(Reading time: 22 - 44 minutes)

08. நிழல் நிஜமாகிறது - ஸ்ரீலக்ஷ்மி

ய்ந்து, ஓய்ந்துப் போய் அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்த சியாமளா, அவன் தலையைத் தடவி, "கண்ணா, வாப்பா, இப்பொழுதுதே நான் என் மருமகள் துளசியைப் பார்க்க வேண்டும்." என்று எழுந்தார்.

"சியாமளா, எதற்கும் உனக்கு அவசரம்.. பார் சரண் ஓய்ந்துப் போயிருப்பதை.. சிறிது நேரம் தூங்கி எழட்டும்.. இத்தனை நேரம், துளசியை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாய்.. இப்பொழுது, உண்மை தெரிந்தவுடன், உடனே என் மருமகள் துளசி என்கிறாய்.. இந்தப் பெண்களே இப்படித்தான் போலும்.. அதற்குத்தான் நான் அப்பொழுதிலிருந்து சொல்லிக் கொண்டே இருந்தேன், வார்த்தைகளை சிதற விடாதே என்று.. சரி, சரி, மூஞ்சியை இப்படி பாவம் போல் தூக்கி வைத்துக் கொள்ளாதே.. நம் மருமகள் உன்னை புரிந்து கொள்வாள். ஆனாலும், நாம் மாலை ஆறு மணிக்கு மேல் அவளை சென்று காணலாம்.. இப்பொழுதுதான் அவளும் மதிய உணவு முடித்து மேலே ரூமிற்குச் சென்றாள்.. கர்ப்பிணிப் பெண்.. படுத்துக் கொண்டு இருக்கலாம்.. நீயும் சற்று படுத்து ரெஸ்ட் எடு.. ஒன்றும் பேசாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த சரணிடம், நீயும் ரூமுக்குப் போப்பா" என்று அவனை அனுப்பி வைத்தார்.

"மாலையில் பார்க்கலாம் அம்மா" என்றவன், தனது ரூமிற்கு சென்றான்.. துளசியின் அறை கதவு சாத்தப்பட்டு இருப்பது தெரிந்து, தூக்கம் கண்களை அழுத்த ஒர் அளவு மனபாரம் குறைந்திருக்க நிம்மதியாக உறக்கத்தின் பிடியில் ஆழ்ந்தான்.

Nizhal nijamagirathu

று மணி அளவில் மெல்ல எழுந்தவன், வள்ளியை அழைத்து இரண்டு காப்பி, எடுத்துவர பணிந்தான்.. முகம் கழுவி வந்தவன், துளசியின் அறைக் கதவை தட்டினான்.

ஏற்கனவே தூங்கம் முழித்திருந்த துளசி, அவன் கதவைத் தட்டியவுடன் திறந்தவள், "என்ன" என்றாள்.

"வெளியே வா, துளசி.. முதலில் காப்பி குடிப்போம்.. பிறகு உன்னிடம் சிறிது பேச வேண்டும்".

ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்தவள், அப்பொழுது ரூம் பெல் அடித்து உள்ளே வந்த வள்ளி கொடுத்த காப்பியை நன்றி கூறி வாங்கிக் கொண்டாள்.. இருவருக்கும் கப்புகளில் காபியை ஊற்றியவள், தனது கப்பை எடுத்துக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

ஏதோ பேச வேண்டும் என்றீர்களே?.. என்று எப்படி அவனை அழைப்பது என்று , புரியாமல் நிறுத்த,

"துளசி, ராம் என்றோ.. சரண் என்றோ, கூப்பிடு.. எதுவானாலும் ஓ.கே."

உம்.. என்று தலையை ஆட்டியவள், "ராம் நான் ஒன்று சொல்ல வேண்டும்.. தயவு செய்து, எனனை தப்பாக நினைக்காமல் கேளுங்கள்", என்று பீடிகையுடன் ஆரம்பித்தவள்,

"ராம், நான் இந்த குழந்தையை அபார்ஷன் செய்து கொள்ள விருப்பப்படுகிறேன்.. அதிர்ந்து நோக்கியவனை, நீங்கள்தானே சொன்னீர்கள், எனக்கு விருப்பமில்லை என்றால் அபார்ஷனக்குக்கூட நீங்கள் ரெடியாக இருப்பதை ".

"என்ன உளறுகிறாய்"

"நான் ஒன்னும் உளரவில்லை.. எனக்கு இந்த குழந்தை பிடிக்கவில்லை.. உங்கள் அண்ணன் கையால் தாலி வாங்கி கொஞ்சம் நாட்கள் அவருடன் வாழ்ந்திருந்து, விதவையாய் அவர் குழந்தையை சுமந்து இருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால் உங்கள் கையில் தாலி வாங்கி கொண்டு அண்ணன் குழந்தைதையை சுமப்பது என்பது கேவலமாக இருக்கிறது. ஏற்கனவே உங்கள் தாயாருக்கு என்னை பிடிக்கவில்லை.. நான் உங்கள் அண்ணன் குழந்தையை சுமப்பதை நீங்கள் இத்தனை நேரம் கூறி இருப்பீர்கள்.. என்னை எத்தனை கேவலமாக பார்ப்பார்கள்.. உங்களை நான் ஏமாற்றி தாலி கட்டி கொண்டதாகவே நினைப்பார்கள்.. அதற்கு இந்த வழியே மேல்"

கண் சிவந்து, கடும் கோபத்துடன், அவளை நோக்கி விரலை நீட்டி, எச்சரித்தவன்,

"போதும் நிறுத்து உன் புலம்பலை.. இத்தனை சுயனலம் பிடித்தவளா நீ.. உன்னை பற்றி மட்டுமே யோசிக்கிறாய் ? அந்த காருண்யாவே உனக்கு மேல்.. அவளது நோக்கம், பணம் மட்டுமே.. பணத்திற்காக எதுவும் செய்ய துணிந்தாள்.. ஆனால் நீ.. உன்னை முதன் முதலில் பார்த்த பொழுது, எனென்னவோ யோசித்தேன்.. நல்ல குடும்ப பெண்.. பண்பாவனள் என்று. இப்பொழுதுதான் தெரிகிறது எல்லாம் வெளி வேஷம் என்று! உன் பணத் தேவைக்கு அன்று எல்லாவற்றிக்கும் ஒப்புக்கு கொண்டாய்.. உன்னை ஊர் உலகம் எதுவும் பேசக் கூடாது என்பதற்கு என் அண்ணன் கை தாலி கேட்டாய்.. உன் பாட்டி உன்னை தப்பாக நினைக்க் கூடாது.. அது ஒன்று தான் அன்று முக்கியம்.. உன் கௌரவம், உன் பாட்டி, இது தான் அப்பொழுது உனக்கு முக்கியமாக இருந்தது.. பாட்டி இறந்து விட்டதால், உன் வேலை முடிந்து விட்டது.. இனி யாரைப் பற்றியும் கவலை இல்லை.. குழந்தையை அழித்து விட்டு மெதுவாக நழுவப் பார்க்கிறாய். இப்பொழுது கேள்! எங்கள் குடும்ப வாரிசு உன் வயிற்றில் வளர்கிறது.. அதை எந்த காரணம் கொண்டும் நான் அழிக்க விட மாட்டேன்.. இனி நீ என்ன முயன்றாலும் அது நடக்க விட மாட்டேன்.. என் அண்ணன் எப்படியும் இறந்து விடுவான் என்று முன்பே உனக்குத் தெரியும்.. தெரிந்து தான் நீ இதற்கு சம்மதித்தாய்? .. உன் பாட்டி, உயிருடன் இபொழுது இருந்திருந்தால், உன் வாயை மூடிக் கொண்டு இருந்திருப்பாய்.. என்ன ஒரு சுய நலம்.. உன் பாட்டிக்காக உனக்கு தாலி கட்டினேனே எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று என் அண்ணன் இறந்தவுடனேயே போயிருக்க வேண்டும்.. என் தலையெழுத்து.. விதி யாரை விட்டது. இன்னொன்று, இது மாதிரி பேசுவதை இன்றுடன் நிறுத்து.. நன்றாக ஞாபகப் படுத்திக் கொள், நீ எங்களிடம் குழந்தை பெற்று தருவதாக 'காண்ட்ராக்டில் சைன்' செய்து இருப்பதை.. அவ்வளவு தூரம் போக வேண்டாம் என்று பார்க்கிறேன்", என்று கோபமாக பேசினான்.

இவ்வளவு கோபமாக பேசுவான் என்று, எதிர் பாராதவள், "நான் உங்கள் நல்லதிற்குதான் சொன்னேன்" என்று மெதுவாக இழுத்தவளை,

"எங்களுக்கும் தெரியும், எது நல்லது, எது கெட்டது என்று.. முதலில் ஒப்புக் கொண்ட படி குழந்தையை பெற்று கொடுக்கும் வழியை பார்.. ஒரு வருடம் கழித்து, உனக்கு விருப்பமில்லையென்றால் இந்த பந்ததிதில் இருந்து" என்று ஆரம்பித்தவன் கதவு தட்டப்படும் ஒசையில் பிறகு பேசலாம் என்று செய்கையில் சொன்னவன், மெல்ல கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்த தன் பெற்றோரை கண்டான்.

உள்ளே வந்த சியாமளா, "அம்மாடி துளசி, என்னை மன்னித்து விடம்மா.. உன்னை கண்டபடி பேசி விட்டேன்.. என் கரணின் வாரிசை சுமந்து கொண்டிருக்கும் உன்னை நான் இப்படி பேசி இருக்கக் கூடாது தான். என்ன நல்ல குணம் அம்மா உனக்கு.. யார் இப்படி செய்ய முன் வருவார்கள்.. என்னதான் உன் பாட்டிக்காக, நீ வாடகைத் தாயாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும், எத்தனை பேர் பணத்திற்காக என்றால் கூட முன் வருவார்கள்.. உனக்கு நிஜமாகவே பெரிய மனசுதான்மா.. நீ மிகவும் உயர்ந்தவள். இப்பொழுதைக்கு என் மகனும், உனக்கு தாலியை கட்டி கௌரவப் படுத்தியே இருக்கிறான்.. இந்த குடும்ப வாரிசை சுமக்கும் நீ இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. என் கரணே உன் வயிற்றில் வந்து பிறக்க வேண்டும். எங்களை மன்னித்து விடம்மா.. இனி நீ தான் இந்த வீட்டின் மருமகள்", என்று கணவரை நோக்க, அவரும்,

"ஆமாம் துளசி, உன் அத்தை சொல்லுவது போல எங்கள் வீட்டு மருமகள் ந.ீ. உனக்கு இங்கு எல்லா உரிமையும் இருக்கிறது" என்றார்.

"துளசி ஒன்று கூற விரும்புகிறேன்.. இந்த விஷயம் நமக்குள் இருக்கட்டும்.. கரணின் வாரிசு என்று யாருக்கும் தெரிய வேண்டாம்... இதனால் தேவையில்லாத குழப்பம் தான் வரும்.. சரணின் குழந்தையாகவே இருக்கட்டும்.. இல்லையென்றால், அது உனக்கு அகௌரவத்தை கொடுக்கும்.. மேலும், நீ ஒரு வேலை இந்த திருமண பந்தத்தை, ஏற்கப் பிடிக்காமல், குழந்தையை கொடுத்து விட்டு செல்ல நினைத்தாலும், அது உன்னை பாதிக்கக் கூடாது.. எங்களை பொருத்தவரை, நீ சரணின் மனைவியேதான்.. இதற்கு மேல் நீ முடிவு செய்வதுதான், நீ என்ன செய்தாலும் உனக்கு நான் துணை இருக்கிறேன்" என்றார் சியாமளா.

மெல்ல தலையாட்டினாள் துளசி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.