(Reading time: 17 - 34 minutes)

ண்மை அதானே...!

"நிலா!கதவை திற!"-நீண்ட நேரமாக கதவை தட்டும் தந்தையின் குரல் அப்போது தான் அவளுக்கு கேட்டது.கண்களை கட்டுப்படுத்திவிட்டு கதவை திறந்தாள்.

"என்னடா?என்னாச்சு?"

"ஒண்ணுமில்லைப்பா!உள்ளறையில இருந்தேன் அதான் கேட்கலை!"-பொய் சொல்ல முயற்சி தோற்று போனது.

"உள்ளே வரலாமா?"

"என்னப்பா நீங்க?வாங்கப்பா!"-வந்தார்.

"எதுக்கு அழுத?"-திகைப்போடு பார்த்தாள்.

"நான் உன் அப்பா!நீ என்ன பண்ற?என்ன நடக்குதுன்னு என்னால கண்டுப்பிடிக்க முடியாதா?"

".............."

"யார் அந்த பையன்?"

"அப்பா?"

"நேத்து இங்கே இருந்து ஒரு புக் எடுத்துட்டு போனேன்!அதுல ஒரு பையனோட போட்டோ இருந்தது.அதுக்கு பின்னாடி வெண்ணிலா ரஞ்சித்னு எழுதியிருந்தது.

அது நிச்சயமா உன் கையொழுத்து இல்லை.அப்போ அவன் கையெழுத்தா தான் இருக்கணும்!சரியா???"

"................"

"ம்...என் பேர் எடுத்துட்டு அவன் பேர் எப்போடா சேர்த்த?"-அவளால் முடியவில்லை.கண்ணீரில் கரைந்தாள்.மகேந்திரன் ஆறுதலாக அவளை அணைத்து கொண்டார்.மாதாவிற்கு இணையான பாசம்!!!

"மன்னிச்சிடுங்கப்பா!"

"ஏ...இங்கே பார்!இப்போ என்ன கேட்டேன்?யார் அந்த பையன் அவ்வளவு தானே கேட்டேன்?இதுக்கு போய் அழுதுட்டு??இதை முதலிலே சொல்லி இருந்திருக்கலாம்ல!"

"....,.........."

"சொல்லு எங்கே இருக்கான்?என்ன பண்றான்?"

"வேணாம்பா!அவன் எனக்கு வேணாம்!"

"ஏன்?பயப்படாதே...நான் காதலுக்கு வில்லன் கிடையாது!"

"இல்லைப்பா..."-அப்போது,

"நிலா!ஏ...நிலா!"-கத்தியப்படி வந்தார் மீனாட்சி!

"என்ன ஆச்சு மீனா?"

"கோவிலுக்கு கூட்டிட்டு போனா!முக்கியமான வேலைன்னு இங்கே வந்திருக்காங்க!"மகேந்திரன் கேள்வியாய் பார்த்தார்.

"அப்படி என்ன சாமியோட முக்கியமான வேலையாம்?"

"என்ன நடந்தது?"-விளக்கமாய் கூறினார்.

அவற்றை கேட்டதும் திகைத்தார் மகேந்திரன்.

"நான் தான்மா அவளை வர சொன்னேன்!"

"நீங்களா?"

"ம்...முக்கியமான மீட்டிங் விஷயமா பேசணும்னு வர சொன்னேன்!"-அமைதியானார்.

"எனக்கு டீ போட்டு எடுத்துட்டு வா"-மீனாட்சி அமைதியாக நகர்ந்தார்.

"அந்தப் பையன் தானா?"-அவள் தலையசைத்தாள்.

"விடுடா கண்ணா!அவனுக்கு உன் கூட வாழ கொடுத்து வைக்கலை!"

"இல்லைப்பா!எனக்கு தான் அவர் கூட வாழ கொடுத்து வைக்கலை!"-தர்மசங்கடமாய் போனது மகேந்திரனுக்கு!!!

"சில நேரத்துல அடுத்தவர் செய்யுற விஷயம் மனவேதனையை தரும்!தன்னம்பிக்கையை இழந்துடுறா மாதிரி நிலை வரும்.அந்த மாதிரி நிலைமையிலும் மனவுறுதியை இழக்காதே!உன்னுடைய முக்கியமான கடமையே உன் மனசை கட்டுப்பாட்டுல வைக்கிறது தான்!"-சில  நேரங்களில் இது போன்ற சில அறிவுரைகள் தாம் மனிதனை வழி மாறாமல் வைக்கிறது!!!!

"எனக்கென்னமோ அவன் மேல தப்பு இல்லைன்னு தோணுதுடா!"-குழப்பமாய் பார்த்தாள்.

"அவன் உன்னை ஏமாற்ற நினைத்திருந்தா வெண்ணிலா ரஞ்சித்னு உனக்கு அடையாளம் தந்திருக்க மாட்டான்!நீ அவன் கூட பேசி பார்த்தியா?"-எப்படி சொல்லுவாள் அவள் மூன்று வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததை!!!

"சரி...இனி பேசி பயன் இல்லை!நீ கொஞ்ச நேரம் தூங்கு!எல்லாத்துக்கும் சீக்கிரம் வழி பிறக்கும்!!!"மனிதனின் வாழ்வினில் இரு பெரும் சக்திகள் ஆட்சி செய்கின்றன.ஒன்று.....சக்தி,பிறிதொன்று முக்தி!!!சக்தி நிலையை இரண்டாக பிரிக்கலாம் நியாயம்,அநியாயம்.

இவ்விரண்டும் ஒரு மனிதன் செய்ததாக இருக்கலாம்,அல்லது...மனிதனுக்கு செய்யப்பட்டதாக அமையலாம்!!!!

இதில் அநியாயம் இழைக்கப்பட்ட மனிதனின் வாழ்வானது ஆறுதலை தேடுகிறது.முக்தியை நாடுகிறது.இது துறவிகளுக்கு மட்டும் தான் தோன்றும் என்பது இல்லை.சாமானியனுக்கும் தோன்றலாம்.

அப்படிப்பட்ட வேளையில் மனம் கட்டுப்பாட்டை இழக்கிறது.கானலாய் மாறுகிறது.சூழ்நிலை குறித்து சிந்திப்பதில்லை.சுயநல எண்ணம் மனதை வியாபிக்கிறது.மனிதன் தவறிழைக்க துவங்குகிறான்.

இதன் மூலம் மனிதன் மேல் தவறில்லையா???உண்டு...தன்னை கட்டுப்படுத்தும் மனதை கட்டுப்படுத்தாது நிச்சயம் அவனுடைய தவறே!!!!அதற்கான தண்டனையே வாழ்வில் துன்பங்களாய் மனிதன் பெறுகிறான்.வாழ்க்கை கடினமான சூட்சுமம் அல்ல...வாழ்க்கைக்கு உயிர் உண்டு!!!அதன் பெயரே ஆன்மா!உண்மையில் நடப்பது அனைத்தும் மாயை என உணருபவர் மாபெரும் சக்தியாவர்.நடக்கும் மாயைக்கு அதிகாரம் இடும் அதிகாரத்தை அவர் அதிகாரப்பூர்வமாய் அடைகிறார்.

நீங்கள் எப்படி?????

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.