(Reading time: 8 - 16 minutes)

15. வாராயோ வெண்ணிலவே - சகி

க்னியை நீரில் அணையாமல் யாராலாவது பிடித்து காட்ட இயலுமா?

நிச்சயம் இயலும்...

அலை பாயாமல் அழகாய் பாயும் நதியில் உற்று கவனியுங்கள்...

Vaarayo vennilave

அக்னி பிழம்பாய் அரசாட்சி செய்யும் ஆதிதேவர் அதில் அழகாய் தெரிவார்.

அப்படியென்றால்,அசாத்தியமான செயல் அகிலத்தில் இல்லை.

ஆனால்,இயலாத காரியம் ஒன்று உண்டு!என்ன அது?அது...நமது மனநிலையை அறிவதே!!நெருக்கமானவர்களின் மனநிலையை அறிய இயலாதா என்ன?இயலும்...நான் கூற வந்தது..நமக்கும்,அவர்களுக்கு விலகலானது இருக்கும் போது!!மனம் அவர்களிடம் பேச ஏங்கும்!மறைத்து விடுவோம்!சர்வ நேரமும் அவர்களையே எண்ணுவோம்!மறக்க முயற்சி செய்வோம்.அவர்கள் மனம் தன்னை நாம் ஆராய்வோம்.நம் மனநிலையை தொலைத்துவிடுவோம்.சுற்றி இருள் இருந்தாலும் பயம் இருக்காது.காரணம்,மனம் தன்னை கவர்ந்தவர்களை எண்ணிக் கொண்டிருக்கும்!!!என் நிலையை புரிந்து கொள்ளாமல் துடிக்கும் இருதயமே!!உன்னோடு வாழ்தல் அரிது!!!!

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் திவ்யா.மனம் அதில் இலயிக்கவில்லை.சில காலங்களாக குடும்ப நிலை சரியில்லை.புதியதாக ஒரு பிரச்சனை பிறப்பெடுத்துள்ளது.குழந்தையில் காணாமல் போன பெண்ணை சரியாக 24 வருடங்கள் கழித்து தேடுகிறார்கள்.அத்தை சில காலங்களாக மனம் உடைந்து இருக்கிறார்!!!ஏன் என் குடும்பதிற்கு மட்டும் இந்த நிலை??அவள் சிந்தனையை கலைக்கும் வண்ணம் அவள் வயிற்றில் மெதுவாக எட்டி உதைத்தான் அவள் வயிற்றில் வளரும் பாலகன்.வாஞ்சையோடு தன் வயிற்றை தடவி பார்த்தாள்.யாருக்கு தெரியும்,!!!கருவிலே சக்கர வியூகத்தை உடைக்க கற்ற அபிமன்யுவை போல  இவனும் துன்பங்களை உடைத்தெரிய கற்றவனோ!என்னவோ?

"அம்மா!"-ஓடி வந்து தன் தாயை கட்டிப்பிடித்த ரோஹித்தை தடுத்து நிறுத்தினான் வயிற்றில் வளரும் அவன் சோதரன்!

என்ன நடந்தது என்று புரியாமல் விழித்தது அம்மழலை!!

"என்ன செல்லம்?"

"உன்னை பார்க்க இரண்டு பேர் வந்திருக்காங்க!"

"யாரு?"

"தெரியலைம்மா!"

"சரி போ!வரேன்!"

"சரிம்மா!"-அவன் ஓடிவிட்டான்.

யாராக இருக்கும் என்ற குழப்பத்தோடு நடந்தாள் திவ்யா.உள்ளே வந்து யாரென்று பார்த்தவளின் விழிகள் விரிந்தன.

"ப்ரியா!சஞ்சனா!நீங்களா?"-ஓடி சென்று ப்ரியாவை அணைக்க,மீண்டும் தடுத்தான் பாலகன்.அதை உணர்ந்தவள்,அவள் வயிற்றை தொட்டு பார்த்தாள்.

"எத்தனை மாசம்?"

"ஆறாவது!"

"ம்...கங்கிராட்ஸ்!"

"தேங்க்ஸ்...நீ எப்போ வந்த?எப்படி இருக்க?உன் ஹஸ்பண்ட் எங்கே?"

"அவர் பெங்களூர்ல இருக்காரு!அம்மாவை பார்க்க வந்தேன்!சஞ்சனாவும் சும்மா இருக்கான்னு அவளையும் கூட்டிட்டு வந்தேன்!சரி...நீ எப்படி இருக்க?எங்கே வீட்டில யாரையும் காணும்?"

"நல்லா இருக்கேன்!அவர் ஆபிஸ் போயிட்டார்!அத்தை கோவிலுக்கு போயிருக்காங்க!"

"காவ்யா எங்கே?"

"காவ்யா வெளியே போயிருக்கா!"-மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.யார் மனமும் அறியவில்லை,அடுத்து நடக்க போகும் அதிர்ச்சி கலந்த திருப்புமுனையை!!!!

ஆலயத்தில் மனமுருக பிராத்தித்தாள் வெண்ணிலா.விரைவில் அனைத்து பிரச்சனையும் தீர வேண்டும் என்பது அவள் வேண்டுதல் அல்ல!!!

பிரச்சனைகளை எதிர்க்கும் தைரியமானது கிடைக்க வேண்டும் என்பதே அவள் வேண்டுதல்!!!!

நம்மில் பலர் செய்யும் தவறு யாதெனின்,துன்பத்தில் இருந்து முக்தியை தா!என்று வேண்டுவதே!!அதை விடுத்து,துன்பத்தை எதிர்க்கும் ஆற்றலை தா!என்று வேண்டிருந்தால்,நிச்சயம் பல முத்துக்கள் சிப்பியை உடைத்து வெளி வந்திருக்கும் என்பது உறுதி!

முத்தானது சிப்பிக்குள் ஒளிந்திருந்தால்,இன்று அகிலமே அதை கொண்டாடுமா?இறைவனானவன் விலை மதிப்பற்ற பொருளை பலத்த பாதுகாப்போடு வைத்திருப்பான்.அப்பொருள் வெளி வர பயங்கர போராட்டம் தேவைப்படும்.இதில்,வேடிக்கை என்னவென்றால்..தனது பாதுகாப்பை அப்பொருள் உணராததே!!!அப்படி என்றால்,இது யாருடைய தவறு???இறைவனின் ஆணையை ஏற்ற பாதுகாப்பின் தவறா?பாதுகாப்பளித்த இறைவனின் தவறா?பாதுகாப்பை ஸ்வீகரித்த முத்தின் தவறா?தாங்கள் தான் பதில் கூற வேண்டும்!!

குளத்தின் நீர் வழி நின்ற ஆதவனின் பிம்பம்,தண்ணீரிலும் தகித்தது.

கண்களில் நீர் வழிய அதை பார்த்து கொண்டிருந்தாள் நிலா.

"நீ சூரியனுக்கு தூது விடுறீயா?இல்லை சூரிய பகவான் உனக்கு தூது விடுகிறாரா?"-பரிச்சயமான குரல் கேட்க திரும்பினாள்.

"அங்கிள்!"-அவள் விழிகள் விரிந்தன.

பிரகாசிக்கும் புன்னகையோடு நின்றிருந்தார் சூரிய நாராயணன்.

"எப்படி இருக்க ஸ்வீட்டி?"

"நீங்க எப்படி அங்கிள் இங்கே?"

"ஏன்?இது நான் பிறந்த ஊர்!நான் வர கூடாதா என்ன?"-சூரிய நாராயணன் மகேந்திரனின் நெருங்கிய நண்பர்.சாதூர்யமாக பேசுவதில் வல்லவர்.நிலாவின் சிறு வயது வாழ்க்கை குரு என்றும் கூறலாம்!!

"மாஹிக்கும்,உனக்கும் ஏதாவது பிரச்சனையா?"

"................"

"என்கிட்ட எல்லாத்தையும் அவன் சொல்லிட்டான் ஸ்வீட்டி!"-நிலா பயத்தோடு அவரை பார்த்தாள்.

"ரிலாக்ஸ்...!!!பையன் நல்லவனா?"

"ம்.."

"அப்போ கெட்டவனா?"

"இல்லை...அவர் ரொம்ப நல்லவர்!"

"தெரியுது!உனக்காக மூணு வருஷம் தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கானே!!"

"என்ன பெயர்?"

"ரஞ்சித்!"

"ம்...உனக்கு பிடித்த அதே சூரியனோட பெயர் தான்!என்ன பண்றான்?"

"பிசினஸ்!"

"அவனை பார்க்கலாமா?"

"நீங்க அவர் கூட சண்டை போட மாட்டீங்களே!"

"அவன் மேல அவ்வளவு லவ்வா?என்னை பார்த்தா வில்லன் மாதிரியா இருக்கு?நான் ஜெஸ்ட் அறிமுகத்துக்காக தான் கேட்டேன்!"

"வர சொல்றேன் அங்கிள்!"

சூரிய நாராயணன் ஆதரவாக நிலாவின் தலையை கோதினார்.

"ஸ்வீட்டி!உன் வாழ்க்கையில எந்த கஷ்டம் வந்தாலும்!நான் உன் கூடவே இருப்பேன்."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.