(Reading time: 18 - 36 minutes)

மே ஐ கன் இன் சார்?...

யெஸ்… கம் இன்…

சார் இந்த ஃபைல்ஸ்ல உங்க சைன் வேணும்?... என்றபடி அவன் முன் பாலா ஃபைலை நீட்ட,

அவளை ஏறெடுத்து பார்த்தவன், அவள் நீட்டிய ஃபைலை வாங்கி, கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் அவளிடம் கொடுத்தான்…

சார்… அந்த நியூ ப்ராஜெக்ட் பத்தி…

ஓ… அதுவா… நான் பேசிட்டேன் பாலா... ஆல்மோஸ்ட் முடிஞ்சிடும் இன்னும் டூ த்ரீ டேஸ்ல…

ஓ… ஒகே… சார்…

சரி பாலா… விழியனோட ப்ராஜெக்ட் எந்த அளவுல இருக்கு?...

இன்னும் 3 மாசத்துல முடிஞ்சிடும் சார்… நெக்ஸ்ட் நாம வேற ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம் சார்…

ஒகே… பாலா… அந்த நியூ ப்ராஜெக்ட் பத்தி இப்போ சொன்னேல… நம்ம யுவி தான் போயிருக்கான்… சக்சஸ்ஃபுல்-ஆ முடிச்சிட்டு தான் திரும்பி வருவான்…

ஒகே… சார்…

மஞ்சரி இப்போ ஹேப்பியா இருக்குறாங்களா?...

ஹ்ம்ம்… யெஸ் சார்…

ஒகே… பாலா…

சரி சார்… நான் போய் அந்த ப்ரெசண்டேஷன் ரெடி பண்ணிட்டு உங்களுக்கு மெயில் பண்ணுறேன்…

அவன் சரி என தலை ஆட்டவும், அவள் மெதுவாக வாசலை நோக்கி நகர்ந்தாள்…

கதவில் கை வைத்து அவள் திறக்க முயற்சித்த போது,

ஒருநிமிஷம் பாலா… என்ற வ்ருதுணனின் குரல் அவளை அவன் முன் மீண்டும் நிற்க வைக்க…

சொல்லுங்க சார்… என்றாள் அவள் அமைதியாக…

ஹேப்பி பர்த்டே பாலா… என்றான் வ்ருதுணன் மெதுவாக…

அவனிடமிருந்து வாழ்த்தை எதிர்பார்க்காதவள், சற்று நேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் போனாள்…

பின், தேங்க்ஸ் என்றாள் மெல்ல… அவன் அடுத்து பதிலை சொல்லும் முன்னரே சாரியும் அவள் சொல்ல…

அவன் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை…

பதிலுக்கு அவன் சரி என்ற விதமாக புன்னகைத்தான்…

அவன் புன்னகையை பார்த்துவிட்டு அவளும் அங்கிருந்து வெளியேறினாள் மௌனமாக…

ஹாய்… பிரண்ட்ஸ்… இப்போ யாருக்கு யார் ஜோடின்னு தெளிவா புரிஞ்சிருக்கும்னு நான் நம்புறேன்…

வ்ருதுணன் அப்போ பெண் பார்க்க போனது யாரை?... இந்த கேள்வி உங்களுக்குத் தோணிருக்குமே இந்நேரம்…

பாலாவுக்கு என்ன குழப்பம்?... என்ன சந்தோஷம்?... உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சா?... தெரியலைன்னா நான் வரும் வாரத்துல சொல்லுறேன் கொஞ்சம் கொஞ்சமா….

இந்த யுவி யாரு?...

மைவிழியன் மஞ்சரியை சமாதானம் செய்வானா?..

வள்ளி ஏன் பாலா பிறந்தநாள் அன்னைக்கு ஆஃபீஸ் வரலை?...

இப்படி நிறைய கேள்வி உங்களுக்கு வந்திருக்குமே…

ஹ்ம்ம்… யோசிட்டே இருங்க… நான் அடுத்த வாரம் மறுபடியும் உங்களை மீட் பண்ணுறேன்… டாட்டா…

வரம் தொடரும்…

Episode # 05

Episode # 07

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.