(Reading time: 20 - 40 minutes)

"ம்.."-கண்ணீரோடு ஒப்புக்கொண்டாள்.

நிலா விஷ்வாவின் அறைக்கு சென்றாள்.நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவனின் உதடுகள்,"ஐ லவ் யூ வைஷூ!"என்று உரைத்தன.எவ்வளவு பவித்ரமானது இந்த காதல்!!!!!!!

அடுத்ததாக தீர்கமான முடிவு ஒன்றை எடுப்பது அவசியம்!!!

காலையில் வைஷ்ணவியை சந்தித்தாக வேண்டும் என்ற முடிவோடு உறங்க சென்றாள் வெண்ணிலா.

கதிரவன் துயில் துறந்தான்.காலையில் எழுந்தான்.

முதல் வேளையாக வைஷ்ணவியின் இல்லத்திற்கு சென்றாள் வெண்ணிலா.

வரவேற்பறையில் ஏதையோ சிந்தித்தப்படி இருந்தார் அவள் சித்தப்பா.

"எக்ஸ்யூமீ சார்!"

"யாரு?"

"என் பேர் வெண்ணிலா மகேந்திரன்.நான் வைஷ்ணவி ஃப்ரண்ட்!"-வெண்ணிலாவின் குரல் கேட்டதும் ஓடி வந்தாள் வைஷ்ணவி!

"இதோ பாரும்மா!வைஷ்ணவி கூட என்ன பேசினாலும் இங்கேயே பேசு!"

"சார் நான் உங்க கூட தான் பேச வந்தேன்!"

"என் கூடவா?"

"என்னங்க வேணாம்!"-தடுத்தாள் வைஷ்ணவி.

"உண்மையில நான் உங்க பொண்ணு விரும்புகிற விஷ்வா அக்கா!"-அவர் கொதித்துவிட்டார்.

"உனக்கு என்ன தைரியம் இருந்தா!என்கிட்ட இப்படி பேசுவ?என்ன உன்னை தூது அனுப்பி இருக்கானா அவன்?"

"இல்லை...ஒருவேளை அவனுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால் அவன் பேசிட்டு இருக்க மாட்டான் சார்!"

"..............."

"வைஷ்ணவியை எதுக்காக என் தம்பிக்கு தர மாட்டீங்க?"

"உன் தம்பி ஆசைப்பட்டது வைஷ்ணவி மேலேயா?இல்லை...இந்த சொத்து மேலேயா?"-நிலா சிரித்தாள்.

"தேவையான சொத்து எங்கக்கிட்ட இருக்கு!அதைவிட,அவன் சம்பாதிக்கிறான்.கடைசி வரைக்கும் அவனால இவளை காப்பாற்ற முடியும்!"

"எனக்கு தேவை இவ இல்லை,இவ சொத்து தான்!உனக்கு இவ வேணும்னா கூட்டிட்டு போ!இவ சொத்து எனக்கு விட்டுட்டு போ!"-அவரை கூர்ந்து பார்த்தாள் நிலா.

"கேவலம் பணத்துக்காக மனித உணர்ச்சிகளோட விளையாட துணிந்து விடுறீங்க!சரி...நான் வைஷ்ணவியை கூட்டிட்டு போறேன்.என் வீட்டு மருமகளா!" "என்ன பேப்பர்ஸ்ல சைன் பண்ணனுமோ பண்ணிட்டு வா வைஷூ!"-அவள் விழிகள் விரிய பார்த்தாள்.

"விஷ்வா உன்னை மட்டும் தான் காதலிச்சான்!உன் பணத்தை இல்லை!அவன் காதல் மேலே நம்பிக்கை வைத்து வா!உனக்கு சொந்தமான உன் அப்பா அம்மா போட்டோ மட்டும் எங்க வீட்டுக்கு சீதனமா எடுத்துட்டு வா!"-அவள் கண்ணீரோடு பார்த்தாள்.

"அதை மட்டும் அவளுக்கு கொடுங்க சார்!"

"அவ உபயோகப்படுத்துற பொருள் எனக்கு தேவையில்லை!"

"போம்மா!போய் எடுத்துட்டு வா!" 

"..............."

"போ!என்னை நம்பு!இனியாவது நிச்சயம் உன் வாழ்க்கையில சந்தோஷம் வர ஏற்பாடு செய்யுறேன்"-அவள் உள்ளே சென்றாள்.

நிலா வீட்டிற்கு போன் செய்து விவரத்தை கூறினாள்.அடுத்த பதில் மகேந்திரனிடத்தில் இருந்து,

"அப்பெண்ணை உடனே அழைத்து வா!"-என்பதாக இருந்தது.

வைஷ்ணவி சில உடைகளையும்,அவள் பெற்றோரின் புகைப்படத்தையும் எடுத்து கொண்டு வந்தாள்.

கண்களில் கண்ணீரோடு!!!இருதயத்தின் ஒருபக்கம் ஏமாற்றத்தோடும் மறுபக்கம் நம்பிக்கையோடும்!!!

"சித்தப்பாக்கிட்ட சொல்லிட்டு வா!"

"கிளம்புறேன் சித்தப்பா!"-மனதை கூறுபோட்டது அவள் அழும் காட்சி!!அவரோ கற்சிலையாய் நின்றார்.

என்ன உலகமடா இது!!!

எதில் அழகிய மலர்களை இறைவன் பூத்து குலுங்க செய்தானோ!அதில்,எரிமலைகளையும் வளர்த்தான்.கங்கை நீரை படைத்த உலகத்தில் கடல் நீரையும் படைத்தான்.

சகல சித்தியும் படைத்தவன் அவற்றை காட்சி பொருளாக்கி விட்டான்!!உன் விதி சற்றும் விளங்கவில்லை இறைவா?????

"போறதுக்கு முன்னாடி இதுல கையெழுத்து போட்டுட்டு போ!"-சொத்து பத்திரத்தை நீட்டினார்.

"சித்தப்பா?"

"போடு!"

"போட்டுட்டு வா!"-நிலாவின் வார்த்தையை மதித்து கையெழுத்திட்டாள்.

கிளம்பும் முன்,

"ஒண்ணை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் மிஸ்டர்...நிச்சயம் நீங்க செய்த தவறுக்கு மன்னிப்பு தேடி வருவீங்க!பணத்தைவிட பாசம் தான் பெரிசுன்னு நீங்க வருத்தப்படுவீங்க!ஆனா,அப்போ நீங்க கேட்ட மன்னிப்பு உங்களுக்கு கிடைக்காம கூட போகலாம்!"-என்று வைஷ்ணவியை அழைத்து கொண்டு நகர்ந்தாள் வெண்ணிலா.

காரில் கற்சிலை போல அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி.

அவளுக்கு ஆறுதல் கூறவும் முடியுமா என்று நிலாவிற்கும் தெரியவில்லை.

வீட்டிற்குள் பிரவேசிக்கும் போதே,மகேந்திரன் குறுக்கும் நெடுக்குமாக நடப்பது தெரிந்தது.

வைஷ்ணவி வெளியே நின்றாள்.

"நிலா!என்னடா ஆச்சு?"-அவள் விவரத்தை கூறினாள்.

"நல்ல முடிவை எடுத்து இருக்க!"

"அம்மாக்கிட்ட?"

"அவ இன்னும் கூட்டிட்டு வரலையான்னு கோபமா இருக்கா!"

"தேங்க்ஸ்பா!"

"அடி வாங்குவ!அப்பாக்கு தேங்க்ஸ் சொல்லுவியா?"

"ஸாரிப்பா!"

"நிலா!"-அவள் நாக்கை கடித்து கொண்டாள்.வைஷ்ணவியை பார்த்தவர்,

"அம்மா மீனா!மறுமகளுக்கு ஆரத்தி எடு!"

"இதோ வந்துட்டேன்!"-புன்சிரிப்போடு வந்து ஆரத்தி எடுத்தார்.திலகமிட்டார்.

"உள்ளே வாம்மா!"-அவள் நிலாவை பார்த்தாள்.

"வா!"-வலது காலை எடுத்து வைத்து வந்தாள்.

"இனி இது தான் உன் வீடு!"-அவள் கண்கள் கசிந்தன.

"ஆ...இந்த வீட்டு மஹாலட்சுமி அழ கூடாது!"-தடுத்தார் மீனாட்சி.

"அப்போ நான் யாரும்மா?"

"நீ பார்வதி!என் பையனுக்காக ஒருத்தி பிறந்திருக்கா!பொண்ணுக்காக பிறந்தவனும் சீக்கிரம் கிடைத்தால் நல்லா இருக்கும்!"-கவலையோடு அவளை பார்த்த மகேந்திரனின் விழிகள் நிலாவின் முகத்தில் படர்ந்த நாணத்தை பார்த்து குழம்பின.

"நிலா!நீ வைஷ்ணவியை மாடிக்கு கூட்டி போ!"

"சரிங்கம்மா!"-வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு மேலே செல்ல,

"ஏ...நிலா!என் போன் பார்த்தியா?"என்றப்படி எதிர்ப்பட்டான் விஷ்வா.

எதிர்பாரா விதமாக  வைஷ்ணவியை பார்த்தவன் ஸ்தம்பித்து போய் நின்றான்.

காண்பது கனவா?என்றிருந்தது...

அவள் தலை நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை.

"ஹலோ!பிரதர்!"-சுயநினைவுக்கு வந்தவனாய் நிலாவை பார்த்தான்.

"இனி இவ இங்கே தான் இருப்பா!நீங்க அவுட் ஹவுஸ்ல தங்கிக்கோங்க!"

"எது?"

"கேட்கலையா?"

"ஏன்?"

"அது...வைஷூ  நீ அந்த ரூம்ல தங்கிக்கோ!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.