(Reading time: 17 - 34 minutes)

னால்,ஆணின் அழுகைக்கும் சேர்த்து பெண்ணாகப்பட்டவள் கரைவது எத்தனை பேருக்கு தெரியும்??அதுவும் தெரியவில்லை...

ஒருவனுள் தன்னை தொலைத்த கன்னிகை அவன் நேத்திரங்களை கூட காண தயங்குவாள் என்று கலாச்சாரம் கூறும்.அதை தேவையில்லாத ஒன்றாக சமூகம் கருதுகிறது.கேட்டால் ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லையாம்!!!உண்மையை உரைக்க வேண்டுமாயின் அது நியாயமே!!!!

ஆணிற்கு பெண் உரிமையில் வீரத்தில் திறமையில் சமமே!!!

ஆனால் அவள் உணர்ச்சிவசப்படும் சமயத்தில் அவள் ஒரு ஆணின் காதலுக்கு கட்டுப்படுகிறாள்.அதனால் தான் இந்த கண்ணீர்.

காரணம்,அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு பெண்களின் குணங்கள் மட்டுமல்ல அது அவளின் மகத்துவங்களாகும்!!!!

விஷ்வாவிடம் கோவிலுக்கு செல்லும் படி கூறிவிட்டு,காரின் திசையை மாற்றினாள் நிலா.

யாருமில்லாத தனிமையான இடத்தில்,மரங்களின் நிழலில்,தென்றலின் ஆறுதலில் தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.

முடியவில்லை.

கனவெல்லாம் கண்ணீராய் ஆனது.

அவன் மாறிவிட்டான்!!!

அவன் என் ரஞ்சித் அல்ல!!!

அவன் வாழ்வை அவன் தீர்மானித்துவிட்டான்.

நன்றாக வாழட்டும்!!!

என் ஸ்தானத்தில் இன்னொருத்தி வீற்றிருப்பாள்!!!

குழந்தைகள் பிறக்க காத்திருக்குது என்றான்.எனில்,அவன் மேல் இனி அதிகாரம் அற்றவள் நான்!!!

ஏன் எனக்கு இந்த சோதனை???

இன்னும் அவன் அணிவித்த மாங்கல்யத்தை கழுத்திலும்,அவன் நினைவுகளை நெஞ்சிலும் சுமக்கின்றேனே!!

எவ்வளவு பெரிய தவறு இது???

"அழுது முடிச்சாச்சா?"-திடுக்கிட்டு திரும்பினாள்.கைகளை குறுக்கே கட்டியப்படி ரஞ்சித் தன் காரில் சாய்ந்திருந்தான்.

"இப்போ எதுக்கு இந்த அழுகை?"-என்றப்படி அவளருகே வந்தான்.

அவள் கல்லாய் நின்றிருந்தாள்.அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.

"அம்மூ!"-உருகிப் போனாள்.இந்த வார்த்தை இது தானே அவள் விதியை அவனோடு பிணைத்தது.

நீண்ட நாள் பிரிவு...

காத்திருந்த காத்திருப்பின் தேடல் கண்முன்னே...

நதிக்கும்,கடலுக்கும் என்ன உறவோ!!

ஆனால் நதி நீரானது அது புனித கங்கையாகவும் இருக்கலாம்!!!

கடலில் தன்னை தொலைக்க வேண்டும் என்பது இயற்கையின் ஆணை அல்லவா???

தன்னவளை இறுக அணைத்தான் ரஞ்சித்!!!

எத்தனை நாட்கள் அவளின் இந்த ஆறுதலுக்காக ஏங்கினான்.மனம் உடைந்த நேரத்தில் அவன் இருதயம் தன்னிச்சையாக தேடியது அவளை தானே!!!

ஒரு நொடி திகைத்து போனாள் நிலா.

மனம் தான் யார்?எங்கிருக்கிறோம்?என்ன நடக்கிறது?என்பதை சிந்திக்க மறந்தது.

அவன் உணர்ச்சி பெருக காதலோடு அவள் செவ்விதழை தனதாக்கினான்.

உயிர் வரை ஊறிய தடுமாற்றம்!!!தன்னை மறந்தனர் இருவரும்!!!

சூரிய தேவரானவர் இடியின் உதவியோடு நிலாவை சுயநினைவிற்கு வரவழைத்தார்.அவள் அவனை தள்ளினாள்.

மீண்டும் மனம் தவறை உணர்ந்தது.

கேள்வி அவள் கண்களை வியாபித்தது.

அங்கிருந்து நகர பார்த்தாள்.

"அம்மூ நில்லு!!"

"எதுக்கு நிற்கணும்???என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல???

வேணும்னா வச்சிக்கிறதுக்கும்!வேணாம்னா தூக்கி எறிவதற்கும் தான் நானா???"

"ஏ..லூசு!நான் சொல்லுவதை கேளுடி!"

"போதும் ப்ளீஸ்!!!என்னால எதையும் தாங்க முடியாது!தாங்குற சக்தியும் மனசுல இல்லை.இதுவரைக்கும் நடந்ததை பார்த்துட்டு இன்னும் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம்!!என்னால...."-பேச்சு தடைப்பட்டது.

அவன் மனம் உடைந்து போனான்.

"ப்ளீஸ்!நான் சொல்றதை இரண்டு நிமிஷம் காது கொடுத்துக் கேளு!"

"என்னால முடியாது!ப்ளீஸ் நீங்க உங்க வழியில போயிடுங்க!"-அவள் கரம் கூப்பி அவன் முன்னே மண்டியிட்டாள்.

சத்தியமாய் மனதளவில் இறந்துப் போனான் ரஞ்சித்!!!

இதற்காகவா மீண்டும் அவன் வந்தான்???

இதற்காகவா அவளிடம் அவன்  பேச  துடித்தான்???

இதற்காகவா  இத்தனை நாள் காத்திருந்தான்???

ஒரு நிமிடம் அவன் கூறவதை கேட்டிருக்கலாம் அல்லவா???

அவசரம் அறிவை அழித்தது...

கனத்த மௌனம் இருவருக்கும்  இடையே!!!!

ரஞ்சித் அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

வலித்தது...

ஆயிரம் முறை இதயத்தை சதக்கூறிட்டதை போன்ற வலி....

போதும் நான் செய்ததும் போதும்!அவள் அனுபவித்த வேதனையும் போதும்!

எவ்வளவு  மனம் உடைந்திருந்தால் அவள் அப்படி செய்வாள்???

கோவிலிலாவது அப்படி பேசாமல் இருந்திருக்கலாம்..

அனைத்தும் கை மீறியது...

ஆகாய கங்கையானாள் அவள்.

எப்படி அவள் முகம் பார்ப்பேன்???

வேண்டாம்...அவளை விட்டு செல்வது தான் சிறந்தது.

இனியாவது அவள் வாழ்வில் நிம்மதி வரட்டும்.

மனம் தனது முடிவை அதிகாரப்பூர்வமாய் மாற்றியது.

மனித மனம் உண்மையில் குரங்கை விட மோசம்!!!

எப்படி தாவுகிறது பாருங்களேன்!!!!!!!

வீட்டிற்கு வந்தவள் மகேந்திரன் அழைத்ததையும் கவனிக்காது தன் அறையில் தஞ்சம் புகுந்தாள்.

மனிதனுக்கு மஹாதேவர் அளித்த மிக பெரிய வரம் என்ன தெரியுமா?

கண்கள்...

துன்பம் வரும பட்சத்தில் கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று கண்ணீர் சிந்தி விடுகின்றன.

இனி,நான் தைரியமாக என்னை பார்த்து உனக்கென கண்ணீர் விட யார் உண்டு என்று கேட்பவரிடத்தில் ஒன்று உரைப்பேன்.எனக்கென இறைவன் அளித்த இரு நேத்திரங்கள் உண்டு என்று!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.