(Reading time: 21 - 42 minutes)

ன் மீதும் தப்புத் தானே டாக்டர்.... கரண், துளசி விஷயம் எதுவுமே நான் இன்னும் அவர்களிடம் சொல்லவில்லை. வெறும் அவசர திருமணம் என்றே சொன்னேன்... பாட்டி பற்றி கூட பேச இன்னும் சந்தர்ப்பம் வரவில்லை.

முதலில், துளசியின் நிலை பற்றி தெரிந்துக் கொண்டு பின்னர் அவர்களிடம் சொல்லலாம் என்று திர்மாணித்து இருக்கிறேன்... ஒரு வேளை, துளசி, கர்ப்பம் தரித்திருக்கா விட்டால், ஏதோ அவசரத் திருமணம் செய்து கொண்டு விட்டோம், இப்பொழுது கருத்து வேறுபாடு என்று ஒர் வருடம் கழித்து, துளசி விரும்பினால் டைவர்ஸ் கூட கொடுக்க ரெடியாக இருக்கிறேன்... துளசி கர்ப்பமாக இருந்தாலும், பரவாயில்லை.... குழந்தை பிறக்கும் வரை அவளை விட முடியாது.... இதுவரை தன், எங்கள் இஷ்டம் போல் செய்து விட்டோம்... இனி துளசியின் முடிவு தான் எல்லாம்... ஆனால் ஒன்று, குழந்தை என்று கன்ஃபார்ம் ஆகி விட்டால், அதை எந்த காரணம் கொண்டும் கலைக்க மாத்திரம் விட மாட்டேன்...

துளசி, கரண் தன் இறந்து போய் விட்டானே, பாட்டியும் இல்லை, நான் எதற்காக குழந்தை பெற்று தர வேண்டும், அபார்ஷன் செய்து விடலாம் என்று சொன்னால், மெல்ல அவளுக்கு எடுத்துச் சொல்லலாம். பிடிவாதம் பிடித்தால், இருக்கவே இருக்கு, ஆல்ரெடி காண்டிராக்டில் சைன் செய்து இருப்பதை சுட்டிக் காட்டுவோம்.... கரண் இருந்தாலும், இறந்தாலும், தாலி கட்டி, குழந்தை பெறுவதுதானே அவள் கண்டிஷன்" என்றான்.

அவனது நிலைமையை தெளிவாக புரிந்து கொண்ட டாக்டர்.சுபா, இந்த இளம் தொழிலதிபனை கருணையுடன் பார்த்தவர், 'எங்கள் குடும்ப நண்பருக்குத் தன் எவ்வளவு நல்ல வாரிசு. இவன் துளசியுடன் நிஜமான ஒரு திருமண பந்தத்தில் இணைந்திருந்தாள் நன்றாக இருக்குமே' என நினைத்தவர்,

"சரண் உனக்குத் தான் மேலும் மேலும் எத்தனை துன்பங்கள்.... நீ தான் எவ்வளவு நல்லவன்... எப்பொழுதும் மற்றவருக்காவே பார்க்கிறாய்... அன்று சட்டென்று முடிவெடுத்து, பாட்டிக்காக துளசியை மணந்து கொண்டாய்... உன் அண்ணனின் இந்த வேண்டாத வாரிசு ஆசையையும் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாய்... இன்றோ, துளசியின் விருப்பத்தையும் பார்க்க வேண்டும் என்கிறாய்... மற்றவர்களுக்காகவே வாழும் உன்னை உன் பெற்றோர் புரிந்து கொள்வர்... எல்லாம் மேலே இருக்கும் அவன் பார்த்துக் கொள்வான்.. கவலை படாதே... என்று ஆறுதல் சொன்னார்.

அரை மணி நேரம் கழித்து, வந்த துளசி கொடுத்த ரிப்போர்ட்டை பார்த்தவர் மகிழ்ச்சியுடன், "கங்கிராட்ஸ் துளசி.... துளசி நீ தாயாகாப் போகிறாய்... உன் டெஸ்ட் ரிப்போர்ட் சொல்லுகிறது.... உம்... எங்கள் இந்த ஐ. வி. எஃப். முயற்சி மீண்டும் வெற்றி... கரண் ஆசைப்படி அவன் வாரிசு உருவாகி விட்டது..... எல்லாம் நல்லதுக்கே", என்றவர், சரணிடம் திரும்பி, "சரண், உனக்கும் இது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்... இனி நீ துளசியின் கர்ப்பத்தை மறைக்காதே... ஏற்கனவே நாற்பது நாட்கள் தள்ளி போய் விட்டது.... இது தன் கரெக்ட்டான டயம்.உன் பெற்றோர்களிடம் சொல்லி விடு. என்னைக் கேட்டால், கரணுக்கும், துளசிக்குமான சம்மந்தம், பாட்டிக்காக துளசி வாடகைத் தாயாக சம்மத்தித்தது, கரண் இறந்தது, உன் திடீர் திருமணம் எல்லாம் சொல்லி விடு.... அவர்கள் வாரிசு பற்றி உண்மை அறிந்தாலே, துளசியின் மேல் நல்ல அபிப்பிராயம் வரும்... உங்கள் திருமணத்தையும் ஏற்றுக் கொள்வார்கள்".

"துளசி, இனி நீ ஜாகிரதையாக இருக்க வேண்டும். ரொம்பவும் ஸ்டெரெய்ன் செய்யக் கூடாது. முடிந்தவரை முதல் இரண்டு மாதம் பெட் ரெஸ்ட்டில் இரு. கொஞ்சம் அனிமிக்காக இருக்கிறாய். மருந்து, மாத்திரைகள், மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய ஊசிகள் எல்லாவற்றையும் உனக்கு எழுதித் தருகிறேன்.

வாந்தி, மசக்கை எல்லாம் இனி வரலாம். ஆனாலும் சத்தான் உணவு எடுத்துக் கொள்.. சரண், நீ இவளை இனி கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.. உன் அம்மாவின் துணை இருந்தால் இந்த சமயத்தில் துளசிக்கு நல்லது. புரிந்து கொள்.. மெல்ல அவர்களிடம் விஷயத்தச் சொல்லிவிடு."

"துளசி, உடம்பைப் பார்த்துக் கொள். இனி நீ தனி மனுஷி இல்லை. உனக்குள் இன்னொரு ஜீவன் இருக்கிறது. நீ எது செய்தாலும் அதை மனதில் கொண்டு செய். எல்லாம் நல்லதே நக்கும். என்ன சந்தேகமானாலும் , எந்த நேரமானாலும், என்னை கால் செய். மீண்டும் 15 நாட்கள் கழித்து, முடிந்தால் உன் மாமியாரையும் கூப்பிட்டு கொண்டு அடுத்த செக்கப்பிற்கு வா. பை சரண்., நான் சொன்னது நினைவிருக்கட்டும்", என்று அவர்களை வழி அனுப்பினார் டாக்டர். சுபா.

காரில் ஒன்றும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள் துளசி... தனக்கு தெரிந்தே இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டிருந்தாலும், இப்பொழுது ஏனோ, அதை ஏற்றுக் கொள்ள பிடிக்க வில்லை. ' தனக்குள் ஒரு ஜீவன், உதித்திருக்கிறது, என்று தெரிந்த பிறகு அது பற்றி, கொஞ்சம் கூட சந்தோஷமில்லை. அதற்கு காரணமனவனையே மனம் நினைத்துக் கொண்டிருந்தது. பாவம், கரண், எதையுமே உணரும் முன் சென்று விட்டான். அவன் இப்பொழுது இருந்திருந்தால், எப்படி மகிழ்திருப்பான்' , தனக்குள் யோசனையில் முழ்கியிருந்தாள்.

சரணும், அவளிடம் ஒன்றும் பேசாமல், தன் அண்ணன் கரணைப் பற்றியே யோசித்துக் கொண்டு காரை வீடு நோக்கி செலுத்தினான்.

வீட்டுக்குள், நுழைந்தவர்களை வெறுப்புடன் பார்த்தார் சியாமளா. அப்பொழுது தான், கிருஷணனும், சியாமளாவும் மதிய உணவு உண்டு முடித்திருந்தார்கள். மணி இரண்டாகிருந்தது. 'என்ன நெஞ்சழுத்தம் இருவருக்கும். செய்வதெல்லாம் செய்து விட்டு, ஜோடி போட்டுக் கொண்டு ஊர் சுற்றி விட்டு வருகிறார்கள். இந்தப் பூனையும், பால் குடிக்குமா என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு, காலையில் என்ன திமிராக பார்த்து விட்டு போனாள். இத்தனைக்கும் இவள் ஒன்றும் வசதியான பின்னனியில் இருந்து வந்தவள் போல தெரியவில்லை', என நினைத்தவர், அவளைப் பார்த்து, புன்னகைத்த துளசிக்கு, முகத்தை கடினமாக திருப்பிக் கொண்டு, தன் கணவனிடம் ஏதோ பேச ஆரம்பித்தார்.

உள்ளே நுழைந்த சரண், தனது தாயின் முகத் திருப்பலை பார்த்து விட்டு, தன் தந்தையிடம் திரும்பி, "ஹாய் டாட், மதிய உணவு முடிந்து விட்டதா?" என்றவனை, கிருஷ்ணன்,

"இப்பொழுது தான் ஆயிற்று. போய், நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள்"

"வா துளசி, சாப்பிடலாம்", என்று துளசியை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிள் நோக்கிச் சென்றான்.

உணவு முடித்ததும், "துளசி, டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். பத்திரமாக மேலே போ. நான் சிறிது நேரத்தில் வருகிறேன். அம்மாவிடம் பேச வேண்டும்"

அவனுக்கு தலையசைத்து விட்டு, மெல்ல படியேறிய துளசிக்கு, திரும்பவும் அந்த புகைப்படத்தை கடக்கும் தருணம் உடல் நடுங்கியது. 'சாதித்து விட்டான். இவன் வாரிசு என் வயிற்றில். இதை பெற்று கொடுத்து விட்டால் என் கடன் முடிந்து விடும்' என்று எண்ணியவாறு படியேறி தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.

படியேறி செல்லும் துளசியை வைத்த விழி மாறாமல் பார்த்துக் கொண்டிருந்த சரணை, அவன் தாயின் கனைப்பு நிகழ்வுக்கு திருப்பியது. "மகாராணிக்கு என்னவாயிற்று? என்னவோ அன்ன நடை பயிலுகிறாள்".

கிருஷ்ணனோ, " என்ன இது சியாமளா... உனக்கு என்னவயிற்று.... ஏன் இப்படி பேசுகிறாய்? .... வேண்டாம்மா, இது உன் இயல்பு இல்லையே?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.