(Reading time: 23 - 46 minutes)

னா இந்த அழகு விஷயம்.....” என்றபடி பார்வையை அவள் முகத்தில் நிறுத்தியவனின் பார்வை வேறுபாடு வேரிக்கு புரியாமல் இல்லை.

எதற்கும் தயார்...இதற்கும் தான் என்றபடி இருதயத்தை தேற்றிக் கொண்டு வந்தவள்தான்.. ஆனால் இப்பொழுது...மனம் பந்தய குதிரையை விஞ்சியது.

அவன் தான் கணவன் என்று மனம் ஏற்றுவிட்டதால் நிச்சயமாக வெறுப்பு  இல்லை. உணர்ந்த அவன் மென் அன்பும், அதோடு சார்ந்த உரிமையான அவன் கோபங்களும் மனதில் மல்லிகை வாசம், மங்கல மத்தளம் செய்கின்றனதான். ஆனால் அந்த விஷயம்....???? அது தெரிய வரும்போது....???? அதோடு பெண்மைக்கே உரிய பயம். அதகளம்.

தன் வலக்கை ஆட்காட்டி விரலால் அவள் புருவங்கள் மீது பயணித்தான். “ரெண்டு அழகான புருவம்...அதுக்குமேல ரோஜா மொட்டு மாதிரி ஒரு நெத்தி...”இப்பொழுது அவன் விரல் அவள் நெத்தியை இட வலமாக அளந்தது. “செய்து வச்ச மாதிரி இந்த சின்ன மூக்கு, அதுக்கு கீழ இருக்கிற இந்த ஆரஞ்....” சொல்லியவனின் விரல் வாத்தைகளை பின்பற்றி பயணிக்க....கண்களை மூடிக் கொண்டாள் பெண்.

இதெல்லாம் தினம் கண்ணாடில பார்த்துக்கிட்டுதான இருக்க....அப்புறம் அழகில்லன்னு உன்னால எப்படி நம்ப முடியுது...?”

“அது...வந்து ...என் கால்......” அவள் பார்வை இயல்பாய் குனிந்து கொண்டன காலை நோக்கி. கண்களில் நீரேற்றம்.

“உன் கால் அழகாதான் இருக்குது...அதை நீ பார்க்கிற விதம்தான் ரொம்ப அசிங்கமா இருக்குது...” குறை சொல்லும் குத்தல் தொனி இல்லாமல் வெகு இயல்பாய் அவன் சொல்ல திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“நூறு வருஷம் முன்னால, அயர்லாந்துல இருந்து கடவுள் நம்பிக்கையை மட்டும் கைல வச்சுகிட்டு இங்க.....இதே திருநெல்வேலிக்கு வந்த ஆமி கார்மைக்கேல் அம்மா, தேவதாசியா நேர்ந்துவிடபட்ட எத்தனை பெண்குழந்தைகள காப்பாத்தி இருக்காங்க தெரியுமா...? அந்த முறையை தடுக்க எத்தனை செய்து இருக்காங்க தெரியுமா...? இத்தனைக்கும் அவங்களோட கடைசி இருபது வருஷம் அவங்களுக்கு இரண்டு காலும் வேலை செய்யாது... அவங்க ஆரம்பிச்ச ஹாஸ்பிட்டல்...கேர்ள்ஸ் ஸ்கூல்...ஹோம்...இப்படி எத்தனையோ? அதெல்லாம்  எத்தனை தலை முறைக்கு ப்ரயோஜனமா இருக்குது...இத்தனைக்கும் அந்த காலத்தைவிட  இப்போ எத்தனை வசதி...வாய்ப்பு...?”

சரி அதவிடு...நீ அவ்ளவு பெருசால்லாம் எதையும் யோசிக்க வேண்டாம்...உன் அளவில திருப்தியா இருக்கலாமே....

காற்றை கவனிக்கிறவன் விதைக்க மாட்டானாம்... மேகங்களை நோக்குகிறவன் அறுக்க மாட்டானாம்...... நாம எதை மனசால பார்கிறோமோ அதுதான் நமக்கு  பெருசா தெரியும்...” அவன் நிதானமாய் பேசினாலும் வார்த்தையில் இருந்த ஒரு அழுத்தம் அவன் முகத்திலும் சற்றே படர்ந்திருந்தது.

ஆனால் இப்பொழுது அவன் பார்வை மாறியது. முகமும் அதன் உணர்வும்!!!

“எனிவே நான் உன் காலை மட்டுமாக பார்க்கலை மொத்த குல்ஸையும்...” என்றவன் குரல் அவள் உணர்வை கிளறியது என்றால் மேலிருந்து கீழாக அவளை வருடிய அவன் பார்வை பெண்மைக்குள் ப்ரளயம் செய்தது.

அவன் பார்வை தாளாமல் அவள் கண்கள் மூட, அவன் இன்னுமாய் நெருங்கி வருவதை உணர்ந்த இதயம் தாம் தூம்.

 “ஒன்னும் செய்ய மாட்டேன்னு சொன்னதை நம்பி முதல் தடவையா பக்கத்துல வந்திருக்க...அந்த நம்பிக்கையை காப்பாதிக்கனும்...”

“அப்படில்லாம் இல்ல...” என்று மறுக்க நினைத்தவளுக்கு அதன் முழு பொருள் உறைக்க மௌனமானாள்.

இவளே ஏற்று வரும் போது இவன் ஏன் விலக்கி நிறுத்துகிறான்..?

“ஆனால் அதுக்காக குல்ஸுக்கு ஒன்னும் தராமலும் அனுப்ப முடியாது..” .என்றவன் குனிந்து அவள் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான். அவ்விடம் தொடங்கி உடலெங்கும்  சிலிர் வளையங்கள் சலனம் செய்தன பெண்ணுள்.

“நான் இன்னும் கொஞ்சம் தூங்கனும்....நீயும் ரெஸ்ட் எடுக்கனும்னா எடுத்துக்கோ” என்றுவிட்டு எதிர் திசையில் திரும்பி படுத்தான் அவன்.

இரவெல்லாம் தூங்காதவனுக்கு தூக்கம் வந்தது. அருகில் இருந்த அவளுக்குள் பல கேள்விகள் அலை செய்தது.  

வியனை திரும்பிப் பார்த்தாள் மிர்னா. அவன் முகத்தில் வேதனையின் சுவடு கூட எதுவும் இல்லை.

“டாக்ஸி டிரைவர் பயந்துபோய் கிளம்பிட்டார் போல.... இப்ப வேற டாக்ஸி புக் பண்ணாலும் இங்க வர யோசிப்பாங்க....கொஞ்ச தூரம் நடந்தோம்னா மெயின் ரோடு போய்டலாம்...அங்க டாக்ஸி வர சொல்லலாம்....”

அவன் சொல்ல.....”சாரி...என்னால...உங்களுக்கு.....” அவள் ஆரம்பிக்கவும் மறுத்தான். “இப்படி சாரி சொல்லனும்னா...நானும் சொல்லலாம்... நான் தான இங்க கூட்டிட்டு வந்தேன்....”

மென் வெயிலில் இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

என்ன எம்.எம்.எடுத்த உடனே டங்கு டிங்காம்..... உள்ளதெல்லாம் போங்காம்னு ஒரே போங்காட்டமா போய்ட்டு... நாம ஃபைவ் இயர் ப்ளான்லாம் பக்காவ  போட்டு அட்டாக் செய்யலாம்னு பார்த்தா இந்த அட்டாக் பாண்டீஸ்லாம் ஆப்ப்பு ...இல்ல ஆல்ப்ஸ்ஸு மலையவே எடுத்து அடிச்சு.... இருந்த கொஞ்ச நஞ்ச இமேஜையும் டேமேஜ் செய்துட்டாங்களே....சும்மாவே மாமியார்ஃஸ்லாம் மருமகள்ஃஸ்ட்ட கடுப்ஃஸ் கல்பனாவாத்தான் இருப்பாங்க...உன் வகையில ஒன்னுக்கு இரண்டு மகன்ஃஸ் மானத்தை ஷிப்...இல்ல.....இல்ல ...சேட்டிலைட்டே ஏத்தியாச்சு...இதுல எந்த சாங்க் சிங்க் பண்ணா  இந்த கவ் கவுரும்...? இல்லனா டான்ஸ் ஆடி கவர் பண்ணனுமோ...?

மைன்ட் வாய்ஸ் மைக் பிடிக்க...

சொந்த ஊர்ல சோப்பு போட முடியாத சொக்கி... எதிரி ஊர்ல எட்டு கட்டு துணி வெளுப்பேன்னாளாம் எக்கி... சொந்த அம்மாவுக்கே சொக்கு பொடி போட முடியலையாம்....சொல்லாம கொள்ளாம ஓடி வராளாம்...இவதான் போய் இவன் அம்மாவை கவர் பண்ண போறாளாம்...

அடுத்த வாய்ஸ் அறிவுறித்தியது உள்ள நிலையை.

மனதிற்குள் அழுத்தம்.

மிக எதிரான நினைவுகளை அவள் வழக்கமாக சமாளிக்கும் விதம்....

நான் ஆணையிட்டால் டடடட்டடண்டடன்டடன் ஞாபகம் வர அதோடு சேர்ந்து, வியன் காது வலிக்குதுங்க என்று சொன்னதும் மனகண்ணில் தெரிய, இப்ப பாடுனா பயபுள்ள தாங்குவானான்னு திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.

“என்னாச்சு மிர்னா...? எதாவது வேணுமா...?” அவள் பார்வை உணர்ந்து அவன் கேட்டான்.

“கடலோட இரச்சல் எரிச்சலாத்தான் இருக்கும்....ஆனா அதால சத்தமில்லாம அலையாட முடியாது...ஆங்....ட்ரைன், பஸ் ஏன் ஏர்க்ராஃப்ட் இப்டி எல்லாமே..சவுண்ட் ஃபர்ஸ்ட் ஒர்க் நெக்ஸ்ட் கேட்டகிரிதான்...” அவள் சொல்லிக்கொண்டு போக

“பாடனும்னா பாடிக்கோங்க...” என்றான் வியன் அவள் சொல்ல வருவதை புரிந்து.

பாடி கொல்றதுக்கு முன்னாடி இப்டி பேசி அறுக்க வேற செய்யனுமா அப்படின்னு சொல்லுதோ அவன் முழி...பார்த்துவிட்டு பாட தொடங்கினாள் மிர்னா.

தர்மம் உலகிலே டன் டன் டன் டன் டன்

இருக்கும் வரையிலே டன் டன் ....க்ர்க்..க்ர்ர்ர்க்...நட்....டம்ம்ம்ம்ம்ம்ம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.