(Reading time: 17 - 34 minutes)

16. வாராயோ வெண்ணிலவே - சகி

னம் ஒன்றிய வேளையில் நெருப்பையும் கையில் ஏந்தலாம் என்பார்கள். மனம் முழுக்க கவலைகள் வாய்த்தப்பின் சிறுதுரும்பும் யானை பலம் கொள்ளும் எனவும் கூறுவர் சான்றோர். மனதை அடக்க வழி தெரியாமல் வாழ்வை தொலைத்தவர் பலர் உண்டு பாரத கண்டத்திலே!! மாபெரும் சேனைக்கு சேனாதிபதியாய் இருந்தாலும்,சிறு தோல்வி அவன் சீரிய வாழ்வை நாசமாக்கி வேடிக்கை பார்க்கிறது. தோல்வியோ!துன்பமோ!அது...மனிதனின் சத்ரூ அல்ல...!!அவனின் ஆசான்கள்!!

பள்ளி பருவத்தில் நம்மில் பலருக்கு நமது ஆசான்களை பிடிப்பதில்லை!காரணம்,பலபரீட்சை வைக்கிறார்களாம்!!சற்று நிதானமாய் சிந்தி மனமே!!!உனது ஆசிரியர்கள் இல்லை எனில்,நீ இன்று ஒரு சகாப்தம் எழுதி இருக்க மாட்டாய்!!! அப்போது துன்பங்கள் குறித்து உங்கள் கூற்று என்ன???

அன்று என் உயிரை உணர்வாக மாற்றியவள் இன்று அதீத துன்பத்தில் தவிக்கிறாள்!!!நான் அவள் கண்ணீரை துடைக்க இயலாமல் துடிக்கிறேன்!இதயம் வலித்தது  ரஞ்சித்திற்கு! நிலாவிடம் பேசி பல நாட்கள் ஆகின்றன... அவளிடம் பேச வேண்டும்!அவள் கண்ணீர் துடைக்க வேண்டும்!!அவள் நெற்றியில் முத்தமிட வேண்டும்!அவள் செவிகளில் என் காதலை பேச வேண்டும்!!!பல ஏக்கங்கள் மனதில் ஓடின.

Vaarayo vennilave

"ரஞ்சித்!"-காயத்ரியின் குரல் அவனை அழைத்தது.

"அண்ணி!"

"நான் உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்!"

"சொல்லுங்க அண்ணி!"

"அத்தை உங்க கல்யாணத்தைப் பற்றி பேச சொன்னாங்க!"

"நடந்து முடிந்ததை பற்றி பேசி பயனில்லை காயத்ரி!"-கார்த்திக் அவள் கேள்விக்கு பதில் அளித்தான்.அவன் திடீர் விஜயத்தையும்,பதிலையும் புரியாதவள் குழம்பினாள்.

"என்னங்க சொல்றீங்க?"

"ரஞ்சித் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்!"-அதிர்ச்சியில் உறைந்து போனாள் காயத்ரி.

"என்ன சொல்றீங்க?"

"வாயை திறந்து சொல்லுடா!"-கார்த்திக் மிரட்ட,ரஞ்சித் பேசலானான்.

"எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி அண்ணி!3 வருஷம் ஆகுது!"-அவன் அனைத்து விவரத்தையும் கூறினான்.

"இதை அத்தைக்கிட்ட எப்படி சொல்ல போறீங்க?"

"தெரியலை!"

"அவங்க எதாவது தவறா நினைத்துவிட்டால்?"

"என் நிலாவை அம்மாக்கு நிச்சயம் பிடிக்கும்!"

"எந்த அம்மாக்கும் தன் மகன் தன் அனுமதி இல்லாம தன் திருமண வாழ்க்கையை முடிவு பண்ணிட்டா கோபம் வர தான் செய்யும்!"ரஞ்சித் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான்.

"நான் செய்த தவறால எத்தனை பேர் மனசு வேதனைப்படுது!"-மனதளவில் அவன் தளர்ந்து போனான்.

"என்னங்க!"-காயத்ரி கார்த்திக்கை பார்த்தாள்.

"ரஞ்சித் அதெல்லாம் ஒண்ணுமில்லைடா!"

"உனக்கு தெரியாதுண்ணா! தப்பு பண்ணது நான்!அன்னிக்கு ஒருநாள் நான் யோசித்திருந்தா... இன்னிக்கு எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை!"

"ரஞ்சித்!"

"ப்ளீஸ்ணா! என்னை கொஞ்சம் தனியா விடு!"-மனம் தளர்ந்த வேளையில் தனிமையை நாடினான் ரஞ்சித்!இப்போது இவன் கவலைகளுக்கு மருந்து எங்குள்ளது??

தெரியவில்லை...

வானை பிளந்து கொண்டு கடும் மழை பொழிந்தது... கண்களால் எந்தக் காட்சியையும் காண இயலவில்லை.அந்த அளவிற்கு மழை!!! இயற்கையின் அழகும்!! ஆபத்தாகிறது!!!

கார் வேறு பாதியில் நின்றுவிட்டது!!! மெக்கானிக்கும் வர மாட்டான் இந்த மழையில்!!! புரியாமல் விழித்து கொண்டிருந்தாள் வெண்ணிலா. அவளும் மழையில் முழுதும் நனைந்துவிட்டாள்!! நீண்ட நேரம் கழித்து மழை விட்டு தூரல் போட தொடங்கியது!!!! உதவிக்கு யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்தாள்!!! விஷ்வாவிற்கு போன் செய்தால் அவன் எடுக்கவில்லை. கைகளை கட்டிக் கொண்டு நின்றுவிட்டாள்!மனிதனுக்கு அடுக்கடுக்காய் எத்தனை இன்னல்கள்!!!

தூரத்தில் இருவர் குடித்துவிட்டு வந்தனர்.அவர்களை பார்த்தால் யோக்கியமானவராய் தென்படவில்லை. மனதில் சற்றே பயம் குடி கொண்டது. அவர்கள் இவளை நோக்கி தான் வருகின்றனர். இறைவா!என்னை காப்பாற்று!மனதார வேண்டி கொண்டது பெண்மனம்.

அவர்கள் இவளருகே வந்துவிட்டனர். நிலா சற்று நடுங்கி போனாள். இந்நிலையில் ஒரு பாதுகாப்பு அவளுக்கு கிடைக்க வேண்டும்!!! தம்மில் பலர் ஏன் நான் உட்பட..ரஞ்சித்தோ!விஷ்வாவோ வருவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம்!!

ஆனால்,வந்தவன் சங்கர்!!! அவனது கார் அவளருகே நின்றது!!

"இதோ பாருடா!காப்பாத்த வந்துட்டாரு!"-ஒருவன் கேலி செய்தான்.சங்கர் அவன் பேச்சை பொருட்படுத்தவில்லை.

"வண்டியில ஏறு!"-நிலா அப்படியே நின்றாள்.

"அவ தான் வர மாட்டான்னு நிக்கிறாளே! எங்கக்கிட்ட விட்டுட்டு போயிடு!"ஒருவன் கூற அவனை ஓங்கி அறைந்தான் சங்கர்.அவன் அடித்த அடியில் அவன் மயங்கியே விட்டான்.இன்னொருவன் ஓட்டம் பிடித்தான்.

நிலாவின் கண்கள் பயத்தோடு சங்கரை நோக்கின.அவளை பார்த்தவுடன் அவன் முகம் இயல்பானது!!

"வண்டியில ஏறு!"-அவள் கற்சிலையாய் நின்றாள்.

"அடங்க மாட்ட!"-அவன் நிலாவின் கைகளை பற்றினான்.

"ஏ...என்ன பண்ற நீ?"

"வா!என்னோட!"-அவன் வலுக்கட்டாயமாக அவளை காரில் அமர வைத்து வண்டியை எடுத்தான்.

"என்ன பண்ற நீ?என்னை விடு!"

"பேசாம வா!"

"இப்போ நீ காரை நிறுத்தலை...நான் குதிச்சிடுவேன்!"

"அவசியமில்லை...சாக ஆசைப்பட்டா சொல்லு!காரை டேஷ் பண்ணிடுறேன்!சேர்ந்தே சாகலாம்!"

"உனக்கு என்ன பைத்தியமா?"

"உன்னை பார்த்த பிறகு தான்!"-அவள் விசித்ரமாய் அவனை பார்த்தாள்.

"பேசாம அமைதியா வா!உன்னை எதுவும் பண்ணிட மாட்டேன்!"-சங்கர் நிலாவை பார்த்து கண்டித்தான்.

அவள் அருவருப்போடு முகத்தை திருப்பி கொண்டாள். சிறிது நேரத்தில் அந்த கார் அவன் வீட்டின் முன் நின்றது.

"இறங்கு!"-நிலா இறங்கினாள்.

"என் கூட வா!"

"என்னால முடியாது!"

"இது உன் வீடு தான் வா!"

"இது என் வீடு இல்லை! எனக்கும் இந்த வீட்டுக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்லை!"

"இல்லைன்னா..இனி ஏற்படுத்திக்கோ!"-என்று அவள் கரத்தை பற்றி இழுத்து சென்றான்.

"என்னை விடு!"அவள் திமிறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.