(Reading time: 20 - 40 minutes)

"ம்..."

"போ!"-அவள் நகர்ந்தாள்.

"என்னடி நடக்குது இங்கே?"

"பொய் சொல்ல மனசு வரலை!உன் லவ் ஜெயிச்சிடுச்சு!"

"என்ன?"

"அவள் வீட்டில் நடந்தவற்றை கூறாமல், மீதியை கூறினாள்.

"நிலா?நீ சொல்றது?"

"உன் மேலே சத்தியமா!"-அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தாள்.

"ஆனா!அவ எப்படி இங்கே?"-கேட்டுவிட்டான்.

"விஷ்வா!அவ மனம் ஆறுதல் தேடி வந்திருக்கு!எக்காரணத்துக்காகவும் அவளை கஷ்டப்படுத்தாதே!"

"புரியலை..."-அனைத்தையும் கூறினாள்.கேட்டவனின் விழி ஒரு சொட்டு கண்ணீரை கொண்டு மண்ணை நனைத்தது.

"நீ அன்னிக்கு என்கிட்ட ஒண்ணு சொன்ன ஞாபகம் இருக்கா?"

"என்ன?"

"நம்மை மீறி ஒரு சக்தி இருக்கு!அது மேலே நம்பிக்கை வைன்னு!"

"ஆமா!"

"இதுவரைக்கும் அதை நம்பாத நான்!இப்போ அதை நேர்ல பார்த்து நம்புறேன் நிலா!"-அவனது மொழியின் அர்த்தம் உணர்ந்தவள்,

"ஹே,...பைத்தியக்காரா!!அறிவில்லை...என்ன வார்த்தை இதெல்லாம்?"

"வேற எப்படி பேசுறதுன்னு தெரியலை!!நம்பிக்கை இல்லை என்றாலும் அந்த கடவுள் எனக்காக ஒரு வரம் தர சம்மதித்தால் அடுத்த ஜென்மத்துல உனக்கு குழந்தையா பிறக்கணும் நிலா!"-அவனது உருக்கமான பேச்சு அவளை பலமாக வீழ்த்தியது.

நிலா அவனை அணைத்து கொண்டாள்.அவன் கண்ணீர்த்துளிகள் அவள் மனதை ஈரமாக்கின.

அன்றிரவு...

"அப்பா!"

"என்னடா?"

"உங்கக்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்!"

"சொல்லு!"

"நான் உங்கக்கிட்ட எதாவது பொய் சொன்னா என் மேலே கோபப்படுவீங்களா?"

"இது சொன்ன பொய்க்காகவா?சொல்ல போற பொய்க்காகவா?"-அமைதி காத்தவள்.

"சொன்ன பொய்க்கு!"

"மன்னிப்பு தரேன்!நீ பொய் சொன்னாலும் அதை உணர்ந்து வந்து உண்மை சொல்ற!அதனால்,பண்ண பாவத்துக்கு மன்னிப்பு தரேன்!"

"................"

"ரஞ்சித் விஷயமா?"

"அப்பா?"

"நீ தயங்கும் போதே தெரியுது சொல்லு!"-மனதை உறுதியாக்கியவள்,கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காண்பித்தாள்.அதை பார்த்தவரின் இதயம் சுக்கலானது.

நிலாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"மன்னிச்சிடுங்கப்பா!"

"நிலா?"

".............."

"நீ என்ன காரியம் பண்ண?உன்னால எப்படி இதைப் பண்ண முடிந்தது?"

"அப்பா?"

"அவன் ஏற்கனவே கல்யாணம் ஆன ஒருத்தன்!"

"இல்லைப்பா!உண்லையிலே...என்ன நடந்ததுன்னா!"-அவர்களிடையே இருந்த இரகசியத்தை உடைத்தாள்.

சத்தியமாய் இன்னொருவராய் இருந்தால் கொன்றிருப்பார்!மகேந்திரன் மௌனம் சாதித்தார்.அவர் மனம் உடைந்தது!!!

"நான் என்ன சொல்ல?ஒரு பென்சில் வாங்கினாலும் அப்பா சம்மதிக்கணும்னு சொன்ன நீ!!வாழ்க்கையை தீர்மானிக்கிற அளவு வளர்ந்துட்ட!"

"கல்யாணம் பண்ணி வைன்னு சொன்னாலும் பரவாயில்லை!பண்ணிட்டு வந்து நிற்கிற?"-அவள் உடைந்து போனாள்.

"பெருமை பட்டேனேம்மா?இது நியாயமா?"

"அப்பா...சூழ்நிலை அப்படி!!"

"பேசாதே!"-முதல்முறையாய் கோபமாக பேசுகிறார்.

"சூழ்நிலை மேலே பழி போடாதே!எந்த நிலைமையையும் சமாளிக்கிற சக்தியை கடவுள் மனிதனுக்கு தந்திருக்கான்!இது அனர்த்தம்!!!தப்பு பண்ணிட்டு அதை நியாயப்படுத்தாதே!!!"

-நொறுங்கி போனாள் நிலா.நடந்தது நிச்சயம் அவளால் நிகழ்ந்தது இல்லை!!ஆனால்,பழி ஏற்கிறாள்.

அவர் கண்ணிலும் கண்ணீர்!!!

"நான் பண்ண தப்புக்கு மன்னிப்பு இல்லையா?"

"நான் கொடுத்த வாக்கை மீறாதவன்!நீ பண்ண தப்பை மன்னிக்கிறேன்.ஆனா,நீ அதுக்கான தண்டனையை அனுபவித்தே தீரணும்."

"............."

"நீ உன் விருப்பப்படி என்ன வேணுமானலும் பண்ணிக்கோ!என் மேலே சகல உரிமையும் எடுத்துக்கோ!ஆனா,இனி ஒரு வார்த்தைக் கூட என் கூட பேச வேண்டாம்!"

"அப்பா!"

"நான் மனதளவுல இறந்துட்டேன்!என் நிஜமே என்னை ஏமாற்றிடுச்சு!இதுக்கு மேலே முடியாது!நீ உன் ரூம்க்கு போகலாம்!"-இருதயமானது கூரிய ஈட்டியை கொண்டு கிழிக்கப்படுவதை விட எண்ணில் அடங்கா வலியை வாய் மொழியானது எளிதில் அளித்துவிடும்!!!

ஒரு தந்தையின் நிலையும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

அவளாவது தவறுக்கு உடைந்தையானால்,

அவள் தந்தை??

அவள் மேல் நம்பிக்கை வைத்ததை தவிர எதையும் செய்யவில்லை.

இங்கு யார் மீது நியாயத்தை நியாயப்படுத்துவது??எனக்கு புரியவில்லை...

அன்றைய தினம் வரை அன்பிற்கு இலக்கணம் எழுதிய இருவர்,இரு துருவங்களாய் மாறினர்.மகேந்திரன் நிலாவின் முகத்தை பார்ப்பதற்கே தயங்கினார்.

நீண்டு வளருகின்ற ஒரு விருட்சத்திற்கு நீர் ஆதாரம் முக்கியமாகும்.நீர் ஆதாரம் இல்லை என்றால் விருட்சமானது வறண்டு போவது உறுதி!!!

ஆனால்,அந்த விருட்சத்தை தாங்கி பிடிக்க மண்ணானது மனம் வைக்கும் வேண்டும் அல்லவா???

நிலமானது எதையும் தாங்க கூடாது என்ற சபதம் ஏற்றால்...

உயிரிங்களின் வாழ்வாதாரம் என்னவாகும்???

மனமானது ஆறுதல் தேட தாய் மடியை நாடும்!!!ஆனால் இவளுக்கு தந்தை தாயின் நிலையில் இருந்தார்.ஆனால்,ஆத்திரமானது வஸ்திரம் கொண்டு நேத்திரம் மூட,அவள் நிலையை யோசிக்க மறந்தார் மகேந்திரன்.

"ஏ..நிலா!சாப்பிட வா!"

"வேணாம்மா!"

"ஏன் வேணாம்?"

"பசிக்கலை!"

"என்னடி ஆச்சு உனக்கு?காலையில இருந்து மந்திரிச்சு விட்டா மாதிரி இருக்க?"

"ஒண்ணுமில்லை.."

"இதோ பாருங்க உங்க பொண்ணை!சாப்பிட கூப்பிடுங்க!"-மகேந்திரனிடத்தில் குறை கூறினார் மீனாட்சி.அவர் வாயை திறக்கவே இல்லை.

"என்னாச்சு உங்க இரண்டுப் பேருக்கும்?"

"மா!நான் ஹாஸ்பிட்டல் கிளம்புறேன்மா!"

"நிலா!சாப்பிட்டு போ!"-அவர் பேச்சை காதில் வாங்காமல் நடந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.