(Reading time: 40 - 80 minutes)

றங்கி நின்றவள் முகம் பார்த்தவனுக்கு புரிந்து போயிற்று...

“பசிக்குதுதான குல்ஸ்....என்ன சாப்டுற...?”

“ப்ரெக்னென்டா இருக்கிறவங்க அஜினமோட்டால்லாம் சாப்பிட கூடாதாம்...ஹோட்டல் ஃபூட்ல அஜினமோட்டா இருக்கும்...அதோட இந்த டைம்ல மொத்ததுக்கு வெளி சாப்பாடே சாப்டாம இருக்கிறது தான் சரி...”

“அது சரிதான்....முடிஞ்சவரை அவாய்ட் செய்வோம்....பட் இப்ப பசிக்குதே உனக்கு...”

“வா” என்று அருகிலிருந்த பழக்கடைக்கு நடத்திக் கொண்டு சென்றவன் “ஆப்பிள் வாங்கி கழுவி நீட்டினான். அப்டியே சாப்டு...இப்போதைக்கு பசி தாங்கும்.”

ஒரு கையால் அவனது ஒரு கையை பற்றியபடி, மறுகையால் பழத்தை சாப்பிட்டபடி அவள் மருத்துவமனை வந்து சேர்ந்த போது சொன்னாள். “நாம ரெண்டு பேரும் மட்டுமா எங்கயாவது ட்ரிப் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும்தானே...உங்க கூட இப்டி வெளிய வரது ரொம்ப நல்லா இருக்குது...”

“எனக்கும் ரொம்பவே ஆசை குல்ஸ்.....இப்ப நம்ம ஃபாக்டரி இஷ்யூல எதுக்கும் டைம் எடுக்கவே முடியலை...அது இன்னும் கொஞ்ச நாள்ல எப்டியும் சால்வ் ஆகிடும்...தென் நாம ஒரு சூப்பர் ஹனிமூன் போய்ட்டு வரனும்னு ப்ளான் போட்டுருந்தேன்...”

“கண்டிப்பா போவோம்பா....” ஆர்வமாக துள்ளல் பார்வையுடன் அவன் முகம் பார்த்தாள்.

“இப்ப எப்டி குல்ஸ்...இந்த ஸ்டேஜ்ல ட்ராவல் செய்ய கூடாது.... அதோட இன்னும் கொஞ்சம் ரெஸ்ட்ரிக்க்ஷன்லாம் இருக்கும்... ஜென்ரலா இந்த டைம்ல வாமிட்டிங் இருக்கும்னு சொல்வாங்கல்ல...எனக்கு தெரிஞ்சு...இனி நம்ம ஜூனியர் வந்த பின்ன தான் இதெல்லாம் யோசிக்க முடியும்னு நினைக்கிறேன்...அதுக்கு பிறகும் பேபி ரொம்ப குட்டியா இருக்கிறப்ப  வெளிய ட்ரிப் கொண்டு போறது சரியா வராதே...”

ஆக கவின் ஆசைப்பட்ட ஒரு ஹனிமூனை இல்லை என்று ஆக்கி கொண்டு இந்த குழந்தை வருகிறதோ..? வேரி நினைக்க தொடங்க.... அவர்களை தேடி அந்த நர்ஸ் இவர்கள் கார் நின்றிருந்த இடம்  வந்தாள்.

“நெக்ஸ்ட் உங்க டர்ன்...வாங்க” என்றபடி.

டாக்டரைப் பார்த்து அவருக்கு கைனகாலஜி மறந்து போகும் அளவு வேரி வெவ்வேறு வித கேள்விகள் கேட்டு மீண்டும் இவர்கள் அறையைவிட்டு வெளியே வந்தபோது கவின் சொன்னான்

“குல்ஸ் பேபி பிறந்ததும் நீ கைனகாலஜி படிக்ற ஸ்டூடண்ட்ஸுக்கு டெக்ஸ்ட் புக் ஒன்னு எழுதிரலாம்....உன் நாலெட்ஜ் எல்லோருக்கும் யூஸ் ஆகும் பாரு....ஆனா இப்ப என் டவ்ட் என்னன்னா...”

“சீக்கிரம் உள்ள போவோம்...அடுத்தவங்க உள்ள போய்ட்டா இன்னும் நாம டாக்டரைப் பார்க்க எவ்ளவு நேரம் வெயிட் பண்ண வேண்டி இருக்குமோ...?” அவனை மீண்டுமாக மருத்துவரின் அறைக்குள்ளாக கைபிடித்து இழுத்தாள்.

“ஏன்டா...?” புரியாமல் பார்த்தான் கவின்.

“நீங்க தான உங்களுக்கு எதோ டவ்ட் நு சொன்னீங்க...”

வாய்விட்டு சிரித்தான் அவன்.

“என் டவ்ட் என்னன்னா...இன்னைக்கு உன்னை பார்த்த பிறகு....இனிமே இந்த டாக்டர் தமிழினி தாமஸ் இந்த ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்கு வருவாங்களா...? இல்ல உன்னை திரும்பவும் பார்க்க பயந்து போய் ஊரை காலி செய்துறாவாங்களாங்கிறதுதான்...இந்த டவ்ட்டை அவங்கட்ட போய் க்ளாரிஃபை செய்துட்டு  வருவமா?”

முறைத்தாள் வேரி.

“உங்களுக்கு குழந்தை விஷயம் அவ்ளவு கிண்டலா இருக்குது என்ன?” உதடுகளை இழுத்து பழிப்பம் காட்டினாள்.

வீட்டுக்கு போவமா...? கண்சிமிட்டினான் கவின். அவன் கண்கள் இடவலமாய்  வளைந்தோடிய அவள் இதழ்களில்.

“ஆசை தோசை....இன்னும் ரெண்டு மாசத்துக்கு ஒன்னும் கிடையாது....டாக்டர் சொல்லிருக்காங்க....”

ருத்துவ விஜயம் முழுமை பெற்ற நேரம் மணி இரவு 9.45 என்றது. இந்த சாலை வழியே இவர்கள் வீட்டை அடைய இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும். வேரிக்கு பசி வந்து வெகு நேரமாகிறது. வீடு செல்லும் வரை அவள் சாப்பிட்ட ஆப்பிள் தாங்காது. அதோடு அவள் வழி பயணத்திலேயே தூங்கிவிடுவாள்.

“வேரிமா இங்கயே சாப்பிட்டுட்டு போய்டுவோமே.....வீட்டுக்கு போறதுக்குள்ள தூங்கிடுவ....அதுக்கு பிறகு எழுப்பினாலும் ஒழுங்கா சாப்பிட மாட்ட...அதோட சாப்ட உடனே தூங்க வேண்டாம்னு டாக்டர் சொன்னாங்கல்ல....”

வேரிமா என்ற பதமே வேரிக்கு கவின் முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டான் என்று தெரிவிக்கிறது. எப்பொழுதும் அவன் பிடிவாதங்களில் இவள் நன்மை ஒளிந்து இருக்கும்தான்....ஆனால் இது....அவள் குழந்தைக்கு நல்லதாக தெரியவில்லையே....

“ப்ளீஸ் கவின்  இதுல மட்டும் என்னை கம்பல் பண்ணாதீங்க... வீட்டுக்கு போய்டலாம்பா.....”

அவள் முகத்தைப் பார்த்தவன் காரை அம்பாசமுத்திரம் சாலையில் அவர்களது வீடு நோக்கி செலுத்தினான்...

தூங்கி விழ ஆரம்பித்தாள் வேரி.

அடுத்த சில நிமிடங்களில் அவர்களது கார் நிற்பது போல் உணர்வு. முயன்று விழித்த்ப் பார்த்தால் கார் திருநெல்வேலியின் மிக ப்ரபல ஹோட்டலின் முன் நின்று கொண்டிருந்தது.திருப்பி கொண்டு வந்திருக்கிறான்...

“ப்ளீஸ் கவின்....தூங்கனும்....நான் வரலை....”

“இதைத்தான் சொன்னேன்...இப்பவே எழுந்துக்க மாட்டேன்ற....வீட்ல போய் சாப்டாமதான் தூங்குவ...சரியா வராது...எதுனாலும் இங்க கொஞ்சமா சாப்டு....”

“ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிருக்கேன்ல...குழந்தைக்கு நல்லதுக்கு இல்ல....நான் வரமாட்டேன்....”

“எனக்கு பசிக்குது....நான் சாப்பிட போறேன்...வர்றியா இல்லையா?”

அவ்ளவுதான் மௌனமாக அவன் பின் இறங்கி சென்றாள் வேரி.

ஏசி அறையில் இவர்கள் உட்கார ஹோட்டல் மேனேஜர் ஓடி வந்தார்.

“வாங்க சார்....வாங்க மேடம்...”

“ஸ்டீம்டு ரைஸ், மில்க்...இந்த டைம் கிடைக்குமா...?”

கவினின் கேள்வியிலேயே வேரிக்கு அவன் என்ன செய்கிறான் என புரிந்துபோக, மற்றவர் முன் தன் கணவனை முறைக்க மனமின்றி அமைதியாக அமர்ந்திருந்தாள். விருதுநகரில் பாட்டி வீட்டில் வளர்ந்த வேரிக்கு இரவு பால் சாதம் சாப்பிடும் பழக்கம் உண்டு.

“சார்....மெனு பாருங்க சார்...வேற நிறைய நல்ல ...”

“இல்ல...இது போதும்.”

ணவு வரும் வரையும் கவின் அவள் மீதிருந்து பார்வையை எடுக்கவில்லை.

அவன் பார்வையில் இவள் கரையாமல் இருப்பது எப்படியாம்?

அவன் சொல்வதுதான் சரியோ....நான் தான் மொட்டை பிடிவாதம் பிடிகிறேனோ!!! பாலும் சாதமும்...இதை சாப்பிடுவதில் என்ன ப்ரசனை வர கூடும்? ஒருவேளை நான் சாப்பிடாம தூங்கிட்டா பாப்பாவுக்கு தான் நல்லதுக்கு இல்லை.....

உணவு வரவும்

“பாரு...இது இப்ப பாயில்...”

அவன் சொல்ல தொடங்கும் முன் தன் முன்னிருந்த தட்டில் அதை பரிமாறியவள் நீங்க வேற எதாவது உருப்படியா வாங்கி சாப்பிடுங்க “ என்று முகத்தை தூக்கி வைத்தபடி சொல்லி விட்டு சாப்பிட தொடங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.