(Reading time: 17 - 34 minutes)

"ஸ்வீட்டி!"-குழப்பமாக நிலாவை அழைத்தார் சூரிய நாராயணன்.

"அங்கிள்!"

"இன்னிக்கு வழக்கத்தை விட சூரியன் பிரகாசமா இருக்குல்ல?"

"ம்.."

"உன் முகத்துல கூட ஒரு தேஜஸ் தெரியுதே!என்ன விஷயம்?"

"தெரியலை அங்கிள்...நீ சொல்லி தான் எனக்கே தெரியுது!"

அவர் ஏற இறங்க பார்த்தார்.

"கண்டுப்பிடிச்சிட்டேன்!"

"என்ன?"

"விஷ்வா ஏதோ வேலை பண்ணி இருக்கான்!"

"எப்படி?"

"உன்னை பிறந்தது முதல் பார்த்துட்டு இருக்கேன்.நீதான் என்னிக்கும் உனக்காக வாழ்ந்ததில்லையே!"-அவள் பெருமூச்சுவிட்டாள்.

"கரெக்ட் அங்கிள்...விஷ்வா அவன் மேற்கொண்டு எம்.எஸ்.எக்ஸாம் எழுதினானே அதுல,93% மார்க் எடுத்து பாஸ் பண்ணிட்டான்!"

"என்னது 93% மார்க்கா?"-அவர் வாயை பிளந்துவிட்டார்.நிலா அவர் வாயை மூடும்படி செய்கை செய்தார்.

"நம்ம பயப்புள்ள அம்புட்டு மார்க் எடுக்க மாட்டானே?"

"எடுத்துட்டான் அங்கிள் எடுத்துட்டான்!"-அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அங்கு சந்தோஷத்தில் கத்தியப்படி விஷ்வா வந்தான்.

"ஏ...நிலா!நான் பாஸ் பண்ணிட்டேன்!"-அவன் புத்தி அந்நிலையில் முதலில் தேடியது அவனது சோதரியை தான்!!

மிகுந்த சந்தோஷத்தில் அவன் அவளை கட்டிப்பிடித்து,அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

"டேய் தடியா!போதும்டா!"

"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.ஒரு தொல்லை தீர்ந்தது!"

"நீ எப்படிடா 93% எடுத்த?"-சூரிய நாராயணன் மீண்டும் கேட்டார்.

"அங்கிள் எப்படி எடுத்தேன்னு எனக்கே தெரியலை...எல்லாத்துக்கும் காரணம் என் செல்லம் தான்!"

"யாரு வைஷூவா?"

"ம்ஹூம்!அவ டார்லிங்!என் செல்லம் என் நிலா தான்!"-அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

"என் லவ்வையும் நீதான் சேர்த்து வைத்த!என் கெரியருக்கும் நீதான் எங்கரேஜ் பண்ண!சத்தியமா சொல்றேன்!நீ சொல்லலைன்னா நான் இந்த எக்ஸாம் எழுதி இருக்க மாட்டேன்!"-அவள் இதெல்லாம் நம்புவது போலவா இருக்கு?என்பது போல பார்த்தாள்.

"உன் மேல சத்தியமா நிலா!"-என்று அவள் தலையில் அடித்து சத்தியம் செய்தான்.

சூரிய நாராயணன் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

"என்ன அங்கிள்?"

"என்னால இன்னும் நம்ப முடியலைடா!"

"வேணும்னா உங்க மேலையும் சத்தியம் பண்றேன்,வாங்க அங்கிள்!"

"வேணாம்!"

"ஒருமுறை மட்டும் ப்ளீஸ்!"

"வேணாம்!"

"அங்கிள் ப்ளீஸ் அங்கிள்!"

"ஸ்வீட்டி காப்பாத்தும்மா!"

"டேய் போதும்டா!"

"ஏ....சொல்ல மறந்துட்டேன்!அது யாரு...?"

"யாரு?"

"நல்லா பேராச்சே!"

"யாருடா?"

"உன் பிரப்பசர்!"

"மகேஷ்வரி மேம்!"

"ஆ..அவங்களே தான்!வழியில பார்த்தேன்!நிலாக்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்!ரொம்ப அவசரம்!உடனே,அவளை ஹாஸ்பிட்டல் வர சொல்லுன்னு சொன்னாங்க!"

"என்ன?"

"பொய் சொல்லலை...!காட் பிராமிஸ்!"-சூரிய நாராயணனுக்கு மனதில் சுணக்கம் தட்டியது.

"எபபோ வர சொன்னாங்க?"

"உடனே!"

"சரி..நான் போய் பார்த்துட்டு வரேன்!"

"நிலா!"-சூரிய நாராயணன் தடுத்தார்.

"என்ன அங்கிள்?"

"நானும் வரட்டா?"

"ம்...வாங்க அங்கிள்!"-அவர் மனம் பதைபதைத்தது.தான் எண்ணியது நடக்க கூடாது என்று வேண்டி கொண்டார்.காலம் போகும் வேகத்திற்கு மனிதனால் ஈடு கொடுக்கவே இயலாது.இந்த பூமா தேவி விசித்ரமான கன்னிகை ஆவாள்.

அவளை பற்றி எந்த அறிஞரும் உண்மையை உரைத்ததில்லை. அவளை பற்றி புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவள் அக்னி பிழம்பா?அழகிய நதியா?நெடிந்த மலையா?நிற்காத காற்றா?மழை தரும் முகிலா?தெரியவில்லை..ஆனால்,என்னை பொறுத்தவரை அவள் ஒரு பெண் ஆவாள்.மேற்கூறிய அனைத்து பயன்களின் பலன் அவள்!!இறைவனின் உண்மையான வாரிசு அவள்!!!!

"க்ஸ்யூஸ்மீ மேம்!"

"வா நிலா!"-நிலா உள்ளே நுழைந்தாள்.ஏற்கனவே ஒருவரோடு மகேஷ்வரி பேசி கொண்டிருந்தார்.

அது பிரசாத் தான்!!!

"ஓ..ஸாரி மேம்!நான் அப்பறம் வரேன்!"

"இல்லை உள்ளே வா நிலா!"-அவள் உள்ளே நுழைந்தாள்.

அவளை பார்த்த பிரசாத்தின் கண்கள் அவளை விலக மறுத்தன.

"சார் யாரு மேம்?"

மகேஷ்வரி முகத்தில் கவலை நிழலாடியது.

"என் பிரண்டோட ஹஸ்பண்ட்!"

"வணக்கம் சார்!"

"வணக்கம்மா!"

"பிரசாத் நீங்க போகலாம்!சீக்கிரமே உங்க கவலைக்கு முடிவு கிடைக்கும்!"

"தேங்க்ஸ் டாக்டர்!"-அவர் வெளியில் நகர்ந்தார்.

"பிரசாத்!"-ஒரு குரல் அவரை தடுத்து நிறுத்தியது.

"சூர்யா?"-அப்படி என்றால் இவருக்கும் சூர்ய நாராயணனை தெரியும்!!!

"எப்படிடா இருக்க?"

"நல்லா இருக்கேன் பிரசாத்!நீ எப்படி இருக்க?"

"இருக்கேன்!"

"என்னடா ஆச்சு?"

"என் வாழ்க்கையே டிராஜடி ஆயிடுச்சி சூர்யா!"

"என்னாச்சு?"

"உனக்கு தான் தெரியுமே!25 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதை!"சூரிய நாராயணன் முகம் வெளிறியது.

"அந்த உண்மை என் மனைவிக்கு தெரிய வந்துடுச்சு!அவ என் கூட பேசுவதையே நிறுத்திட்டா!என் பையன் கூட என்னை பார்த்தா கோபப்படுறான்!நான் செய்த தவறுக்கு தண்டனையை இப்போ அனுபவிக்கிறேன்!"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.