(Reading time: 40 - 80 minutes)

13. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety

ப்பொழுதெல்லாம் ஒஃபிலியாவிற்கும் மிர்னாவிற்க்கும் இடையில் ஒரு அழகிய மெல்லிய நட்பு உண்டாகி இருந்தது. அது ஒத்த ரசனைகளால் எழுந்த நட்பு என்று சொல்வதற்கில்லை. ஆனால் உடன் இருப்பவர் மனம் நோக கூடாது, மனதிற்குள் கூட உதவி செய்பவரை காய கூடாது என்ற நல்லெண்ணங்களின் அடிப்படையில் பிறந்த  ஒத்திசைவு என்ற விதையிலிருந்து உண்டாகிய நட்பு செடி.

மிர்னாவிற்கு பனானா ஃப்ளேவர்ட் யோகர்ட் பிடிக்கிறது என கவனித்து அதை வாங்கி வைக்க தொடங்கினாள் ஒஃபிலியா. அதுவரைக்கும் வீட்டில் சாக்லேட் ஃப்ளவர்ட் யோகர்ட் தானிருக்கும். மேலும் மிர்னா விரும்பும் வகையான புத்தகங்கள், கார்டூன் சிடிகள் ஒஃபிலியாவின் ஷாப்பிங்க் பேக்கில் அவ்வப்பொழுது இடம் பிடித்தன.

அதைப்போல் மிர்னாவும் இரவு உணவில் ஒஃபிலியாவிற்கு பிடித்த சால்டட் காட் , கால்டோ வெர்டே சூப் இவைகளை செய்து வைக்க தொடங்கினாள். இத்தனைக்கும் இவைகள் அவள் சாப்பிடுவது இல்லை என்றாலும்.

Ennai thanthen veroduஇவைகளை உனக்காகத்தான் செய்கிறேன் என்று இருவரும் வார்த்தையால் வெளிப்படுத்திக் கொள்ளாவிடாலும் மனதிற்குள் புரிதல். அது அன்பு விதையில் நீர் வார்க்க, நட்பு, நம்பிக்கை என்ற வித கிளைகளுடன் வளர தொடங்கியது அவ் உறவு விருட்சம்.

சில நேரம் இருவரும் சேர்ந்து ஜிக் ஸா பசில் சால்வ் செய்தார்கள். இருவருக்கும் பிடித்த விஷயம் என்று அவர்கள் கண்டு பிடித்த காரியம் அது.

அப்படி ஒரு நேரத்தில் ஒஃபிலியா மிர்னாவிடம் சொன்னாள் “ மிர்...கம்மிங் ஏப்ரல் 29த்  வியனோட பெர்த் டே ...தெரியுமா...?”

மும்முரமாய் பசிலை ஆராய்ந்து கொண்டிருந்த மிர்னாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஃஸ் பல்ப் “இஸிட்.....சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்...ஃபில்”

ஒரு கணம் இவள் முகத்தைப் ஆழ பார்த்தாள் ஒஃபிலியா. “ சின்ன வயசில இருந்து நானும் வியனும் ஃப்ரெண்ட்ஸ்...சைல் கூட் டேஸ்ல குழ்ந்தைங்க எப்டி இருப்பாங்களோ அப்டிதான் நாங்களும் இருந்தோம்...சண்டை போடுறது.... சேர்ந்துக்கிறது...எல்லாம்...ஆனா எப்பவும் வியன்ட்ட ஒரு கேரிங் அப்ரோச் இருக்கும்....இப்ப வரைக்குமே அது அப்படியே தான்....எல்லா விஷயத்தையும் நாங்க டிஸ்கஸ் செய்துப்போம்....ட்ரீம்ஸ், ப்ளான்ஸ், ப்ராப்ளம்ஸ் இப்டி எல்லாத்தையும்...ஆனா அதில் எந்த விஷயத்தோடும் தன் எமோஷனை கலந்து பேசமாட்டான் அவன்... நான் சில நேரம் அழுதுறுப்பேன்...இல்ல பயங்கரமா சந்தோஷத்துல ஆடி இருப்பேன்...ஆனா அவன் எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பான்.... உன்னை பத்தி பேசுறப்பவும் என்ட்ட அவன் வெளிப்படையா எந்த எமோஷனையும் காமிச்சுகிட்டது கிடையாது.....ஆனா நீ ஓபனா உன் மனசை அவன்ட்ட பேசுனா கண்டிப்பா அதை அவன் அப்போஸ் பண்ண மாட்டான்நு மட்டும் எனக்கு புரியுது.....உன்னை ஹர்ட் பண்ண அவனால முடியாது...”

மிர்னா ஒஃபிலியாவை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ இது உங்க ரெண்டுபேர்க்கும் மட்டுமே சொந்தமான விஷயம்....நான் உள்ள வரகூடாதுன்னு தான் நினைப்பேன்...இருந்தாலும் ஏனோ இப்ப சொல்லனும்னு தோணிச்சு....எவ்ளவு நாள் தான் இதை இப்படியே....அவன் பெர்த் டே அப்ப நீயாவது பேசலாமில்லையா...?”

சின்னதாய் சிரித்துக் கொண்டாள் மிர்னா.

“ப்ரபோஃஸ் செய்றதுன்னா அவரே செய்துப்பாரே...அவர் ஏன் இப்டி செய்றார்ன்னு எனக்கு முழுசா புரிஞ்சுக்க முடியுதுன்னு சொல்லமாட்டேன்....ஆனால் அவர் செய்றதுக்கு காரணம் இருக்கும்னு மட்டும் தோணுது...அப்டியே பெருசா காரணம் இல்லாம இருந்தா கூட...அவர் இப்போதைக்கு வேணாம்னு நினைக்கிற ஒன்னை நான் செய்து அவர் ஆசைய ஏன் கெடுக்கனும்....எனக்கு தேவையா இருந்தது ஒரு கன்ஃபர்மேஷன்...அது ரொம்ப ஃஸ்ட்ராங்கா கிடைச்சுட்டு...அது போதும் இப்போதைக்கு...

அசந்துபோய் மிர்னாவை பார்த்தாள் ஒஃபிலியா.

 “அன்னைக்கு பார்ட்டிலாம் வச்சு....நீ பேசுனதை பார்த்துட்டுதான் நீ அவன்ட்ட இத பத்தி வெளிப்படையா பேச நினைக்கிறீயோன்னு நினச்சேன்...”

“அது அவர்ட்ட கொஞ்சம் விளையாடிப் பார்க்கிறதுக்காக செய்தது....அதோட நான் குக்கிங்க் க்ளாஸ் போக ஆரம்பிச்சது அவருக்கு கொஞ்சம் நெருடல்னு எனக்கு பட்டுது....அவரை அவாய்ட் பண்றேன்னு நினைச்சிரகூடாதுன்னுதான் பார்டிக்கு அவரை வர வச்சது...இல்லனா அன்னைக்கு கெஸ்ட் நீ மட்டும் தான்....பார்டியோட மெயின் ஃபோகஸ் நீ தான்... மனசுகுள்ள உறுத்தலும் வெளிய சிரிப்புமா இருக்க எனக்கு முடியலை....அதோட அப்படி பட்டவங்கள ப்ரச்சனை துரத்துமாம்....பைபிள்ள இருக்குது...என்னை சும்மாவே ஒரு ஜீவன் துரத்தோ துரத்தோன்னு எதென்ஸ்ல இருந்து துரத்திகிட்டு வருது.....இதுல இது வேறயா...?”

பாராட்டும் ப்ரமிப்புமாக ஒஃபிலியாவின் பார்வை மிர்னாவின் மீதே இன்னுமாய்....

“உன்னை ஒரு குழந்தைன்னு நினச்சேன் மிர்....ஆனா கண்டிப்பா நான் நினச்ச மாதிரி நீ இல்ல....வெரி டிஃப்ரெண்ட்...”

“ஹா...ஹா....நான்...டூ இன் ஒன்...குழந்தை அண்ட் கிழவி...” கண்சிமிட்டினாள்.

“ஆக மொத்தம் கல்யாண ஃஸ்டேஜ்ல இல்லைங்கிற...”

“கரெக்ட்...அது அதுக்குன்னு ஒரு நேரம் இருக்குதுல்ல...அது வர்றப்ப வயசும் மனசும் சரியா இருக்கும்..”

அடுத்தநாள் ஒஃபிலியா வியனை சந்திக்கும்போது, மிர்னா சொன்ன அனைத்தையும் வார்த்தை மாறாமல் ஒப்பித்தாள்.

“இன்னொரு தடவை அவ என்ன சொன்னானு என்ட்டயும் நான் என்ன சொல்றேன்னு அவட்டயும் போய் பேசிகிட்டு இருந்தன்னா, உன் வீட்டை தன் அவ காலி செய்ய வேண்டி இருக்கும்...” என்றான் அவன்.

“எங்களுக்கு நேருக்கு நேர பேசிக்கிட தெரியாமலா...? அவ இப்போதைக்கு அவளா இருக்கட்டும்...அவ மனசுக்குள்ள எந்த சலனமும் வேண்டாம்.. அதோட இதெல்லாம் நேர்ல ஒருத்தர்ட்ட ஒருத்தர் பேசி தெரிஞ்சிக்கிற சந்தோஷத்தை எங்களுக்கு விட்டுவையேன்....இல்லனா நான் இனிமே உன்னை சின்ன வெங்காயம்னு தான் கூப்பிட வேண்டி இருக்கும்.....” முடித்துவிட்டான்.

ங்கு வேரியை கைனகாலஜிஸ்டிடம் அழைத்து  வந்திருந்தான் கவின். என்ன தான் அப்பாய்ன்மென்ட் வாங்கி சென்றாலும் இப்படி மணி கணக்காய் காத்திருக்க நேரும் என்பதெல்லாம் அவனும் வேரியும் அறியாத விஷயம்.

“எங்களுக்கு அப்பாய்ண்மென்ட் 7.30. நாங்க சரியான டைம்க்கு தான வந்திருக்கிறோம்...ஸ்டில் 14த் விசிடரா தான் நாங்க  டாக்டரை பார்க்கலாம்னு சொல்றீங்க...” கவின் விசாரித்தான்.

அப்டிதான் சார் அப்பாய்ண்ட்மென்ட் கொடுப்போம்...பட் உங்களுக்கு முன்னால வந்து காத்திருக்கவங்கள விட்டுட்டு உங்களை எப்டி அனுப்ப முடியும்...? டாக்டர் வர்ற டைம் முன்னபின்ன ஆகிடுதில்லையா...? அதனால அட்ஜஸ்ட் செய்துகோங்க என்றது அந்த ரிஷப்ஷனிலிருந்த சிறு உருவ பெண் அட்டெண்டர்.

திரும்பிப் பார்த்தால் காத்திருக்கும் அனைவரும் கர்பிணிகள். அவர்களுக்கும் வேரியின் நிலைதானே? அதுவும் பெரும்பாலோர் மேடிட்ட வயிறுடன், உட்கார கஷ்டபட்டு உட்கார்ந்திருப்பதும், அவ்வப்போது அலுத்துக்கொள்வதும் அவர்களது உடல் மன நிலையை காண்பிக்கிறதே...

ஹாஸ்பிட்டல் சீஃப் இவனது நண்பன் மற்றும் உறவினன். ஒரு மொபைல் அழைப்பில் அத்தனை பேரையும் காக்கவைத்துவிட்டு இவர்கள் இப்பொழுதே உள்ளே சென்றுவிடலாம்தான். ஆனால் அது கவின் மனதிற்கு ஒப்பவில்லை....

வந்த உடன் உள்ளே செல்லும் இவர்களை பார்த்து முன்பே காத்திருப்பவகள் மனதிற்குள் நோகமாட்டார்களா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.