(Reading time: 21 - 42 minutes)

07. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

று நாள் காலை பொழுது விடிந்தது. புது இடம், புது மனிதர்கள். தூக்கம் வராமல் இரவு முழுவதும் அந்தக் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் துளசி. ஏதேதோ வேண்டாத சிந்தனைகள். 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நான் பிறந்தது முதல் ஏதோ ஒரு கஷ்டம். பெற்ற தாய் , தந்தையின் அன்பை உணர வில்லை. அவர்களைத்தான் பறி கொடுத்தேன் என்றால், வளர்த்த பாட்டியும் என்னை விட்டு போய் விட்டார்கள். நான் எப்படி எப்படியோ பாட்டியை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஒன்றும் அனுபவிக்காமல், கடைசியில் என்னை விட்டே போய் விட்டார்கள் . அவர்கள் இருந்த வரை என்னை, நன்றாக, கஷ்டம் தெரியாமல் தான் வளர்த்தார்கள். நான் தான் அவர்களுக்கு, ஒன்றுமே செய்ய வில்லை. என்ன ஒன்று, கடைசியில், சாகும் போது கூட, என்னை பற்றியே யோசித்து எனக்கு திருமணமும் முடித்து விட்டர்கள். இது பொய்யாக செய்த திருமணமோ, என்னவோ, அவர்கள் அதை கண் குளிர கண்ட பின்பே இறந்தார்கள். இது ஒன்று தான் நான் அவர்களுக்கு கொடுத்த மகிழ்ச்சியான விஷயம். சரண் சொன்ன படி, இந்த திருமணத்தால், அந்த ஜீவன் கடைசியில், தன் கடமையை முடித்த சந்தோஷத்துடன் இறைவனடி சேர்ந்தது'. என்று யோசித்துக் கொண்டே இருந்தவள், விடியற் காலையில் தான் சற்று கண் அயர்ந்தாள்.

ஆறு மணிக்கு, வைத்திருந்த அலாரம் சத்தம் கேட்டு சட்டென்று கண் விழித்து எழுந்து அமர்ந்தாள் துளசி. சிறிது நேரத்திற்கு ஒன்றுமே புரிய வில்லை. தான் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் தடுமாறியவள், பின்பு சுதாரித்துக் கொண்டாள். சரியான தூக்கம் இல்லாததால் கண் எரிந்தது. தன்னை சமாளித்துக் கொண்டவள், குளியலறை நோக்கிச் சென்றாள். குளித்து முடித்து வெளியே வந்தவள், ரொம்பவும் ரிச்சாக இல்லாமல், மட்டமாகவும் இல்லாமல் நார்மலாக வெளியே செல்ல தகுதியான ஒரு பெங்கால் காட்டன் சாரியை அணிந்தாள்.

தலையை வாரி, பொட்டு வைக்கும் போது கை நடுங்கியது... 'விதவையாக இருந்திருக்க வேண்டியவள், தம்பியின் கையால் தாலி வாங்கிக் கொண்டு, சுமங்கலியாக நிற்கிறேன்... வயிற்றிலோ, அண்ணனின் வாரிசு... அவளுக்கு மாத்திரம் அவள் உள்ளுணர்வு சொல்லியது, தன் வயிற்றில் கரு இருப்பதை.... அண்ணனின் குழந்தை! தம்பியின் மனைவி! என்ன ஓர் வினோதம்'... நினைக்கவே என்னமோ மாதிரி இருந்தது.

Nizhal nijamagirathu

இனி எதையும் நினைக்கக் கூடாது. நடப்பது நடக்கட்டும், என்று திர்மானித்து வெளியே செல்ல கதவைத் திறந்தாள். மணி ஏழு தான் ஆகிறது.

சரண், நன்றாக இழுத்து போர்த்தி மெல்லிய குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான்.

சரி, கிழே செல்வோம் என்று திர்மாணித்து, சன்னலில் இருந்து பார்த்த தோட்டத்திற்கு செல்லலாம் என்று அவன் ரூமின் கதவை மெல்ல திறந்து , மெதுவாக வெளியே வந்தவள், மீண்டும் அவன் ரூமின் கதவை சத்தமில்லாமல் மூடி விட்டு , மாடி படிகளில் இறங்கினாள். அங்கே மாட்டியிருந்த கரணின், புகைப்படத்தைப் பார்த்து, அய்யோ பாவம், ஒரு நிமிடம் நின்றவள், தலையசைத்து, இனி இவனை மறக்க வேண்டும் என்று எண்ணி தோட்டப் பக்கம் சென்றாள்.

ஆ... என்ன அழகு... இயல்பிலேயே அவளுக்கு, செடி, கொடிகள் என்றால் மிகவும் பிடித்தம்... இங்கோ, ஒரு பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, விதவிதமான ரோஜாக்கள், மல்லி, முல்லை கொடிகள், சாமந்தி, அடுக்கு நந்தியாவட்டை, பாரிஜாதம் என்று வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், மா, பலா, வாழை, சப்போட்டா, மாதுளை என்று வீட்டின் பின்புறம் மரங்களும் அணி வகுத்தன. தென்னை மரங்கள் கரெக்டான இடைவெளி விட்டு உயர்ந்து தென்னங்குலையுடன் நின்றிருந்தன.

இந்த தோட்டத்தின் நடுவில் வெள்ளை வெள்ளேரென கம்பீரமாக நின்று கொண்டிருந்தது அந்த மூன்று அடுக்கு பங்களா. வீட்டின் ஒரு மூலையில் பெரிய செயற்கை நீர் விழ்ச்சியும், செய்குளமும் இருந்தன. வீட்டின் பின்னாலோ, பெரிய நிச்சல் குளமும், டென்னீஸ் கோட்டும் இருந்தது. மொத்ததில் எல்லாம் வெகு அழகாக வெகு நேர்த்தியாக இருந்தன். ஒவ்வொரு மூலையிலும் பணக்காரத்தனம் தெரிந்தது. காண காண தெவிட்டவில்லை துளசிக்கு.

தோட்டத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். மனது காப்பிக்கு ஏங்கியது. நம் வீடு என்றால், இத்தனை நேரம் பெரிய கோலம் போட்டு விட்டு இரண்டு முறை காப்பியை பாட்டியுடன் குடித்து முடித்திருப்போம். இங்கு என்னடாவென்றால் , வாசலில் இன்னும் கோலம் கூட போடவில்லை? என்ன சென்னைப் பட்டிணமோ? என்று நொந்துக் கொண்டாள்.

"என்ன சின்னம்மா, தோட்டத்தில் உட்கார்ந்து வாசலை பார்க்கிறீர்கள்?

குரல் வந்த திசையை பார்த்தவள், தன் எதிரே சுமார் முப்பது வயது பெண்னொருத்தி, கிராமியப் பாணியில் புடவை அணிந்து நின்றிருப்பதைக் கண்டாள்.

"என்ன அப்படி பார்க்கிறீர்கள் சின்னம்மா ... என் பெயர் வள்ளி... இங்கு நான் தன் சமையல் செய்கிறேன். என் புருஷன் ஆறுமுகம் சின்ன தம்பியிடம் டிரைவராக வேலை செய்கிறார். பெரிய்யாவுக்கும், அம்மாவுக்கும் வேறு ஒரு டிரைவர் இருக்கிறார். எனக்கு கூடமாட ஒத்தாசை செய்ய இங்கு சின்னப் பொண்ணு இருக்கிறாள்...பேரே அதுதான்மா.

இந்தாங்க காப்பி தண்ணீ. குடிங்க. நீங்கள் தோட்டத்திலே உட்கார்ந்து இருப்பதை பார்த்த பெரிய அய்யா தான் அனுப்பினார்." என்றாள்.

'ஓ... இந்த வீட்டு பெரியம்மா, சமையல் கூட செய்யாதோ? சமையல் அறை எங்கு இருக்கிறது என்று கூட தெரியுமோ, தெரியாதோ? ' என்று நினைத்தவள், வாய் மூடாமல் கடகடவென்று பேசிய வள்ளியை புன்னகையுடன் ஏறிட்டாள் துளசி... அவள் கொடுத்த காப்பியை நன்றி கூறி வாங்கிக் கொண்டவள், மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் "வாசலில் கோலம் போட வில்லையா?" என்று கேட்டாள்.

"இப்பத்தான்மா, தோட்டக்காரன், வாசலில் தண்ணீர் விட்டு கழுவினான். இங்கெல்லாம், ஏழு மணிக்கு மேல்தான் கோலம் போடறது. பெரியம்மாவிற்கு கொஞ்சம் உடம்பு முடியாததால் மெதுவாகத்தான் எழுந்திருப்பாங்க. அதுவும், இப்ப பெரிய தம்பி திடீரென இறந்து போனதால், எப்பவும் துக்கமாகத்தான் இருக்காங்க... பெரியய்யாதான் ஏதோ தூக்க மாத்திரைக் கொடுத்து தூங்க சொல்லுவாங்க... என்ன செய்வதும்மா, வளர்ந்த பெரிய மகனை பறி கொடுப்பது கொடுமைதான். எல்லாம் போதாத நேரம் தான் " என்றவள் "நான் இப்ப கோலம் போடப் போறேன். நீங்க காப்பியை குடிங்க... இரண்டு இழு இழுத்துட்டு, சமையலை கவனிக்க போகனும்.... எது எப்படியானாலும், பெரிய அய்யாவுக்கு, எட்டரை மணிக்கு எல்லோரும் கரெக்டாக காலை டிபனுக்கு வந்துடனும். இல்லை யென்றால் கோபம் வரும்"

"வள்ளி, ஒரு நிமிடம், கடகடவென்று காப்பியை குடித்தவள், கோல மாவு கொடு. இன்று நான் கோலம் போடுகிறேன்" என்று அவளுடன் வாசல் பக்கம் சென்றாள்.

அவள் கைகளில், பெரிய பூக்களும், கிளிகளும், உறுமாறி பின்னர் பெரிய கோலமாக மலர்ந்தது. புன்னகையுடன் நோக்கியவளை மெச்சுதலாக பார்த்தாள் வள்ளி. "சுப்பர்ம்மா... இங்கெல்லாம், இரண்டு இழை பெயருக்குத்தான் போடுவார்கள். வாங்கம்மா உள்ளே போகலாம் ", என்ற வள்ளியுடன் இணைந்து நடந்தாள் துளசி.

ஹால் சோபாவில் காப்பி குடித்தபடி அமர்ந்திருந்தனர் சரணின் பெற்றோர்கள்... அவர்களை கண்டு சற்று நின்றவள், குட் மார்னிங் அங்கிள், குட் மார்னிங் ஆண்ட்டி, என்றவளுக்கு, கிருஷ்ணன் குட்மார்னிங் என்று மெல்ல முணுமுணுத்தாள். சியாமளாவோ, மூஞ்சியை சுளித்து திருப்பிக் கொண்டார்.

"காலங்கார்த்தாலே எங்கடி போனே வள்ளி? டிபன் ரெடி செய்யாமல் தோட்டத்திலே என்ன வேலை? வேறு வேலை வெட்டி இல்லை."

"இல்லம்மா... நம்ம சின்னம்மா, வாசலில் பெரிய கோலம் போட்டாங்கம்மா. அதான் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்ற வள்ளியை முறைத்த சியாமளா,

"அவளுக்குத்தான் வேறு வேலை இல்லை. .. போடி.. போய் சமையலைப் பார்....கோலம் போடறாளாம் கோலம் பெரிசா... சரியான நாட்டுப்புறம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.