(Reading time: 27 - 53 minutes)

 

ல தரபட்ட ஆடைகள் ஏற்றுமதி செய்யபட்டிருந்தன. ஆனால் எல்லா ஆர்டரும் ஆகஸ்ட் செப்டம்பர்  வாக்கில் பெறபட்டவைகள் உட்பட ஃபெப்ரவரி மார்ச்சில் தான் ஏற்றுமதி செய்யபட்டிருந்தன. அதுவும் சொற்ப மார்ஜினில்

முட்டாள்....விதை மலையளவு பெரிதாக தெரிந்தது இப்பொழுது.

அத்தனை மாதம் வேலை செய்து இவ்வளவு குறைவான மார்ஜினில் விற்பனை செய்தால் என்ன லாபம் வரும்? 

எரிச்சலும் வலியும் மனதில் எழும்ப கடமைக்காய் இன்னும் பக்கங்களை புரட்டினாள்.

“எதாவது ஏமாந்தவன் கிடச்சாதான இவளுக்கு கல்யாணம்...” இவள் அவ்வப்போது கேட்டு வளர்ந்த வார்த்தை ஞாபகம் வர கண்ணில் அதுவாக நீர்கட்டியது.

மனம் ஒரு நிலையில் இல்லை. எழுந்து கேபினை விட்டு வெளியில் வந்தாள். அதே நேரம் அவள் முன் வந்து நின்றான் அவன்.

காக்கி யூனிஃபார்மில் முறுக்கு மீசையுடன்.

“ஏய்....யார் நீ....எம் டி....ரூம்ல உனக்கென்ன வேலை....உள்ள இருந்து என்னத திருடுன...?”

செய்யாத தப்பிற்கு குற்றம் சுமத்தியவுடன் கொதிக்க இவளென்ன மிர்னாவா?

என்ன பார்க்க திருடி மாதிரியா இருக்குது....? எம்.டி வைஃப்னு தெரியலனாலும் அவ்வளவு கேவலமாவா இருக்கேன்...? மனம் இப்படி ஓட

இவளுக்கு சுய இரக்கமும் அதோடு சேர்ந்து அழுகையும் வந்தது.

 “ஏய்...என்ன மாட்டிகிட்டவுடனே டிராமாவா...? என்ன எடுத்த காமி...”

மிரட்டியவன் இப்பொழுது அவளை பிடித்து வேகமாக கேபின் சுவரில் சாய்த்தான்..”.சொல்லு..?”

“ஏய்....விடு அவளை...” வேகமாக ஓடி வந்தான் கவின். அவன் முக தவிப்பை பார்த்த வேரிக்கு இன்னுமாய் அழுகைதான் வந்தது.

“இல்ல ...சார்...ரூமுக்குள்ள இருந்து வந்தாங்க இவங்க....”

இதற்குள் கவின் இவளை அடைந்திருந்தவன் அவளை அரவணைப்பாய் தன்னோடு சேர்த்தான்.

“நான் இவங்க வைஃப்..” மெல்லியதாய் வந்தது அவள் வார்த்தை..

அவ்வளவுதான் “ஐயோ...அம்மா...நீங்க ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல...யாரும் நீங்க இன்னைக்கு இங்கன வாரீங்கன்னு சொல்லலையே...பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க....”  அந்த காக்கி உடைக்காரர் அலற

“பரவாயில்ல....”

என இவள் தொடங்கும் போதே...”டியூட்டி நேரத்துல எங்க போனீங்க...இங்க வாசல்ல தான உட்கார்ந்து இருக்கனும்...? உள்ளபோறப்ப பார்க்காம வெளிய வந்த பிறகு பிடிச்சு வச்சுகிட்டு... உள்ள வாங்க ....”  அந்த மீசைக்காரரை கேட்ட கவின் இவளை அப்படியே அறைக்குள் அழைத்துச்சென்றான்.

 வேடிக்கை பார்த்த இரண்டு மூன்று பேர் கலைந்து சென்றனர்.

“ஐயா...தப்புதான்யா...எனக்கு இது உங்க வீட்டம்மான்னு தெரியலையா...அதுக்காக எதுவும் செய்துடாதீங்கய்யா...மூனு பிள்ளைங்களுக்கு ஃபீஸ் கெட்டனுங்கய்யா...”

“ராஜுண்ணே ....நான் அதுக்காக செய்யலை....டூட்டி நேரத்துல வேலையவிட்டுட்டு போனது உங்க தப்புதான...? இன்னைக்கு உங்களை சும்மா விட்டா...நாளைக்கு மத்தவங்களும் இப்படியே செய்வாங்கல்ல...?

அதான்...மெமோ....சம்பளத்துல இரநூறு ரூபா கட் பண்ணுவாங்க...” அவன் சொல்வதில் நியாயம் இருந்தாலும் வேரிக்கு மனம் ஒப்பவில்லை.

“ஐயா...”என்று கெஞ்சிய அந்த ராஜுவின் குரல் இன்னுமாய் மனதை பிசைந்தது.

“நம்ம எஜுகேஷன் ட்ரஸ்ட்ல போய் அப்ளிகேஷன் குடுங்க... ஃபீஸுக்கு லோன் சாங்க்ஷன் செய்ய சொல்றேன்...” என்ற கவின் அவன் இருக்கையில் அமர்ந்து அவன் மேஜை ட்ராயரை குனிந்து திறந்தான்.

“ஐயா...ரொம்ப நன்றிங்கய்யா.....” ராஜு திரும்ப  ஒரு வெள்ளை கவரில் சில  ரூபாய் நோட்டுகளை எடுத்து வைத்த கவின் வேரி கையில் கொடுத்தான்...

“ராஜுண்ணா...என் வைஃப் உங்களுக்கு எதோ தரனுமாம்...” கவின் சொல்ல...சட்டென விஷயம் புரிந்து அந்த ராஜுவிடம் அந்த கவரை நீட்டினாள் வேரி...”எங்க கல்யாணத்துக்காக..”

பலமாய் நன்றி சொல்லிவிட்டு போனார் அந்த ராஜூண்ணா.

வேரிக்குமே இந்த அப்ரோச்பிடித்தது. தப்புக்கு தண்டனை. அதே நேரம் கஷ்டத்திற்கு உதவி...அதுவும் ஓசியாக கொடுக்காமல் கடனாக. அப்பொழுதுதான் பொறுப்பு இருக்கும் வாங்கியவருக்கு....கடைசியாக அந்த கிஃப்ட்...அது இவளை நான் கவினின் மனைவி என சொல்லவைத்ததற்காகவா?.

இவன் நிஜமாவே புத்திசாலியா?  முட்டாளா? இவளை உண்மையாகவே விரும்புகிறானா?

அந்த இட்டலி நிறுவன ஃபைல் ஞாபகம் வந்தது. மனம் மீண்டும் முருங்கை மரம்.

இவள் முகம் பார்த்தவனுக்கு என்ன புரிந்ததோ..? “இன்னும் ஒரு மீட்டிங்...அதுக்கு நீயும் வா...அது முடிஞ்சதும் கிளம்பிடலாம்...” என்றுவிட்டு அவன் முன் இருந்த சில ஃபைல்களை குடைந்துவிட்டு அந்த மீட்டிங் ஹாலுக்கு கூட்டிச்சென்றான்.

முதலில் சற்றும் இயல்பாய் பொருந்த முடியவில்லை வேரியால் எனினும்...வரவர சுவாரஸ்யமாகவே இருந்தது அந்த கலந்தாய்வு.... அந்த இட்டலி நிறுவனம் பற்றியும் பேச்சு வந்தது.

ஆர்டர்களை காரணத்தோடு இரு மாதம் கழித்துதான் உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கின்றனர் இவர்கள். ஏனெனில்...ஃபெப்ரவரிக்கு முன் டெலிவரி செய்ய கூடாது என்ற மறைமுக காரணம். ஃபெப்ரவரி மார்ச் மிக குறைந்த மார்ஜினில் கொடுத்து இருந்தனர்.

ஏப்ரல் முதல் புது வரி...புது விலை...

அப்பொழுதுதான் அது அவளுக்கு புரிந்தது. அக்டோபர் நவம்பரிலேயே கொடுத்து இருந்தால் மார்ச் வரை அவர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டி இருந்திருக்கும்....ஆக குறைந்த விலையில் விற்க்கும் பொருளின் குவான்டிடி குறைவாக இருக்க கால தாமதம்.

குறைந்த விலை என இவர்கள் டெண்டரை ஏற்றுக்கொண்டிருந்த அந்த இட்டலி நிறுவனம் மார்ச்சுக்கு பின் மற்ற நிறுவன அளவே இவர்களது விலையும் உயர்ந்தாலும்..ஏற்கனவே சப்ளை செய்யும் நிறுவனம், பொருளின் தரத்திலும் எந்த குறையும் இல்லை என்று இவர்களிடமே தொடர்ந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது...அதன் மொத்த லாபம் மிகவும் திருப்தி அளிக்கும் அளவு.

வீட்டுக்கு திரும்பும் வழியில் கேட்டாள் “ ஒரு வகையில் இது ஏமாத்து வேலை இல்லையா...?”

சன்னமாய் புன்னகைத்தான்.

“அவங்க கூட முதல்ல அக்ரிமெண்ட் போட்டப்பவே டெலிவரி டைம் எங்க வசதிப்படின்னு தான் டெர்ம்ஃஸ் ஃபிக்ஸ் பண்ணி இருந்தேன். அவங்களும் அதுக்கு அக்ஸப்ட் செய்திருந்தாங்க...அப்புறம் இது எப்படி சீட்டிங் ஆகும்...? அதோட அவங்களுக்கும் இதுல லாபம் இல்லாமலா டீலை கன்டின்யூ செய்றாங்க...? மத்தவங்கட்ட போயிருந்தா இந்த விலையை அவங்க வாங்கின எல்லா கூட்ஃஸுக்கும் கொடுத்துருப்பாங்களே...நம்மட்ட முதல்  2 மன்ந்ஸ் அவங்களுக்கு ரொம்பவே லாபம் தானே..”

“அப்ப ஃபர்ஸ்ட் டூ மந்த்ஸ் நாம ஏமாந்துட்டோம்னு அர்த்தமா...?” மீண்டும் அந்த முட்டாள் பதம் ஞாபகம் வந்தது. ஆனாலும் அது மிகவும் வலுவிழந்திருந்தது.

“அப்படி இல்ல...அது இந்த டீல் நமக்கு கிடைக்க நாம செய்த சின்ன ஃபேவர்... அவ்வளவுதான்....ஓவரால் இது நமக்கு நல்ல ப்ராஃபிட் டீல்தான்...”

எதோ ஒன்று திருப்தியாய் இருந்தாலும் இன்னொரு புறம் எதோ எச்சரித்தது. இவன் பக்கா பிஸினஸ் மேன். கவனம் தேவை என்றது அந்த எதோ ஒன்று.

“இப்போ ஷாப்ஸ் க்ளோஸ் ஆகிற டைம்.....ஒரு 30 மினிட்ஸ் கிடைக்கும் ஷாப்பிங் செய்ய...போலாமா...? இல்லனா...நாளைக்கு ஈவ்னிங் வரலாமா..?”

அவன் முகம் பார்த்த வேரி, நாளைக்கு என முடித்துவிட்டாள். அவனுக்கு வேலை அதிகம் டயர்டா இருப்பவனை ஏன் தொந்தரவு செய்யனும்...? நினைத்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.