(Reading time: 27 - 53 minutes)

 

வீட்டில் இருவருமாக இரவு உணவு உண்டனர். உணவு முடிய அறையை நோக்கி நடந்தாள்

“ க்ரவுண்ட் ஃப்லோர்ல ரூம் அரேஞ்ச் செய்ய சொல்லி இருக்கேன்...வா காட்றேன்... “

கவின் சொல்ல இவளுக்கு ஆச்சர்யம் மற்றும் இதம் சுகம் இன்ப பதம் எல்லாம்.

அவனோடு அந்த அறைக்குள் நுழைந்தாள். இவள் கொண்டு வந்திருந்த சிறு பேக் தவிர இன்னுமாய் எதேதோ...அறை விஸ்தாரமாய் மாடி அறை போலவே அதே அளவில்...

“என்னால முடிஞ்ச ஷாப்பிங் மார்னிங் செய்துருக்கேன்...நாளைக்கு நீயும் என்கூட வா...உனக்கு பிடிச்ச மாதிரி வாங்கலாம்......”

“இந்த ரூம் தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்....” அவளுக்கு நன்றி உணர்வில் அழுகை கட்டிக்கொண்டு வந்தது.

“ஹேய்....” என்றவன்...”சாரிமா...உன்னை தனியாவிட என்னால முடியவே முடியாது...நைட் நானும் இங்க தான் இருப்பேன்...மத்தபடி உனக்கு மாடி ஏற கஷ்டமா இருக்குதோன்னு தான் இங்க ரூம் அரேஞ்ச் செய்ய சொன்னேன்....”

அவ்வளவுதான் காற்று போன பலூனாகியது அவள் முகம்.

"என்னை உயிரோட கொல்லதான் கல்யாணம் செய்தீங்களோ....” வெடித்தவள் விடுவிடுவென வெளிபுறம் நோக்கி நடந்தாள். அழுகையும் வெடிப்பும் இயலாமையும் போட்டி இட்டன அவளுள்.

ன்று இரவும் தரை தள அறையில் இரவு விளக்கு வெளிச்சத்தில் அவள் விறைப்பாய் அமர்ந்திருக்க அருகிலிருந்த படுக்கையில் படுத்திருந்த கவினுக்கு பலநாள் தொடர் வேலை காரணமாக களைப்பும் தூக்கமும் கணயர்த்தினாலும் மனம் எங்கும் இளக்கம் தவிப்பு...அவளுக்காக

குட்டிமா கொஞ்சமாவது புரிஞ்சிக்கோயேன்....நான் பக்கத்தில இருக்கிறதுல அப்படி என்ன இடஞ்சல் உனக்கு...உன்னை இப்படி படுத்தவா கல்யாணம் செய்தேன்....?

மனதிற்குள் மன்றாடியவனை தூக்கம் கொள்ளை கொண்டது.

திடும் என மீண்டுமாக விழிப்பு வந்தபோது மனைவிக்கான தவிப்பு அப்படியே இருந்தது அவனுள்.

அவசரமாக அவளை தலை உயர்த்தி தேடினான். அவள் அமர்ந்திருந்த இடம் வெறுமையாய் இருந்தது.

அவசரமாக எழுந்தவன் அறையை விட்டு வெளியே வந்தான்.

எங்கு போயிருப்பாள்? எதோ தோன்ற அவசரமாக மாடியிலிருந்த அவனது அறைக்கு சென்றான். அவன் நினைத்தது சரி தான். அறை உள்ளே தாழிடப்பட்டிருந்தது.

அவனை அறியாமல் சிறு புன்னகை இதழில். வாலுள்ள வளர்ந்த குழந்தை !!!

மெல்ல திரும்பி நடந்தவனுக்கு ஜன்னலில் ஆடிய திரைசீலையின் சிறிய இடைவெளியில் அவ்வறை கட்டில் தெரிய அங்கு அவள் இல்லை..

எங்கே இவள்? என்ன செய்கிறாள்? அவசரமாக

சாவி துவாரத்தின் வழியாக பார்த்தான்.

அறையின் அட்டாச்ட் பாத்ரூமிற்கு முன்னால் தரையில் அவள்.

பகீரென்றது அவனுக்கு. விழுந்து கிடக்கிறாளா?

கூர்ந்து பார்த்தால் அவள் அவளுடைய ஒரு புடவையை விரித்து அதோடு சுருண்டு படுத்திருப்பது புரிந்தது.

என்னதிது??

இவனுடையது எதையும் பயன்படுத்தக்கூடாது என நினைக்கிறாளா?

இல்லையே சாப்பிட்டாளே?? பின் இது என்ன? ஏன்?

ஆனாலும் தூங்கும் அவளை தொந்தரவு செய்ய மனம் வராமல் போக மீண்டுமாக தன் அறையில் வந்து படுத்தவனுக்குதான் தூக்கம் இல்லை.

காலை ஒரு ஐந்தரை மணி அளவில் மென்மையாக கதவை திறந்து கொண்டு வந்த வேரி  கண்மூடி இருந்த இவன் முகத்தை ஒரு நிமிடத்திற்கு  மேலாக நின்று பார்த்தாள். பின் அருகிலிருந்த ஸோஃபாவில் சென்று அமர்ந்தாள். ஆனால் அவள் விழி முழுவதும் இவன் மீதே...

பின்  இவனே எதிர்பாராத ஒரு காரியத்தை செய்தாள்.

எழுந்து வந்து படுக்கையில் இவன் அருகில் வந்து படுத்தாள். கண்மூடிக் கொண்டாள்.

ஜிவ்வென்று இருந்தது கவினுக்கு. ஈர கூந்தலின் மணமும் அப்பொழுதுதான் குளித்திருக்கிறாள் என்பதற்கான அடையாளமாக அவள் மீதிருந்து வீசிய அந்த குளியல் சோப்பு வாசமும் கணவனை கட்டியவளை இழுத்து தன்னோடு அணை என்றது.

கஷ்டபட்டு தன்னை அடக்கிக் கொண்டவன் அவள் அருகாமையை ரசித்தான்.

மெல்ல அவன் புறமாக திரும்பிப் படுத்தாள் வேரி.

தொடரும்

Ennai thanthen verodu - 04

Ennai thanthen verodu - 06

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.