(Reading time: 22 - 44 minutes)

 

" ன்ன ஆச்சும்மா ?"

" ஒன்னும் இல்லையே .. ஏன் அத்தை ? "

" உன் முகமே சரி இல்லையே .. "

" அதான் தலைவலின்னு சொன்னேனே அத்தை "

" இதை நான் நம்பனுமா நந்து ?"

" நான் சொல்லுறதை நம்பினா தானே அத்தை இந்த வீடு சந்தோஷமா இருக்கும் ?" என்று மனதிற்குள் கூறினாள்  அவள் .. அவள்  முகம் பார்த்தே நிச்சயம் ஏதோ சரியில்லை என உணர்ந்தார் சாரதா .. எனினும் கணவன் மனைவி இடையே நடப்பதை  கேட்கவும் அவருக்கு மனமில்லை ..

" சரிம்மா .. நீ போயி கொஞ்சம் ரெஸ்ட் எடு " என்று மருமகளை அனுப்பி வைத்தார் அவர் ..

" சரி அத்தை" என்றவளும்  பொங்கி வந்த கண்ணீரை மறைத்து கொண்டு தனதறைக்கு  சென்றாள்  நந்திதா ..

அறைக்குள் சென்று கதவை பூட்டியவள் கண்ணாடி முன் நின்று தனது முகத்தை பார்த்து கொண்டாள்  .. நந்திதாவை பொருத்தவரை அவள் வாழ்வில் நடக்கும் நல்லதிற்கும் கெட்டதிற்கும் அவள் மட்டுமே காரணம் .. வேறு யாரையும் எதற்கும் சுட்டி காட்டும் குணம் அவளுக்கு இல்லை .. இப்போது கூட கண்ணாடி முன்னின்று அழுது தீர்த்தவள் , கடைசியாய்

" இது நீயே தேர்ந்தெடுத்து கிட்ட வாழ்க்கை நந்திதா .. நீயேதான் அபிநந்தனை  திருமணம் செய்து கொண்டாய் .. இனி இப்படி கண்ணீர் விட்டோ , அல்லது அவன்மீது கோபப்படுவதிலோ எந்தவொரு நியாயமும் இல்லை " என்று கூறி கொண்டாள் . இங்கு இவள் கண்ணீரோடு நடந்து சென்றதை கவனித்த தாத்தா அடுத்த நிமிடமே தனது மதிமந்திரிக்கு போன் போட்டு விட்டார் ..

" டேய் தீப்ஸ் "

" ஹே அருண் .. இன்னைக்கு உங்களுக்கு வீட்டுல வேலை எதுவும் இல்லையா ? படிக்கிற பையனுக்கு போன் பண்ணி டார்ச்சர் பண்ணுறிங்க  நீங்க !" என்று சலித்து கொண்டான் சகிதீபன் ..

" கம் ஆன் கூல்  டா .. நான் காரணம் இல்லாமல் உன்னை தொந்தரவு பண்ணி இருக்கேனா " என்று பவ்யமாய் பேசினார் தாத்தா .. அவரது போலியான பணிவில் தன்னையும் மீறி சிரித்து விட்டான் சகி.

" சரி என்ன ஆச்சு தாத்தா ?"

" நந்துவுக்கும் அபிக்கும் ஏதோ பிரச்சனை  நினைக்கிறன் "

" ஹ்ம்ம் , எதை வெச்சு சொல்லுரிங்க ?"என்றான் அவன் ஆராயும் குரலில் .. தாத்தா அன்று காலையில் நடந்ததை எடுத்து கூறினார் ..

" எல்லாம் சரிதான் .. பட் இதில் நான் என்ன பண்ண முடியும் " என்றான் சகிதீபன்

" டேய் உனக்கா தெரியாது , இந்த வீட்டு சகுனியே நீதானே  ? நீதானே அவங்களை சேர்த்து வச்சே ?" என்றார் தாத்தா ..

" ஓஹோ , நான்  சகுனியா ? அப்படினா , நீங்கதான் சகுனிக்கே  நம்பியார் " என்றான் அவன்.

" சரி விஷயத்துக்கு வா டா "

" தாத்தா.." என்று ஏதோ சொல்ல வந்தவன் , என்ன சொல்வது என புரியாமலே பேச்சை பாதியில் நிறுத்தினான் ..

" தீப்ஸ் "

" நான் அண்ணிகிட்ட பேசுறேன் "

" கண்டிப்பா பேசு .. ஆனா சகியா இல்லை தீபனாக !" என்றார் அவர் ..

" ம்ம்ம்ம் கண்டிப்பா .. "

" எப்போ பேச போற ?"

" இப்போ அழுதுகிட்டு இருப்பாங்க ... நான் அப்பறமா பேசறேன் " என்று போனை வைத்தான் சகிதீபன் ..

" ச்ச இந்த வீட்டில் எல்லா கேஸையும்  நாமலே ஹென்டல் பண்ண வேண்டியதாக இருக்கே ! நமக்குன்னு ஒரு பார்ட்னர் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் ..இதுக்காகவே கல்யாணம் பண்ணிக்கணும் .. இந்நேரம் என் தேவதை எங்க இருக்காளோ " என்றபடி கற்பனையில் ஆழ்ந்தான் சகிதீபன் ..

நீங்க எல்லாரும் கேட்டதினால , வாங்க நாமளும் ஹீரோயினை தேடி போவோம் ...

வாகன நெரிசல், ஹாரன் ஒலி, தூய்மையில்லா காற்று இப்படி எதையுமே அறியாத அழகான கிராமம் அது. பசுக்களும் பறவைகளும் காலையிலேயே கானம் பாடிட, அவரவர் தத்தம் வேலையை கவனித்து கொண்டிருந்த காலைவேளை.. அந்த கிராமத்திற்கு பபிரதானமாய் இருந்தது அந்த பெரிய வீடு..  அந்த வீட்டில் மொட்டை மாடியில் நின்று பார்த்தால் , மொத்த ஊரையுமே பார்த்துவிடலாம்.. அத்தனை அழகான காட்சிகள் கண்முன் நின்றாலும் மைத்ரேயியின் மனதில் எதுவுமே பதியவில்லை.

தனது அறையில் வானொலியை உயிர்பித்து இருந்தால் போலும் .. அத்தனை தூரத்தில் இருந்தாலும் அந்த பாடல் வரிகள் அவளை தேடி வந்து இம்சித்தன ..

" ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா

ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா

நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே

என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே

அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே "

ஏ  ஆர் ரஹ்மானின்இசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ? அதுவும் அவர் இசையமைக்க தொடங்கிய முன்னேறி கொண்டிருந்த  காலங்களில்தான் அவளும் சிறுமியாய்  இருந்து குமரியாகவும் மலர்ந்து விட்டாள் .. அவரது பாடல்கள் என்றாலே அவளுக்குள் புதுவித மாற்றங்கள்தான் .. அதிலும் இந்த பாடல் பிடிக்காதவர் யாரேனும் இருக்க முடியுமா ? அவளது தற்போதைய சூழ்நிலைக்கு மிகச்சரியாய் இருந்தது அந்த பாடல் .. கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை ஸ்பரிசித்து பார்த்தாள்  மைத்ரேயி ... கூடவே அவனது குரலும்  அவளுக்கு மட்டும் கேட்டது ..

" இது பாரு கிறுக்கி, இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வெச்சுதான் ஆகணும் .. நீ என்னைத்தான் லவ் பண்ணுறன்னு உன் கண்களே காட்டி கொடுத்துருச்சு .. இருந்தும் ஏன் அதை மறைக்கிற .. கல்யாணம் ஆகிட்டா , காதல் வரக்கூடாதா ? நான் உன் கண்முன்னாடி இருக்கும்போதே நீயே உன் லவ் ஐ சொல்லிடு ..மத்ததை நான் பார்த்துப்பேன் .. ஆனா நீ இப்படியே அமைதியா இருந்தா நான் போயிடுவேன் " என்று மிரட்டி இருந்தான் அவன் .. இதோ இன்னும் ஒரு மணி நேரத்தில் சொன்னது போலவே அவன் இங்கிருந்து  சென்று விடுவான் .. அப்படி என்றால் தனது காதல் ?

" நோ " என்று அவள் முணுமுணுக்கும்  முன்னே அவளது கால்கள் அவன் முன்னே சென்றிருந்தன .. மான்குட்டி போல ஓடி வந்தவளை  கண்கள் பளபளக்க சிரித்து வரவேற்றான் அவன் ..

" சொல்லு கிறுக்கி "

" நான் "

" நீ "

" நான் முடிவு பண்ணிட்டேன் "

" அப்படியா ? என்ன முடிவு ?"

" எனக்கு கல்யாணம் ஆச்சு "

" அது எனக்கும் தெரியும் "

" ஆனாலும் "

" ஆனாலும் ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.