(Reading time: 8 - 15 minutes)

ம்மா ரொம்ப close  எனக்கு,,ரொம்பவே செல்லம் வேற அதான் உங்ககிட்ட அப்டின்னு,..அவன் ஏதும் பதில் சொல்லாமல் இருக்க அவன் பக்கம் திரும்பியவள் அவன் முறைப்பாக அவளை பார்பதை பார்த்து ஒ சாரி சாரி உன்கிட்ட அப்டி சொல்றாங்க..ஓகே வா,

ஹ்ம்ம் அது மீரா, அந்த பயம் என்றான்.

இது எனக்கு புதுசு மீரா, மாசத்துல 28 நாள் வெளியூர் போவேன் , இல்லேனா ஆபீச்லையே நெறைய நாள் stay செஞ்சுடுவேன்.வீட்ல நான் போனாலும் சரி ,இல்லைனாலும் சரி யாரும் வொர்ரி பண்ண மாட்டாங்க, இப்டி உன்னை பார்த்துக்கோன்னு சொல்லவும் ஆள் இல்ல. வாசல் வரை வந்து போயிட்டு வா, போன் பண்ணுன்னு சொல்றதுக்கு எல்லாம் ஆள் இல்ல, i mean  என் அம்மா இல்ல.அவங்க இருந்துருந்தா நானும் இப்டிதான் இருந்த்ருபேன் போல, தெரில , ஆனா நீ ரொம்ப லக்கி, அம்மாவ பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு, அவங்க சிரிப்பு அப்டியே உன்கிட்ட இருக்கு, நான் இது வரைக்கும் இந்த மாதிரிவேஷம் இல்லாத சிரிப்பு பார்த்ததில்ல. மேல பேச முடியாமல் அவன் உணர்ச்சிவசபடுவது புரிய தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுத்தாள்.

ரிலாக்ஸ் விக்டர் அம்மா சொன்ன மாதிரி வா ஒரு நாள் வீட்டுக்கு , நான் சமைச்சு உங்களை சாரி சாரி உன்னை கொடுமை படுத்தறேன் ,அதுக்கு அப்புறம் நீ இப்டி எல்லாம் பீல் பண்ணவே மாட்ட என்று சொல்லி சிரிக்க, அய்யோ பிளஸ் மீரா மீ பாவம் என்று அவன்  சொல்லி சிரிக்க சூழ்நிலை சகஜமானது.செக்கின் முடிந்து விமானத்திற்குள் சென்று தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து பொதுவாக பேச ஆரம்பித்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இறுக்கத்தில் இருந்து வெளிப்பட்டு பெங்களூர் இறங்கியபோது,அழகிய நட்பு ஒன்று அங்கு உதயமானது.நெறைய விஷயங்கள் பேசினார்கள். ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்து கொண்டார்கள். மீரா யாருடனும் இவளவு எளிதில் பழகியது இல்லை, ஆனால் விக்டரிடம் பேசுவதில், பழகுவதில் அவளுக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை.நீண்ட நாள் பழகியதை போல இயல்பாக பொருந்தி போனார்கள். விக்டருக்கு மீராவின் அருகாமை , அலட்டல் இல்லாமல் அனாவசிய வழிசல் இல்லாமல் சகஜமாக தன்னுடன் பேசும் தோழமை  ஆறுதலாக இருந்தது, தான் சந்தித்த மற்ற பெண்களை போல் இல்லாமல் , தன் பணத்திற்காக இல்லாமல் தன்னுடன் பழகும் முதல் பெண் என்பதாலேயே மீராவை இன்னும் அதிகமாக பிடித்தது

அவர்கள் சந்திக்க வேண்டிய clients  சந்தித்த பிறகு நைட் flight க்கு நேரம் இருக்கவே விக்டர் மீராவிடம் , மீரா டைம் இருக்கு நீ எதுவும் ஷாப்பிங் போகலேன்னா இங்க ஒரு சின்ன ஓல்ட் ஏஜ் ஹோம் இருக்கு,போய்ட்டு வரலாமா ?? என்றான். ஓ போலாமே விக்,என்ன suddena ஓல்ட் ஏஜ் ஹோம் எல்லாம்,?? ஹ்ம்ம் மீரா அங்க இருக்குற தாமஸ் சார் அதாவது அந்த ஹோம் தலைவர் ரொம்ப நல்ல மாதிரி, நான் அவர ஒரு train travela தான் மீட் பண்ணேன். ரொம்ப energeticaana  பெர்சன்.நீ அவர மீட் பண்ண நல்லா . இருக்கும்னு தோணுது , என்ன போலாமா என்றான். இவ்வளோ சொல்றீங்களே விக் சார் கண்டிப்பா போலாம் வாங்க என்று மீரா கூற, இருவரும் அங்கு சென்றார்கள். ஓல்ட் ஏஜ் ஹோம் என்றவுடன் டிபிகல் setuppil எதிர்பார்த்த மீராவிற்கு அந்த ஹோம் வித்யாசமாக பட்டது , அழகான independent house  சுற்றி பச்சை பசேல் என்ற மரங்களுடன் மிகவும் ரம்மியமாக இருந்தது. விக்டருடன் சென்ற மீராவை அங்கே வரவேற்பறையில் உட்கர்ந்து இருந்த ஒரு பெரியவர் பார்த்து வா விக்டர் இபோதான் எங்க நினைப்பு வந்துதா உனக்கு , எங்க எல்லாரையும் மறந்து போக வெச்ச மாய மோகினி இவங்கதானா , வாங்கம்மா மகாராணி வாங்க என்று சொல்லவும் தலையும் புரியாமல் , வாலும் புரியாமல் விக்டரை கேள்வியாக மீரா பார்த்தாள்.

தொடரும்

Episode # 04

Episode # 06

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.