(Reading time: 21 - 42 minutes)

ரணோ ஒன்றும் பேசாமல் ஒரு வெற்றுப் பார்வை பார்த்து, "அம்மா, அப்பா, உங்களுடன் நான் பேச வேண்டும். வாருங்கள் உங்கள் ரூமிற்க்கு போகலாம்", என்று அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்றான்.

உள்ளே நுழைந்தும், ஒன்றும் பேசாமல் சன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன், "என்னப்பா, என்ன விஷயம்?" என்ற கிருஷ்ணனின் குரலுக்கு திரும்பியவன், "அம்மா, துளசி கர்ப்பமாக இருக்கிறாள். இந்தக் குடும்ப வாரிசை சுமக்கிறாள்" என்றான் நிதானமாக.

மின்னாமல், முழங்காமல் விழுந்த இடியால், ஸ்தம்பித்த சியாமளா, " அடப் பாவி, ஐய்யோ, இப்படிக் கூட நடக்க கூடுமா?... என் பிள்ளைகள் ஒழுக்கமானவர்கள் என பெருமையில் எத்தனை நாள் பூரித்திருப்பேன்... ஆனால் இப்படி ஒரு கேவலத்தை செய்ய எப்படி டா பாவி, உனக்கு மனசு வந்தது.... நீயும் ஒரு பிறவியா?.... கல்யாணம் ஆகி பதினைந்து நாளில் மனைவி கர்ப்பம்.... ஆ ஹா... கேட்கவே காதுக்கு இனிமையாக இருக்கிறது..."

"அம்மா" என்று கடுமையாக ஒலித்த மகனின் குரலை புறக்கணித்து,... "வாயை மூடுடா... இன்னமும் எத்தனை குண்டுகளைப் போடப் போகிறாய்?.... ஒரு குழந்தை உருவானது தெரிய குறைந்த பட்சம் 30-35 நாள் வேண்டுமென்பது கூட தெரியாதா.... உன் அண்ணன் புதைத்த இடம் ஈரம் காய்வதற்குள், நீ ஒரு பெண்ணோடு சுகிக்க நான் என்ன பாவம் பண்ணினேன்... இந்த அவலத்தை கேட்டு இன்னமும் நான் சாகவில்லையே " என கதறினாள்.

கிருஷ்ணன் மகனை கடுமையாக பார்த்து, "இதோ பார்... உனக்கும் ஏதோ ஓர் காரணம் இருக்கக்கூடும் சட்டென மணமுடிக்க என்று எண்ணினேன்... ஆனால் இப்போதோ,... உன் அன்னை மனம் தாளாமல் வார்த்தைகளை கொட்டி விட்டாள்... நான்.... "சொல்ல முடியவில்லை., அதுதான் வித்தியாசம்... என் மகன் இப்படி இருக்கக் கூடுமா என இன்னமும் நம்ப முடியவில்லை", என்றவரை ஆத்திரத்துடன் இடைமறித்த சியாமளா, "இந்தக் காரியத்தை அவன் தனியாகவா செய்தான், கூட ஒரு கூட்டு களவானி வேறு இருக்கிறாளே... முகத்தை பால் போல வைத்துக் கொண்டு ... எல்லாம் எதற்காக?... என கேவலமாக திட்டலானார்.

சட்டென்று சுதாரித்த சரண், "அம்மா, வார்த்தைகளை அளந்து பேசுங்கள்... துளசி என் மனைவி... ஆனால் அவள் கரு சுமப்பதோ".... என்றவனை பேசவிடாமல் தடுத்து அவசரமாக "ஓ... கதை அப்படி வேறு போகிறதா?... அவள் வேறு ஒருவருடைய கருவை சுமக்கிறாளா?... உன்னை தியாகியாக்கி விட்டாளா அந்த உத்தமி" என்று விஷத்தைக் கக்கினார்.

"சியாமா, ப்ளீஸ் கொஞ்சம் பொறு. அவனை பேச விடு"

அந்த பாசமான அக்கரையில் மனம் நெகிழ்ந்தவன், சட்டென்று தன் தந்தையின் காலருகே அமர்ந்து, ஒரு நிமிடம் மௌனமாக இருந்து பின்னர், "அப்பா, துளசி என் மனைவி,.. ஆனால் அவள் சுமப்பது நம் குடும்ப வாரிசு, உங்கள் மூத்த மகனின் குழந்தைப்பா"

மனம் நடுங்க கிருஷ்ணன், "நீ என்னடா சொல்லுகிறாய்? உன் மனைவி என்கிறாய்? குழந்தை கரணுடையதா... அது எப்படி சாத்தியம்..... அப்ப துளசி கரணுடைய காதலியா.... அவர்கள் இருவரும்".......வேறு எதுவும் பேசினால் தப்பாகி விடுமோ" என்று அவனையே உற்று நோக்கினார்.

சரணோ, "அப்பா, கொஞ்சம் பொறுங்கள்", என்றவன், கரணின் உடல் நிலை நலிவு பற்றியும், அவன் வாரிசு ஆசையும், அதை தொடர்ந்த நிகழ்ச்சிகளையும், ஒன்றன் பின் ஒன்றாக கூறியவன், நடுங்கும் இதயத்துடன் கண் இமைக்க மறந்து பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.... பின் துளசியை சந்தித்தது முதல், பாட்டியின் விருப்பத்தில் நடந்த கட்டாயக் கல்யாணத்தையும் சொல்லி முடித்தான்.

"அம்மா, இப்பொழுது சொல்லுங்கள், நான் என்ன செய்திருக்க முடியும்....துளசியோ கண்டிஷன் போடுகிறாள்...தாலி வேண்டும் என்று....கரண் உங்களிடம் சொல்லி அவளுடன் திருமணம் முடிக்க வேண்டும் என்றே இருந்தான்... ஆனால் அன்றே அவன் ஆயூள் முடிந்து விட்டது..... சரி, ஒரு வேளை அவள் கரண் இறந்தால், தாலி இல்லாமல் கருவை சுமக்க மறுத்தால் என்ன செய்வது என்று குழம்பி இருந்தேன்... அந்த சமயத்தில் பாட்டியின் நிர்பந்தத்தால், என்னால் கடைசி நிமிடத்தில் வேறு யோசனை தோன்றாமல், அவள் கழுத்தில் தாலியை கட்டி விட்டேன்.".... என்று கண் கலங்கி கூறியவனை,

கண்களில் பெருகிய நீரை துடைக்க மறந்து கையெடுத்து கும்பிட்டார் சியாமளா...... உன்னை பெற நான் எந்த ஜென்மத்தில் என்னை புண்ணியம் செய்தேனோ.... போய் விட்டவனின் பதிவாக ஒரு வருகையை இங்கு கொடுக்க உனக்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும்ப்பா... என்று தழுதழுத்தவளை சேர்த்தணைத்த சரண்,....

"அம்மா, நான் தவறு செய்யவில்லையம்மா... இந்த நிமிடம் வரை என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு சில காரியங்களை செய்திருக்கிறேன். சிலருக்கு அது தவறாகவும் இருக்கக்கூடும். ஆனால் அந்த சூழ்னிலையில் என்னால் அதைத்தான் செய்ய முடிந்தது" என்று சொன்னவன், "எந்த நிலையிலும் இனி துளசி தான் என் மனைவி., அவள் வயிற்றில் வளர்வது என் குழந்தைதான்.... இது பற்றி, இனி பேச வேண்டாம்.. இது நமக்குள் இருக்கட்டும்.... கண் மூடி ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான்.

இனி....

Episode # 06

Episode # 08

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.