(Reading time: 23 - 46 minutes)

ன் ஃப்ரெண்ட் வென்யாவின் கசின் அனுத்திகா வீட்டில் வரும் தகுதிப்போட்டி முடியும் வரை தங்குவதாக திட்டம் மிர்னாவிற்கு.  அங்குதான் தன் பொருள்களை முன்னேற்பாடாக அனுப்பி இருந்தாள்.

அனுத்திகாவின் தாய் ரஞ்சனி ஒரு மருத்துவர். தன்  மகளோடு மருத்துவமனைக்கு அருகிலேயே தங்கி இருந்தார். வென்யாவின் தகப்பனார் தற்சமயம் உயிரோடு இல்லை.  

ரஞ்சனியிடம் பேசி மிர்னா தங்க ஏற்பாடு செய்ததெல்லாம் வென்யாவும் அனுத்திகாவும் தான். இந்த மிர்னா கல்யாண கதை, தப்பித்து வரும் காதை எதுவும் ரஞ்சனிக்கு தெரியாது.  

 போட்டிக்காக தனியாக வருகிறாள். தங்க பாதுகாப்பான இடம் வேண்டும். போட்டி முடிந்ததும்  போய்விடுவாள். இப்படித்தான் மிர்னா பற்றி ரஞ்சனியிடம் சொல்லி இருந்தனர்.

இதற்குள் அனுத்திகா தன் தோழி ரொமோனா மூலமாக ரெமோனாவின் தந்தைக்கு சொந்தமான பள்ளியில் ஆசிரியை பணிக்கு சொல்லி வைத்திருந்தாள்.  

பயிற்சி செய்ய விளையாட்டு திடலோடு ஒரு வேலை. அந்த வேலை கிடைத்தால்  திட்டமெல்லாம் சொதப்பலின்றி செல்லும் என்ற நம்பிக்கை மிர்னாவிற்கு. அந்த வேலை இல்லை எனினும் அதே போல் வேலை தேடிக்கொள்ளலாம் என்ற உறுதியும் அவளிடம் இருந்தது.

வியனிடம் இதை சொன்னபோது அவன் முதல் கட்டத்தையே மறுத்தான். இந்த இரவில் நேரடியாக அறிமுகமில்லாதவர் வீட்டை தேடி கண்டு பிடித்து தட்டவேண்டாம். காலையில் பார்த்துக்கொள்ளலாம், இப்பொழுது அருகிலிருக்கும் ஹோட்டலில் தங்குவோம் என்றான்.  

 அங்கு அடுத்த அடுத்த அறை எடுத்தான். அவள் அறைக்குள் நுழைந்து உள்ளே பூட்டிக்கொள்வதை உறுதி செய்யும் வரை தன் அறை வாசலில் நின்றவன்,  “குட் நைட்”  என்றபடி விடை பெற்றான்.

காலை உணவு இருவரும் இணைந்து உள்ளிருந்த ரெஸ்டரண்டில் சாப்பிட்டனர். அப்பொழுது அவன் தன் திட்டத்தை தெரிவித்தான்.  

தகுதி சுற்று முடியும் வரை தன் நண்பன் ரஜத் வீட்டில் தங்கலாம் என்றான் வியன். அந்த ரஜத் தன் மனைவி குழந்தை தாய் என குடும்பமாக வசிப்பதாக சொல்ல மிர்னாவிற்கும் சம்மதமாக பட்டது.  

காரணம் முழு விஷயமும் தெரிந்தால் ரஞ்சனி மிர்னாவை எப்படி புரிந்து கொள்வார் என தெரியவில்லை. செய்வது தப்பில்லை எனினும் விஷயம் சொல்லாமல் அவர்கள் வீட்டில் தங்குவது அவளுக்கு  மனதிற்கு உறுத்தலாக இருக்கிறது.

ஆனால் இங்கு அந்த ப்ரச்சனை இல்லை. ரஜத்திற்கும் அவன் வீட்டினருக்கும் விஷயம் தெரியும்.

கிளம்பிச்சென்று அனுத்திகா வீட்டிலிருந்து அவளது உடைமைகளை எடுத்துவர வியனுடன் இவள் சென்றாள்.  

தொடர்பு முகவரியாக அனுத்திகாவின் வீட்டு முகவரியே விளையாட்டு போட்டிக்கான அப்ளிகேஷனில் கொடுத்து இருந்ததால்  இந்தியன் ஒலிம்பிக் கமிட்டியிலிருந்து தகுதி போட்டியில் கலந்து கொள்ளும் இவளுக்கான அனுமதி கடிதம் அங்கு தான் வந்திருந்தது.  

ஆனால் சில தினங்கள் முன்பு மற்றொரு கடிதம் ஒலிம்பிக் கமிட்டியிலிருந்து இவளுக்கு வந்திருந்தது. அதை பிரிக்காமல் இவளுக்காக வைத்திருந்தாள் அனுத்திகா.

அதையும் தன் உடைமைகளுடன் பெற்று கொண்டவள் கிளம்ப எத்தனிக்க, “அத முதல்ல பாருங்க மிர்னா” என வியன் சொன்ன காரணத்திற்காக பிரித்துப் பார்த்தாள்.

வியனை இயல்பாக அனுத்திகாவிடமோ அவளது அம்மாவிடமோ அறிமுக படுத்த முடியவில்லை மிர்னாவால். என்னவென்று சொல்வாள்? என்ன நினைப்பார்கள்? அதனால் கிளம்புவதில் குறியாக இருந்தாள் அவள்.

அவன் சொன்னதற்காக பிரித்தால் அது தெரிவித்த தகவலில் அஸ்திவாரம் ஆடியது மிர்னாவிற்கு.....  

ந்த கடிதம் நடக்கவிருக்கும் தகுதிப்போட்டி சில பலகாரணங்களால் முன்பு அறிவித்த  நாளுக்கு முன்னதாகவே நடத்தபட இருப்பதாக அறிவித்தது. அதாவது இன்று.  

அங்கு போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இவள் இங்கு நின்று கொண்டிருக்கிறாள்.

இந்த முறை தவறவிட்டால் இன்னும் 4 வருடம் காத்திருக்க வேண்டும்.

இவள் சூழல் அதற்கு சம்மதிக்காது. எத்தனை முயற்சி, போராட்டம், இழப்பு எல்லாம் சந்தித்து இங்கு வந்தால், இப்படியா..? இதற்காகவா?

எதற்கும் சோர்ந்து போவது மிர்னாவிற்கு பிடிக்காது. ஆனால் இதற்கு எப்படி உணர வேண்டும் என புரியவில்லை.

அவள் முகபாவத்தைப் பார்த்த வியன் அவசரமாக அதை வாங்கிப் பார்த்தான்.

“ஜெனரலா ஒரு ஈவென்ட்க்கு எவ்ளவு நேரம் லேட்டா போக பெர்மிஷன் உண்டு...?”  

அஸ் பெர் த புக் 30மினிட்ஸ் என இவள் கேள்விபட்ட ஞாபகம். அது உறுதியான தகவலா என்று கூட தெரியாது.  

சொன்னாள்.

அதுவும் முக்கால் மணி நேரத்திற்குள் இவர்கள் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் சென்று அங்கு குறிப்பிட்ட அந்த அலுவலகர்களை சந்தித்து......? 

நடைமுறையில் டெல்லி ட்ராஃபிக்கில் சாத்தியமில்லாத ஒன்று. நெவர்.

 “வா மிர்னா..” .இவளை இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தான் வியன். தோளில் மாட்டி இருந்த அவள் பேக்கை விட கனத்தது மனது.

“ஹவ் ஃபெய்த்...ப்ரே....காட் வில் மேக் க வே.....இஃப் திஸ் இஸ் ஹிஸ் வில்...”

 சொல்லிக்கொண்டே அவன் லிஃப்டிற்குள் இவளை இழுக்க..., இழுத்த இழுப்பிற்க்கு உள்ளே வந்தவள் மனம் சமநிலைக்கு வந்தது..

இவள் விளையாடுவது கடவுளுக்கு விருப்பம் எனில் இந்த போட்டியில் கலந்து கொள்ள அவர் எப்படியும் வழி செய்வார். அது அவரால் முடியும். அவருக்கே...இவளுக்காக இறந்த அவருக்கே விருப்பம் இல்லை எனில் இந்த வாய்ப்பு இவளுக்கு கிடைக்காமல் போவதே இவளுக்கு நல்லதாக இருக்கும்.  

அதன்பின் அவள் தவித்து துடிக்கவில்லை.

“யேசப்பா ஐ வில் டிரை மை பெஸ்ட்....உங்க சித்தம்னா வழி தாங்க...” அதோடு முடித்துக் கொண்டாள் தன் ஜெபத்தை.

அந்த அப்பார்ட் மென்டைவிட்டு கேட்டை தாண்டி வெளியே  ஓடி வந்தார்கள்.  

தெருவிற்கு வந்தவர்களை காலியாக மெல்ல கடந்தது அந்த பெரிய ஆம்புலன்ஸ்.   

அவ்வளவுதான் அதை நிறுத்திய வியன் டிரைவரிடம் ஏதோ பேசிவிட்டு இவளை பின்னால் ஏறச்சொன்னான்.  

“வியர் யுவர் ஸ்போர்ட்ஸ் வேர்...” அவ்வளவுதான் அவன் பேசினான். டிரைவரை விலகி அமரச் சொல்லிவிட்டு டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான் வியன்..  

சைரன் அலறியது.

பறந்தது அந்த ஸ்வராஜ் மஸ்டா.  

இருந்தாலும்......இது போதாதே!!!

ஐந்து நிமிடம் சென்றிருக்கும் இவர்கள் நுழைய வேண்டிய சாலையை போலிஸ் பேரிகேட் வைத்து மறிக்க, அத்தனை வாகனங்களும் தேக்கம். திரும்பி வேறு சாலையில் செல்ல கூட வழி இல்லை.

லெட் த வில் ஆஃப் த லாட் பீ டன். வண்டி நின்றிருப்பது புரிய மிர்னா இப்படி நினைத்துக் கொண்டே வேகமாக உடை மாற்றினாள்.

இதற்குள் ஒரு போலீஸ் இவர்களது வாகனத்தை நோக்கி ஓடி வந்தார். நோயாளி அவசர சிகிச்சைக்கு செல்கிறார் என நினைத்திருப்பார் போலும்....

அப்படி இல்லை என் தெரிந்ததும் சைரன் ஆன் செய்து வந்ததற்காக குரல் உயர்த்தினார்.

ஆனால் வியன் விஷயத்தை சொல்லி இவளது நேஷனல்  ரிக்கார்டிற்கான சர்டிஃபிகேட்டை காண்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.