(Reading time: 22 - 44 minutes)

" ந்த அம்மாவுக்கு தீபன் இப்படி சொல்றதுக்கு மனசு வரும் ? அவர்கிட்ட இந்த நல்ல விஷயம் சொன்ன கடைசி நிமிஷம் வரை அப்படி ஒரு வார்த்தை என் வாயில் இருந்து வரும்னு நானே எதிர்பார்கல .. அவரு நிச்சயம் துள்ளி குதிக்க மாட்டாருன்னு நான் எதிர்பார்த்தது தான் .. ஆனா மூணாவது மனுஷிக்கு வாழ்த்து சொல்லுற மாதிரி கன்க்ராட்ஸ்ன்னு சொன்னதும் உடைஞ்சே போயிட்டேன் தீபன் ..அந்த நேரம் தான் யோசிச்சேன் .. அன்பு பாசம் இதெல்லாம் பொய்ன்னு நினைக்கிற கணவனை என்னால சகிச்சிக்க முடியும் .. ஆனா வாழ்க்கையின் ஆதாரம் பணம் மட்டும்தான்னு நினைக்கிற அப்பாவோடு என் குழந்தை எப்படி வாழ முடியும் .. இருக்குற பணத்தை காட்டி இதுதான் உங்க அப்பான்னு நான் சொல்வேனா ? என் குழந்தை அப்பா பாசம் இல்லாமல் பிறந்து வளரனுமா ? அதுனாலதான் மனசு கேட்காமல் அப்படி சொல்லிட்டேன் ..எனக்கே சொல்லி முடிச்சதும்தான் இது எவ்வளவு பெரிய வார்த்தைன்னு புரிஞ்சது .. ஆனா அதுக்குள்ள அவர் போயிட்டார் ரூம்ல இருந்து .. "

என்னதான் அவள் தனக்கு அதிகம் வலிக்காதது போல காட்டிகொன்டாலும் அவள் மனம் படும்பாடை உணராமல் இல்லை சகிதீபன் .. ஏதோ இன்றோ நாளையோ சரியாகிவிடுவான் என்று அண்ணனை விட்டதும் தவறோ ? நந்திதா சொல்வதிலும் உண்மை இருக்கிறதே .. இவனை நிச்சயம் மாற்றித்தான் ஆகவேண்டும் என  சிந்தித்தான் ..

" நீ சொன்னது சரிதான் நந்து "

" இல்லடா .. அவர் வரட்டும் நான் மன்னிப்பு கேட்கிறேன் "

" இப்போதான் உனக்கு அறிவு கொஞ்சம் வேலை செய்யுது நந்து .. உடனே அதுக்கு புல்ஸ்டாப் வைக்க வேணாமே "

" நீ என்ன சொல்லுற தீபன் ? என்னதான் ரொம்ப சுமூகமான உறவாக இல்லைன்னாலும் நானும் அவரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுகிட்டு  இருந்ததில்லை தெரியுமா ? என்னால அவருடைய பாராமுகத்தை தாங்கிக்கவே முடியாது " என்று கூறும்போதே அவள் குரல் தழுதழுத்தது ..

" உனக்கு உன் புருஷன் வேணுமா வேணாமா ?"

" என்ன இப்படி கேட்குற நீ?"

" பின்ன உனக்குன்னு லைப் சரியாக வேணாமா நந்து ? கடைசிவரை அண்ணன் எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு சகிச்சுகிட்டு வாழ போறியா ? அவனை மாற்ற வேணாமா ?"

" அது எல்லாம் முடியாத காரியம் தீபன் "

" கல்யாணத்துக்கு முன்னாடி நான் உன்னிடம் சொன்னதை , நீ எனக்கு திருப்பி சொல்லறியா ? சரி இப்போ அது முக்கியம் இல்லை .. அடிச்ச நமக்கு வலிக்கும்ன்னு நாம சொல்லுற வரை அடிவாங்கி கிட்டேதான் இருப்போம் .. நீ இன்னமும் அமைதியா இருந்தா , அவன் இதான் சமயம்னு மாறாமலே இருந்திடுவான் "

" அதுக்கு நான் என்ன பண்ணனும் ?"

" உனக்கு வலிக்கிரதுன்னு நீ காட்டனும் "

" எப்படி ?"

" நான் சொல்லுற மாதிரி பண்ணு " என்றவன் தன் மனதில் தோன்றிய திட்டத்தை கூறினான் ..

" ஐயோ வேணாம் தீபன் .. வீட்டுல நிம்மதியே போயிடும் ?"

" ஏன் இப்போ மட்டும் எல்லாரும் விக்ரமன் படத்தில் வர்ற மாதிரி கட்டி அணைச்சு பாட்டு பாடிட்டு இருக்காங்களா ? அதெல்லாம் சரி ஆகிடும் .. நீ நான் சொன்னதை செய் "

" சரி .. அப்போ நான் எல்லாரு முன்னாடியும் நாளைக்கு சொல்லவா ?"

" அது ஏன் நாளைக்கு ? இன்னைக்கு அவன் வீட்டுக்கு தானே வருவான் ?"

" பாவம் அவர் டயர்ட் ஆ இருப்பார் "

" அம்மாடி .. உனக்கு புரிய வைக்கிறதுக்குள்ள நான் இங்க டயர்ட் ஆகுறேன் அது தெரியுதா உனக்கு ?"

" ஹ்ம்ம்ம்ம்ம் "

" இது பாரு நந்து , நாரதர்  கலகம் நல்லதில்  முடியும்ன்னு சொன்னாங்களே அது ஏன் தெரியுமா ? நாரதரை கலகம்  பண்ணுறவர்ன்னு பட்டம் கொடுக்குறதுக்கு இல்லை .. சில பிரச்சனைகளை கலகத்தின்  மூலமாகத்தான் தீர்க்க முடியும்னு சொல்லுறதுக்காகத்தான் .. என் அண்ணன் சொல்லித் திருந்துற ஆளாக இருந்திருந்தா கலகம்  அவசியமில்லை .. ஆனா இவன் பட்டாத்தான் புரிஞ்சுப்பான் .. "

" சரி அப்போ சகிதீபனின் கலகம்  ஆரம்பமா ?"

" எஸ் ... தயவு செஞ்சு சொதப்பிடாதே தாயே ?"

" ம்ம்ம்ம் "

" இப்போ போயி முகத்தை கழுவிட்டு ..வயிறார சாப்பிடு ..அப்போதான் வம்பு பண்ண தெம்பு கிடைக்கும் "

" என்ன சிம்பு அப்பா மாதிரி எதுகை மோனையாய்  பேசுற ?"

" என்ன பண்ணுறது ? வாய்மையே வெல்லும்ன்னு என் தலையில எழுதி வெச்சுட்டாங்க போல "

" ஹ ஹ .. தேங்க்ஸ் டா "

" இப்போ சொல்லாத டா .. எல்லாம் சரி ஆகட்டும் .. உன் மொத்த நன்றியையும் அப்போ எடுத்துக்குறேன் .. "

" ம்ம்ம்ம் சரி நீ எப்படி இருக்க ?"

" எனகென்ன ராஜா மாதிரி இருக்கேன் .. ஆமா எனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்களே  .. ஏதும் செட் ஆச்சா /"

" அய்யே , ஏன்டா  இப்படி அலையுற ... அதெல்லாம் நீ வரும்போது பார்த்துப்போம் "

" ஹ்ம்ம் லவ் பண்ணினவனையே கல்யாணம் பண்ணிகிட்ட திமிரில் பேசுறியா நீ ? நடத்து தாயே "

" ஹே அண்ணியை நீ வா போன்னு  பேசக்கூடாது "

" ஆஹான் ... அதுக்கு வேற ஆளை பாரு டி மக்கு "

" சரி ... எனக்கு அழுது அழுது ரொம்ப பசிக்கிறது .. அப்பறமா பேசுறேன் "

" குட் இப்போதான் நீ பார்ம்க்கு வர்ற ..அதையே மெயிண்டெயின் பண்ணு .."

" ஓகே டா"

" ஆல் தி பெஸ்ட் நந்து ..தாத்தாவும் நம்ம ப்ளான்ல இருப்பார் ..சோ தைரியமா இரு .. வெற்றி நமதே "

" ஓகே டா "

இப்படியாய் சகிதீபனின் திட்டத்திற்கு தயாரானாள்  நந்திதா .. நினைத்தபடி நடக்குமா ?

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.