(Reading time: 8 - 15 minutes)

ரண்டு நாட்களுக்குப் பிறகு,

அவன் வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்திற்கு வராமல் போகவே, நேரம் இரவு 9 மணி ஆகியிருந்தது…

அவன் இதுவரை தாமதமாக வீட்டிற்கு வந்ததில்லை… இன்று புதிதாய் அவன் நேரம் கடத்தவே, அவளுக்குள் பயம் உண்டானது…

அவனது கைபேசி எண்ணிற்கு அழைத்தாள்…

“வள்ளி…. எப்படி இருக்குறம்மா?... நான் நமச்சிவாயம் பேசுறேன்….”

“ஹ்ம்ம்…நான் நல்லா இருக்கேன் அங்கிள்… நீங்க எப்படி இருக்கீங்க?... அவர் எங்க அங்கிள்???...” என்ற அவளின் குரலே பதட்டத்தை தெரிவிக்க…

“இங்க கொஞ்சம் வேலைம்மா… அதான் தம்பி மாட்டிக்கிட்டார்… மீட்டிங்க்ல இருக்கார்மா…. போன் கூட 5 மணியில இருந்து என் கையில் தான் இருக்கு….” எனவும்,

“ஹ்ம்ம்… அங்கிள்… அங்க எதும் பிரச்சினையா?...”

“அது வந்தும்மா… இரும்மா,,,, நான் யுவிகிட்டயே குடுக்குறேன்…. நீ பேசு…”

“வேண்டாம் அங்கிள்…. அவர் மீட்டிங்கில் இருக்கார்னு சொல்லுறீங்க… வேண்டாம் தொந்தரவு பண்ண வேண்டாம்…”

“நீ இரும்மா… நான் கொடுக்குறேன்….”

“வேண்டாம் அங்கிள்…” என அவள் சொல்வதை பொருட்படுத்தாது, யுவியிடம் அவர் சைகையில் வெளியே வர சொல்லி, போனை கொடுத்துவிட்டு பேசு என்று சென்றுவிட,

“அங்கிள், வேண்டாம்… பாவம் மீட்டிங்கில் இருக்குறவரை தொந்தரவு பண்ண வேண்டாம்… அங்க பிரச்சினை ஒன்னும் இல்ல தான?... வழக்கமா அவர் வர்ற நேரத்துக்கு வரலையா… அதான் போன் பண்ணினேன்… சாரி அங்கிள் தொந்தரவு பண்ணிட்டேன்… அவரைக்கொஞ்சம் பார்த்துக்கோங்க… வேலை முடிச்சதும் வீட்டுக்கு வர சொல்லிடுங்க எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை… வர சொல்லிடுங்க… அங்கிள்… நிஜமா பிரச்சினை எதும் இல்ல தான?..” என அவள் அவரிடம் சொல்வதாக நினைத்துக்கொண்டு பேச, யுவி அவளின் தயக்கம், பயம், கவலை, அக்கறை அனைத்தையும் உணர்ந்தான் அவளது குரலில்…

“வள்ளி….” என்ற அவனது குரலில் சந்தோஷம் கொண்டவள்,

“நீங்க… வந்து…” என்று இழுக்க…

“இங்க பிரச்சினை எதும் இல்லை… பயப்படுற அளவுக்கு…. சின்ன ஸ்டிரைக் பிராப்ளம் தான்… பேசிட்டிருக்கோம்… சரி ஆகிடும்… நான் வர கொஞ்சம் நேரம் ஆகும்… சாரி நடந்த இந்த விஷயத்துல உங்கிட்ட போன் பண்ணி சொல்ல மறந்துட்டேன்… வர லேட் ஆகும்னு…. சாரி…” என அவன் தன் தவறை ஒப்புக்கொண்டு சொல்ல…

“இல்லங்க… வேலையில இருக்கும்போது வேலை மட்டும் தான் நினைவிருக்கணும்… இதுக்கு எதுக்கு சாரி எல்லாம்?... விடுங்க…”

“ஹ்ம்ம்… சாப்பிட்டியா?...”

அவனின் அக்கறையில் சற்றே மன நிம்மதி கொண்டாள் அவள்…

“இல்லங்க… நீங்க சாப்பிட்டிருக்க மாட்டீங்கதான இன்னும்?... சீக்கிரம் சாப்பிட்டு அவங்ககிட்ட பேசி முடிங்க…”

“ஹ்ம்ம்… நீ சாப்பிட்டு தூங்கு… கதவை லாக் பண்ணிடு… எங்கிட்ட ஒரு கீ இருக்குல்ல…. நான் அதை வச்சு திறந்துப்பேன்…”

“சரிங்க… வந்துடுங்க…” என அவள் பயத்துடன் சொல்லியபோது,

அவளது பயத்தினை புரிந்து கொண்டவன், “சீக்கிரம் வர முடியுமான்னு தெரியலை… ஆனா முயற்சி பண்ணுறேன் சீக்கிரம் வர…” என்றபடி போனை வைத்தான்…

ரவு 1 மணி அளவில் வீட்டிற்கு வந்தவன்,

டைனிங்க் டேபிளில் இருந்த உணவுப் பாத்திரங்களை திறந்து பார்த்தான்… அவள் சாப்பிடாதது தெரிந்தது…

நேரே மேலே தனதறைக்கு விரைந்தான்…

கதவை திறந்து உள்ளே சென்றவன், அறை இருட்டாக இருப்பதை பார்த்துவிட்டு லைட் சுவிட்சை ஆன் செய்தான்…

ஒளி சட்டென்று அந்த அறை முழுவதும் பரவ,

அவனது கண்களில் பளீரென்ற மின்னல் வந்து போனது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில்…

வரம் தொடரும்…

Episode # 13

Table of Contents

Episode # 15

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.