(Reading time: 17 - 34 minutes)

க்காலத்தில்,இவை எல்லாம் ஒருவர் கூறியதை மதிக்காமல் நம் விருப்பத்திற்கு செய்வதே என்றே கருதப்படுகிறது.

உண்மையில் அவை அநியாயத்தை விரும்பி நாடுவதற்கு இணையாகும்.

காலம் அனைவருக்கும் சிந்திக்கும் திறனை வாரி வழங்கியுள்ளது.

மனிதனாய் பிறப்பெடுத்த ஒவ்வொரு ஆத்மாவிற்குள்ளும் சிந்திக்கும் திறம் தான் எத்தனை!!!

அதை மறந்து தான் மட்டும் தான் சிந்திக்கும் திறம் படைத்தவன்.

தன் பேச்சில் நியாயம் மட்டும் தான் இருக்கும் என்று அடுத்தவரை ஆட்சி செய்ய எண்ணும் ஒவ்வொரு மனிதனும் ஆணவம் பிடித்தவன் தான்!!!

எங்கே ஒரு மனிதனின் மனமானது தான் தவறொன்றும் செய்ய மாட்டேன் என்று எண்ணுகிறதோ!

இருதயத்தின் அந்தக் கூற்று...

அநீதி என்று அறியப்படுகிறது...

எனில்,இதிலிருந்து தப்பிக்கும் உபாயம் தான் என்ன????

நான் செய்வது தவறாகவும் இருக்கலாம்!

என் மனம் அது சரி என்கிறது!!!

இது தவறாக இருக்குமாயின் இனி இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் , இவை என் இருதயத்துள் பிறக்காமல் தடுத்து நிறுத்து காலமே!!!

என்று சரணடைவதே ஆகும்.

"ஏன்டி கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டியா?"

"அம்மா!நான் சிவனேன்னு ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்.போன் பண்ணி அவசரமா வீட்டுக்கு வான்னு சொன்னீங்க.நானும் வந்தேன்.இப்போ கோவிலுக்கு இழுத்துட்டு வந்துட்டீங்க!அங்கே நிறைய அப்பாயிண்ட்மண்ட் பென்டிங்மா!"

"போனா போட்டும்!வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை இங்கே வந்து விளக்கு போடணும்!"

"எதுக்கு?"

"உன் கல்யாணத்துக்காக வேண்டிருக்கிறேன்!"-அவள் முகம் இறுகினாள்.

"போய் தீபம் வாங்கிட்டு வா!"

"நான் மாட்டேன்!"

"அடி வாங்குவ போ!"-அரைமனதோடு போனாள்.

தனிமையில் இருந்த மீனாட்சியினை அழைத்தது,

"எக்ஸ்யூஸ்மீ!"என்னும் குரல்.திரும்பினார்

அந்த எக்ஸ்யூஸ்மீ நபர் நம் ரஞ்சித் தான்!!!

"மேம்!நீங்க மிஸஸ்.மீனாட்சி மகேந்திரன் தானே!"

"ஆமா!"

"டீச்சரா வொர்க் பண்ணீங்க ரைட்?"

"எஸ்...நீங்க?"

"மேம்!என்னை தெரியலையா??ரஞ்சித் மேம்!"

"ரஞ்சித்???"

"மேம்!உங்கக்கிட்ட அடிக்கடி திட்டு வாங்கிட்டு இருப்பேனே!!"-மீனாட்சி முகத்தில் பிரகாசம்!!!

"ஏ...ரஞ்சித்!நீயா??எப்படி இருக்க?என்ன பண்ற?இங்கே என்ன...?"

"மேம்.ஒவ்வொரு கேள்வியா கேளுங்க!நான் நல்லா இருக்கேன்!சாப்ட் வேர் என்ஜினேயரா வொர்க் பண்றேன்!இங்கே பேமலியோட வந்திருக்கேன்!"-பதில் கூறினான்.

"நீ இங்கே செட்டில்லா?"

"இல்லை...சும்மா ரெஸ்ட்க்கு மேம்!நீங்க?"

"சேம்!"-அப்போது,

"அம்மா!தீபம் வாங்கி வந்தாச்சு!"-என்று வந்த நிலாவின் கண்கள் விரிந்தன.ஒரே சமயத்தில் ஆச்சரியம்,ஏக்கம்,தவிப்பு,நாணம்,காதல்,கோபம்,வெறுப்பு முதலியவற்றை பிரதிபலித்தன.

நான்கு நேத்திரங்களும் ஒன்றாக பின்னி பிணைந்தன.

நிலா கேள்வியாக மீனாட்சியை பார்த்தாள்.

"இவன் என் பழைய ஸ்டூடண்ட் நிலா!பேரு ரஞ்சித்!"

"மேம்!"

"ம்"

"மேடம் யாரு?"-சாதாரணமாய் கேட்டான் அவன்.

"என் பொண்ணுப்பா!வெண்ணிலா! கைனகாலஜிஸ்ட்டா இருக்கா!"-அவன் போர் வீரனை போல,

"ஹலோ மேடம்!"என்றான்.

"நான் நீ சின்ன பொண்ணா இருக்கும் போது பேப்பர் வேல்யூவேஷனுக்கு வீட்டுக்கு எடுத்துட்டு வரும் போது அதுல,12,13 மார்க் எடுத்து ஒரு கேண்டிடேட் இருப்பான்ல!நீ கூட யாருன்னு கேட்பியே அது சார் தான்!"-ரஞ்சித் ஒருமுறை செல்லமான கோபத்தோடு மூச்சை இழுத்தான்.

"மேம் பழைய கதை எதுக்கு?விடுங்க மேம்!"

"நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் எனக்கு ஸ்டுடண்ட் தானே அதான்!"-அவர்கள் பேசுவதை விரும்பாதவள்,

"அம்மா நேரம் ஆகுது!"

"வரேன்மா!"

"மேம்!என்ன விஷயமா கோவிலுக்கு வந்தீங்க?"

"சாமி கும்பிட தான்!"

"பார்டா!நல்லா ட்ரை பண்றீங்க மேம்!"-அவர் சிரித்தப்படி,

"இவளுக்கு கல்யாணம் நடக்கணும்னு வேண்டுதல்!"

"அதான் நடந்துடுச்சே!"-நிலா சரலென  நிமிர்ந்தாள்"

"என்ன?"

"அது...வந்து...ஆ...மஹாதேவரையே கல்யாணம் செய்த பார்வதி தேவி கோவிலாச்சே நடுந்துடுச்சுன்னு வைச்சிக்கோங்க!"

"உன் வாய் முகூர்த்தம் பலிச்சா நல்லது தான்!"

"நான் நடக்காததை சொல்லவே மாட்டேன்!"-என்றான் தன் சரி பாதியை பார்த்தப்படி!!!!

"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா ரஞ்சித்!"

"ஆயிடுச்சு மேம்!"

"எத்தனை குழந்தை?"

"எல்லாம் வெயிட்டிங் மேம்!"-சற்று வெட்கத்தோடே கூறினான்.

"எங்கே உன் மனைவி?வந்திருக்காங்களா?"

"ஆ..வந்திருக்கா மேம்!"-அதற்கு மேல் நிலாவால் முடியவில்லை.

அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் அவளது இருதயத்தை கூறு போட்டன.

"மா!நீங்க விளக்கு போட்டுட்டு வாங்க!எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு!"

"அப்படி என்னடி இதை விட முக்கியம்?"

"சில விஷயத்தை விட்டு ஒதுங்குவதே முக்கியமான விஷயம் தான்!"-அவளது வாக்கியம் ரஞ்சித்திடம் பெரிய பிரதிபலிப்பை அளித்தாய் தெரியவில்லை.

"நிலா!"

"ஸாரிம்மா!நான் விஷ்வாவை அனுப்புறேன்!"-அவள் பதிலுக்காக காத்திராமல் நகர்ந்தாள்.கண்களில் கண்ணீர் துளிகள்...

ஆணுக்கும்,பெண்ணுக்கும் உரிமையை சமமாக சமூகம் வழங்குகிறது.ஆனால்,ஒரு ஆண் சிந்தும் கண்ணீரை காட்டிலும் பெண்ணின் கண்ணீர் மண்ணை அதிகமாக நனைக்கிறது.காரணம் என்ன???ஆண் தனது அனைத்தும் உணர்வுகளையும் தன்னுள் புதைக்கிறான் அதனாலா??இருக்கலாம்...எனக்கு தெரியவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.