(Reading time: 23 - 46 minutes)

டபுறம் உயர்ந்திருந்த மலை பகுதியிலிருந்து உருண்டு வந்து இவர்களுக்கு சற்று முன்னால் சாலையில் படு சத்தத்துடன் விழுந்து வலபுறமிருந்த மலை சரிவை நோக்கி ஓடியது ஒரு பெரும் பாறை.

ஒரு நொடி நடப்பது புரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்ற மிர்னாவுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. பாட்டை கேட்டு...மலையே மிரண்டுட்டே....

மெல்ல அவனை திரும்பிப் பார்த்தாள். கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தான் அவன்.

“என் பாட்டு ரொம்பவும் சுமார் தான்னு எனக்கும் தெரியும்...சிரிச்சுகோங்க...தப்பா நினைக்க மாட்டேன்...”

சிரித்தான் வியன்.

“ஆன்...சிரிச்சு முடிச்சுட்டீங்களா....இப்போ நீங்க பாடனும்....”

“இந்த டெர்ம்ஸை நீங்க முன்னமே சொல்லலியே....”

“அதெல்லாம் அப்படித்தான்....நான் பாடுனா மலையே நடுங்குது...இப்போ நீங்க பாடுனா என்ன நடக்குன்னு பார்க்கனும்...”

“அது...” அவன் மறுப்பாக எதோ தொடங்க

“ப்ளீஸ் வியன்..”

“எனக்கு மூவி சாங்ஸ் எதுவும் தெரியாது பிரவாயில்லையா......?.”

“எனக்கும் தான் தெரியாது....முதல் ரெண்டு வரிக்கு அப்புறம் நாங்களே சொந்தமா பாடிக்கிறதுதான்....”

சிரித்தபடியே கேட்டான் “ஏன் மிர்னா உங்களுக்கு மியூசிக் மேல இப்படி ஒரு இன்ட்ரெஸ்ட்...?”

அவளுக்குமே சிரிப்பை அடக்குவது கஷ்டமாகத்தான் இருந்தது. “அது...ரொம்ப ப்ரஷரா ஃபீல் பண்ணேண்ணா இப்படி பாடிப்பேன்.... ச்சும்மா...சின்ன வயசில நிறைய நேரம் வீட்ல பேச கூட யாரும் இல்லாம ரொம்ப அமைதியா இருக்கிற மாதிரி இருக்கும்......அப்ப வந்த பழக்கம்..ஒரு டைவர்ஷனுக்காக.....”

அவன் பாட தொடங்கினான்.

You are my Strength when I am weak,

 You are the Treasure that I seek;

 You are my All in All;.....................  

அவன் பாடி முடிக்கும்போது பெண் மனதில் அமைதியின் பொன்நதி. அவன் குரலில் கரைந்திருந்தாள் பெண்.

“வாவ்...வாவ்....வாவ்...உங்களுக்கு ஏன் காது வலிச்சுதுன்னு இப்போ புரியுது...பைதிவே...இனி எனக்கு ப்ரஷரானா உங்களையே பாட சொல்லிடுறேன்...”

“ஏங்க உங்க ஃபஅன்ஸெல்லாம் இத்தனைக்கும் காரணம் இவந்தான்னு என்ன அடிக்கவா..?”

உங்க சமூக சேவையை நீங்க தொடருங்கங்க...”

பேசியபடியே மெயின் ரோட்டை அடைந்திருந்தனர் இருவரும். அங்கு நின்றிருந்தார் அவர்கள் வந்த டாக்ஸி டிரைவர் தன் டாக்ஸியோடு.

“அடிச்சு நொருக்கிருவாங்களோன்னு பயமா இருந்துது சார் அதான் இங்க வந்தேன்...சவாரி எதாவது கிடைக்குமான்னு காத்துகிட்டு இருந்தேன்...நீங்களே வந்துட்டீங்க..” என்று வரவேற்ற டாக்ஸி டிரைவரிடம்

 “மதுரை ஏர்போர்ட் போகனும் என்றான் வியன்.”

ஃப்ளைட் டிக்கெட் செலவு அதிகமாகுமே என எண்ணியது மிர்னாவின் மனம். முடிஞ்சவரை செலவை குறைக்கனும்.....இப்ப இருக்கிற பணத்தை வைத்து சமாளிக்கனுமே....  ஆனால் இப்ப ஃப்ளைட் வேண்டாம்னு வியன்ட்ட சொல்ல முடியாதே...

இவள் யோசனை இப்படியாய் இருக்க.. அடுத்த நிமிடம் என்ன என்ற தவிப்பில் பிரிவு வலிகூட பின் சீட்டிற்கு போக...

வியன் தனக்காக வாங்கி இருந்த புது மொபைலில் யாரிடமோ காதை கொடுத்திருந்தான்.

 இடையிடையே அவன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக்கொண்டாலும் எதுவும் இவள் காதில் விழவில்லை.

வழியில் உணவு, மதுரையில் உடனடி தேவைக்கு என ஒரு குட்டி ஷாப்பிங் எல்லாம் முடித்து விமானநிலையம் அடைய மதியமாகிற்று.

 “3.15க்கு ஃப்ளைட்” என்றவன், டாக்ஸியை செட்டில் செய்து அனுப்பியது கூட அவளுக்கு உறுத்தவில்லை. திரும்பும் போது வேறு கார் எடுத்துக்கொள்வானாக இருக்கும் என எண்ணிக் கொண்டாள்.

ஆனால் ஏர்போர்ட்டில் அவளோடு சேர்ந்து வியனும் செக்கின் செய்தபோது மிரண்டு போனாள். தன் மொபைலிலிருந்த டிக்கெட்டின் மெயில் காபியை காண்பித்து அவன் இருவருக்குமாக போர்டிங்க் பாஸ் வாங்க இவள் பதறினாள்.

“என்ன ஆச்சு வியன்...? நீங்க ஏன் டெல்லிக்கு வாறீங்க...? எனக்காகவா? உங்களுக்குன்னு அங்க எதாவது வேலை இருந்தா வாங்க...இல்லனா எனக்காகன்னா தேவை இல்லாம இதுக்குன்னு அலையாதீங்க...”

“ஏன் உனக்கும் நான் வேண்டாமோ....?” அவனது அந்த ஒரு கேள்வியில் மிர்னா அந்த பேச்சை முழுதாக நிறுத்திவிட்டாள்.

இவன் திட்டம் என்ன?

அவன் வர வேண்டாம் என அறிவு ஆர்பாட்டம் செய்தாலும் மனம் அவன் வருகையால் மேக கூட்டத்திற்கு மேலாக மிதந்தது.

மதுரையில் காத்திருந்த நேரத்திலும் மற்றும் சென்னை விமான நிலையத்தில்  காத்திருந்த நேரத்திலும் ஏன் உணவு உண்ட நேரத்திலும் பலருடனும் அலைபேசியில் பேசுவதிலேயே அவன் நேரம் செல்ல,  அவன் பேசிய பாஷை அரை குறையாய் புரிய, ஃஸ்பானிஷ் போன்ற அந்த மொழி என்னது என புரியவில்லை எனினும் அவன் பேசும் விஷயங்கள் அவன் பிஸினஸை ஹாண்ட் ஓவர் செய்வதை பற்றியோ என புரிந்து மனதை கலக்கியது.  

நடந்த விஷயங்களில் அவன் பெற்றோருக்கு மகன் மீது நம்பிக்கை என்பது இவளுக்கு தெளிவாக புரிந்தது. அப்படி இருக்க ஊர்காரர்களுக்காக கொடுத்த வாக்குறுதியை இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாக பின்பற்றுவார்களா??

இவனுக்கு அவன் பெற்றோர் கொடுத்த எல்லாத்தையும் திருப்பி கொடுக்கவேண்டுமா? அப்படியானால் இனி இவன் நிலை???

ஆனால் அவனிடமிருந்த அமைதி அவனுக்குள் இதைப் பற்றி ஏதோ திட்டமிருக்கும் என்று ஒரு அரை ஆறுதலை தர இதுவரை வந்த தெய்வம் இனியும் வரும் என்ற நினைவு முழு சமாதானம் செய்வித்தது.  

விமானத்தில் இவளுக்கு ஜன்னலோரம். அடுத்து அவன்.

அமர்ந்ததும் தூங்கிப்போனான் அவன். முந்திய இரவு தூங்காதது காரணம் என அவளுக்கு புரிந்தது. ஆனாலும்  உறக்கத்திற்குள் செல்ல இவள் மனம் இவளை அனுமதிக்கவே இல்லை.

மேகத்தை பார்க்காமல் இவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.

இவன் மனதில் என்ன? இவள் மீது இவன் அக்கறை காட்டுவது எதனால்....? காதலா? இல்லை இவை எல்லாம் இவன் குடும்பத்தால் இவளுக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட செய்யும் செயல்களா?

அவர்கள் ஒன்றும் பெரும் பாவம் செய்து இவள் வாழ்வை சீரழிக்கவில்லையே.. அனைத்து தவறுக்கும் காரணம் இவள் பெற்றோர் மட்டுமே அல்லவா? .பின் இவன் ஏன் சிலுவை சுமக்கிறான்??   

டெல்லி ஏர்போர்ட்டிலிருந்து அவர்கள் வெளியே வந்த நேரம் இரவு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.