(Reading time: 23 - 46 minutes)

06. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety

தற்கு மேலும் கண்மூடி இருப்பது சரியில்லை என தோன்ற கண்திறந்த  கவின் தானும் தன் மனைவியை நோக்கி திரும்பிப் படுத்தான். அவள் இன்னும் கண்களை மூடி இருந்தாள். தூங்கும் போது இயல்பாக மூடி இருப்பதற்கும் விழித்திரூக்கும்போது நாமாக மூடி கொள்வதற்க்கும் வித்யாசங்கள் உண்டு. மூடிய அவள் இமைகள் துடித்துக்கொண்டிருந்தன.

மூடிய இமைகள் அவளுக்குள் இருக்கும் அமைதியையும், துடிக்கும் இமைகள் அதோடு சேர்ந்து இருக்கும் தவிப்பையும் உணர்த்தியது கவினுக்கு.

ஆனால் இந்த உணர்வுகளை வெளியரங்கமாக காண்பிக்காதபடி முகமெங்கும் படர்ந்திருந்தது ஒரு இளம் பயம்???? அதற்குள் ஒளிந்திருந்தது வெட்க மென் சிவப்பு.

Ennai thanthen verodu

திருமணத்தின் மீது கவினுக்கு எப்போதும் நல் எண்ணம் உண்டு. காரணம் அவன் பெற்றோர்.

திருமணம் ஒரு வெறுமை இன்மை, சலனமின்மை, தாகமின்மை, அமைதி, நிர்மலம், நிறைவு, பரிபூரணம். இப்படியாக அவனுக்கு  அதன் அடி குணங்கள் மீது ஒரு புரிதல் உண்டு.

ஆனாலும் அனுபவமாய் அதை உணரும் போது அதன் வல்லமை வரையறைக்கு உட்படாதது என்பது புரிகிறது.

அவள் பேச விரும்புவதை பேச தூண்டும் விதமாக

“என்னடா...? “ என்றான்.

அத்தனை வித உணர்வுகள் தோன்றி இன்னும் வண்ணமயமானது அவள் முகம்.

“...............”

“என்ன சொல்லனும்...?”

“அது...வந்து....”

“ம்?”

“நான் காலைல ப்ரேயர் பண்ணிட்டு இருந்தேன்...”

“..............”

“அப்போ சிலவிஷயம்லாம் ஞாபகம் வந்துச்சு...” “அது...வந்து...”

“என்னை பத்தி கடவுள்ட்ட கம்ப்ளயின் பண்ணிணியா...?” சிறு சிரிப்புடன் அவன் கேட்க

“ம்ம்..” ஆமோதித்த அவள் இறங்கிய குரலும் பரிதாபமான முகபாவமும், தன் வீட்டின் முதல் குழந்தை யார் என்பதை கவினுக்கு அடையாளம் காட்டியது.

“சாரி...”

“இது எதுக்கு...?”

“அது வந்து ...நீங்க ரூமை மேல இருந்து கீழ மாத்திட்டீங்க....மதுரைல இருந்து வர்றப்பவும் ...கார்ல பின்னால...நாம....நான் வெட்டிங்கப்ப ரொம்ப நின்னுட்டேன்னு தான் ...நான் படுக்கனும்னு நீங்க... அதோட இங்க ஃபக்டரிலயும்....அந்த கம்பி ஏணி மேல நான் ஏற முடியாதுன்னு நீங்க சொன்னீங்க....”

“..............”

“அப்படின்னா உங்களுக்கு..... என் கால்... விஷயம்....என் கால்.....நான் ஹ...ஹஅண்டி கப்ப்டுனு தெரிஞ்சிருக்குது.. அம்மா டெலிவரி அப்ப...முதல் குழந்தை பிறந்ததும் ரொம்ப டயர்டாகி...அதனால நான் பிறக்க ரொம்ப லேட்டாகிட்டாம்...அதுல என் ஒரு கால் அஃபெக்ட் ஆயிட்டு......அதுக்கான ஷூ இல்லாம என்னால ப்ராப்பரா  நிக்கவோ நடக்கவோ முடியாது...என் கால் விஷயம் உங்களுக்கு தெரிஞ்சி இருக்குது...”

“ம்...அப்புறம் வேற என்னலாம் கண்டுபிடிச்சிதாம் எங்க குட்டி பாப்பா...?”

அவள் எதிர்பார்த்த இரக்க தொனி கவினின் குரலில் சுத்தமாக இல்லாது போக அவசரமாக கண் திறந்து பார்த்தாள் அவள்.

“அப்புறம்...?” அவள் கண்களில் தன் பார்வையை கலந்தவன் கேட்க

பார்வை தாழ்த்தியது பெண்மை. காரணம் தொட்டு தாக்கிய  மாலையிட்டவனின் காதல் பார்வை.

சில நொடிகள் மௌனம். அவன் எதுவும் சொல்லவோ செய்யவோ இல்லை எனும்போது அடுத்து என்ன என்பதாய் அவன் முகத்தை பார்த்தாள்.

அவன் புருவம் உயர்த்தி வார்த்தையின்றி கேட்டான் “அப்புறம்...?”

மீண்டும் தாழ்ந்தது அவள் பார்வை.

“அ...அது...வந்து...நீ..நீங்க...ப..பயந்தோ.....கோபத்துலயோ...என்னை கல்யாணம் பண்ணலன்னு புரிஞ்சிது..”

“ம்....தென்..?” அவன் கேட்ட விதத்தின் மென்மை அவன் கேள்வியை விட அதிகமாக அவளை பந்தாடியது நிஜம்.

எதோ பெரிய காரியத்திற்கு ஆயத்தமாவது போல், இப்பொழுது அவள் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.

“எப்படி யோசிச்சு பார்த்தாலும்...எந்த காரணத்துக்காகவோ ...நானும் சம்மதிச்சுதான் கல்யாணம் நடந்திருக்குது....நடந்து முடிஞ்ச திருமணத்தை ஹானர் பண்ணனும்னு தான் யேசப்பா எதிர் பார்ப்பார்....அதனால...” அதற்கு மேல் சொல்ல வந்ததை சொல்ல விடாது தடுத்தன ஏராளமான உணர்ச்சி கலவை.

“அதனால...?” அவன் எடுத்துக் கொடுத்தான்.

இவள் என்ன சொல்ல வருகிறாள் என அவனுக்கு நன்றாக புரிந்திருக்கும். ஆனாலும் விடுகிறானா பார்?

“அதனால....அ..அதனால...ஐ அ..அக்ரி வித் திஸ் மேரஜ்...”

அவனிடமிருந்து எந்த பதிலும் வராது போக, சில நொடிகள் செலவுக்கு பின் சற்று சமனபட்ட இதய துடிப்புடன் அவள் நிமிர்ந்து பார்க்க அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அப்பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை எனினும் அவள் எதிர்பார்த்தது போல் தன் நோக்கம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சி அவன் முகத்தில் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

“கல்யாணத்தை ஏத்துகிற ஓகே...சந்தோஷம்...ஆனால் உன் மனசுல இன்னும் எதோ இருக்குதே..?”

“..............”

 “இவ்ளவு நேரம் மனசுவிட்டு பேசுன மாதிரி அதையும் பேசிடு குல்ஸ்..”

“ அக்கா மாதிரியோ.....உங்கள மாதிரியோ... நான் அழகு கிடையாது...அதோட நீங்க மிர்னாவ கல்யாணம் செய்ய இருந்தவங்க....உணர்ச்சி வேகத்துல என்னை கல்யாணம் செய்துகிட்ட உங்களால, என்கூட எப்படி சந்தோஷமா இருக்க முடியும்னு எனக்கு தெரியலை...அதோட நான் நினச்சத விட நீங்க ரொம்பவும் ஷார்ப்....எனக்கு ரொம்ப இன்செக்யூர்டா இருக்குது....யாராவது ஏமாந்தவங்க கிடச்சாதான் உனக்கு கல்யாணம்னு வீட்ல சொல்லிகிட்டே இருப்பாங்க...உங்கள மாதிரி படு புத்திசாலிக்கு நான் எப்படி சரியா வருவேன்னு தெரியலை... அதோட ஒரு நாள் எ...என்னை எதுக்காகவாவது பிரிஞ்சிட்டீங்கன்னா....எப்படி தாங்கன்னு தெரியலை...“

லூசு அறிவிருக்கா? அப்படில்லாம் ஒன்னும் நடக்காது அப்படி இப்படின்னு அவன் உணர்ச்சி வசப்படவில்லை. மாறாக...

“ம்... ஒரு நாள் என்னை கவனிச்சதுல உன்னால என்னை இவ்ளவு புரிஞ்சிக்க முடியுதுங்கிறப்ப....இன்னும் வர்ற காலம் உன் மனசுல உள்ள எல்லா குழப்பத்துக்கும் தீர்வு கொண்டு வரும்னு நம்புறேன்....எனக்கு ஐ லவ் யூன்னு சொல்லிக்கிறது காதல வெளிப்படுத்துற விதமா படலை....ஆக்க்ஷன் ஸ்பீக்ஸ் லவ்டர் தஅன் வேர்ட்ஸ்... சீக்கிரமா என்னை புரிஞ்சிப்ப....” என்றான். அவனது அந்த பதில் அவளே எதிர்பாராத வகையில் அவளுக்கு ஏதோ ஒருவகையில் திருப்தியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.