(Reading time: 17 - 34 minutes)

"மாமா!உங்க பொண்ணு வந்திருக்கா!"-சங்கர் குரல் கொடுத்தான்.பிரபாகரன் முகம் அடுத்த சில நொடிகளில் வெளி வந்தது.அவருடன் அவரின் இரண்டாம் மனைவியும் வந்தார்.நிலா பற்றியிருந்த சங்கரின் கையை உதறினாள்.

"நிலா!"-பிரபாகரன் அவளருகே வர,அவரை வர வேண்டாம் என்று கையை உயர்த்தினாள்.

அவர் நின்றார்.

"அருகே வர முயற்சி பண்ண வேண்டாம்!நான் என்னிக்கும் உங்களுக்கு தொலைவு தான்!"

"நிலா  என்னை மன்னிச்சிடும்மா!"

"மன்னிப்பு கேட்டு மன்னிப்பை அவமானப்படுத்தீங்க!உங்க யாருக்கும் மன்னிப்பு கேட்கிற தகுதி இல்லை!அன்னிக்கு உங்க இரண்டாம் மனைவி பேச்சை கேட்டு என்னை அழ வைத்தீங்க!அன்னிக்கு நான் உங்க கண்ணுக்கு தெரியலை...இப்போ தெரியுறேன்னா...தெரிவது நானா?என் சொத்தா?"-அவள் சிற்றன்னை முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"நான் உன் அப்பா நிலா!"

"போதும் நிறுத்துங்க மிஸ்டர்.பிரபாகரன்.நான் உங்க பொண்ணு இல்லை.நீங்களும் என் அப்பா இல்லை.நான் வெண்ணிலா மகேந்திரன்.டாட்டர் ஆப் மிஸ்டர் மகேந்திரன்.அதை ஞாபகம் வைத்துக்கோங்க!"

"ஏ..நீ என்ன பேசுற?"-சீறினான் சங்கர்.

"ஒருமுறை சொன்னா புரியாதா?மறுபடியும் சொல்லட்டா...!!"

"வேணாம் நிலா!"பிரபாகரனின் தழுதழுத்த குரல் கேட்டது.அவள் மனம் சற்றே இளகியது.

"மறுபடியும் அதை சொல்லாதே!சங்கர் அவளை அவ வீட்டில விட்டுவிடு!"

"அவசியமில்லை...எனக்கு போக தெரியும்!மறுபடியும் என் வாழ்க்கை வராதீங்க!"

"மீறி வந்தா?"-திமிராய் கேட்டான் சங்கர்.

"அதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவிப்ப!!!"-வெண்ணிலாவின் கண்களில் முதன்முறையாய் எனக்கு கோபம் தெரிந்தது.அவள் கோபமாக அவ்விடத்தை தியாகம் செய்தாள்.அங்கிருந்த மூன்று மனிதர்களும் அதிர்ச்சியில் உறைந்திருந்ததை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள தேவையில்லை என்று எண்ணுகிறேன்.

காலத்தை விட பெரிய கணக்கு வாத்தியார் யாருமில்லை.அவன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஒரு மனிதனின் பொறுமையை சோதிப்பான். மனதின் உச்சக்கட்ட அமைதியை சோதித்த பின் ரௌத்திரத்தை வெளிவிட ஆணையை பிறப்பிப்பான்.நன்றாக கேளுங்கள்... நல்லவர் ஒருவர் மனதின் கோபமானது ஆயிரம் முறை அக்னி ஸ்நானம் செய்வதன் பலனை கொடுக்கும்!!!

சிலருக்கு அது புனிதத்துவத்தையும்,பலருக்கு அது அழிவிற்கான விதையையும் அளிக்கும்!!! இன்னும் அவனுக்கு மனவேதனை முற்றிலும் அகலவில்லை. ஆக்ரோஷத்தோடு வாழ்ந்த மனம் இன்று அமைதியை தேடி ஓடியது.எதையும் காலம் காக்கும் என்ற வித்யையை அவன் மறந்து தான் போனான்.

ரஞ்சித்தின் மனம் வெண்ணிலாவின் காதலை இச்சமயம் நாடியது.ஆனால்,அவளிடம் பேச இயலாது.என்ன செய்வது?ஏன் இந்த காதலில் நான் என்னை தொலைக்க வேண்டும்?ஏன் அக்காதலுக்காக ஒரு பெண்ணின் அன்பை அவள் தந்தையிடமிருந்து நான் பறிக்க வேண்டும்? பழியை அவன் ஏற்று கொண்டாள்.

ச்சே...!!என் காதல் வாழ்வை சிலையென வடிக்க தீட்டிய திட்டம் அனைத்தும் கானலாய் ஆனது!!! உண்மையில் அவன் பல கனவுகளை கொண்டிருந்தான்!!காலையில் அவனது நாளின் தொடக்கம் நிலாவின் முகத்தில் உதிக்க வேண்டும்!!!பனிச்சாரலில் அவள் காதோரம் காதல் கதைகளை பேச வேண்டும்!!உணர்வில் கலந்த இந்த பவித்ர உறவின் பயனை ஈறைந்து மாதங்கள் அவள் சுமக்கும் வேளையில்,அவளை மனதில் சுமக்க வேண்டும்!!!சிறு சிறு சண்டைகள் அடிக்கடி வர வேண்டும்!அதை தீர்க்க அவள் காதோரம் தரும் சிறு முத்தமே போதுமானதாக அமைய வேண்டும்!!உயிர் பிரியும் தருவாய் தன்னில் அவள் மடி மீது உயிர் துறக்க வேண்டும்!!இன்னும் பல கனவுகள் அவனுக்கு உண்டு!!!ஆனால்,விதி உண்மையில் கொடுமை செய்கிறது!!ஒவ்வொருவரின் வாழ்விலும்!!! இவன் காதல் கைக்கூடுமா?இத்தனை வருட தவத்தின் பயனை அவன் பெறுவானா????

"ம்மா!"-தாயிடம் கருணையை வேண்டி நான்காவது முறையாக அழைத்தான் யுகேன்.

"அப்பா வந்திருக்காரும்மா!ஏன் அவரை பார்க்க மாட்ற?"

"நான் நிச்சயம் அவரை பார்க்க விரும்பலை... 

என்னை தனியா விட்டுட்டு போ யுகேன்!"-யுகேந்திரன் தாயின் அருகில் வந்து,

"நான் என் தங்கச்சியை பற்றி விவரம் தேடிட்டு தான் இருக்கேன்மா!சீக்கிரமே கண்டுப்பிடித்து விடுவேன்!"

"இத்தனை வருஷத்துல அவ என்னென்ன கஷ்டங்களை அனுபவித்திருக்காளோ!நான் கொடுக்க வேண்டிய பாசம் அவளுக்கு கிடைத்ததா?இல்லையா?எதுவுமே தெரியலை யுகேன்!இந்த உலகத்துல இருக்கிற எந்த தாய்க்கும் என் நிலைமை வர கூடாது!"-கல் மனமும் கரையும் வண்ணம அழுதார்.

"சீக்கிரம் அவ நம்ம வீட்டுக்கு வருவா!நம்பிக்கையோட இரும்மா!"

"அதனால் தான் இன்னும் இந்த உயிரை வைத்திருக்கிறேன் யுகேன்!"

ஈன்றெடுத்த தாய்க்கு இருக்கும் அதே வலி உயிர் கொடுத்த தந்தைக்கும் இருக்கும் அல்லவா???

'அப்பா!"-காவ்யாவின் குரல் கேட்டு கண்களை துடைத்து கொண்டு திரும்பினார் பிரசாத்.

"வாம்மா!தூங்கலையா!"

"எனக்கு ஒரு உண்மையை சொல்றீங்களா?"

"என்னடா?"

"அம்மாக்கிட்ட ஏன் இந்த உண்மையை மறைத்தீங்கப்பா?"-அவள் கண்களும் கண்ணீரை சுரந்தன.

"எனக்கு ஒரு பெண் குழந்தை வேணும்னு ஆசை கண்ணா!அதை நிறைவேற்ற பிறந்த பொண்ணு என் பொண்ணு!எனக்கு பெண் குழந்தை பிறந்தது தெரிந்த உடனே,அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.குழந்தையை குளிப்பாட்டி கூட்டிட்டு வரேன்னு கூட்டிட்டு போனாங்க!திரும்பி என் குழந்தை வரவே இல்லை.அவ எப்படி காணாமல் போனானே தெரியலை...வேற வழியில்லாம தான்,கங்காக்கிட்ட குழந்தை இறந்துடுச்சுன்னு பொய் சொன்னேன்!"

"இப்போ அவங்களை எங்கேன்னு தேடுவீங்கப்பா!"

"தெரியலைம்மா!அந்த கடவுள் மட்டும் எனக்கு உதவி செய்யணும்.அவளை ஒரே ஒருமுறை பார்த்தாலும் போதும்னு இருக்கு!"

"கவலைப்படாதீங்கப்பா!அவங்க சீக்கிரமே இங்கே வருவாங்க!உங்களை அப்பான்னு கூப்பிடுவாங்க!"-பிரசாத்தின் மன ஆறுதலுக்காக இந்த வசனத்தை கூறினாள் காவ்யா.

மனிதன் தான்  சொந்தம் கொண்டாடும் பொருளுக்கு எல்லாம் எஜமானன் ஆக முடியுமா?பாய்ந்து வரும் கங்கை நதியில் யார் வேண்டுமானாலும் பவித்ர ஸ்தானம் புரிய இயலும்!ஆனால நதிப்பெண் கங்கையையே தான் சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று ஒருவன் எண்ணினால் அது நிறைவேறுமா???

பசுமையான செம்மண்ணை ஈரப்படுத்தி,சக்கரத்தில் இட்டு ஒரு குயவன் பானையை செய்கிறான்.செய்யும் பானைகளில் சிலது உடைந்தும் போகலாம்!!!அழகிய குயவம் ஒன்றை செய்த குயவன் அதை விற்பனையும் செய்யலாம்!தானும் பயன்படுத்தலாம்!!ஆனால்,உடைந்த குயவம் பற்றி அவனுக்கு கவலை இருக்காது!!சுணக்கம் வேண்டும் என்றால் இருக்கலாம்!!!

மனிதனின் கவலைகளும் அப்படி தான்!!! நெடிதுயர்ந்த பனையின் உயரத்தை சிறிய பருந்தானது எட்டி விடுகிறதோ!!அதுபோல,அளப்பரிய இன்பத்தின் பயனை சிறு துன்பம் தட்டி பறிக்கிறது.மனிதன் உடைந்த பானையாய் துன்பத்தை கருதுவதில்லை.அதை வடிவம் பெற்ற ஒன்றாக கருதி வாழ்வை தொலைக்கின்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.