(Reading time: 27 - 53 minutes)

 

துக்கு இல்ல...நீ என்ன பார்த்து பயப்படுற.....நான் இருந்தா சரியா சாப்டமாட்ட...”

“இல்ல சாப்டுவேன்...”அவள் குரல் உள்ளே போயிருந்தது. பயமில்லை என்று சொன்னால் அதுபெரும் பொய். ஆனாலும்...

ஆச்சர்யமாக பார்த்தவன் அவளுடன் உணவு மேஜைக்கு நடந்தான்.

பெரும்பாலும் மௌனமாக கழிந்தாலும் உணவுப் பொழுது மனதிற்கும் உணவிட்டது

உணவு அவளுக்கு பிடித்தது போல் மித காரமாக, இனிப்புகளும் கடும் இனிப்பாக இல்லாமல் இவளுக்கு பிடித்த விதமாக மென் இனிப்போடு, எதிரில் அவனும் காரா சாரமாக எதையும் சொல்லாமல் செய்யாமல் அவ்வப்போழுது அவளுக்கு பரிமாறியதோடு மௌனமாக...இதழ் செய்யா புன்னகையுடன்

மனதிற்குள் காரம் குறைந்து மித உணர்வு. சாப்பாடு விஷயமாவது ரெண்டு பேருக்கும் ஒன்னு போல இருக்குதே...

நான் திரும்பவும் ஆஃபீஸ் போகணும்... நீ ரெஸ்ட் எடுமா... வர்றப்ப உனக்கு எதாவது வேணும்னா சொல்லு நான் வாங்கிட்டு வாரேன்...

நளைக்கு நாம ஷாப்பிங் போகலாம்...”

சொல்லிவிட்டு கவின் கிளம்ப தயாராக பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள் வேரி.

உருகிப் போனான் கவின்.

 “என்னமா..? எதாவது வேணுமா..?”

“இல்ல....அது வந்து...தப்பால்லாம் இல்ல.. என்னையும் உங்க கூட ஆஃபீஸ்....நானும் வரட்டுமா...?”

அசந்து போனான் அவன்.

“பகல்ல தூங்கினா பாப்பா படு ஸ்மார்ட் ஆ ஆகிடும் போல...” அவன் ஆச்சர்யபட...

அவள் ஞே என விழித்தாள்.

முட்டக்கண்ணி!!!  “சரி கிளம்பு”

 உன்னை சைட் அடிச்சுட்டே நாந்தான் என்ன வேலை செய்ய போறேன்னு தெரியலை.

இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்குதே!!!

இன்னும் தயங்கிய படி அவள் நின்றிருந்தாள்.

“என்னமா..?”

“இல்ல....நான்...பி.பி.ஏ தான் படிச்சிருக்கேன்....எனக்கு பெருசா எதுவும் தெரியாது.....ஆனால்...சொல்லி கொடுத்தா கத்துப்பேன்...”

“நீயாவது த்ரி இயர்ஸ் படிச்சிருக்க...நான் டு இயர்ஸ்தான்..”

 அதெல்லாம் பார்த்துக்கிடலாம்....”

அப்படி என்னது டு இயர்ஃஸ்ல படிக்க முடியும்...? என யோசித்துக்கொண்டே அவள் கிளம்ப சென்றாள்.

அடுத்த பத்தாம் நிமிடம் அவள் கிளம்பி வர

“பொண்ணுங்கல்லாம் ரெடியாக ரொம்ப நேரம் எடுப்பாங்கன்னு சொல்லுவாங்களே அது பொய்யா...? “அவன் ஆச்சர்யபட அவள் முகத்தில் பெருமிதம்.

அவளோடு சேர்ந்து காரை நோக்கி நடந்தான்.

 “நீ பின்னால உட்காரனும்னா உட்கார்ந்துக்கோ குல்ஸ்....நம்ம எம்ளாயிஸுக்கு நீ தான் ஓனரம்மான்னு உடனே புரிஞ்சிடும்...”

அவன் சற்றே கிண்டலாக சொல்ல, முன் பக்க கதவை திறந்து அமர்ந்தாள் அவள்.

கார் கிளம்பியது.

ந்த ஸ்பின்னிங் மில்லுக்குள் நுழையும் போதே மணி நாலு என சங்கு ஊதியது.

தரை தளத்திலிருந்த அந்த கண்ணாடி அறைக்குள் அவளை கூட்டிச்சென்றான்.

வழி எல்லாம் பார்த்த அனைவரின் கண்களும் இவர்கள் மீதுதான்.

“என்ன சாப்டுறீங்க எம்.டி மேடம்?”

சன்னமாய் முறைத்தாள்.

“வர வர என்னை முறைக்கிறவங்க எண்ணிக்கை கூடிகிட்டே போகுது....” அவன் சிரித்தபடி சொல்லிக் கொண்டு போக இவனுக்கு ஆஃபீஸ்ல எதுவும் ப்ரச்சனையோ என்ற எண்ணம் வந்தது அவளுக்கு.

அதற்குள் இவன் மொபைல் சிணுங்க  அதை எடுத்துப் பார்த்தவன்

‘குல்ஸ் ரொம்ப முக்கியமான வேலை...டென் ஃபிஃப்டீன் மினிட்ஸ் ஆகும் ...அதுவரைக்கும் இங்க வெயிட் பண்ணமுடியுமா...ப்ளீஃஸ் என்றான்.

“நான் வர கூடாதா..?.” பாவமாக பார்த்தவள் போரடிக்கும்...என்று காரணம் சொன்னாள்.

“இன்னைக்கு நீ அங்க வர வேண்டாம்...கஷ்டம்...இனி நீ வரமாதிரி எல்லா ஏற்பாடும் செஞ்சு வைக்கேன்...”என்றவன்...கண்ணாடி சுவர் வழியாக மேலே தெரிந்த அந்த இடத்தைக் காண்பித்தான். அதற்கு செல்லும் வழியும் அதன் தரையும் வெறும் நீள நீள கம்பிகளே.

கம்பிகளால் ஆன படிக்கட்டின் வழியாக ஏறித்தான் அங்கு போகமுடியும் என புரியவும் அமைதியாகிவிட்டாள் வேரி.

“சிஸ்டத்தில நெட் இருக்குது...அப்றம் உனக்கு எதாவது வேணும்னா இன்டர்காம்ல 4 ப்ரஸ் பண்ணு...என்னை கூப்பிடனும்னா மொபைல்ல கூப்பிடு...” என்றவன் அவசரமாக தன் மொபைல் எண்ணை அருகிலிருந்த ஃஸ்கிரிபிளிங் பஅடில் எழுதி வைத்துவிட்டு சிறு தலையாட்டலுடன் விடை பெற்றான்.

அவன் மேலே ஏறிச்செல்வதை பார்த்திருந்தவள், அடுத்தும் சிறு குழுவாக அவனும் வேறு சிலரும் அங்கிருந்து எதையோ சுட்டி காட்டி பேசுவதை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

மெல்ல அக்குழு நடந்து பார்வையை கடந்தது. கண்ணாடி அறையிலிருந்து நான்கு புறத்தையும் பார்த்தாள். பெரும் இரைச்சலுடன் ராட்சச இயந்திரங்கள் நூலோடு விளையாட...மனிதர்கள் யாரும் கண்ணில் புலப்படவில்லை.

இரைச்சல் பிடிக்கவில்லை எனினும்...உள்ளிருந்து வெட்டியாய் பொழுதை போக்கவும் விருப்பம் இல்லை.

வந்தது பொழுது போக்கவா..? ‘வேலை செய்யாதவன் சாப்பிடகூடாது.’ உருப்படியா எதாவது வேலை செய்யனும்...தெண்ட சோறு சாப்பிட முடியாது...

மில்லை சுத்தி பார்க்கலாம். குறைஞ்சபட்சம் எது என்னனாவது பார்த்துவைக்கலாம்...மெல்ல அறையைவிட்டு வெளியே வந்தாள். அந்த கிலோமீட்டர் நீள ஹாலில்,  அந்த ராட்சச இயந்திரங்களுக்கு இடையில் இருந்த இடைவெளியில் நடக்க தொடங்கினாள்.

சற்று நேரத்தில் அந்த இரைச்சலும், அவள் திரும்பிய பக்கமெல்லாம் பார்வை மறைத்த அந்த இயந்திர சூழலும் தலை சுற்ற வைத்தது.  இயந்திரத்தோடு இயந்திரமாய் தனிமையாய் உணர்ந்தாள்.

தேடிய கண்களுக்கு அருகிலிருந்த இரும்பு படிகட்டுகளும் அதன் முடிவில் முதல் தள உயரத்தில் இருந்த அந்த அறையும் அதில் எழுதி இருந்த எம்.டி என்ற எழுத்தும் தெரிய எதோ அவளுக்கு மிகவும் பரிட்சயமான ஒன்றை பார்த்துவிட்ட மகிழ்வுடன் படியேறி அறைகதவை தள்ளினாள். திறந்தது.

ள்ளே சென்றால் பார்வையில் பட்டது கவின் சத்யா எம்.டி என்ற பெயர் பலகை.

அதுவரை தோன்றிய தனிமை ப்ளஸ் வெறுமை காரணமாக இப்போது இந்த பெயரே மிகவும் சொந்தமான ஒன்றாக தோன்றியது போலும்.

அவனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

மேஜை மீது ஒரு ஃபைல் இருந்தது. அதை திறந்து வாசிக்க ஆரம்பித்தாள்.

இத்தாலியுள்ள ஒரு நிறுவனத்துடனான  தொழில் தொடர்பு பற்றிய ஃபைல் அது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.