(Reading time: 20 - 40 minutes)

ண்கள் இனி அழுகை தான் உனக்கு துணை என்று சொல்லாமல் சொல்லின.

"இவ போக்கே சரியில்லை!நீங்க சாப்பிட வாங்க!"

"எனக்கு தலைவலிக்குது மீனா!நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்!"-அவர் அறைக்கு சென்றுவிட்டார்.

தந்தையின் மனம் சதக்கூறிட்டதை போன்ற வேதனையை அனுபவித்தது.

தன் பத்திரமாய் சேகரித்த அவள் சிறு வயது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை பார்த்தார்.அவள் தாய்,தந்தை அருகில் இருந்தாலும் மகேந்திரனிடமே ஒட்டிக் கொண்டு இருந்த நினைவுகள்.

அவளுக்கு பக்கபலமாய் இருக்க வேண்டிய நானே!அவளை ஒதுக்கிவிட்டேனே!!!!!! என்றது ஆழ்மனம்.

அவள் நிச்சயம் எதிலும் ஈடுப்பாடு வைக்க மாட்டாள்.என்ன செய்வது???அவளுக்கு ஒரு வாய்ப்பு தந்திருக்க வேண்டும்!!இந்த விஷயம் ஊராருக்கு தெரிய வந்தால் அவள் தானே தலைகுனிவாள்???

என்ன செய்ய போகிறேன்!!என் வாழ்வின் புண்ணியங்களின் மறு உருவம் என் மகள்.அவள் மேல் பாவப்பழியை சுமக்க விடுவதா?இறைவா...!!எந்த நிலையையும் தாங்கும் தைரியத்தை என் மகளுக்கு நீ தான் தர வேண்டும்!!!

அசாத்தியமான அன்பு!!!

என்ன எடுத்துக்காட்டு கூறுவேன்???இந்த தந்தையின் அன்பிற்கு???இந்த பிரபஞ்சத்திலும் நிச்சயம் ஒரு உதாரணம் இல்லை.

மருத்துவமனைக்கு போகாமல் பார்க்கிற்கு சென்று தனிமையில் அமர்ந்தாள் நிலா.

கண்கள் மூடி அமர்ந்திருந்தாள்.

திடீரென காதருகே யாரோ பயமுறுத்த கத்த,பதறியப்படி எழுந்தாள்.

"ஏ..லூசு!நான்தான்டி!இங்கே என்ன பண்ணுற?"-என்றான் ரஞ்சித்.அவள் மனதில் என்ன நினைத்தாலோ தெரியவில்லை.திடீரென அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

"ஏ...இதுக்கு போய் பயந்தியா?"-அவளின் அணைப்போடு விசும்பலும் கேட்க குழம்பினான் ரஞ்சித்!!

"அம்மூ?"

"............"

"அம்மூ!"

"............"

"என்னம்மா ஆச்சு?இங்கே பார்!"-அவள் முகத்தை நிமிர்த்தினான்.

"செல்லம்...என்னடி ஆச்சு?எதுக்கு அழுகிற?"

"ரஞ்சு...!"

"வீட்டில அப்பா எதாவது சொன்னாரா?"

"................"

"என்னவாம் அவருக்கு?"-அவள் மாங்கல்யத்தை எடுத்து காண்பித்தாள்.அதை பார்த்தவனுக்கு எல்லாம் புரிந்தது.

"சொல்லிட்டியா?"

"ம்..."

"பேச வேண்டாம்னு சொன்னாரா?"-அழ ஆரம்பித்தாள்.ரஞ்சித் அவளை அணைத்துக் கொண்டான்.

"சரி...அழாதே!எல்லாம் சரியாகிவிடும்!"

"எனக்கு பயமா இருக்கு!"

"ஏ...நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்!நான் பார்த்துக்கிறேன்!"-இங்கு  ஒரு பெண்ணின் நலனுக்காக  அவள் மேல் உரிமை கொண்ட இருவர் மோத போகிறார்களா?

அப்படி மோதினால்...அதன் விளைவையும் அனுபவிக்க போவது கன்னிகை அல்லவா??

என்ன நடக்க போகிறது???

"மாமா!"-எதையோ சிந்தித்து கொண்டிருந்த பிரபாகரனின் சிந்தனையை கலைத்தான் பிரபு!!!

"என்ன?"

"உங்க கூட பேசணும்!"

"நிலா விஷயம் தவிர எதுவாக இருந்தாலும் பேசு!"

"நான் அவளை பற்றி தான் பேச போறேன்!"-அவர் அமைதியாக இருந்தார்.

"எனக்கு அவ வேணும்!"-அதிர்ச்சியாக அவனை பார்த்தார்.

"என்ன?"

"எனக்கு நிலா வேணும்!"

"நிச்சயம் சம்மதிக்க மாட்டேன்!"

"சம்மதித்து தான் ஆகணும்!எனக்கு அவ வேணும்.அவளுக்காக எதையும் செய்வேன்!உயிர் மேல உனக்கு ஆசை இல்லையா?"

"சங்கர்!அவ பாவம்டா!அவளை விட்டுவிடு!வேற என்ன கேட்டாலும் செய்றேன்!"

"எனக்கு அவ வேணும்!நான் சொல்றதை மட்டும் செய் போதும்!"

"உன்னை கெஞ்சி கேட்கிறேன்!"

"இதுக்கு மேல பேச வேண்டாம்!"-என்று சிலவற்றை கூறினான்.

மனம் நொடித்து போனார் பிரபாகரன்.

தனது அறையில் அழுது கொண்டிருந்தாள் வெண்ணிலா.மாலை வந்தது முதல் வெளியே வரவே இல்லை!!

இப்போது அவளுக்கு நிலைத்திருக்கும் ஒரே ஆறுதல்,ரஞ்சித் மட்டும் தான்!!!

கைப்பேசி சிணுங்கியது...

எடுத்தாள்...

அவன் தான்!

கண்களை துடைத்துக் கொண்டு பேசினாள்.

"ஹலோ!"

"அழுதியா அம்மூ?"-ஒரே வார்த்தையில் கண்டுப்பிடித்து விட்டான்!!!

"அது..வந்து.."

"இல்லைன்னு நீ பொய் சொன்னா!அதை நம்ப நான் முட்டாள் இல்லை!"

".............."

"இப்போ என்னவாம் உன் அப்பாவுக்கு?நான் வந்து பேசட்டா?"

"ரஞ்சு..ப்ளீஸ்!"

"என்னடி ப்ளீஸ்?நீ அவர் பொண்ணு தான்!அதுக்காக உன்னை அழ வைப்பதை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன்!நீ பேசாம நம்ம வீட்டுக்கு வந்துவிடு!"-அவனது உரிமை மனதை மயிலிறகால் வருடியது.

"என்ன பதில் சொல்லு!"

"ரஞ்சு பொறுமையா இரு!"

"இதோ பார்!!நீ இப்படியே அழுதுட்டு இருந்தா!நேரா உன் வீட்டுக்கு வந்து உன்னை கூட்டிட்டு வந்துடுவேன்!எனக்கு அந்த உரிமை இருக்கு!"

"நான் அப்பாவை மீறி எதுவும் பண்ண மாட்டேன்!"

"நல்ல கொள்கை...!!!அப்போ உன் அப்பா சம்மதிக்கலைன்னா என் கூட வர மாட்ட அப்படி தானே!!"-என்ன இது இவனும் விலகுகிறான்??இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இவனும் புரிந்து கொள்ள மறுக்கிறானே!!!எனக்கு ஏன் இந்த சோதனை???மனம் உடைந்து போனாள் வெண்ணிலா.

இனி இருள் தான் வாழ்வா???அல்லது வாழ்க்கை மொத்தம் இருளா????

வாழ்க்கை ஒரு விசித்ரமான ஆசான்.தேர்வை எழுத வைத்துவிட்டு அதன் பிறகே பாடத்தை கற்று தருகிறது.ஆனால்,இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மனிதனோ!!!வாழ்வில் சறுக்கப்பட்டதாய் சரித்திரம் இல்லை!!!

உண்மையில் நாம் பெருமை கொள்ள வேண்டும்!!!நாம் வாழ்க்கையால் பரிசோதிக்கப்பட்டு புனிதமடைகிறோம்!!!!

அதனால் நாம் வாழ்வில் மிகுந்த தைரியத்தையும்,நம்பிக்கையும் பெற்று வெற்றி பெறுகிறோம்.

அதனால் அதை ஆனந்தமாக ஏற்கலாம்!!ஏனெனில் எல்லாம் கொஞ்ச காலம் அல்லவா???

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.