'யதா யதா ஹி தர்மஸ்ய கிலாவிரபவதி பாரதா!அப்யுதானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரீஜான்யஹம்!!பரித்தாராய சாகுனா விநாஷாயக துஷ்கிரதாம்!!தர்ம சந்ராக ராகுதாயா சாம்பவாமீ யுகே யுகே!!!"-இதன் பொருள் தர்மத்தின் வாழ்வு தனை சூதானது சூழும் பொழுதினில்..அதர்மத்தை அழித்து தர்மத்தை ஸ்தாபிக்க நான் அவதரிப்பேன்!இது யுகம் யுகமாய் நிகழும்!என்று வாசுதேவர் நமக்களித்த வாக்காகும்!!
தேவமகன் குதிரையில் தோன்றுவான் என்று எண்ண வேண்டாம்!நாடி வருபவரின் மனகுறை தீர்க்க அரணாய் நிற்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவன் பிறைசூடனின் மறுஜென்மம் தான்!இக்கதையில் நாடி வருபவர் யாரோ!அவரின் மனகுறை களையப்படும்...ஆனால்,களை எடுப்பது யார் என்பது குழப்பமே!!!!
"அப்பா!"-மௌனமே அவதாரமாய் அமர்ந்திருந்தார் மகேந்திரன்.
"நான் மறுபடியும் அமெரிக்கா போறேன்பா!"-கண்களை திறந்து அவளை உற்று பார்த்தார்.
"திரும்பி எப்போ வருவேன்னு தெரியாது!ஆனா,ரொம்ப நாள் ஆகும்!"-இந்நிலையில் என்ன பதில் கூறுவது என்றே அவருக்கு புலப்படவில்லை.அவள் அனுமதி கேட்கவில்லை.தகவல் கூறுகிறாள்.தனிமனிதனின் உரிமையில் தலையிடுவது நியாயமானதல்ல என்பதை மகேந்திரன் நன்கறிவார்!இனி நான் வாழ்வில் எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என்ற பின் அவள் முடிவை தடை செய்யவும் முடியாது.என்ன செய்வது?
"போகும் பாதை தடம் மாறினால்,மனித இலக்கை பயம் பாதிக்கலாகுமா?"-என்றப்படி படி இறங்கி வந்தார் சூரிய நாராயணர்.
நிலா அமைதியாக நின்றாள்.
"ஸ்வீட்டி!இப்போ நீ ஏன் அமெரிக்கா போகணும்?"
"அங்கிள்!நான் கொஞ்ச நாள் அங்கே இருக்க நினைக்கிறேன்!"
"காரணம்?"-அவள் மௌனம் காத்தாள்.
"ஸ்வீட்டி!சூரியன் உதிக்கிற நேரத்துல என்ன நடக்கும் சொல்லு?"
"வெளிச்சம் வரும்!பூ பூக்கும்!"
"அப்பறம்?"
"இருள் மேல இருந்த பயம் போயிடும்!"
"சரியா சொன்ன!கொஞ்சம் யோசி!அந்த நேரத்துல நாம சூரியனை பார்த்து கண்ணை மூடிட்டா?"
"இருட்டா இருக்கும்!"
"இப்போ அந்த பைத்தியக்காரத்தனத்தை தான் நீ பண்ண போற!"-என்ன சொல்கிறார் இவர்?எதற்கு எதை முடிச்சு போடுகிறார்?
"புரியலை அங்கிள்!"
"சூரிய உதயம் போது புரிஞ்சிக்குவ!அமெரிக்காவும் நீ வேணாம்!அண்டார்டிக்காவும் போக வேணாம்!என் பேச்சை கேளு இங்கேயே இரு!"
"அங்கிள் என் நிலைமையை புரிஞ்சிக்கோங்க அங்கிள்!"
"எப்போதும் பிரச்சனையை பார்த்து ஓடாதே!நீ யாருக்கும் சளைத்தவள் இல்லை.உன்னை ஒதுக்குறவங்களுக்கு தான் இழப்பு!உனக்கில்லை...காலம் எதையும் மாத்துற சக்தி பெற்றது ஸ்வீட்டி!
உண்மை என்பது சிங்கம் மாதிரி நேரடியா இதுவரைக்கும் அதை எதிர்க்கிற துணிவு இதுநாள் வரைக்கும் யாருக்கும் இருந்ததில்லை."-வெண்ணிலாவின் மனதை அடியோடு மாற்றியது சூரிய நாராயணணின் பேச்சு!
"போய் தூங்கு ஸ்வீட்டி!புத்தம் புது விடியல்!நாளைக்கே உன் வாழ்க்கையில வரலாம்!"-வெண்ணிலா அமைதியாக சென்றாள்.
"நீ எந்த விஷயத்தை குறிப்பிட்டு சொன்ன சூர்யா?"-மகேந்திரனிடமிருந்து சற்று கடுமையான குரல் ஒலித்தது.
"உண்மைகள் பல நேரத்துல கோபத்தை வரவழைக்கும்!ஸ்வீட்டி உன் வளர்ப்பு மாஹீ!என்னிக்கும் தவறான வழியில போக மாட்டா!ஆனா,ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்!நிலா வாழ்க்கையில முடிவெடுக்குற உரிமை அவ தந்தால் மட்டும் தான் உனக்கு சொந்தம்!
நாளைக்கே உண்மை வெளி வரும் போது!உங்க யாராலும் அவ துன்பத்தையும் போக்க முடியாது!அவ கோபத்தையும் தாங்க முடியாது!"
"நிலா என் பொண்ணு!"
"உண்மைதான்!இமயத்தில் இருந்து பிறப்பெடுக்கிற கங்கை நதி!தன்னுடைய போக்கை மாற்றினால் பாரத தேசமே பாலைவனம் தான்!அதே சமயம் தன் கோபத்தை காட்டினால் பாரதமே தண்ணீருக்கு இரையாக வேண்டியது தான்!"
-மகேந்திரனின் மனம் தடுமாறியது.சூரிய நாராயணன் அமைதியாக அவ்விடம் நீங்கினார்.
அழகான இந்த ஸ்ருஷ்டியை தங்களின் தீர்க்கமான நேத்திரங்களால் காணுங்கள்!எங்கும் அழகின் சாட்சியே உள்ளது.நந்தவனங்களுக்கு இடையே இறைவன் அழகிய மலர்களை பூத்துகுலுங்க வைக்கிறான்.அதோ சற்று தூரத்தில் அமைதியே வடிவமாய் மாதா கங்கா தேவி பயணம் கொள்கிறாள்.வானில் பிறக்கும் சூரியனானவன் சகல காரிய சாட்சியாய் இருக்கிறான்.மனம் வேதனைகளை தொலைக்கிறது.மூச்சை இழுத்து விடுங்கள்!!
இயற்கையின் அழகை அனுபவியுங்கள்!!!
சற்று நேரத்தில் இப்படி கற்பனை செய்யுங்கள்!!!
பாய்ந்தோடிய கங்கையானவள் வற்றப்பட்டு பாலைவனத்தை பரிசாக தருகிறாள்.சூர்ய தேவன் கடும் வெப்பத்தால் உலகை அழிக்க போகிறார்.எங்கும் அவலம்!!!தூரத்தில் செல்லும் பெண்ணை காணுங்கள்!தலைவிரி கோலமாய்,சௌபாக்கியங்கள் துரந்து,கண்களில் கண்ணீரோடு அவள் என்னை காண்கிறாள்!நான் அவளை ஏமாற்றியதை போன்ற உணர்வு!அவள் யார் தெரிகிறதா?அவள் என் தாய் பூமாதேவி.விளைந்த இந்த பெரும் நாசத்தை அவளும் எதிர்நோக்கவில்லை.
மனிதனின் பேராசையால்,இச்சையால்,சுயநலத்தால் அவன் வேரோடு சாய்த்தது இதை தான்!!இன்றைய இயற்கை அழிவு!!மனிதனின் சுயநலத்தின் உச்சம்!!இங்கு நான் இதை கூற காரணம்!!!அநியாயமானது எங்கு ஒரு ஆணுக்கோ,பெண்ணுக்கோ இழைக்கப்படுகிறதோ!அங்கே அவன் மட்டும் அழியவில்லை.நீதியும் சேர்ந்து அழிகிறது!அதை கண் முன் நமக்கு காட்டுகிறான் இறைவன் பிறைசூடன்!!
தொடரும்
{kunena_discuss:821}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.