(Reading time: 22 - 44 minutes)

" நானும் அதேதான் சொல்லுறேன் .. உனக்கு தோணுறதை எல்லாம் கண் மூடி தனமா பேச வேணாம் கெளதம் " என்றுவிட்டிருந்தாள் .. அவன் பதில் சொல்லுமுன்னே அவனது செல்போன் சிணுங்க தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து அவனை பார்த்து கை அசைத்தபடி கடந்து சென்ற விஷ்வா வேகமாய் வந்ஹா கார் லேசாய் உராய, தடுமாறி நின்றாள் .. அந்த காரில் இருந்து

" மன்னிச்சிருங்க ..ஆர் யு ஓகே ?" என்று கேட்ட குரலையும் அலட்சியபடுத்திவிட்டு கௌதமை ஒருமுறை பார்த்துவிட்டு வேகமாய் ஸ்கூட்டியில் பறந்தாள் ..எப்படியும் அவனால் தான் விபத்து நேரவிருந்தது  என்ற குற்ற உணர்வில் அவன்  இரண்டு மூன்று நாட்களாவது தன்னை அவன் பின்தொடர மாட்டான் என்று கணித்தவள் , கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கிறது என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள் .

" காதல் ஒரு காற்று

எங்கும் இருக்குமே

காதல் ஒரு மாயம்

இடமாறுமே  " ஸ்ரேயா கோஷலின் குரலில் அழகாய் சிணுங்கியது கௌதமின் செல்போன் ..

" சொல்லு மச்சி "

" எங்க இருக்கு கெளதம்  "

" யோகா கிளாஸ் .. அதெப்படி தப்பான நேரத்தில் கரெக்டா போன் பண்ணுற நீ ஜீரோ நீ   ?"

" டேய் என்னமோ ரோமியோ ரேஞ்சுல காதல் பண்ணுற மாதிரி கதை விடாதே .. அவகிட்ட லவ் பண்ணுன்னு கெஞ்சிகிட்டு தானே இருந்த நீ ?"

" எப்படி டா கரெக்டா சொல்லுற ?"

" இதென்ன பெரிய உலக அதிசயமா ? இந்த ஒரு  வருஷமா இதே புராணம் தானே பாடுற நீ ?"

" என் கஷ்டம் உனக்கு காமிடியா இருக்கா ? சரி எங்க இருக்க ?"

" நம்ம வீட்டுலதான் "

" ஓய் ... சொல்லவே இல்லை எப்போ வந்த ?"

" அதெல்லாம் நேரில் பேசிக்கலாம் வா " என்று எதிர்முனையில் போன் வைக்கபட்டு இருந்தது .. சற்றுமுன்பு மனதிற்குள் மூண்டிருந்த கோபம் இப்போது மொத்தமாய் மறைந்து இருந்ததை உணர்ந்தான் கெளதம் .. அதே மகிழ்வுடன் வீட்டிற்கு திரும்பினான் ..

தாத்தா சொன்னதை அசைபோட்டான் சகிதீபன் .. என்ன பேசுவது என்று ஓரளவு முடிவுக்கு வந்தவனாய் நந்திதாவை போனில் அழைத்தான் ..

" ஹெலோ அண்ணி "

" சொல்லு தீபன் " என்றாள்  நந்திதா..

" ஓ , ரூம்ல தனியா இருக்கியா நீ ? "

" ம்ம்ம்ம் ஆமாடா "

நந்திதாவும், சகிதீபனும் நெருங்கிய நண்பர்கள் .. தோழனை பார்பதற்காக அடிக்கடி அவன்  வீட்டிற்கு செல்லும் நந்திதா கொஞ்சம் கொஞ்சமாய் அபிநந்தனின்பால் ஈர்க்கபட்டாள் .. முதலில் அவள் விளயாட்டாய் கூறுகிறாள் என்று நினைத்து  விட்டுவிட்டான் சகிதீபன் ..ஒருநாள் தனது அண்ணனுக்கு திருமணம் செய்ய விருப்பதாக அவன் கூறும்போது சற்றும் யோசிக்காமல் , அழுதே விட்டாள் .. அப்போதுதான் அவள் தீவிரமாக அவனை விரும்புவதே தீபனுக்கு தெரிய வந்தது .. தனது அண்ணனை பற்றி நன்கு அறிந்தவன் மிகவும் பொறுமையாக இது சரியில்லை என அவளுக்கு எடுத்து கூறினான்.. அவனது எந்த அறிவுரைக்கும் அவள் அசைந்து கொடுக்காமல் போக , இறுதியாய் தந்தையிடம் பேசி இந்த திருமணத்திற்கு காரணமாய் நின்றான் சகிதீபன் .. மற்றவர் முன்னிலையில்  சகியாக, அவன் அண்ணி என்ற மரியாதையோடு தள்ளி நின்றாலும் கூட , அவள் துவண்டு விழும்போதெல்லாம் அவளது தோழன் தீபனாய்  மாறி அவளுக்கு துணை நிற்பதே இவனது வேலையாய்  போனது .. !

" என்னாச்சு நந்து ?  மறுபடியும் என்ன பிரச்சனை  ..என்ன பண்ணினான் உன் புருஷன் ?"

தனது தமயனை " உன் புருஷன் " என்று அவன் கோபமாய் கூறிய விதத்தில் நந்திதாவின் இதழ்களில் லேசாய் புன்னகை தோன்றி மறைந்தது .. " நீயும்தான் எவ்வளவு நல்ல நண்பன் " என்று மனதிற்குள் சிலிர்த்து கொண்டாள் ..

" உன்னைத்தான் கேட்கிறேன் ? தூங்கிட்டியா ? என்ன பண்ணான் அந்த தடியன் "

" டேய் .. அவரை தடியன் அது இதுன்னு சொல்லாதே " என்றாள்  நந்திதா ரோஷமாய் .. இப்போது அதே புன்முறுவல் அவனது முகத்தில் தோற்றி கொண்டது .. " உன்னை மாதிரி யாராலும் என் அண்ணாவை நேசிக்கவே முடியாது " என்று நினைத்து கொண்டான் சகிதீபன் ..

" சரிங்க மேடம்.. உங்க கணவரை நான் எதுவும் சொல்லல .. ஆனால் ராணியார் இப்படி அழுது வடியுற அளவுக்கு என்ன நடந்ததுன்னு இந்த சேவகன்கிட்ட சொல்ல முடியுமா ?"என்றான் போலியான பணிவுடன் ..

" நீ திருந்தவே மாட்ட தீபன்.. " என்றவள் கொஞ்சம் இடைவெளி விட்டு

" ஆனா , இன்னைக்கு பிரச்சனையை ஆரம்பிச்சது அவரில்லை .. நான்தான் " என்றாள் ...

" வாவ் , நீயா ? அப்போ கண்டிப்பா மேற்கில் சூரியன் உதிச்சிடும் "

" அது உதிக்கிறதோ இல்லையோ , நீ இப்படியே  கடிச்சா நான் உன்னை கண்டிப்பா உன்னை உதைப்பேன் பாரு "

" உன்னயெல்லாம் அண்ணியாய்  என் வீட்டுக்கு கொண்டு வந்தேன் பாரு ..என்னை சொல்லணும் .. கல்யாணத்துக்கு ஜாதகம் பார்த்தாங்களே , இந்த பிசாசு வீட்டுக்கு வந்ததும் என் பொழப்பு எப்படி இருக்கும்னு கணிக்காமல் போயிட்டாங்களே " என்று வாய்விட்டே சொன்னான் அவன் ...

" நீதான் வாயுள்ள பிள்ளையாச்சே , எவ்வளவு பெரிய டார்ச்சர் வந்தாலும் சமாளிச்சிடுவ டா நீ "

" என்கிட்ட மட்டும் நல்லா வாய்பேசு .. ஆனா உன் [புருஷனை பார்த்தா மட்டும் மகுடிக்கு கட்டுபட்ட  பாம்பு மாதிரி  மயங்கி நில்லு "

" ம்ம்ம்கும்ம்ம் அதுதான் கொஞ்சம் சீறி பார்க்கலாம்னு முயற்சி பண்ணினேன் !"

" நீயா ? நம்ப முடியலையே !"

" உன் களிமண் மண்டைமேல சத்தியமா டா "

" சரி என்னதான் நடந்துச்சு ?"

" நடந்துச்சாவா ? என் கன்னத்துல இடி விழுந்துச்சு !"

" என்ன சொல்லுற  ?"

" அவர் கிட்ட அறை  வாங்கிகிட்டேன் "

" ஹே என்னாச்சு ? ஏன் ?" என்று பதறினான் அவன் .. நடந்ததை அனைத்தும் ஒரே மூச்சாய் ஒப்பித்தாள்  நந்திதா .. அத்தனை செய்தியிலும் அவன் மனதில் தேனாய் தித்தித்தது தான் சித்தப்பா ஆகா போகிற செய்திதான் ..

" ஹே கங்க்ராட்ஸ் .. எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா ? நான் மட்டும் அங்க இருந்திருந்தா ,உனக்கு பிடிச்ச குலப் ஜாமுன் என் கையாலே செஞ்சு தந்திருப்பேன் " என்று துள்ளி குதித்தான் ...

" அதுகென்ன , இன்னும் மூணு மாசம் தானே ? வந்த உடனேயே எனக்கு செய்து தா " என்று பேரம் பேசினாள்  அவளும் துள்ளலாய்.. அவள் குரலில் இருந்தே இந்த குழந்தை வேண்டாம் என அவள் எடுத்த முடிவு தனது மனதில் இருந்து வந்த முடிவில்லை என அவனுக்கு தோன்றியது .. பிறகு ஏன் அப்படி கூறினாள்  ? மனதில் தோன்றியதை நேரடியாகவே கேட்டான் சகி ..

" இவ்வளவு சந்தோஷப்படுற, அப்பறம் ஏன் இந்த குழந்தை வேணாம்னு சொன்ன நந்து ? " அவனது கேள்வியில் மௌனமானாள் நந்திதா .. சில நொடிகளில் மௌனத்திற்கு பிறகு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.