(Reading time: 10 - 20 minutes)

முதலில் ஒரு கதவைத் திறந்தாள். நடுத்தர அளவில் ஒரு பெட்டும்,  சுவர் முழுக்க அலமாரியும் இருந்தது, ஒரு பக்கத்தில் டிரெஸிங் டேபிள் நாற்காலியுடன் இருந்தது. அங்கே ஒரு மேஜை நாற்காலியும் இருந்தது. ராம் மைதிலியிடம், “இது உன் அறை. உனக்கும் சில சமயம் தனிமை தேவைப்படுமல்லவா? அதற்காக உபயோகப் படுத்திக் கொள்” என்றான்.

மற்றொரு கதவைத் திறந்தவள், அதிக ஆடம்பரமின்றி முதல் அறையைப் போலவே இருந்தது. மேலும் ஒரு பீரோவும் இருக்கக் கண்டாள். இரண்டு அறைகளுக்கும் பொதுவாக அட்டாச்டு பாத்ரூம் இருந்தது. இரு அறையிலிருந்தும் உபயோகப் படுத்திக் கொள்வதற்கு வசதியாக இருந்தது.

ராம் மைதிலியிடம் “பிடித்திருக்கிறதா” என்றான். “அழகாக இருக்கிறது” என்றாள்.

பிறகு “போகலாமா என்று கேட்டாள் மைதிலி. “போகலாம்.” என்றவன், அவளைப் பிடித்து இழுத்தான். எதிர் பாராததால் அவன் மேல் மாலை போல் விழுந்தவளை இறுக்கி அணைத்தவன், அவள் முகமெங்கும் முத்த ஊர்வலம் நடத்தினான். பிறகு மெதுவாக இதழ்களை சுவைத்தவன், கழுத்துக் கீழே இறங்கும் போது அவனைத் தள்ளி விட்டு, வெளியே வந்து விட்டாள்.

முகம் முழுதும் சிவக்க நின்றிருந்தவளை பின் தொடர்ந்து வந்தவன், அவளைப் பார்த்துக் குறும்பாக கண்ணடித்தான். இருவருமாகக் கீழே சென்ற போது எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். மைதிலி அத்தையிடம் அமர்ந்து கொள்ள ராம் தாத்தாவிடம் அமர்ந்து கொண்டான்.

பாட்டி மைதிலியிடம் “மைதிலி, இன்று இரவு நாம் ரயிலில் எல்லோரும் குல தெய்வம் கோவிலுக்குப் போகிறோம். நாளை பூஜை முடித்து விட்டு, நாளை இரவு ஊர் திரும்புகிறோம். உனக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொள்” என்றார்.

ராமின் அம்மா கௌசல்யா “நாளையும் கொஞ்சம் கிராண்டாக பட்டுப் புடவையே எடுத்துக் கொள்” என்றார்.

“சரி. என்றவள். இரவு டிரெயினுக்கு சுடிதார் போட்டுக் கொள்ளலலாமா அத்தை” என்றாள்.

“அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை. கோவிலுக்கு மட்டும்தான் சொன்னேன். மற்றபடி உடை எல்லாம் உன்னுடைய விருப்பம்தான் மைதிலி” என்றார்.

பிறகு எல்;லோரும் பேசியபடி டிபன் காபி முடித்தபின், ஊருக்குக் பேக் செய்யச் சென்றனர். மைதிலியின் உடைமைகள் எல்லாம் ஏற்கனவே ராமின் அறையில் வைத்து விட்டதால், அவள் அங்கு சென்றாள்.

அப்பொழுது உள்ளே வந்த ராம், தன்னுடைய உடைகளையும் அவளிடம் கொடுத்து அடுக்கச் சொன்னான். இருவர் பெட்டியையும் தயார் செய்து விட்டு, கிளம்பிய மைதிலியிடம், “மிது” என்று அழைத்தான். திரும்பிப் பார்த்தவளை அணைத்து தேங்கஸ் என்றான். 

“எதற்கு?” “இல்லை. உடை விஷயத்தில் அம்மாவும் பாட்டியும் தலையிட்டதை பொறுத்துக் கொண்டதற்கு” என்றான். “ராம், அவர்கள் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. கோவிலுக்கு புடவைதான் எடுத்திருப்பேன். என்ன பட்டுப் புடவையை ரொம்ப நேரம் உடுத்திக் கொள்வது கஷ்டமாயிருக்கும். ஆனால் உங்கள் ஊரில் அப்படிச் சென்றால் தான் நன்றாக இருக்கும் என்பதற்காக சொல்கிறார்கள் என்று புரிந்தது. அவ்வளவுதான்”

“ம்… சரி நீ போ நான் கொஞ்சம் லேப்டாப்பில் சில மெயில் செக் பண்ணிட்டு வருகிறேன்.” இரவு உணவு முடித்து அனைவரும் கிளம்பினர்.

டிரெயினில் பர்ஸ்ட் கிளாஸில் எடுத்திருந்ததால், அனைவரும் ஒன்றாக அமர்ந்து சற்று நேரம் அரட்டை அடித்து விட்டு, அவரவர் இடத்திற்குச் சென்று படுத்தனர். எல்லோரும் சேர்ந்து சாதாரணமாக செய்வது போல் கணவன் மனைவி இருவருக்கும் சைட் அப்பர், லோயர் பர்த் வருமாறு செய்தனர். லோயர் பர்த்தைப் போட்டவன், அவளை அமரச் சொல்லி விட்டு, அவனும் அவளை உரசியபடி அமர்ந்தான். அவள் கண்ணால் எல்லோரும் இருப்பதைச் சுட்டிக் காட்டவும், கண்ணடித்துச் சிரித்தான்.

பிறகு சற்று சீரியஸாக, “ மைதிலி நம் வரவேற்பு முடிந்த இரண்டு தினங்களில் நாம் எல்லோரும் பேமிலி டூர் ஆஸ்திரேலியா போகப் போகிறோம். வருடந்தோறும் டிசம்பர் மாதத்தில் இந்த டூர் புரோகிராம் உண்டு. இது நாங்கள் ஏற்கனவே புக் செய்து விட்டோம். இடையில் என் பிடிவாதத்ததால் நம் திருமணம் நடந்து விட்டது. என்னைப் பொறுத்த வரை நீதான் என் மனைவி என்று முடிவு செய்தபின் நாளைத் தள்ளிப் போடுவதில் இஷ்டமில்லை. மேலும் உன்னைத் தனியே விடவும் மனதில்லை. உனக்குப் பெற்றோர், உற்றோர் இருந்தால் எப்படியோ? எல்லோரும் ஒரு மாதிரி என்னுடைய அவசர முடிவு தவறோ என்று எண்ணுகின்றனர். அதனால் அந்த டூரைத் தள்ளிப் போடாமல் முடித்துவிடலாம் என்று உனக்கும் தட்கலில் டிக்கெட் புக் செய்து விட்டேன். இந்த டூர் இப்போது முடித்து விட்டு பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நாம் ஹனிமூன் போகலாம் சரியா?” என்றான்.

“சரி. என்றாள் மைதிலி.

“இதில் உனக்கு வருத்தமில்லையே?”

“இல்லை. நீங்கள் என்னோடுதானே இருப்பீர்கள்” எனவும் ராம் அவளை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டான்.

“தேங்கஸ் மிது.” என்றவன் “சரி. தூங்கு. நாளை முழுதும் பிஸியாக இருக்கும். குட்நைட்” என்று மேல் பர்த்தில் ஏறி படுத்தான். அன்றைய களைப்பில் இருவரும் படுத்தவுடன் உறங்கி விட்டனர்.

றுநாள் அதிகாலை ஸ்ரீவைகுண்டத்தில் இறங்கியவர்கள், தாத்தாவின் வீட்டிற்குச் சென்று குளித்து கோயிலுக்குச் சென்றனர். கோயிலில், அபிஷேகம், பூஜை எல்லாம் முடித்துவிட்டு மதியம் விருந்து உண்டனர். பிறகு ஊரில் உள்ளவர்கள் சதாபிஷேகம் மற்றும் கல்யாணம் விசாரிக்க வர, அனைவருக்கும் பதில் சொல்லி விருந்தோம்பினர்.

எல்லாம் நன்றாக இருந்த போதும் மைதிலி சில நேரங்களில் சங்கடப்பட்டாள். திருமணம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் அவளின் பிறந்த வீட்டைப் பற்றிக் கேட்டபோது அவளுக்கு என்று யாருமில்லையே என்று வருத்தப்பட்டாள்.

அவளின் அம்மா, அப்பாவுடைய உறவினர்கள் இல்லையா என்ற போது அவர்கள் யாரைப் பற்றியும் இவளுக்குத் தெரியவில்லை. ஆனால் இதைத் தவிர வந்திருந்தவர்கள் வேறு எற்த விதத்திலும் அவளை வருத்தப் பட வைக்காததால் அவள் மற்ற நேரம் மகிழ்ச்சியாக இருந்தாள்.

முதல் நாளைப் போல் அன்றும் இரவு உணவு முடித்து ரயிலில் கிளம்பினர். இப்பொழுது அனைவரும் களைப்பாக இருந்ததால் ஏறிய சற்று நேரத்திலேயே உறங்கி விட்டனர்.

தொடரும்

Episode 05

Episode 07

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.