்தி ஒன்னும் தெரில ... எனக்குதான் அவனை நல்லா தெரியும் " என்றாள் பெருமையாய் ..

" அப்படி என்ன தெரியும் மருமகளே " - நாராயணன 

" சொன்ன ஷாக் ஆகிடுவிங்க மாமா "

" பரவாயில்லை சொல்லும்மா "

" ம்ம்ம்ம் அப்பறம் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்லை .. உங்க பையன் பரம சாது அமைதியின் சிகரம்னு தானே நினைக்கிறிங்க ? ஆனா அவன் எவ்ளோ பெரிய கேடி தெரியுமா ? பேஸ்புக்ல வந்து பாருங்க ... அவனுக்குன்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு .. அவன் ஒரு ஸ்டேடஸ் போட்டா அதை படிச்சு ஆராய்ஞ்சு ஆபரேஷன் பண்ண பெரிய கூட்டமே இருக்கு ... குட் மோர்னிங் சொல்ல ஒரு ஸ்டேடஸ், குட் நைட் சொல்ல ஒரு ஸ்டேடஸ்.. இன்னைக்கு வெள்ளி கிழமைன்னா வியாழக் கிழமை விடிய விடிய ஆன்லைன்ல இருக்கான் .. என்கிட்ட மட்டும் பேசிகிட்டே தூங்கிடுறான் .. ஒரு புது பாட்டு வந்திட கூடாது .. அந்த பாட்டு மட்டும் உங்க புள்ளைக்கு புடிச்சிட்டா போதுமே, உடனே அதையே ஆயிரம் ஸ்டேடஸ் போட்டு பார்க்குறவங்க கண்ணுல காதுல ரத்தம் வர வெச்சிடுவான் .... இதை எல்லாத்தையும் விட ஒரு பெரிய தப்பு பண்ணுறான் .. "

" அதென்ன தப்பு அம்மணி ? "

" வேறென்ன, நான் என்ன சொன்னாலும் அதுக்கு எதிர்த்து பேசுறான் " என்று கண்களை உருட்டினாள் மித்ரா ..

" அடடே லக்ஸ்.. நம்ம மித்ராவுக்கு பதிலடி தர்றான்னா அப்போ நிஜம்மாவே நம்ம பையன் பேச ஆரம்பிச்சுட்டான் போல .. நீ என்ன பண்ணுற , நம்ம மதி குட்டிக்கு போன் போட்டு வரும்போது டைரி மில்க் வாங்கிட்டு வர சொல்லு .. "

" அது எதுக்கு மாமா ? "

" என் பையன் பேச ஆரம்பிச்சுட்டான் .. ஸ்வீட் எடு கொண்டாடு " என்று விளம்பரம்போல சொல்லி இடியாய் சிரித்தார் லக்ஷ்மிநாராயணன்... அவருடன் இணைந்து லக்ஷ்மியும் சிரிக்க இருவரின் முகத்தையும் கண்கூடாய் பார்த்து ரசித்தாள் மித்ரா...

" ஷக்தி .. அத்தையும் மாமாவும் சந்தோஷமா இருக்காங்க டா .. நான் அவங்களை சந்தோஷமா பார்த்துக்குறேன் .. நீயும் சீக்கிரம் வாயேண்டா " என்று மானசீகமாக தனது பாசக்கார மாமன் மகனுக்கு அழைப்பு விடுத்தாள் சங்கமித்ரா ..

" மாமா அப்பறம் அந்த விஷயமா உங்க கிட்ட பேசணுமே " என்றாள் தயக்கமான குரலில்..

" சொல்லும்மா நான் ஆல்ரெடி உங்க அத்தை கிட்ட அதை பத்தி பேசிட்டேன் அவளுக்கும் ரொம்ப சந்தோஷம் " என்று பெருமையாய் சொன்னார் நாராயணன் ...

லக்ஷ்மியும் " ஆமா மித்ரா .. எனக்கும் ரொம்ப சந்தோசம் .. நாங்க கூட யோசிக்கல... ஆனா நீ சின்ன பொண்ணா இருந்தாலும் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிற ? " என்றார் ...

" ஐயோ என் மங்குனி மாமா "

" என்னது நானா ?"

" பின்ன நானா ? உங்க வைப் சும்மா சாவித்திரி தேவி மாதிரி வசீகரமா சிரிச்சா சார் உடனே ஜெமினி கணேசனா மாறி ரகசியத்தை சொல்லிடுவிங்களோ ? நான் என்ன அத்தைக்கு தெரிய கூடாதுன்னு நெனச்சா உங்ககிட்ட சொல்லவேணாம்னு சொன்னேன் ? எல்லாருக்கும் ஸ்வீட் சர்ப்ரைஸ் தரலாம்னு நெனச்சேன் .. நீங்க என்னடான்னா இப்படி உளறி வச்சுட்டிங்களே "

" அது ,.... மித்ரா "

" என்ன அது இதுன்னு ?? ம்போங்க நான் உன்கூட இனி கூட்டணி இல்லை .. நான் எங்க அத்தைகிட்டையே இனி பேசிக்கிறேன் "என்று லக்ஷிமியின் கழுத்தை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சினாள் சங்கமித்ரா ..

" சரி சரி சொல்லுடா .. என்ன விஷயம் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.