(Reading time: 21 - 42 minutes)

ஸ்டெரிலைசர்பா…” சிறு புன்னகை அவர் முகத்தில். “இல்ல குட்டி செல்லம் அவங்க அம்மா கூட ரெஸ்ட் எடுக்க போறாங்க…நீங்க ஒரு சிஸர்ஸும் நூலும்  கொண்டு வாங்களேன்….” அடுத்த நிமிடம் பவளம் கொண்டு வந்த சிஸர்ஸை வைத்து தன் ஷர்ட் பட்டனை கட் செய்து  பார்வையில் படும்விதமாக குழந்தையின் உடையில் அதை கட்டி வைத்தவர்,

“ என்ன இருந்தாலும் குழந்தை இதை வாய்ல போட்றாம பார்த்து எடுத்து வச்சிருமா” என மருமகளிடம் சொல்லியபடி பேத்தியை அருகில் நின்ற மகனிடம் கொடுத்தார்.

 இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என புரியாமலே அரணை தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள் சுகவிதா.

அவரிடம் குழந்தையை விட்டுச் செல்ல விருப்பமில்லாத ஒரே காரணத்தினால் தான் அவள் குழந்தையை எடுத்துப் போகிறாள் என அவருக்கும் புரிந்திருக்கும். ஆனால் ஒரு சிறு மறுப்பும் இல்லாமல், வர மறுத்த குழந்தையையும் சமாதானபடுத்தி……இத்தனை மென்மையான மனிதன் தன் மகனின் அரக்க தனத்தை சிறிதும் ஞாபகம் கூட இல்லாமல் மறந்து போவாரா? சொந்த பேத்தியின் மேல் வருகின்ற உருக்கம் அவளைப் பெற்றவளான பெண்ணாகிய என் மீது துளி கூடவா வராமல் போகும்? எத்தனை இயல்பாய் மகனோடு மனம் ஒத்து நான் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்?

“இது தான் நம்ம ரூம் சுகவிமா….” அரணின் வார்த்தையில் நடப்புக்கு வந்தவளுக்கு அந்த அறையை நிமிர்ந்து பார்க்க கூட தைரியம் வரவில்லை.

என்ன கொடும் ஞாபங்களை கொண்டு வந்து கொட்டுமோ….”நோ………நோ…..இங்கல்லாம் என்னால முடியாது…..தற்கொலை செய்துக்க கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காக நான் உயிரோட இருக்கிற மாதிரி ஒரு நிலைமல என்னை வந்து நிறுத்தாதீங்க…..உங்கள கெஞ்சி கேட்டுகிறேன் எனக்கு தனி ரூம் தந்துடுங்க…..உங்க கூடல்லாம் கண்டிப்பா என்னால முடியவே முடியாது….தலையே வெடிச்சிடும்….”

அறையைவிட்டு துள்ளி விலகிப் போய் அவள் அழுகையும் வலியுமாய் தன் இருகைகளால் தலையைப் பிடித்தபடி கெஞ்ச, திடீர் என அவளிடம் இப்படி ஒரு நடவடிக்கையை எதிபார்க்காதவன் அவள் வார்த்தையில் அவள் அளவு வேதனை தானும் கொண்டான் முகத்தில்.

“இந்த வீட்ல எதுனாலும் உன் இஷ்டம்தான் சுகவிமா….தயவு செய்து இப்டி பதறாத…..கெஞ்சாத….இப்போ தலைல என்ன செய்து…? ஜஃஸ்ட் அ மினிட் …இப்பவே டாக்டரை கூப்டுறேன்…”

ஒரு கையில் குழந்தையை பாதுகாப்பாய் பற்றிய படி தன் மொபைலை அவசரமாக  தேடினான்…

“இல்ல…..ஒன்னும் இல்ல…எனக்கு தனி ரூம் தாங்க போதும்….”

“ஓகே…ஓகேடா…நெக்ஸ்‌ட் ரூம் எடுத்துக்கோ…” அடுத்த அறையின் கதவை திறந்து வைத்தான் வேகமாக.

தயங்கி தயங்கி இவள் உள்ளே நுழைய அதன் பின் உள் வந்தவன் ஒரு சுவர் முழுவதும் பரவி இருந்த வாற்றோபை ஒவ்வொன்றாக திறந்து குழந்தைக்கான எதுவெல்லாம் எங்கிருக்கிறது என காண்பித்தான்.

“இந்த ரூமை…..இந்த ரூம் ஹயாக்குன்னு அரேஞ்ச் செய்த ரூம் சுகவிமா…உன்னோட திங்க்ஸையும் இங்க கொண்டு வரச் சொல்றேன்…” என்றவன் மறுபுற சுவரிலிருந்து ஆள் உயர ஓவியத்தை திறக்க அது கதவாக திறந்தது.

‘அடுத்தது நம்ம ரூம்…ஐ மீன் இப்போ என் ரூம். என் ரூம்ல இருந்து பூட்டிக்கிற மாதிரிதான் இந்த கதவுக்கு லாட்ச் உண்டு…குழந்தை அவ ரூமை உள் பக்கமா பூட்டிக்க கூடாதேன்னு அப்டி செய்தது….பட் இப்போ ஆள் வர சொல்லி உன் ரூம்ல இருந்து பூட்டிக்கிற மாதிரி லாக் ஃபிக்‌ஸ் செய்ய சொல்றேன்…. அதுவரைக்கும் என் ரூமை லாக் செய்து கீ உன்ட்ட தந்துடுறேன்…நீ டென்ஷன் இல்லாம தூங்கு… மத்தபடி இன்டர்காம் இங்க இருக்குது…உன் மொபைலையும் பக்கத்துல வச்சுக்கோ….என்ன விஷயம்னாலும் ஒரு ரிங்கலா யாராவது வந்துடுவோம்… இரு வாரேன்…”

விளக்கமாக சொன்னவன் அவசரமாக வெளியே சென்றுவிட்டு மீண்டுமாக உள்ளே வந்தான். படுக்கைக்கு அருகில் இருந்த சிறு மேஜை மீது  அந்த அழைப்பு மணியை வைத்தான். ஜஸ்ட் இதை ப்ரஸ் செய்தா கூட போதும் கண்டிப்பா வந்துடுவோம்….எனக்கு உன்னை தனியா விட…” என தொடங்கியவன் பேச்சை பாதியோடு நிறுத்திவிட்டு குழந்தையை சுகவிதா கையில் கொடுத்தான். அதோடு அவனது அறை சாவியையும். கையோடு அவளுக்கு இப்போதைக்கு தேவையான மாற்று உடையும் கொண்டு வந்திருந்தான்.

“எதுக்காகவும் டென்ஷன் ஆகாம இரு சுகவிமா எல்லாம் சரி ஆகிடும்…டேக் ரெஸ்ட்…..பால்குட்டிய பார்த்துக்க உனக்கு யாரும் வேணும்னா…”

அவன் பேச்சை பாதியில் இடை வெட்டினாள் சுகவிதா “ எங்க வீட்ல இருந்து யாராவது வேணும்….என் ஹெல்த் நார்மலா இருந்திருந்தா ஹயாவை நான் தனியா பார்த்திருப்பேன்…இப்போ எனக்கு அது முடியும்னு தோணலை….ஆனா உங்களை நம்பி…உங்க ஆட்களை நம்பி என்னால இவளை விட முடியாது…எனக்கு என் வீட்ல இருந்து யாராவது வேணும்….”

ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தவன்…”உங்க வீட்ல இருந்து வருவாங்கன்னா எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லைமா….” என்று வெகு இலகுவாக விட்டுகொடுத்தான்.

“உன் மொபைல்ல உன் பேரண்ட்ஸ் நம்பர் இருக்குதான…அவங்களை கூப்டு பேசு…நம்பர் இல்லைனா நான் தாரேன்…”

“……………….”

“வேற எதாவது வேணுமாடா…?”

“………………………….”

“சரி கிளம்புறேன்…..எதுனாலும் கூப்பிடு……பை ஹயாகுட்டிமா….” மனமில்லாமல் அவன் விடை பெறுவது சுகவிதாவிற்கு கண்ணில் பட்டாலும் கருத்தில் உறைத்தது அவனது பை தான். மகள் மறு நிமிடம் பை சொல்பவருடன் வெளிநடப்பு செய்ய துள்ளிக் கொண்டு போவாளே! அதோடு மறுத்தால் மனை ஆட்டும் படலம் அழுகையால் நிறைவேற்றப்படுமே…

சுகவியின் அருகில் மெத்தையில் அமர்ந்து தன்னை சுற்றி ஓடிய தாயின் ஒற்றை கையின் தங்க வளையல்களை பிடித்து இழுத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த குழந்தை இந்த பை வார்த்தையில் தன் தகப்பனை நிமிர்ந்து பார்த்து அள்ளும் புன்னகையுடன் இரு கை நீட்டுகிறது. தலையை மேலும் கீழுமாக ஆட்ட வேறு செய்கிறாள். தூக்கு என்பதன் ஹயா மொழி அது.

“பை சொன்னா கூட வருவேன்னு அழுவா…ஏன் இப்ப சொல்லி தொலச்சீங்க…எனக்கு ரெஸ்ட் வேணும்…” வெடிக்கிறாள் சுகவிதா.

“ஹேய் கூல்…இவ்ளவுதான….”தன் மகளை  ஆசையாய் அள்ளிக் கொள்கிறான் கைகளில். அறைக்குள் சுற்றி ஒரு நடை. “இப்போ நீ பை சொல்லு சுகவி..”

“ பை ஹயாகுட்டி..”

தாயின் பை யில் இவளிடமாக தாவி வருகிறது ஹயா.

“பார்த்துக்கோ வெளிய லாஞ்ச்…இல்ல உள்ள பால்கனில ஒரு ரவ்ண்ட் கொண்டு போய்ட்டு வந்து வச்சுக்கோ..”

வெளியேறி விட்டான் அரண்.

இவள் வீட்டிலும் அவளது அப்பா அனவரதன் வெளியில் கிளம்பும் போது பார்த்துவிட்டால் ஹயா அழுவாள் தான். அவரும் கொஞ்சி முத்தமிட்டு மனமில்லாமல்தான் விட்டுச் செல்வார் பேத்தியை. அவர் சென்ற வெகு நேரம் வரை அழுது கொண்டிருப்பாள் குழந்தை. இப்படி செய்திருக்கலாம் என்று அப்பொழுது ஒருவருக்கும் தோன்றியதில்லை.

ம்..சரியான ஃப்ராடு குடும்பம்ஏமாத்றதுல பி ஹெச் டி ….எரிச்சல் பொத்துக் கொண்டு வருகிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.