(Reading time: 17 - 34 minutes)

 

"ன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும் நிலா!"

"சொல்லுங்க மேம்!"

"கொஞ்ச நாள் முன்னாடி நீயும்,உன் அப்பாவும் வந்து பிளட் டொனேட் பண்ணீங்க ஞாபகமிருக்கா?"

"யா..இருக்கே!"

"ஸாரி டூ சே திஸ்!உங்க ரெண்டு பேர் ஜீனும் பொருந்தவே இல்லையே!"-அவள் சாதாரணமாய் இருந்தாள்.

"அது பொருந்தாது மேம்!நான் அவரோட அக்கா பொண்ணு!அவர் என் மாமா!"

"வாட் நான்சன்ஸ்?அப்போ கூட பத்து சதவீதம் உங்க ஜீன் பொருந்தனுமே!பிகாஸ் ஆப் யுவர் ஹெரிடேஜ்!ஆனா,ஒரு சதவீதம் கூட பொருந்தலை!!!"-நிலா ஆடிப்போனாள்.

"ன் பொண்ணு சாகலை பிரசாத்!"-நண்பனின் கூற்றில் குழப்பமானார் பிரசாத்!

"அவ உயிரோட இருப்பது உனக்கு எப்படி தெரியும்?"

"நான் அவளை பார்த்திருக்கிறேன்!"

"சூர்யா?"நீ என்ன சொல்ற?"

"நீங்க என்ன மேம் சொல்றீங்க?"

"பொதுவா ஒரு குழந்தை ரத்தத்துல 50% அப்பா ஜீனும்,50%அம்மா ஜீனும் இருக்கணும்.யாராவது ஒருத்தர் சீரத்தை (serum of blood) எடுத்து பார்த்தா 90 சதவீதம் அந்த பேரண்டோட ஜீனோட குழந்தை ஜீன் மேட்ச் ஆகும்!10% தாத்தா வழி போயிடும்!!!இது உனக்கே தெரியும்!ஆனா,உன்னோட ஜீன் உன் அப்பாக்கூட 0.1%கூட பொருந்தலை!!"

"ன் குழந்தை நல்லப்படியா வளர்ந்து பெரியாளா இருக்காடா!"

"எங்கே இருக்கா?அவளை நீ எப்படி,எங்கே பார்த்த?"

"அவ இத்தனை நாளா எனக்கே தெரியாம என் பாதுக்காப்புல தான் வளர்ந்தா!கொஞ்ச நாள் முன்னாடி தான் அவளை வளர்ந்தவங்க என்கிட்ட உண்மையை சொன்னாங்க!அப்பறம்,குழந்தை மாற்றின அந்த நர்ஸ்சை பார்த்து உண்மையை விசாரித்தேன்.அப்பறம் தான் உண்மை தெரிந்தது!"

"மேம்!விளையாடாதீங்க மேம்!"-நிலாவின் கண்கள் கண்ணீரை சிந்தின.

"எனக்கு உன்னை கஷ்டப்படுத்தணும்னு எண்ணம் இல்லை!உண்மை அதுதான்!"

"............"

"விசித்ரமான விஷயம்!எனக்கு தெரிந்த இன்னொருத்தர் ஜீனும்,உன் ஜீனும் 91.3%பொருந்திருக்கு!"-அவள் தலையில் இடி இடித்தார் போல ஆனது!"

"வாட்?"

"எஸ்!நான் சொல்றது உண்மை தான்!"

"ப்போ அவ எங்கே இருக்காடா?ப்ளீஸ்..தயவுசெய்து சொல்லு!"-சூர்ய நாராயணன் பெருமூச்சுவிட்டார்.

"யாரு மேம் அது?"

"இப்போ உள்ளே போனாளே அவ தான் உன் பொண்ணு!"

"வ்வளவு நேரம் இங்கே இருந்தாரே மிஸ்டர்.பிரசாத் அவர் தான் அது!"-இருவரின் மூச்சும் ஒரு நொடி நின்று போனது.

உங்களுக்கு இது புரிய வேண்டுமாயின்,மகேந்திரன் சூர்ய நாராயணனிடம் பேசியது நமக்கு தெரிய வேண்டும்!! அந்த உரையாடல்...

"ம் ஆன் மாஹீ!நிலா மேல தப்பே இல்லை!அவ செலக்ஷன் எக்ஸ்ட்ராடினரி!!அவளுக்கு அந்த பையன் தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கான்!இதைவிட,அவங்க லவ் எப்படின்னு சர்ட்டிபிக்கேட் வேற வேணுமா?"

"எப்போ அவன் தைரியமா என்கிட்டையே வந்து பேசினானோ!அப்போவே,அவன் தான் நிலாவுக்கு பொருத்தமானவன்னு தெரிஞ்சிடுச்சி!எனக்கு பயம் எல்லாம் வேற.."

"ஓ..அந்த பிரபாகரனை நினைத்து பயப்படுறீயா?பெற்ற பெண்ணை வளர்க்க முடியாதவன் தானே அவன்!அவனை பார்த்து..."

"என் நிலா அவருக்கு பிறந்தவள் இல்லை!"

"சரிடா!அவ உன் பொண்ணு தான்!"

"இல்லை சூர்யா!பிறப்பால் அவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!"-கண்ணீரோடு கூறினார் மகேந்திரன்.

"என்ன சொல்ற நீ?நீ சொல்றதுக்கானஅர்த்தம் தெரியுமா உனக்கு?"

"நிலாவை நான் தத்தெடுத்தேன் சூர்யா!"-சூர்ய நாராயணன் திகைத்து போனார்.

"அன்னிக்கு என் அக்காவுக்கு பிறந்த குழந்தை இறந்தே பிறந்தது.அதை எப்படி சொல்றதுன்னு நான் தவிச்சிட்டு இருக்கும் போது தான்!ஒரு நர்ஸ் ஒரு கை குழந்தையை மறைத்து எடுத்துட்டு போறதை பார்த்தேன்!சந்தேகப்பட்டு அவங்களை மிரட்டி விஷயத்தை கேட்டேன்!அவங்க அந்த குழந்தையை விற்க எடுத்துட்டு போறேன்னு சொன்னாங்க!நான் கோபத்துல அவங்களை கைநீட்டி அடித்து திட்டினேன்!அவங்க என் கால்ல விழுந்து கெஞ்சினாங்க!குழந்தையை அவ அப்பாக்கிட்ட தர சொன்னேன்!அவங்க   குழந்தை காணாம போயிடுச்சுன்னு சொல்லிட்டேன்.இனி குழந்தையை கொடுத்தா என்னை வேலையை விட்டு எடுத்துவிடுவாங்க!என்னை காப்பாத்துங்கன்னு காலில் விழுந்துட்டா!. நான் அந்த குழந்தையோட மீனாக்கிட்ட போய் உண்மையை சொன்னேன்!அந்தக்குழந்தையை பார்த்தவள் என் பொண்ணு பெயர் வெண்ணிலான்னு அவளை தன் குழந்தையாகவே ஏத்துக்கிட்டா!இப்படி தான் வெண்ணிலா எங்களுக்கு கிடைத்தாள்!"

"என்ன காரியம் பண்ண நீ?இது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா?ஒரு குழந்தையை அவ அம்மாக்கிட்ட இருந்து நீ பிரிச்சிருக்க மாஹீ!"

"ஆனா,நிலாவை நான் என் பொண்ணா தான் வளர்த்தேன்.அவ மேல அளவுக்கு அதிகமான பாசத்தை வைத்தேன்.நிலாவை என் நம்பிக்கையா நினைத்தேன்!"

"நீ அவளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தட்டி பறித்த!அவ நிலையை அவளே புரிந்து கொள்ள முடியாதப்படி செய்த!ரொம்ப பெரிய தப்பு பண்ணிருக்க!எந்த தைரியத்துல அவளை இத்தனை நாளா வேதனைப்படுத்துன?"

"..............."

"நான் நிச்சயம் அவளை அவ அப்பாம்மாக்கிட்ட ஒப்படைப்பேன்!நீ செய்த தவறுக்கு தண்டனை நீ ஏத்துக்க தான் செய்யணும்!"

"அவளை என்கிட்ட இருந்து பிரித்துவிடாதே!"

"ஒருநாள் வரும் அன்னிக்கு உன் பொண்ணு ஒரு முடிவெடுப்பா!அன்னிக்கு இந்த மகேந்திரன் அவ முடிவுக்கு பணிந்தே ஆகணும்."-சூர்ய நாராயணன் கோபத்தை உமிழ்ந்து போனார்.இதற்காக தான் மகேந்திரன் நிலா தன்னை வெறுத்து ஒதுக்கி அவள் குடும்பத்தோடு சேர வேண்டும் என்று எண்ணினாரா???

இதை பாசத்தில் வைப்பதா?துவேஷத்தில் வைப்பதா?? ஈன்ற மரமானது பழத்தை தந்துவிடும் அதிலிருந்து விடுப்பட்ட விதையானது,மண்ணை சார்ந்து தான் வாழ வேண்டும்!!!மரத்தை அல்ல!!!இது இயற்கையின் விதி!!விதையானது மண்ணை நாடும் முன் அருகில் வளர்ந்த இரு வேறு மரங்கள் விதையை சொந்தம் கொண்டாடினால்??அதன் நிலை என்னவாகும்???

இனி நடக்க போவது என்ன?? முக்கோண கதை இது!!!

இரண்டு பலம் வாய்ந்த பக்கத்தினை எதிர்க்க போகிறாளா இக்கன்னிகை??? உறவின் மாராட்டம் இரண்டாய் பகுக்கப்பட்டுள்ளது!!! இதற்கிடையில் கரம் பிடித்தவனின் உரிமையும் தவிப்பினில் உள்ளது!!! உறவின் மாராட்டம் மற்றும் உரிமை போராட்டம்!!!இரண்டிற்கும் இடையே என்ன நடக்க போகிறது???

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.