(Reading time: 17 - 34 minutes)

"னக்கு தெரிந்து அவர் ரொம்ப நல்லவர்.காலேஜ்ல எந்த பொண்ணையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை.

சாதாரணமா யார்கிட்ட பேசினாலும் கண்ணியமா பேசுவார்!

தப்பு பண்ணா மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்!!!என் வாழ்க்கையில அவரை மாதிரி அன்பை காட்டுபவரை பார்த்தில்லை!"-அடுக்கிக் கொண்டு போனாள்.

"அவன் ஒரு பொண்ணை லவ் பண்றான்!"-அவள் முகம் இறுகியது.

"அந்த பொண்ணுக்கிட்ட  எப்படி சொல்றதுன்னு தவிக்கிறான்!உனக்கு எதாவது ஐடியா இருக்கா?"-அவளிடம் பேச்சில்லை.உணர்சி மிகுதியில் கண்ணீர் வந்தது.நீண்ட மௌனம்.

"ஒரு வேளை அந்தப் பொண்ணு நீயா இருந்தா என்ன பண்ணுவ வைஷூ?"-அவள் சட்டென நிமிர்ந்தாள்.

"என்ன?அவன் சட்டையை பிடித்து சண்டை போட்டு இருப்பியா?"

கனத்த மௌனம் நிலவியது.

"அவர் மாதிரி ஒருத்தர் ஹஸ்பண்ட்டா கிடைக்கிறது பாக்கியம்!என்னால அதை மறுத்திருக்க முடியுமான்னு யோசிக்க கூட தோணலை!"-தலைக்குனிந்தப்படி கூறினாள்.

"அப்பா!"-சிரித்தப்படி பெரும் மூச்சு விட்டாள் நிலா.

"என்னாச்சு?"

"எங்கே நீ கோபப்படுவியோன்னு பயந்தேன்!என் வயிற்றில பாலை வார்த்தாய்!"

"புரியலை!"

"அவன் உன்னை தான் லவ் பண்றான்!"-திகைப்போடு பார்த்தாள்.

"நான் அப்போவே சொல்ல சொன்னேன்.அவன் என்னடான்னா நீ தவறா எடுத்துப்பன்னு தயங்கினான்.தேங்க்ஸ் வைஷூ"

"நீங்க....பொய் சொல்லலை தானே!"-தவிப்போடு கேட்டாள்.

"நான் பொய் சொல்ல மாட்டேன்!"-வைஷ்ணவி இமைகள் ஆனந்த கண்ணீரை தெளித்தன.

சிறிது நேரத்தில் முகம் இறுகியது.

"என்னாச்சு?"

"இதுக்கு உங்க வீட்டில???"-தன் குடும்பத்தை பற்றி சிந்திக்கும் பெண்களின் நடுவே வைஷ்ணவியின் சிந்தனை நிலாவிற்கு மகிழ்வை தந்தது.

"நான் பார்த்துக்கிறேன்!உன் சித்தப்பா??"

"உங்களுக்கு எப்படி தெரியும்?"

"விஷ்வா சொன்னான்!பயப்புள்ள காலேஜ்ல உன்னை பற்றி விசாரணை தான்!"-அவள் புன்னகைத்தப்படி,

"சித்தப்பாவை நினைத்தா தான் பயமா இருக்கு!"

"ஓ...கவலைப்படாதே!அவர் சம்மதிப்பார்!"-அந்நேரம் விஷ்வா வந்தான்.

"அவன்கிட்ட எதையும் சொல்லாதே!"

"ம்..."-திட்டம் தீட்டியாகிவிட்டது.

"என்னடா?வாங்கிட்டியா?"

"ம்..."-நிலாவின் அருகே அமர்ந்தான்.

"என்ன மாடல்?"

"சாம்சங் கேலக்ஸி ஆல்பா!"

"சரி!"-அவனது பார்வை ஒருமுறை வைஷ்ணவியை மொய்த்தது.

அவள் தலைக்குனிந்தப்படி இருந்தாள்.பில் வந்தது.

இருவருக்கும் யார் கட்டுவது என்று சண்டை மூண்டது.

"சரி...உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்!விஷ்வா நீ ப்பே பண்ணு!"-என்று விஷ்வா தலையில் கட்டிவிட்டாள் நிலா.

"அப்பறம் நான் சொன்னதை மறக்காதே!"

"சரிங்க நான் கிளம்புறேன்!"-அவளிடம் விடைப்பெற்று விஷ்வாவை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்தாள் வைஷ்ணவி.

அவள் சென்றதும்,

"அவக்கிட்ட என்ன பேசுன?"

"நான் அவ கூட என்ன பேசுனா உனக்கு என்ன?"

"சும்மா...தான்!"

"டைம் ஆயிடுச்சு வா!"ஒன்றும் புரியாமல் அவளோடு சென்றான்.

மருத்துவமனையில்...

அனுமதிக்கப்பட்டிருந்த

அந்த இருவரை காண சென்றாள் நிலா.

இம்முறையும் சங்கர் தான் உடன் இருந்தான்.

அவன் எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

இவள் அமைதியாக பரிசோதித்துவிட்டு,

"நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம்!"என்றாள்.

வேறு எதுவும் பேசவில்லை.

"ஒரு நிமிஷம்!"-சங்கர் அழைத்தான்.

"சொல்லுங்க!"

"மாமாக்கிட்ட ஏன் அப்படி பேசுன?"

"யார் மாமாக்கிட்ட?"

"மிஸ்டர் பிரபாகரன்!"-அவள் திகைப்போடு பார்த்தாள்.

"அவர் உங்களுக்கு மாமாவா?"

"என்னை தெரியலையா உனக்கு?"

"இல்லை!"

"நான் உன் அத்தை பையன்!"-புரிந்துவிட்டது அவனா???இவன்???

போயும் போயும் இவனிடமா சிக்கினேன்???

"என்ன??எல்லாத்தையும் மறந்துட்டியா?"

"இதோ பாருங்க நான் பழைய விஷயத்தை யோசிக்க கூட விரும்பலை!என்னை விட்டுவிடுங்க ப்ளீஸ்!"

"விடுவதா???உன்னையா???நீ என்னோட பொருள்!!!எக்காரணத்துக்காகவும் உன்னை விட முடியாது!"

"உனக்கு என்ன பைத்தியமா???"

"உன் மேல!"

"உன்னால என்னை நெருங்க முடியாது!எந்த நேரத்துலயும் உன் மேல துளி அனுதாபமும் எனக்கு வராது!"-அவன் அவளின் காதருகே,

"எனக்கு சொந்தமானதை  எடுக்க யார் அனுமதியும் தேவையில்லை.என் விருப்பத்துக்கு நீ பணிந்து தான் ஆகணும்.இல்லை பணிய வைப்பேன்!"

"வேணாம் சங்கர்!நீ பேசுறதுல்ல வேற அர்த்தம் வருது!"

அவன் சிரித்தப்படி,

"எல்லா அர்த்தத்துலயும் தான் சொல்றேன்!"

"ச்சீ...நீயும் மனுஷனா?"-கோபத்தை உமிழ்ந்துவிட்டு நகர்ந்தாள்.

இந்த அகங்காரம்,ஆணவம்,

தலைக்கனம்,திமிர் என்று கூறுவதை கேட்டிருப்போம்!!!

ஏன் நாமும் பல முறை மேற்கூறிய பட்டங்களை பரிசாக வாங்கி இருப்போம்..

அப்படி என்றால் என்ன யாராவது அறிவோமா???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.